search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Manipur Video"

    • பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம்.
    • முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை.

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது.

    பொது மக்கள் முதல் அரசியல் கட்சிகள் வரை இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், ராஜஸ்தானிலும் பெண்களுக்கு எதிரான சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுவதாகவும், உண்மையில் ராஜஸ்தானில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் நாம் தோல்வி அடைந்துவிட்டோம் என்று அம்மாநில மாநில ஊர்க்காவல்படை மற்றும் குடிமைப் பாதுகாப்பு, பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சரான ராஜேந்திர சிங் ஹதுடா விமர்சித்து பேசினார்.

    தனது சொந்த மாநில அரசையே ராஜஸ்தான் மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா விமர்சித்து பேசியதை அடுத்து அவர் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    முதல்வர் அஷோக் கெலாட் பரிந்துரையை ஏற்று அம்மாநில ஆளுநர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

    • கடந்த 54 மாதங்களில் பெண்களுக்கு எதிராக 2 லட்சம் குற்றவழக்குகள்
    • 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நடந்துள்ளன

    மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக சாலையில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் நாட்டையே பதற வைத்துள்ளது. இந்த சம்பவத்தால் நாட்டின் 140 கோடி மக்களும் வெட்கப்படுகிறார்கள். மனித இனத்திற்கே வெட்கக்கேடானவை. இதுபோன்று ராஜஸ்தான் மற்றும் சத்திஸ்கர் என எங்கு நடந்தாலும் அரசியலை தாண்டி குரல் கொடுக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

    இதனால் காங்கிரஸ் கட்சி கடும் விமர்சனம் செய்துள்ளது. மணிப்பூர் குறித்து நீண்ட நாட்கள் மவுனம் சாதித்த பிரதமர் மோடி, தற்போது குறுகிய நேரம் பேசிய நிலையில், மற்ற மாநிலங்களை குறிப்பிட்டது அரசியல் நாடகம் எனத் தெரிவித்துள்ளது.

    மோடியின் கருத்துக்கு வலுசேர்க்கும் வகையில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பா.ஜனதாவின் மூத்த தலைவருமான வசுந்தரா ராஜே, ராஜஸ்தானில்தான் இந்தியாவில் நடைபெற்ற பலாத்கார சம்பவங்களில் 22 சதவீதம் நிகழ்ந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து வசுந்தரா ராஜே கூறியதாவது:-

    பெண்கள், குழந்தைகள், தலித்கள் மற்றும் தொழில்அதிபர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அடிப்படையில், ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு குலைந்துள்ளது. ராஜஸ்தானில்தான் பெண்களுக்கு எதிரான குற்றவழக்கு அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 54 மாதங்களில் 10 லட்சத்திற்கும் மேலான வழக்குகள் பதிவாகியுள்ளன. 7500-க்கும் அதிகமானனோர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

    பெண்களுக்கு எதிராக மட்டும் 2 லட்சம் குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. சுமார் 33 ஆயிரம் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. இது இந்தியாவில் நடைபெற்ற மொத்த சம்பவங்களில் 22 சதவீதம் ஆகும். கற்பழிப்பு வழக்குகளில் ராஜஸ்தான் முதல் இடத்தில் உள்ளது. முதலமைச்சர் அசோக் கெலாட்டின் பகுதியில் பெண்களுக்கு எதிராக குற்ற சம்பவம் நடந்தாலும், அவர்கள் மவுனம் காக்கிறார்கள்.

    மீடியாக்கள் தரவுகளின்படி ஒவ்வொரு நாளும் சராசரியாக 18 முதல் 19 பலாத்கார சம்பவங்களும், 5 முதல் 7 கொலைகளும் நடைபெற்ற வருகின்றன.

    அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் ஆயிரக்கணக்கான பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளனர். அவர்கள் அரசில் இருந்து யாரும் இதுகுறித்து பேசுவதோ, காவல் நிலையத்திற்கு கொண்டு சென்ற இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதோ கிடையாது.

    இவ்வாறு வசுந்தரா ராஜே தெரிவித்துள்ளார்.

    • மணிப்பூர் விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • இந்திய பாராளுமன்றம் இந்த விவகாரத்தால் 2-வது நாள் முடங்கும் அபாயம்.

    இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இடம்பெயரும் நிலை ஏற்பட்டது.

    இந்த கலவரத்தை அடக்கி, மணிப்பூரில் அமைதி திரும்ப நடவடிக்கைகளை எடுக்க ஆளும் பா.ஜ.க. முதல்வர் தவறி விட்டதாகவும், பிரதமரும், மத்திய உள்துறை அமைச்சரும் நிலைமையை சரியாக கையாளவில்லை என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வந்தது.

    இந்நிலையில் மே மாதம் மணிப்பூரில் ஒரு சம்பவம் நடந்ததாக வீடியோ ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது. நாட்டையே அதிரவைத்த இந்த வீடியோ காட்சிகளில் ஒரு இனத்தை சேர்ந்த ஆண்கள் கும்பல், மற்றொரு இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகளின்றி ஊர்வலமாக அழைத்து செல்கின்றனர். பிறகு அந்த பெண்கள் வன்கொடுமைகளுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    இந்தியாவை மட்டுமின்றி உலகையே அதிர வைத்திருக்கும் இந்த சம்பவம் குறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்ஸெட்டி கூறியதாவது:-

    மணிப்பூர் கலவரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம். நான் இன்னும் அந்த வீடியோவை பார்க்கவில்லை. இப்போதுதான் அது குறித்து கேள்விப்படுகிறேன். அக்கம்பக்கத்திலோ, உலகெங்கும் உள்ள நாடுகளிலோ அல்லது அமெரிக்காவிலோ, மனிதர்கள் துன்பப்படும்போதெல்லாம் எங்கள் இதயம் நொறுங்குகிறது. இந்த சந்தர்பத்தில் இந்திய மக்களின் துயரத்தையும் மனவேதனையையும் உணர்ந்து நாங்கள் அவர்களுடன் நிற்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்தியாவின் 140 கோடி மக்களையும் இந்த சம்பவம் வெட்கப்பட வைத்திருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி நேற்று தெரிவித்தார்.

    ×