என் மலர்
நீங்கள் தேடியது "Machine"
- குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் எந்திரங்களை கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
- அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் திருமருகல் அருகே மத்தியக்குடியில் விவசாய நிலங்களுக்கு மையத்தில் குவாரி அமைக்கப்பட்டு பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
இங்கு எடுக்கப்படும் மண் குத்தாலம்,திட்டச்சேரி வழியாக பனங்குடி பகுதியில் நடைபெற்று வரும் 4 வழிச்சாலை அமைப்பதற்காக கொட்டப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த குவாரியில் அரசு அனுமதித்ததை விட கூடுதலாக மண் எடுப்பதாகவும், இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்படும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து நாகை புள்ளியியல் துறை உதவி புவியியலாளர் சேகர், தா சில்தார் ராஜசேகர் மற்றும் அலுவலர்கள் மத்தியக்கு டியில் உள்ள குவாரிக்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது உதவி புவியியலாளர் சேகர் கூறியதாவது:-
மத்தியக்குடியில் உள்ள குவாரி மாநில சுற்றுச்சூழல் துறை அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு எடுக்கப்படும் மண் 4 வழிச்சாலை அமைக்கும் பணிக்கு மட்டும் பயன்படுத்தப்படுகிறது.
அரசு அனுமதித்த 2 மீட்டர் ஆழம் வரைதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே மண் எடுத்து கரையில் வைக்கப்பட்டுள்ளது.
அதிலிருந்து பார்க்கும்போது ஆழமாக தெரிகிறது.
எனவே அதை உடனடியாக அப்புறப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அரசு விதிகளுக்கு உட்பட்டுதான் மண் எடுக்கப்பட்டுள்ளது.
விதிமுறை மீறல்கள் எதுவும் இல்லை என்றார்.
- சிவகங்கையில் வாக்குப்பதிவு எந்திர அறையை கலெக்டர் ஆய்வு செய்தார்.
- அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிவகங்கை
இந்திய தலைமை தேர்தல் அலுவலர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் பொது அறிவுரையின்படி, வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பறையினை 3 மாதங்களுக்கு ஒருமுறை திறந்து, ஆய்வு மேற்கொண்டு, காலாண்டு அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.
அதனடிப்படையில், இம்மாத காலாண்டு ஆய்வு அறிக்கையை சமர்பிப்ப தற்கு ஏதுவாக, சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப் பட்டுள்ள பாதுகாப்பறை யினை, மாவட்ட கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் முன்னிலையில், சம்பந்தப்பட்ட துறை அலுவ லர்களுடன் திறக்கப்பட்டு, ஆய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் தேர்தல் வட்டாட்சியர் மாணிக்க வாசகம், சிவகங்கை வட்டாட்சியர் பாலகுரு, பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் திருமாறன், தேர்தல் துணை வட்டாட்சியர்கள் சங்கர், சுமதி உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக்கட்சிப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
- கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டம், ஊசூர்-அணைக்கட்டு மெயின் ரோடு பஸ் நிறுத்தத்தில் தனியார் வங்கி ஏ.டி.எம். மையம் உள்ளது.
இன்று காலை ஊசூர் காலனியை சேர்ந்த கந்தசாமி (வயது 53) கூலி தொழிலாளி. என்பவர் ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுக்க சென்றார்.
ஏ.டி.எம். எந்திரத்தில் ஏ.டி.எம். கார்டை சொருகி பணம் எடுக்க பலமுறை முயற்சி செய்து உள்ளார். ஆனால் ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் வரவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த கந்தசாமி வீட்டிற்கு சென்று கோடாரியை எடுத்து வந்தார்.
ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்தார். ஏ.டி.எம். எந்திரம் உடைக்கும் சத்தம் கேட்டு அக்கப் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து கந்தசாமியை தடுத்தனர்.
இருப்பினும் ஆத்திரம் அடங்காத கந்தசாமி ஏ.டி.எம். எந்திரம் முழுவதையும் உடைத்தார். எந்திரம் முழுவதும் துண்டு, துண்டாக நொறுங்கியது.
அங்கிருந்தவர்கள் கந்தசாமியை பிடித்து வைத்துக்கொண்டு இது குறித்து உடனடியாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வேலூர் டவுன் டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் அரியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.
உடைக்கப்பட்ட ஏ.டி.எம். எந்திரத்தை பார்வையிட்டனர். பின்னர் அருகில் இருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கந்தசாமியை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து எந்த பணமும் திருடு போகவில்லை ஏடிஎம் எந்திரத்தில் பணம் வராததால் கந்தசாமி ஏடிஎம் எந்திரத்தை உடைத்துள்ளார்.
கந்தசாமி சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. விசாரணைக்குப் பிறகு உண்மை நிலவரம் தெரியவரும் என்றனர்.
- போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
- கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் அடுத்த கசிநாயக்கன்பட்டியில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு ஏ.டி.எம். மையத்திற்கு வந்த மர்ம நபர்கள் எந்திரத்தை உடைத்து திருட முயன்றனர்.
இன்று காலை ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் எடுக்க சென்ற சிலர், எந்திரம் முன்பக்கம் உடைக்கப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து அந்த பகுதி மக்கள் கந்திலி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
ஏ.டி.எம். மையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.
திருட வந்த மர்ம நபர்கள் ஏதோ ஒரு பொருளை வைத்து கேமராக்களை மறைத்துள்ளனர்.
எந்திரத்தின் முன்பக்க பேனல் உடைத்த பிறகு, பணம் இருக்கும் பெட்டியை உடைக்க முடியவில்லை. இதனால் அதிர்ஷ்டவசமாக பணம் திருடு போகவில்லை.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
- நரிக்குடி வாரச்சந்தையில் நடமாடும் ஏ.டி.எம். எந்திரம் செயல்படுகிறது.
- சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இங்கு அரசு மருத்துவமனை, வங்கிகள் மற்றும் யூனியன் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதன் சுற்று வட்டார பொது மக்களின் நெடுங்கால கோரிக் கையை நிறைவேற்றும் வகையில் கடந்த மாதம் 29-ந் தேதியன்று வாரந்தோறும் வியாழக்கிழமை யன்று செயல்படும் வகையில் நரிக்குடியில் புதிய வாரச்சந்தை யை தொடங்கி வைத்து நரிக்குடி ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனையடுத்து கடந்த சில வாரங்களாக பொதுமக்கள் நரிக்குடி வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள் மற்றும் வீட்டுக்கு தேவையான மளிகை சாமான்கள் உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய பொருட்களையும் குறைந்த விலையில் வாங்கி சென்று பயனடைந்து வருகின்ற னர். இந்த நிலையில் நரிக்குடி வாரச்சந்தைக்கு வரும் பொதுமக்களின் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கான பண தேவையை பூர்த்தி செய்யும் வகையில் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏ.டி.எம். வாகனம் நிறுத்தப்பட்டு உள்ளது. இதனால் சந்தைக்கு வரும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
- மனித கழிவுகளை மனிதனே அகற்றுவது சட்டப்படி குற்றமாகும்.
- மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி எந்திரம் மூலம் அகற்ற வேண்டும்.
சீர்காழி:
சீர்காழி நகராட்சி சார்பில் சபாநாயகர் முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றக்கூடாது என்பது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் அறிவுடையநம்பி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகர மன்ற தலைவர் துர்காராஜசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றக் கூடாது. இது சட்டப்படி குற்றமாகும். மனிதக் கழிவுகளை மனிதனே அள்ளினால் அவர்களுக்கு பிணையில் வர முடியாமல் இரண்டு முதல் ஐந்தாண்டு வரை சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படும்.
சீர்காழி நகர் பகுதியில் மனித கழிவுகளை அகற்ற வேண்டுமானால் தானியங்கி இயந்திரம் மூலம் அகற்ற வேண்டும். சீர்காழி நகராட்சியில் பதிவு செய்த ஒப்பந்தக்தாரர்களைக் கொண்டு தான் இயந்திரம் மூலம் மனித கழிவுகளை அகற்ற வேண்டும் என்றார். இந்த கூட்டத்தில் உடற்கல்வி இயக்குனர் முரளிதரன், டெங்கு ஒழிப்பு பணி மேற்பார்வையாளர் அலெக்ஸ், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- செல்வகணபதி எம்.பி. வழங்கினார்.
- புதிய பொக்லைன் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்கு பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து புதிய பொக்லைன் எந்திரம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக செல்வகணபதி எம்.பி. கலந்து கொண்டு ரூ.31.58 லட்சம் மதிப்பிலான பொக்லைன் எந்திரத்தை கொம்யூன் பஞ்சாயத்திடம் ஒப்படைத்தார்.
உதவி பொறியாளர் நாகராஜன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் பா.ஜனதா தொகுதி தலைவர் செல்வகுமார், கொம்யூன் பஞ்சாயத்து மேலாளர் வீரம்மாள், இளநிலை பொறியாளர்கள் சரஸ்வதி, சுரேஷ், அகிலன், வாகன மேற்பார்வையாளர் மற்றும் பண்டக காப்பாளர் செழியன், டைனோடெக் மேலாளர் ஆரிப் பாஷா, புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- தூய்மை பணியாளர்களுக்கு நினைவு பரிசு
- மின்வாரிய ஊழியர்களும் கவுரவிப்பு
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் உலிகல்அரசு உயர்நிலைப் பள்ளியில் நல் உள்ளம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் உலிக்கல் சண்முகம் தலைமையில் முப்பெரும் விழா நடைபெற்றது.
அப்போது அங்கு குழந்தைகள் தின நிகழ்ச்சி, பள்ளிக்கு இலவச குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் வழங்குதல் மற்றும் சிறப்பாக சேவை செய்த மின்துறை மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தலைமை ஆசிரியர் சுப்பிரமணியம் வரவேற்றார். அமிர்தாஜ் பவுண்டேஷன் நிறுவனர் அமிர்தராஜ் கலந்து கொண்டு பேசினார். தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் ஆதிவாசி கிரா மப்பகுதிகளில் சிறப் பாக சேவை செய்த மின்துறை ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. தொடர்ந்து உலிகல் பேரூராட்சிக்கு உட்பட்ட தூய்மை பணியாளர்கள் மற்றும் வளம் மீட்பு பூங்கா ஊழியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மின்வாரிய செயற்பொறியாளர் சேகர், உலிக்கல்பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், நீலகிரி விடியல் அறக் கட்டளை தலைவர் லாரன்ஸ்,சோசியல் மீடியா தலைவர் சிக்கந்தர், மனிதனை நேசிப்போம் பாரூக் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிறுவன தலைவர் சாதிக் சேனா நன்றி கூறினார்.
- உணவகத்தில் மோமோஸ் தயாரிக்க மாவு பிசையும் இயந்திரத்தை சிறுமி இயக்கியுள்ளார்
- கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை செய்து வந்துள்ளார்.
டெல்லியில் மாவு பிசையும் இயந்திரத்தில் மாட்டி 15 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியின் பேகம்பூரில் உள்ள ஹனுமான் சவுக் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
உணவகத்தில் மோமோஸ் மற்றும் ஸ்ப்ரிங் ரோல்ஸ் தயாரிப்பதற்காக சிறிய அளவிலான மாவு பிசையும் இயந்திரத்தை இயக்கிய சிறுமியின் கை உள்ளே மாட்டிக்கொள்ளவே அவர் தலையோடு இயந்திரத்துக்குள் இழுக்கப்பட்டார் . இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் படுகாயமடைந்த சிறுமியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் பின்னர் அறிவித்தனர். கடந்த 3 வருடங்களாக சிறுமி அந்த உணவகத்தில் சமையல் வேலை உதவியாளராக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் சிறுமியை வேலைக்கு வைத்த ராஜேஷ் குமார் என்பவர் மீது போலீசார் குழந்தைத் தொழிலாளர்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- தேங்கிய மழைநீரை உரிய எந்திரங்களை கொண்டு அகற்ற நடவடிக்கை.
- கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு நாட்களில் சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறைக்கு வரும் என எதிர்பார்ப்பு.
தரங்கம்பாடி:
மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கத்தில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் இயக்குனர்அமுதவல்லி தலைமையில், மாவட்ட கலெக்டர் லலிதா முன்னிலையில் நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டத்தி ல்மழைநீர் வடிகால்வாய்கள் சத்தம் செய்யப்பட்டு தூர்வாரி ஆழப்படுத்துவதையும், தேங்கிய மழைநீரினை உரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்ற நடவடிக்கை எடுப்பது குறித்து உறுதி செய்ய சம்மந்தப்பட்ட அலுவலரிடம் அறிவுறுத்தப்பட்டது.
மயிலாடுதுறையில் பாதாள சாக்கடைத் திட்டத்தில் உள்ள இடற்பாடுகளை களையவும், நிரந்தர தீர்வு காணுவதற்கு விரிவான ஆய்வறிக்கை திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தற்காலிகமாக உள்ள சிக்கல்களை களைய நடவடிக்கை எடுக்க நகராட்சி அலுவலர்களிடம் உத்தரவிடப்பட்டுள்ளது என்று மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அமுதவல்லி பேசினார். அதனை தொடர்ந்து கலெக்டர் லலிதா பேசியதாவது:
மேட்டூர் அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டு கொள்ளிடம் ஆற்றில் ஓரிரு தினங்களில சுமார் 60 ஆயிரம் கன அடிநீர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது.
இதனால் பொது மக்கள் யாரும் நீர்நிலைகள் அருகில் செல்லவோ, குளிப்பதோ, கால்நடைகளை அழைத்து செல்லவோ வேண்டாம் என கேட்டுக்கொள்ள ப்படுகி றார்கள். மாவட்டத்திலுள்ள 4 பல்நோக்கு நிவாரன முகாம்கள் மற்றும் தற்காலிக நிவாரன முகாம்கள் தயார் நிலையில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றித்திரியும் நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு எதிர் பாராத அசம்பாவிதங்களை தவிர்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர்முருகதாஸ், உதவி ஆணையர் (கலால்) அர நரேந்திரன், வருவாய் கோட்டாட்சியர்கள்அ ர்ச்சனா (சீர்காழி), யுரேகா (மயிலாடுதுறை), இணை இயக்குனர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை முருகண்ணன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனர்கவித பிரியா, ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் பிரேம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது.
- கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி அருகே உள்ள கீரம்பூரில் பொதுப்பணித்துறை சார்பில் ஐ.டி.ஐ வளாகம் கட்டப்பட்டு வருகிறது. வழக்கம் போல் கட்டிட பணியில் ஈடுபட்டு வரும் கட்டிட தொழிலாளர்கள் பணிக்கு வந்த போது அங்கு கட்டிட பணிக்காக போடப்பட்டிருந்த இரும்பு கம்பிகள் மற்றும் கம்பிகளை வெட்டும் எந்திரம் ஆகியவை காணாமல் போனது தெரியவந்தது.
இது குறித்து பொதுப்ப ணித்துறை காண்ட்ராக்டர் மாதேஸ்வரன் பரமத்தி போலீசில் புகார் செய்தார். புகாரின் அடிப்படையில் பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து இரும்பு கம்பிகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றம்.
- மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
திருத்துறைப்பூண்டி:
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி ஊராட்சி ஒன்றியம், கட்டுமேடு ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் மாலினி ரவிச்சந்திரன் தலைமையிலும், கிராம நிர்வாக அலுவலர் முகமது யூசுப், ஓவர்சியர் மகேந்திரன், உதவி வேளாண்மை அலுவலர் ரமேஷ் முன்னிலையிலும் நடைபெற்றது.
இதில் கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் நெகிழி
ஒழிப்புக்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானத்தின்படி ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் சாலையோரம் எல்லநாகலடி மயானகரை மற்றும் கோட்டகம் செல்லும் சாலையில் உள்ள கருவேல மரங்கள் ஜே.சி.பி. எந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.
இதில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பாக்யராஜ், செயலர் புவனேஸ்வரன், வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.