search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage arrangement"

    • திருமணங்களை முன்னிட்டு அனைத்து திருமண நிலையங்களிலும் நேற்று மாலை தனித்தனியே பெண் அழைப்பு நடைபெற்றது.
    • ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    புரட்டாசி மாதம் நாளை தொடங்குகிறது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் நடைபெறாது. அதற்கடுத்த மாதம் ஐப்பசியில் அடைமழை பெய்யும் என்பதாலும், மிகவும் குறைந்த அளவிலேயே சுபநிகழ்ச்சிகள் நடத்தப்படும். அதற்கடுத்து மார்கழி மாதம் என்பதால் அந்த மாதத்திலும் சுபநிகழ்ச்சிகள் நடைபெறாது. இதனால் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். ஆவணி மாதத்தின் கடைசி நாளான இன்று தமிழகம் முழுவதும் ஏராளமான திருமணங்கள் நடைபெற்றன. அதன்படி உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்களுக்கு இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து திருமண நிலையங்களையும், மாப்பிள்ளை வீட்டார் ஏற்கனவே முன்பதிவு செய்தனர். திருமணங்களை முன்னிட்டு அனைத்து திருமண நிலையங்களிலும் நேற்று மாலை தனித்தனியே பெண் அழைப்பு நடைபெற்றது. பெண் அழைப்பு முடிந்தவுடன் வரவேற்பு நடைபெற்றது.

    இந்நிலையில், இன்று காலை திருமணம் நடைபெற இருந்த 2 மணப்பெண்கள் தனித்தனியே மாயமாகினர். அவர்களது செல்போன்களும் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் மணப்பெண்ணின் பெற்றோர் செய்வதறியாது திகைத்தனர். இத்தகவல் படிப்படியாக திருமண மண்டபத்தில் இருந்த அனைவருக்கும் தெரியவந்தது. இதனை கேள்விப்பட்டு ஆத்திரமடைந்த மாப்பிள்ளை வீட்டார், பெண் வீட்டாருடன் வாக்குவதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் தகராறாக மாறி, ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். மேலும், திருமண விழாவிற்கு வந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதே சமயம் 2 மணப்பெண்கள் மாயமான திருமண நிலையங்களில் அவர்களது பெற்றோர் சொல்லனாத் துயரத்தில் அழுது கொண்டே இருந்தனர். திருமணம் நின்று போன சோகத்தில் மணமகனும் செய்வதறியாது திகைத்துக் கொண்டிருந்தார். இதேபோல உளுந்தூ ர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று திருமணம் நிச்சயி க்கப்பட்ட 5 இளம்பெண்கள் கடந்த 2 தினங்களுக்கு முன்னரே மாயமாகினர். இந்த சம்பவங்கள் உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகவும் செல்லமாக வளர்க்கின்றனர். அவர்களுக்கு குடும்ப சூழல் குறித்து எடுத்து சொல்லி பெற்றோர்கள் வளர்த்தால் இது போன்ற சம்பவங்கள் நடக்காதென சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர்.
    • மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கடலூர்:

    சிதம்பரம் கலியபெருமாள் நகர் பகுதியில் வசித்து வருபவர் வேல்முருகன் .இவரது மகள் கிருத்திகா (23) பி.எஸ்.சி. படித்து முடித்தநிலையில் இவரது வீட்டில் பெற்றோர்கள் திருமண ஏற்பாடு குறித்து பேசி உள்ளனர். அதற்கு கிருத்திகா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். நேற்று கிருத்திகா தனது வீட்டில் உள்ள அறையின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தந்தை சிதம்பரம் நகர போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர்.
    • சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அரசூரில் உள்ள தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு இவரது உறவினரான தாய் மாமாவை திருமணம் செய்து வைப்பதாக சிறுமியின் வீட்டில் ஏற்பாடுகள் செய்து வந்தனர். இதை அறிந்த சிறுமி எனக்கு இப்போது திருமணம் வேண்டாம் நான் படித்து முடித்த பின்னர் பார்க்கலாம் என்று மறுத்துவிட்டார். ஆனால் சிறுமியின் பெற்றோர் இதைக் கேட்காமல் மீண்டும் திருமண ஏற்பாடுகளை செய்தனர். திருமணம் செய்ய விருப்பம் இல்லாத சிறுமி நேற்று இரவு 11 மணி அளவில் நான் எங்கேயாவது ஆசிரமத்திற்கு செல்கிறேன் என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு சென்றார்.

    இன்று காலை பெற்றோர் எழுந்து பார்த்தவுடன் சிறுமி மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் சிறுமியை பல்வேறு இடங்களில் தேடியும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சிறுமியின் பெற்றோர் திருவெண்ணைநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து வீட்டை விட்டு சென்ற சிறுமி எங்கு சென்றார் என்பது குறித்து கடிதம் மூலம் விசாரணை நடத்தி வருகிறார். 

    நம்பியூரில் திருமண ஏற்பாடு நடந்து வந்த நிலையில் இளம்பெண் திடீரென தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    நம்பியூர்:

    நம்பியூர் அருகே எலத்தூரை சேர்ந்தவர் மணி. இவரது மகள் கவுசல்யா (வயது 24). நம்பியூர் பெரியார் நகரில் இவர்கள் வசித்து வருகிறார்கள். கவுசல்யா நம்பியூரில் உள்ள ஒரு துணி கடையில் வேலை பார்த்து வந்தார்.

    கடந்த 4 ஆண்டுகளாக கவுசல்யாவுக்கு உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் கடந்த சில நாட்களாக அவர் வேலைக்கு போகாமல் வீட்டில் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் கவுசல்யாவுக்கு வீட்டில் திருமண ஏற்பாடுகள் நடந்தது. இதனால் அவர் மன உளைச்சலில் இருந்தாராம்.

    இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது கவுசல்யா தனது துப்பட்டாவால் தூக்குபோட்டு தொங்கினார்.

    அப்போது கடைக்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பிய கவுசல்யாவின் தாயார் சகுந்தலா வீட்டு கதவு பூட்டி கிடப்பதை கண்டு ஜன்னல் வழியாக எட்டி பார்த்தார்.

    அங்கு மகள் தூக்கில் தொங்கியதை கண்டு திடுக்கிட்டு சத்தம் போட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதவை உடைத்து கவுசல்யாவை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பிறகு கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து நம்பியூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தற்கொலை செய்வதற்கு முன் கவுசல்யா எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர். அதில் ‘‘என்னால் எழுந்து கூட நிற்க முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்’’ என்று எழுதி உள்ளார்.

    ×