search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi Birthday"

    • கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.
    • தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    பொன்னேரி:

    பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட பா.ஜனதா பட்டியல் அணி மாநில செயலாளர் அத்திப்பட்டு அன்பாலயா சிவகுமார் தலைமையில் கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கி பழங்குடியின மக்கள் 400 பேருக்கு அறுசுவை உணவு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் ஊடகப் பிரிவு தலைவர் கோகுல், கிளை தலைவர் கண்ணன், நிர்வாகி செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். பொன்னேரி நகர செயலாளர் சிவகுமார் தலைமையில் புதிய பஸ் நிலையம் அருகில் அன்னதானம் வழங்கப்பட்டது.

    பொன்னேரி அடுத்த டி. வி. புரத்தில் ஆன்மீகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு சார்பில் பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு செயலாளர் பிரபு ஏற்பாட்டில் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்கப்பட்டது. பின்னர் தாமரை குளக்கரையில் 100 பனை விதைகள் விதைக்கப்பட்டன.

    • செப்டம்பர் 17-ல் மோடியின் பிறந்த நாள்
    • செப்டம்பர் 17 முதல் அக்டோபர் 2 வரை சேவைப் பணியில் ஈடுபட வலியுறுத்தல்

    இந்திய பிரதமர் மோடிக்கு அடுத்த மாதம் 17-ந்தேதி பிறந்தநாள். 73 வயதை நிறைவு செய்து 74-வது வயதில் அடியெடுத்து வைக்க இருக்கிறார்.

    அவரது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் "15 நாட்கள் சேவை" என்பதன் மூலம் மக்களுக்கு சேவை செய்தல், தூய்மைப் பணிகளில் ஈடுபடுதல் போன்ற பணிகளில் ஈடுபடும்படி பா.ஜனதா கட்சி எம்.பி.களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

    அந்த வகையில் செப்டம்பர் 17-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை பா.ஜனதா எம்.பி.க்கள் பொதுமக்களுக்கு சேவை செய்யும் பணிகளிலும், தூய்மை பணிகளிலும் ஈடுபட வேண்டும் என்று அக்கட்சியின் தேசிய தலைவர்கள் ஜே.பி. நட்டா கேட்டுக்கொண்டுள்ளார்.

    ரத்த தானம் முகாம், தூய்மை பணி பிரசாரம் ஆகியவற்றில் ஈடுபடுதல், ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் இணைவதற்கு தகுதியானர்வகள் இன்னும் அத்திட்டத்தில் இணையவில்லை என்றால், அதற்கான வேலையை செய்து அவர்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்திற்கான கார்டுகளை வாங்கி கொடுத்தல் போன்ற பணியில் ஈடுபட கேட்டுக்கொள்ளப்பட்டது.

    கடந்த வருடமும் இதுபோன்ற பணிகளில் பா.ஜனதா எம்.பி.க்கள் ஈடுபட்டனர்.

    ×