என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Mumbai test"
- முதல் 2 டெஸ்ட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வென்று தொடரை கைப்பற்றி விட்டது.
- இந்திய அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் 1 மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பும்ராவுக்கு பதிலாக சிராஜ் இடம் பெற்றுள்ளார்.
- நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் வெற்றி பெற வேண்டும்.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்த டெஸ்டின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடுவதற்காக அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன.
- இதில் இந்திய அணி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டது.
மும்பை:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் எதிர்பாராத திருப்பமாக முதல் இரு டெஸ்டிலும் நியூசிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்து விட்டது.
இந்த நிலையில் இந்தியா- நியூசிலாந்து இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இரு அணி வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர். இந்த டெஸ்டின் முடிவு தொடரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றாலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் இந்திய அணி (தற்போது 62.82 சதவீத புள்ளி) முதலிடத்தில் நீடிக்க இந்த டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற வேண்டியது அவசியமாகும். அந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது.
பெங்களூருவில் நடந்த முதலாவது டெஸ்டில் இந்திய அணி மேகமூட்டமான சீதோஷ்ண நிலையில் நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் முதல் இன்னிங்சில் வெறும் 46 ரன்னில் சுருண்டது. உள்நாட்டில் இந்தியாவின் மோசமான ஸ்கோர் இதுவாகும். 2-வது இன்னிங்சில் சர்ப்ராஸ்கானின் சதத்தால் இந்தியா 462 ரன் குவித்து 107 ரன்னை எதிரணிக்கு இலக்காக நிர்ணயித்தது. இதை நியூசிலாந்து எளிதில் எட்டிப்பிடித்து விட்டது.
புனேயில் நடந்த 2-வது டெஸ்டில் ஆடுகளம் முதல்நாளில் இருந்தே சுழலுக்கு சாதகமாக காணப்பட்டது. இதிலும் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறியதுடன் 156 ரன்னில் அடங்கினர். பின்னர் நியூசிலாந்து நிர்ணயித்த 359 ரன் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை விளையாடிய இந்தியா 245 ரன்னில் ஆட்டமிழந்து, 113 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
12 ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் இந்தியா டெஸ்ட் தொடரை தாரைவார்த்தது. மூத்த வீரர்கள் விராட் கோலியும், கேப்டன் ரோகித் சர்மாவும் தடுமாறுவது இந்தியாவுக்கு பின்னடைவாக உள்ளது. அவர்கள் ரன் குவிக்க வேண்டிய நெருக்கடியில் தவிக்கிறார்கள். இதே போல் மூத்த சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், ரவீந்திர ஜடேஜாவும் கைகொடுத்தால் தான் ஆறுதல் வெற்றியாவது பெற முடியும்.
வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அழைக்கப்பட்டிருப்பதால் பும்ரா அல்லது முகமது சிராஜ் ஆகியோரில் ஒருவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம். இந்த ஆடுகளமும் சுழற்பந்து வீச்சுக்கே அதிகம் ஒத்துழைக்கும் என தெரிவதால் முந்தைய டெஸ்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக சுழற்பந்து வீச்சாளர் வாஷிங்டன் சுந்தரின் பந்து வீச்சு மீது எதிர்பார்ப்பு நிலவுகிறது.
இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் அபிஷேக் நாயர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'பவுலர்கள் வீசும் பந்துகளில் எந்த பந்து நன்கு சுழன்று திரும்புகிறது, எந்த பந்து பிட்ச் ஆனதும் நேராக வருகிறது என்பதை பேட்ஸ்மேன்கள் புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். குறிப்பாக சுழற்பந்து வீச்சாளரின் கையில் இருந்து பந்து விடுபடுவதை கூர்ந்து கவனிக்க வேண்டும்.
ஆடுகளத்தன்மை எந்த மாதிரி இருக்க வேண்டும் என்று நாங்கள் எதுவும் கேட்பதில்லை. எத்தகைய ஆடுகளத்தை வழங்கினாலும், ஒரு அணியாக அதில் சிறப்பாக விளையாட முயற்சிக்கிறோம். விராட் கோலி, ரோகித்சர்மா உள்ளிட்ட வீரர்கள் கடினமாக உழைக்கிறார்கள்.
சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறார்கள். அவர்களது அணுகுமுறை சிறப்பாக இருக்கிறது. ஆனால் சில நேரம் நீங்கள் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். ஏனெனில் சிறந்த வீரர்களாக இருந்தாலும் கூட அவர்களுக்கும் கடினமான நேரம் வரத்தான் செய்யும். கோலி, ரோகித் சர்மா சீக்கிரம் நல்ல நிலையை எட்டுவார்கள்' என்றார். மொத்தத்தில் முதல் இன்னிங்சில் இந்திய பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால், வெற்றிப்பாதைக்கு திரும்புவதற்கு வாய்ப்பு உருவாகும்.
இலங்கையில் இரு டெஸ்டிலும் தோற்று பெரிய அளவில் எதிர்பார்ப்பு இன்றி இந்திய மண்ணில் கால்பதித்த நியூசிலாந்து அணி அடுத்தடுத்து இரு டெஸ்டிலும் வாகை சூடி அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து விட்டது. இந்தியாவில் 69 ஆண்டுகளாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடும் நியூசிலாந்து முதல் முறையாக டெஸ்ட் தொடரை சொந்தமாக்கி சரித்திரம் படைத்து விட்டது.
முதலாவது டெஸ்டில் ரச்சின் ரவீந்திராவின் சதமும், 2-வது டெஸ்டில் சுழற்பந்து வீச்சாளர் மிட்செல் சான்ட்னெரின் (13 விக்கெட்) பந்து வீச்சும் வெற்றிக்கு உதவின. தொடரை முழுமையாக வெல்லும் வேட்கையுடன் அவர்கள் வியூகங்களை தீட்டுவதால் இந்த போட்டியிலும் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
போட்டி நடக்கும் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இதுவரை 26 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய அணி 12-ல் வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியும், 7-ல் டிராவும் கண்டது.
நியூசிலாந்து அணி இங்கு இந்தியாவுடன் 3 டெஸ்டில் மோதி அதில் ஒன்றில் வெற்றியும் (1988-ம் ஆண்டு), 2-ல் தோல்வியும் (1976 மற்றும் 2021-ம் ஆண்டு) கண்டது. 2021-ம் ஆண்டில் இங்கு நடந்த டெஸ்டில் நியூசிலாந்து சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளையும் கபளீகரம் செய்து சாதனை படைத்தது நினைவிருக்கலாம். ஆனாலும் அந்த டெஸ்டில் நியூசிலாந்து தோல்வியையே தழுவியது.
2016-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 631 ரன்கள் குவித்தது இந்த மைதானத்தில் ஒரு அணியின் அதிகபட்சமாகும். 2021-ம் ஆண்டில் இந்தியாவுக்கு எதிராக நியூசிலாந்து 62 ரன்னில் ஆல்-அவுட் ஆனது குறைந்தபட்சமாகும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்