search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mother condemned"

    குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி தாய் கண்டித்ததால் பெயிண்டர், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்லை அடுத்த நாவற்குளம் பகுதியை சேர்ந்தவர் முருகன் மகன் பரந்தாமன் என்கிற அய்யப்பன் (வயது 26), பெயிண்டர் வேலை செய்து வந்த இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவருக்கு தீராத குடிப்பழக்கம் இருந்து வந்தது. இந்த குடிப்பழக்கத்தில் இருந்து விடுபட பரந்தாமனை அவரது பெற்றோர், விழுப்புரம் அருகே கோலியனூரில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.

    அங்கு சில மாதங்கள் சிகிச்சை பெற்று பின்னர் கடந்த ஜனவரி மாதம் பரந்தாமன் தனது வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் பெயிண்டர் வேலைக்கு சென்று வந்தார். அவ்வாறு வேலைக்கு செல்லும்போது அவருக்கு மீண்டும் குடிப்பழக்கம் ஏற்பட்டது.

    இதனால் இந்த குடிப்பழக்கத்தை நிறுத்தச்சொல்லி பரந்தாமனை அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த பரந்தாமன், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    புதுவை அருகே மதுபழக்கத்தை தாய் கண்டித்ததால் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    சேதராப்பட்டு:

    புதுவை அருகே தமிழக பகுதியான நாவற்குளம் குளத்து மேட்டு வீதியை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 26). கூலித்தொழிலாளியான இவர் மது பழக்கத்துக்கு அடிமையானார்.

    இதனால் இவருக்கு திருமணம் செய்ய யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதையடுத்து மது பழக்கத்தை மறக்க கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி அழைத்து சென்று கோலியனூரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தார்.

    அங்கு சில நாட்கள் மட்டுமே பரந்தாமன் தங்கி இருந்து சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து தப்பி வீட்டுக்கு வந்து விட்டார்.

    ஆனாலும் மது பழக்கத்தை கைவிடாமல் தொடர்ந்து மது குடித்து வந்தார். இதனால் நேற்று பரந்தாமனை அவரது தாய் கிருஷ்ணவேணி கண்டித்தார். பின்னர் அவர் வெளியே சென்று விட்டார்.

    தாய் கண்டித்ததால் மனவேதனை அடைந்த பரந்தாமன், தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தாயின் சேலையால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பராஜ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    கும்பகோணத்தில் பள்ளிக்கு செல்லாததை தாய் கண்டித்ததால் வி‌ஷம் குடித்த அண்ணன்- தம்பி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி பகுதியை சேர்ந்தவர் கருப்பையன். இவருடைய மனைவி அம்முனி. இவர்களது மகன்கள் ஆகாஷ் (வயது 13), ஹரிஸ் (11). அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் ஆகாஷ் 8-ம் வகுப்பும், ஹரிஸ் 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்தனர். ஆதலால் அம்முனி, இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த ஆகாஷ் மற்றும் ஹரிஸ் ஆகிய 2 பேரும் வீட்டில் வைத்திருந்த பூச்சிமருந்தை (வி‌ஷம்) குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளனர்.

    இதையறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

    தீவிர சிகிச்சை அளித்தும் அவர்கள் 2 பேரும் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து கும்பகோணம் கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆண்டிப்பட்டி அருகே செல்போனில் பேசியதை தாய் கண்டித்ததால் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.

    ஆண்டிப்பட்டி:

    ஆண்டிப்பட்டி அருகே வைகைபுதூர் அண்ணா நகரை சேர்ந்தவர் முருகன். இவர் வைகை அணை பொதுப்பணித்துறையில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சாருக்கா பாண்டிஸ்ரீ (வயது16). அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அடிக்கடி செல்போனில் பேசி வந்ததால் தாயார் கண்டித்துள்ளார்.

    இதனால் மனமுடைந்த சாருக்கா பாண்டிஸ்ரீ தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆண்டிப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சமீப காலமாக பள்ளி மாணவ-மாணவிகளிடையே செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஒரு காலகட்டத்தில் அதற்கு அடிமையாகும் சூழலும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவ-மாணவிகளை அவரது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.

    செல்போனில் அதிகம் பேசுவது, விளையாடுவது போன்றவற்றால் உடல் நிலை பாதிக்கப்படுகிறது. இதனால் மனதளவிலும் பாதிக்கப்படும் அவர்கள் சிறிய ஏமாற்றத்தை கூட தாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது.

    இதன் காரணமாகவே இளம்வயதில் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தான முடிவுகளை எடுக்கின்றனர். எனவே பள்ளிகளில் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    கோவை தொண்டாமுத்தூர் அருகே வீட்டில் வேலை செய்யாததை தாய் கண்டித்ததால் இளம்பெண் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள குளத்துப்பாளைத்தை சேர்ந்தவர் சத்திய பிரியா (வயது 20). இவர் கோவையில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வீட்டில் இருந்த சத்திய பிரியாவிடம் அவரது தாய் வீட்டு வேலையில் தனக்கு உதவி செய்யுமாறு கூறினார். ஆனால் அவர் வேலை செய்ய மறுத்துவிட்டார். இதனையடுத்து சத்திய பிரியாவை அவரது தாய் கண்டித்தார். இதனால் மனவேதனை அடைந்த சத்திய பிரியா வீட்டில் உள்ள அறையில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

    இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து தொண்டாமுத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட சத்திய பிரியாவின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×