என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "malaiamman temple"
- பொங்கல் வைபவத்தை முன்னிட்டு பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலம் நடைபெற்றது.
- சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடை பெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி வணிக வைசிய செட்டியார் சமுதாயத்துக்கு பாத்தியபட்ட மகேஸ்வரர் சமேத மாலையம்மன் கோவிலில் பொங்கல் விழா கடந்த 16-ந்தேதி கொடை சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
பல்வேறு கலைநிகழ்ச்சிகள்
அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மண்டகபடி தாரர்கள் சார்பில் வணிக வைசிய நடுநிலைபள்ளி கண்ணகி கலையரங்கத்தில் பல்வேறு நிகழ்ச்சி கள் நடைபெற்று வருகிறது.
முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் வைபவத்தை முன்னிட்டு 23-ந்தேதி காலையில் பால்குடம் மற்றும் தீர்த்தகுடம் ஊர்வலமும், மதியம் அக்கினி சட்டி எடுத்து நகர்வலம் வருதலும். அதைத் தொடர்ந்து கோவில் முன்பு பொங்கல் வைபவமும் நடைபெற்றது.
மாவிளக்கு, முளைப்பாரி
சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாரதனைகள் நடை பெற்றது. தொடர்ந்து சுவாமி அம்பாள் திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு கட்சி கொடுத்தார். பின்னர் மாவிளக்கு, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. இரவு 12 மணிக்கு சாம கொடை நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து நேற்று இரவு 7 மணிக்கு முன்னாள் நகர்மன்ற துணை தலைவரும், தொழிலதி பருமான ஏ.எஸ். ரத்தின வேல், கிருஷ்ண வேணி குடும்பத்தினர் சார்பில் திருகல்யாண நிகழ்ச்சி நடை பெற்றது. இதையடுத்து தனுஷ்கோடியாபுரம் தெருவில் உள்ள ஸ்ரீசெல்வ விநாயகர் கோவிலில் அன்ன தானம் நடைபெற்றது. அன்னதானம் நிகழ்ச்சியை வணிகவைசிய சங்க தலைவர் வெங்கடேஷ் தொடங்கி வைத்தார். இதில் சங்க செயலாளர் வேல்முருகன், பொருளாளர் தங்க மாரியப்பன், சங்க துணை தலைவர் பரமசிவன், தூத்து க்குடி வாணியர் பேரவை மாவட்ட தலைவர் பழனி குமார், மேலும் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் அலங்காரம் புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. பூஜைகளை பால சுப்பிரமணியன், நாராயண சர்மா மற்றும் குழுவினர் நடத்தினர். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேய்பிறை அஷ்டமி விழா குழுவினர் சங்கர், வெங்கட்ஜி ஆகியோர் செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில் சங்க தலைவர் பூவலிங்கம், செயலாளர் பழனிகுமார், முன்னாள் தலைவர் காளியப்பன், பள்ளி செயலாளர் வெங்கடேஷ், சங்க துணை செயலாளர்கள் மணிமாறன், வேல்முருகன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினவேல், தங்கமாரியப்பன், முத்துராஜ், குன்னிமலைராஜா, பரமசிவம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்