search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry driver murder"

    பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பொன்னமராவதி, நவ. 7-

    பொன்னமராவதி அருகே லாரி டிரைவர் அடித்துக் கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற் படுத்தி உள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள திருமயம் முருகாண் டிபட்டி விலக்கு சாலையில் அமைந்துள்ள அம்மனிப் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வீரையா (வயது 40). திரும ணம் ஆகவில்லை. இவர் அதே பகுதியில் உள்ள கல் குவ ரியில் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

    இந்தநிலையில் நேற்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கல் குவாரிக்கு விடுமுறை அளிக்கப்பட்டி ருந்தது. இதற்கிடையே குவாரிக்குள் காவலாளி சென்று பார்த்தபோது அங்கு வீரையா கொலை செய்யப் பட்டு பிணமாக கிடந்தார்.

    அருகிலேயே ரத்தக்கறை படிந்த கற்கள் கிடந்தன. எனவே அவரை யாரோ மர்ம நபர்கள் அடித்துக்கொலை செய்திருப்பது உறுதியானது. இதுகுறித்த தகவல் அறிந்த பனையப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீரையாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புதுக் கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொலை நடந்த இடத்திற்கு சென்ற துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்மாறன் விசாரணை நடத்தினார். திருமணமாகாத அவருக்கு சில பெண்களுடன் கள்ளத் தொடர்பு இருந்ததாக கூறப்ப டுகிறது. எனவே அது தொடர் பான பிரச்சினையில் வீரையா கொலை செய்யப் பட்டாரா? என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    தீபாவளி நாளில் லாரி டிரைவர் கொலை செய்யப் பட்டது.அந்த பகுதியில் பரப ரப்பை ஏற்படுத்தியது. * * * குவாரியில் கொலையுண்ட லாரி டிரைவர் வீரையா பிணமாக கிடந்த காட்சி.

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வாய் தகராறில் லாரி டிரைவரை மற்றொரு டிரைவர் கொலை செய்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஊத்தங்கரை:

    திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் பன்னீர். லாரி டிரைவரான இவர் வேலூரில் இருந்து லாரி லோடு ஏற்றி கொண்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கதவனி பகுதி அருகே வரும் போது எதிரே வந்த மற்றொரு லாரி பக்கவாட்டில் உரசியது.

    இது பற்றி பன்னீர் உரசிய லாரி டிரைவரான வேலூரை சேர்ந்த சந்துருவிடம் கேட்டார். அப்போது அவர்களுக்கு வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சந்துரு லாரியில் இருந்து கத்தியை எடுத்து பன்னீரை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த கொலை குறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி மற்றும் போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பன்னீரை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த கொலை குறித்து ஊத்தங்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி வழக்கு பதிவு செய்து சந்துருவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தார்.
    தருமபுரி அருகே குடிபோதையில் தகராறில் லாரி டிரைவர் அடித்து கொலையா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #murder

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், பெரும் பாலையை அடுத்துள்ள சானார்பட்டி பகுதியை சேர்ந்தவர் சாமுண்டி. இவரது மகன் சீனிவாசன் (வயது38). லாரி டிரைவரான இவர் அடகாசன அள்ளியை சேர்ந்த சுதாகர் என்பவருடைய லாரியில் இரண்டு பேரும் டிரைவராக இருந்து வந்தார்.

    சம்பவத்தன்று இவர்கள் இரண்டு பேரும் பென்னாகரம் மேம்பாலம் அருகேயுள்ள தேசிய நெடுஞ்சாலையில் உள்ள லாரி நிறுத்தும் இடத்தில் லாரியை நிறுத்தினர்.

    பின்னர் இரண்டு பேரும் அங்கு மதுஅருந்தி விட்டு ஒருவருக்கொருவர் தகராறு செய்து தாக்கி கொண்டதாக கூறப்படுகிறது. பின்னர் காலையில் எழுந்து சீனிவாசன் வீட்டிற்கு சென்றார். வீட்டில் உடல் சோர்ந்து காணப்பட்டுள்ளதால் அங்குள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு சீனிவாசன் வீட்டில் மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டது. அங்கு பரிசோதித்த டாக்டர்கள் சீனிவாசனுக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு டாக்டர்கள் அவருக்கு தலையில் அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் திடீரென உடல்நிலை மோசமானதால் சிகிச்சை பலனின்றி சீனிவாசன் பரிதாபமாக இறந்தார்.

    இதையடுத்து சீனிவாசனுக்கும் சுதாகருக்கும் நடந்த தகராறில் அவருக்கு தலையில் ரத்த கசிவு ஏற்பட்டதாகவும், இதனால் சீனிவாசன் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தின் பேரில் உறவினர்கள் தருமபுரி டவுன் போலீசில் புகார் கொடுத்தனர்.

    அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தின குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

    மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மயிலாடுதுறை:

    நாகை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த மணல்மேடு அதியமானபுருசன் கிராமத்தை சேர்ந்தவர் சேட்டு (வயது 45). இவர் கேரளாவில் லாரி டிரைவராக வேலைப்பார்த்து வந்தார். இவரது மனைவி சித்ரா. இவர்களுக்கு சியாமளா என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த நிலையில் மகள் சியாமளாவுக்கும், விஜய் என்ற வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இந்த திருமணம் அடுத்த மாதம் (ஜூன் ) 3-ந்தேதி நடைபெறுவதாக இருந்தது. மகள் திருமணத்திற்காக கேரளாவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சேட்டு ஊருக்கு வந்திருந்தார். அங்கு உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு மகளின் திருமண அழைப்பிதழை வழங்கி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று இரவு சேட்டு வீட்டில் இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் முகமுடி அணிந்த 6 பேர் கும்பல் வந்தனர்.

    வீட்டுக்கு வெளியில் நின்று அவர்கள் சேட்டுவின் பெயரை கூறி அழைத்தனர். இதனால் வீட்டுக்குள் இருந்த சேட்டு வெளியே வந்து பார்த்தார். அப்போது 6 பேர் கும்பல் திடீரென தாங்கள் வைத்திருந்த அரிவாளால் சேட்டுவை சரமாரியாக வெட்டினர். இதை சற்றும் எதிர்பாராத சேட்டு நிலைகுலைந்து கீழே விழுந்தார். அப்போது அவர் காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்.. என்று சத்தம் போட்டார்.

    அவரது சத்தத்தை கேட்டு மனைவி சித்ரா வெளியே ஓடி வந்தார். முகமூடி கும்பல் கணவரை சரமாரியாக வெட்டியதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனால் அவர், முகமூடி கும்பலை தடுக்க சென்றார். அப்போது ஆத்திரம் அடைந்த கும்பல் சித்ராவையும் வெட்டினர். இதில் அவருக்கு கையில் காயம் ஏற்பட்டது.

    இதையடுத்து கும்பல் சேட்டுவை தொடர்ந்து வெட்டினர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலயே பரிதாபமாக இறந்தார். சேட்டு இறந்ததை உறுதி செய்த முகமூடி கும்பல் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

    இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் மணல்மேடு போலீசார் விரைந்து வந்து சேட்டு உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த சித்ரா மயிலாடுதுறை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

    லாரி டிரைவர் சேட்டு முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது மகளின் திருமணத்தையொட்டி ஏதேனும் பிரச்சினையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    லாரி டிரைவர் முகமூடி கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மயிலாடுதுறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

    ×