search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "moving train"

    • கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
    • ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே ரெயில்வே கேட் பகுதியில் முதியோர் ஒருவர் ரெயிலில் இருந்து தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக கடந்த 23ஆம் தேதி ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.

    அதன் பேரில் ஈரோடு ரெயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உயிருக்கு போராடிய முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கரூரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர்.

    எனினும் சிகிச்சை பலனின்றி அந்த முதியவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இறந்த முதியவர் ரோஸ் கலர் அறிக்கை சட்டை, ரோஸ் கலர் வேட்டி அணிந்திருந்தார். மேலும் வலது முன் கையில் கருப்பு மச்சமும், இடது கால் முட்டியில் ஒரு காயத்தழும்பும் இருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்த முதியவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு பகுதி சேர்ந்த ஆறுமுகம் (69) என தெரிய வந்தது.

    இவர் கடந்த 23ஆம் தேதி பாலக்காடு - திருச்சி செல்லும் பயணிகள் ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்த போது கொடுமுடி தாண்டி சென்ற போது ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தது தெரிய வந்தது.

    இதன் பின்னர் ரயில்வே போலீசார் கரூரில் உள்ள முகவரியில் சென்று விசாரித்தபோது அப்படி ஒரு நபர் இல்லை என தெரிய வந்தது.

    இந்நிலையில் ரெயிலில் இருந்து தவறி விழுந்து இறந்த முதியவர் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர்.
    • ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    ஈரோடு:

    கேரள மாநிலம் கொல்லம் கடக்கல் பகுதியை சேர்ந்தவர் தீபக் (46). பல் டாக்டர். சம்பவத்தன்று கொச்சு வேலி-மைசூர் செல்லும் மைசூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு பெட்டியில் பயணம் மேற்கொண்டார்.

    அதே ரெயில் பெட்டியில் பயணித்த 3 இளம் பெண்களிடம் 3 வாலிபர்கள் பேசி கொண்டிருந்தனர். ரெயில் ஈரோடு தாண்டி சென்று கொண்டிருந்தபோது அந்த 3 வாலிபர்களுக்கும் பல் டாக்டர் தீபக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதையடுத்து அந்த 3 வாலிபர்களும் தீபக்கை தாக்கினர். இது குறித்து தீபக் பெங்களூரு ரெயில்வே போலீசில் புகார் அளித்தார்.

    இந்த புகார் ஈரோடுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து ஈரோடு ரெயில்வே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பண்ருட்டியில் ஓடும் ரெயிலில் இருந்து தவறி விழுந்த லாரி டிரைவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
    பண்ருட்டி: 

    சிதம்பரம் அருகே உள்ள வல்லம்படுகை காமராஜ் நகரில் வசித்து வந்தவர் தியாகு(வயது 33). லாரி டிரைவர். இவர் வேலூர் செல்வதற்காக நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் ரெயில் நிலையத்துக்கு வந்தார். பின்னர் ராமேசுவரத்தில் இருந்து திருப்பதி நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரெயிலில் முன்பதிவு செய்யாத பெட்டியில் அவர் ஏறினார்.

    ரெயிலில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் தியாகு, வாசலில் நின்று பயணம் செய்துள்ளார். பண்ருட்டி திருவதிகை என்ற இடத்தில் ரெயில் வந்தபோது, நிலைதடுமாறி ரெயிலில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த தியாகு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    இதை அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி பண்ருட்டி போலீசாரும், கடலூர் ரெயில்வே போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் தியாகுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் கடலூர் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
    ×