என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Money recovery"
- ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள்.
- டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
ராஞ்சி:
ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்திமோர்ச்சா கட்சி ஆட்சி நடந்து வருகிறது.
இந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த 13-ந்தேதி 43 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
மீதம் உள்ள 38 தொகுதிகளுக்கு வருகிற 20-ந்தேதி 2-ம் கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அங்கு தீவிர வாகன சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஜார்க்கண்ட்- பீகார் எல்லையில் உள்ள கிரிதிஹ் மாவட்டத்தில் வருமான வரித்துறையினரும், போலீசாரும் சேர்த்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு வாகனத்தை சோதனை செய்தனர். அப்போது வாகனத்தில் உதிரியாக ஒரு டயர் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அந்த டயரை சோதனை செய்தபோது டயருக்குள் கட்டுக்கட்டாக பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.
மொத்தம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பண கட்டுகளை டயருக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதை கண்ட அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பணம் எதற்காக மறைத்து வைத்து கடத்தி செல்லப்படுகிறது? வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக கொண்டு செல்லப்பட்டதா? என விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் டயருக்குள் பதுக்கி பணம் கொண்டு செல்லப்பட்டதை அதிகாரிகள் கைப்பற்றிய வீடியோவை ஜார்க்கண்டில் கோடா தொகுதி பாஜக எம்.பி. நிசிகாந்த் துபே எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
झारखंड विधानसभा चुनाव में अपनी हार निश्चित देखकर झामुमो कांग्रेस धन बल के सहारे चुनाव प्रभावित करना चाहती है।
— Babulal Marandi (@yourBabulal) November 14, 2024
हेमंत जी, झारखंड के जागरूक मतदाता पैसों के लालच में नहीं फंसने वाले... आपकी काठ की हांडी बार-बार चढ़ने वाली।
इस चुनाव में जनता की जीत होगी, भाजपा की जीत होगी। https://t.co/i41DNVa9Tk
வீடியோவுடன் அவரது பதிவில், ஆளும் ஜார்க்கண்ட் முக்திமோச்சா மற்றும் அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் சேர்ந்து மாநிலத்தில் ஊழல் செய்கின்றனர் என பதிவிட்டுள்ளார்.
மேலும் ஊழலையும், பணக்கட்டுகளையும் பார்க்க வேண்டுமானால் ஜார்க்கண்டுக்கு வாருங்கள். வருமானவரித்துறையும், தேர்தல் அதிகாரிகளும் கிரிதிக் தொகுதியில் ரூ.50 லட்சம் பணத்தை கைப்பற்றி உள்ளனர் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தளங்களில் வைரலாகி வருகிறது.
- ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
- பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி சைபர் கிரைம் போலீசில் ஆன்லைன் மோசடி மற்றும் செல்போன் திருட்டு தொடர்பாக பல்வேறு புகார்கள் குவிந்தன.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ. எண்ணை வைத்து அந்த செல்போன்களை யார் பயன்படுத்தி வருகிறார்கள்? என கண்டுபிடித்து மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அதன்படி புதுவையை சேர்ந்த 70 பேரின் செல்போன்களை போலீசார் மீட்டனர். இவற்றின் மதிப்பு ரூ.12 லட்சம் ஆகும்.
இந்த செல்போன்களை காவல்துறை தலைமையகத்தில் அதன் உரிமையாளர்களிடம் போலீஸ் டி.ஐ.ஜி.பிரிஜேந்திரகுமார் யாதவ் வழங்கினார்.
மேலும் ஆன்லைனில் முதலீடு செய்து பணத்தை இழந்த 2 பேருக்கு ரூ.11 லட்சத்திற்கான காசோலையும் வழங்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து போலீஸ் டி.ஐ.ஜி. பிரிஜேந்திர குமார் யாதவ் நிருபர்களிடம் கூறியதாவது:-
நடப்பாண்டில் மொத்தம் 47 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்தது தொடர்பாக 24 வழக்குகளில் 13 வழக்கில் ரூ.94 லட்சம் மீட்கப்பட்டது.
பெண்களுக்கு எதிரான 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12 வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைதாகி உள்ளனர்.
பெண் குழந்தைகளுக்கு எதிரான 6 வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பறிமுதல் செய்யப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் சைபர் கிரைம் போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கர், இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் உடனிருந்தனர்.
- வட மாநிலத்தவரிடம் போலீசார் ஒப்படைத்தனர்
- ரெயில் மாறி ஏறிவிட்ட பதட்டத்தில் தவறவிட்டார்
ஜோலார்பேட்டை:
மேற்கு வங்காள மாநிலம் பரணகல் பகுதியைச் சேர்ந்தவர் பிமல் (வயது 52). இவர் ஒசூரில் வசித்து வரும் தனது மகளை பார்ப்பதற்காக, சொந்த ஊரில் இருந்து ரெயில் மூலம் நேற்று காலை கர்நாடக மாநிலம் கே.ஆர். புரம் ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார்.
அங்கிருந்து மாற்று ரெயில் மூலம் ஓசூர் செல்வதற்கு அவர் தவறுதலாக பெங்களூரில் இருந்து திருப்பதி செல்லும் ரெயிலில் ஏறிவிட்டார்.
தவறுதலாக ஏறியதை அறிந்த அவர் உடனடியாக ரெயிலில் இருந்து இறங்கி விட்டார். அவ சரமாக இறங்கியதால் தனது சூட்கேஸ், பையில் வைத்தி ருந்த ரூ.40 ஆயிரம் ஆகிய வற்றை தவற விட்டுவிட்டார்.
இது குறித்து அவர் கே.ஆர்.புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ரெயில்வே போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனடியாக ரெயில்வே போலீசார் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன் பேரில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் தயாராக இருந்த சப்- இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், சுப்பிரமணி மற்றும் போலீசார். அந்த ரெயில் ஜோலார்பேட்டை வந்த டைந்ததும் ரெயில் பெட்டி யில் இருந்து சூட்கேஸ், ரூ.40 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மீட்டனர்.
பின்னர் உரியவருக்கு தக வல் தெரிவித்து, அவரை வரவழைத்து சூட்கேஸ் மற் றும் பணத்தை ஆகியவற்றை ஒப்படைத்தனர். இதனை பெற்று கொண்ட அவர் பணத்தை மீட்டு கொடுத்த போலீசாருக்கு நன்றி தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்