என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mass Wedding"
- ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
- மகாராஷ்டிராவில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
மும்பை:
ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி–நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன.
மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.
- சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட அதிகாரி தெரிவித்தார்.
- முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது.
போபால்:
மத்தியப் பிரதேசத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களுக்கு அரசு சார்பில் இலவசமாக திருமணம் நடத்தப்படுகிறது. இந்த திட்டத்தின்கீழ் இன்று தண்ட்லா பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் 296 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. விழாவில் மணப்பெண்களுக்கு மேக்கப் கிட் பரிசாக வழங்கப்பட்டது. அந்த மேக்கப் கிட்டில் ஆணுறைகளும், கருத்தடை மாத்திரைகளும் இருந்தன. இந்த சம்பவம் திருமண விழாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்தியப் பிரதேச சுகாதாரத் துறை அதிகாரிகள் இந்த மேக்கப் கிட்டை வழங்கியிருக்கலாம் என மாவட்ட மூத்த அதிகாரி ராவத் குற்றம்சாட்டினார். குடும்பக் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு திட்டத்தின் ஒரு பகுதியாக இவ்வாறு ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளை தந்திருக்கலாம் என்றும் கூறினார்.
'மாவட்ட நிர்வாகம் தரப்பில் மேக்கப் கிட் வழங்கப்படவில்லை. ஆணுறைகள் மற்றும் கருத்தடை மாத்திரைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல. முதலமைச்சரின் திருமண திட்டத்தின்கீழ், பயனாளியின் வங்கிக் கணக்கில் நேரடியாக 49,000 ரூபாய் வரவு வைக்கிறோம். 6,000 ரூபாய் மதிப்புள்ள உணவு, தண்ணீர் மற்றும் ஒரு கூடாரத்தை வழங்கும் பொறுப்பை மாவட்ட நிர்வாகம் ஏற்றுள்ளது. ஆனால் அவர்களுக்கு வழங்கப்பட்ட பாக்கெட்டுகளில் என்ன இருந்தது என எங்களுக்கு தெரியாது' என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்