search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mission shakti"

    • ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசித்தார்.
    • மிஷன் சக்தி திட்டத்தை செயல்படுத்தும் விதம் குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார்.

    புவனேஷ்வர்:

    தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒடிசா மாநிலம், புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட செயல்பாடுகளை பார்வையிட்டு திட்ட செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். குறிப்பாக ஓடிசா மாநிலத்தில் இளைஞர்களின் திறனை மேம்படுத்த ஏதுவாக உருவாக்கப்பட்ட உலகத்தரம் வாய்ந்த திறன் வளர்ப்பு பயிற்சி மையத்தை பார்வையிட்டு, இளைஞர்களை தேர்வு செய்தல், திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்குதல், பல்வேறு நாடுகளில் இளைஞர்களை பணியமர்த்துதல் போன்ற செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் ஒடிசா மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி (Mission Sakthi) என்ற திட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், இத்திட்டம் எவ்வாறு மாபெரும் இயக்கமாக உருவெடுத்து வருகிறது என்பது குறித்தும் கலந்தாலோசித்தார். மேலும் மிஷன் சக்தி திட்டத்தினை ஒடிசா மாநிலத்தின் அனைத்து துறைகளும் எவ்வாறு இணைந்து செயல்படுத்துகின்றன என்பது குறித்து ஒடிசா மாநில மிஷன் சக்தி இயக்குநர் சுஜாதா விளக்கமளித்தார், அப்போது இத்திட்டம் குறித்து அனைத்து அலுவலர்களுடன்  இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கலந்துரையாடினார்.

    இந்நிகழ்வில், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் முதன்மை செயலாளர் முனைவர். அதுல்யா மிஸ்ரா, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மை செயலாளர் பெ.அமுதா,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர்  ச.தின்யதர்சினி,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் கா.ப. கார்த்திகேயன், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் கூடுதல் இயக்குநர் எஸ்.கவிதா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

    பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே மிஷன் சக்தி ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார். #Chidambaram #MissionShakti #PMModi
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை மதியம் திடீரென தொலைக்காட்சி, ரேடியோ மற்றும் சமூக வலைத்தளங்களில் தோன்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

    அப்போது பேசிய அவர், செயற்கைக்கோளை ஏவுகணை மூலம் தாக்கி அழிக்கும் சோதனையை இந்தியா வெற்றிகரமாக நடத்தியுள்ளது என நாட்டு மக்களுக்கு அறிவித்தார்.

    பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட ஓட்டுப்பதிவுக்கு இரு வாரங்களே உள்ள நிலையில் பிரதமர் மோடி தொலைக்காட்சியில் தோன்றி பேசியது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என்று காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன.



    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற பயத்திலேயே மிஷன் சக்தி ரகசியத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது என ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில்,  விண்வெளிக் கலத்தை ஏவுகணையால் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் பல ஆண்டுகளாக நமக்கு இருந்தது. புத்திசாலி அரசுகள் இந்த ரகசியத்தைக் காப்பாற்றினார்கள். பாஜக அரசு இந்த ரகசியத்தை வெளியிட்டது துரோகம்.

    மேலும், தேர்தல் நேரத்தில் இந்த ரகசியத்தை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? தேர்தல் தோல்வி பயம் தான் காரணம் என பதிவிட்டுள்ளார். #Chidambaram #MissionShakti #PMModi
    மோடியின் மிஷன் சக்தி பேச்சில் தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் இன்று முடிவு செய்யும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    விண்வெளியில் 300 கிலோ மீட்டர் உயரத்தில் சுற்றி வந்த செயற்கைகோளை சுட்டு வீழ்த்திய ‘மிஷன் சக்தி’ திட்டம் மூலம் இந்தியா சாதனை நிகழ்த்தியதாக பிரதமர் மோடி நாட்டிற்கு அறிவித்தார். பிரதமர் மோடியின் இந்த அறிவிப்பு தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என்றும் அவர் மீது தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

    இதைத்தொடர்ந்து பிரதமரின் அறிவிப்பு தேர்தல் விதி மீறலா? என்பது பற்றிய ஆய்வு செய்ய விசாரணை குழுவை தேர்தல் கமிஷன் அமைத்து உத்தரவிட்டது.

    இதற்கிடையே தேர்தல் கமிஷன் அதிகாரிகள் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘பிரதமரின் மிஷன் சக்தி திட்டம் தொடர்பான பேச்சில் தேர்தல் விதிமீறல் உள்ளதா? என கண்டறிய அமைக்கப்பட்ட விசாரணை குழு 2 முறை கூடி ஆலோசனை நடத்தியது. ஊடகங்களில் பேசுவதற்கு முன் பிரதமர் தேர்தல் கமிஷனில் அனுமதி பெறவில்லை. அவரது பேச்சில் தேர்தல் விதி மீறல் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் கமிஷன் இன்று (வெள்ளிக்கிழமை) முடிவு செய்யும்’ என தெரிவித்தனர்.
    மி‌ஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்வதாக தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan #MissionShakti
    தூத்துக்குடி:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பா.ஜ.க. கூட்டணியை எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சிப்பது அவர்களது இயலாமையை காட்டுகிறது. மி‌ஷன் சக்தி சாதனையை மோடி பகிர்ந்து கொண்டதில் தவறில்லை. மி‌ஷன் சக்தி சாதனையிலும் எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.



    முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஏழைகளை பற்றி சிந்திக்காதவர். பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தூத்துக்குடி துறைமுகத்தை தனியாருக்கு தாரை வார்த்துவிடுவார்கள் என்று பீட்டர் அல்போன்ஸ் தவறான வாதத்தை தெரிவித்து வருகிறார். சுற்றுப்புறசூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தூத்துக்குடியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    நிதி ஒதுக்கப்பட்ட பின்னரே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. தேர்தல் பிரசாரத்திற்காக வருகிற 2-ந்தேதி பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தூத்துக்குடி வருகிறார். அதில் தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் கலந்து கொள்கிறார். குற்றப்பரம்பரை என தெரிவித்ததை தவறாக சித்தரிக்கின்றனர்.

    காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் ஏழைகளுக்கு வருடத்திற்கு ரூ.72 ஆயிரம் வழங்குவதாக கூறி மக்களை ஏமாற்றுகின்றார்கள். நான் வெற்றிபெற்றால் தூத்துக்குடியில் பன்னாட்டு விமான நிலையம், புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #BJP #TamilisaiSoundararajan #MissionShakti
    விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. #MissionShakti
    இஸ்லாமாபாத்:

    செயற்கைகோளை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனையை இந்தியா நடத்தியது பற்றி பாகிஸ்தான் கருத்து தெரிவித்துள்ளது. அந்நாட்டு வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் முகமது பைசல் கூறியதாவது:-

    விண்வெளி என்பது மனித குலத்தின் பொதுவான பகுதி. அதை ராணுவ மயமாக்கக்கூடிய செயல்களை தவிர்க்க வேண்டிய பொறுப்பு, ஒவ்வொரு நாட்டுக்கும் இருக்கிறது. விண்வெளியில் ஆயுத போட்டியை தடுப்பது தொடர்பான ஐ.நா. தீர்மானத்தை பாகிஸ்தான் முழுமையாக ஆதரிக்கிறது.

    எனவே, கடந்த காலங்களில் இதேபோன்ற சோதனையை பிற நாடுகள் செய்தபோது கண்டித்த நாடுகள் எல்லாம், விண்வெளிக்கான ராணுவ அச்சுறுத்தலை தடுக்கும் செயல்களில் ஈடுபடும் என்று எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது. விண்ணில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.



    நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.

    செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும். இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Modi #Mission Shakti

    ×