search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Low Voltage"

    • மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.
    • நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுவதில்லை.

    பிற மாநிலங்களில் இருந்தும், மத்திய தொகுப்பில் இருந்தும் மின்சாரம் கொள்முதல் செய்யப்படுகிறது. புதுவை மாநிலத்தின் மின்தேவை சுமார் 600 மெகாவாட். சராசரியாக தினமும் 520 மெகாவாட் மின்சாரம் மத்திய தொகுப்பிலிருந்து புதுவைக்கு வருகிறது.

    சில நாட்களாக மத்திய தொகுப்பிலிருந்து 400 மெகாவாட் மட்டுமே மின்சாரம் வருகிறது. 120 மெகா வாட் குறைந்துள்ளதால் புதுவையில் பல பகுதிகளில் மின் அழுத்த பிரச்சினைகள் அதிகரித்துள்ளது.

    கிராமப்புறங்கள் மட்டு மின்றி, நகர் பகுதிகளிலும் திடீரென மின் அழுத்தம் கூடுவதும், பின்னர் குறைவதுமாக உள்ளன.

    இதனால் மின்சாதன பொருட்கள் அதிகமாக சேதமடைகின்றன. வழக்கமாக கோடை காலத்தில் மின் தேவை அதிகமாக இருக்கும். மத்திய தொகுப்பில் மின்சாரம் குறைந்துள்ளதால் மின் அழுத்த பிரச்சனைகள் அதிகரித்துள்ளது.

    இதை சமாளிக்க மின் மாற்றியின் திறனை அதிகரிக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    • பரமக்குடி அருகே புதிய டிரான்ஸ்பார்மர்களை முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியம் தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட சோமநாதபுரத்தில் நீண்ட நாட்களாக குறைந்த மின்னழுத்தம் இருந்தது. இதையடுத்து ஊராட்சி மன்ற தலைவர் சுமதி, பரமக்குடி எம்.எல்.ஏ. முருகேசனிடம் கோரிக்கை விடுத்தார். அதன் அடிப்படையில் மின்வாரிய மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் சோமநாதபுரத்தில் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. அதை நேற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். தெளிச்சத்த நல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி பாலசுப்பிரமணியம் வரவேற்றார். தி.மு.க. மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் மங்களேசுவரி சேதுபதி, செயற்பொறியாளர் ரெஜினா ராஜகுமாரி முன்னிலை வகித்தனர்.

    அதேபோல் கமுதக்குடி ஊராட்சியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட புதிய டிரான்ஸ்பார்மரையும் முருகேசன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். கமுதக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் கவிதா மோகன் வரவேற்றார்.

    ×