search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MLCs"

    • தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.
    • சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    ஐதராபாத்:

    தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக ரேவந்த்ரெட்டி உள்ளார். இந்த நிலையில் சந்திரசேகரரராவின் பாரத ராஷ்டிர சமிதி கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.சி.க்கள் (சட்டசபை மேல்சபை உறுப்பினர்கள்) முதல்-மந்திரி ரேவந்த் ரெட்டி முன்னிலையில் காங்கிரஸ் கடசியில் சேர்ந்தனர்.

    தண்டே விட்டல், பானுபிரசாத், தயானந்த், பிரபாகர் ராவ், பசவராஜு, மல்லேசம் ஆகிய 6 எம்.எல்.சி.க்கள் பாரத ராஷ்டிர சமிதி கட்சியில் இருந்து விலகி காங்கிசில் இணைந்துள்ளனர். இது சந்திரசேகரராவ் கட்சிக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.

    கடந்த மாதம் பாரத ராஷ்டிர சமிதி கட்சி எம்.எல்.ஏ.க்களான காலே யாதய்யா, சஞ்சய்குமார் ஆகியோர் காங்கிரசில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×