என் மலர்
நீங்கள் தேடியது "Murder case"
- சதீஷை சிறையில் இருந்து சிபிசிஐடி அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.
- சிபிசிஐடி போலீசாரின் பரிந்துரையில் சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
சென்னை ஆலந்தூரை சேர்ந்த மாணவி சத்யபிரியா கடந்த 13-ந்தேதி பரங்கி மலை ரெயில் நிலையத்தில் வைத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். சத்யாவை ரெயில் முன்பு தள்ளி கொலை செய்த வாலிபர் சதீஷ் கைது செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சதீசை காவலில் எடுத்து விசாரணை நடத்திய போலீசார் மீண்டும் புழல் சிறையில் அடைத்துள்ளனர். போலீஸ் காவலின்போது சதீஷ் அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தில் சத்யா எனது காதலை ஏற்காமல் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடிவு செய்ததால் திட்டமிட்டு கொலை செய்ததாக தெரிவித்திருந்தார்.
பொது இடத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் மாணவி சத்யா கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதுமே பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதை தொடர்ந்து சதீஷ் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க போலீசார் முடிவு செய்திருந்தனர். இந்தநிலையில் சதீஷ் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். குண்டர் சட்டம் பாய்ந்திருப்பதன் மூலம் கொலையாளி சதீஷ் ஓராண்டுக்கு சிறையில் இருந்து வெளிவர முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கை விரைந்து முடித்து கொலையாளி சதீசுக்கு உச்சபட்ச தண்டனை வாங்கி கொடுக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர். இதுபோன்ற முக்கியமான வழக்குகளில் குற்றப்பத்திரிக்கையை விரைந்து தாக்கல் செய்து 3 மாதத்தில் வழக்கை முடிப்பார்கள். அதுபோன்ற நடவடிக்கையைத்தான் மாணவி சத்யா கொலையிலும் போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள். இதன்காரணமாக குண்டர் தடுப்பு சட்ட காவலில் சதீஷ் சிறையில் இருக்கும் காலத்துக்குள்ளாகவே வழக்கு விசாரணையை முடித்துவிட சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
- குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர்.
- திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
குமரி மாவட்டம் பளுகல் போலீஸ் சரகத்திற்குட்பட்ட ராமவர்மன் சிறை பகுதியைச் சேர்ந்தவர் சிந்து. இவரது மகள் கிரீஷ்மா ( வயது 23).
இவருக்கும் குமரி மாவ ட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்த கேரள மாணவர் ஷாரோன் ராஜ் (25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் கல்லூரியில் படிக்கும்போது ஏற்பட்ட பழக்கமே காதலாக மாறி உள்ளது. இந்தநிலையில் திடீர் உடல் நலக்குறைவால் கேரள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாரோன்ராஜ் கடந்த 25ம் தேதி இறந்தார்.
இதுதொடர்பாக அவரது தந்தை ஜெயராஜ், பாற சாலை போலீசில் புகார் கொடுத்தார். அதில், காதலி கிரீஷ்மாவை வீட்டில் சந்தித்துவிட்டு வந்த பிறகு தான், தனது மகனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு இறந்து போனதாக குறிப்பிட்டு இருந்தார். இதுகுறித்த வழக்கை திருவனந்தபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியபோது, விஷம் கொடுத்து ஷாரோன்ராஜ் கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது. அவரது காதலி கிரீஷ்மா தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பதும் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கிரீஷ்மாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையின்போது அவர், காதலன் ஷாரோன்ராஜிக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்ததை ஒப்புக் கொண்டார். தொடர்ந்து விஷ பாட்டில் உள்ளிட்ட தடயங்களை அழித்ததாக கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய் மாமா நிர்மல் குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
போலீசார் நடத்திய தொடர் விசாரணையில், கிரீஷ்மாவுக்கு ராணுவ வீரர் ஒருவருடன் திருமண நிச்சய தார்த்தம் நடந்திருப்பதும் அதனால்தான் காதலனை கொலை செய்ய திட்டமிட்டதும் தெரிய வந்தது. இதற்கிடையில், கிரீஷ்மாவுக்கு திருமணம் நடந்தால் முதல் கணவர் இறந்து விடுவார் என ஜாதகத்தில் உள்ளதாகவும் அதனால் தான் காதலனை திருமணம் செய்து பின்னர் கொலை செய்ய அவர் திட்டமிட்டதாகவும் கூறப்பட்டது.
அதன்படி அவரை திருமணம் செய்த கிரீஷ்மா, கடந்த சில மாதங்களாகவே ஷாரோன் ராஜை கொலை செய்ய முயற்சித்திருப்பதும், இதற்காக அவரை பல சுற்றுலா தலங்களுக்கு அழைத்துச் சென்று அறை எடுத்து தங்கியதும் தெரியவந்தது. மேலும் அங்கு 'ஜூஸ் சேலஞ்ச்' என்ற பெயரில் ஷாரோன் ராஜிக்கு குளிர்பானத்தில் மெல்ல கொல்லும் விஷம் கலந்து கொடுத்ததாகவும் போலீசாரிடம் கிரீஷ்மா தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதன் அடிப்படையில் போலீசார், கிரீஷ்மாவை அவர் காதலனுடன் சென்ற இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று விசாரிக்க திட்டமிட்டனர். அதன்படி முதலில் கிரீஷ்மாவை அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது அங்கு ஷாரோன்ராஜிக்கு குளிர்பானம் கலந்து கொடுத்த பாத்திரம் கைப்பற்றப்பட்டது.
தொடர்ந்து கிரீஷ்மாவை கேரளா அழைத்துச் சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அவர் ஷாரோன்ராஜூடன் செல்போனில் பேசிய ஆடியோவை போலீசார் ஏற்கனவே கைப்பற்றி உள்ளனர். அதில் இருப்பது கிரீஷ்மாவின் குரல் தானா என்பதை உறுதி செய்ய நேற்று கிரீஷ்மாவுக்கு குரல் பரிசோதனை நடத்தப்பட்டது.
மேலும் அவர், ஷாரோன் ராஜை திருமணம் செய்ததாக கூறப்படும் வெட்டுகாடு தேவலாயத்திற்குஅழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்த இடத்தையும் செல்பி எடுத்துக் கொண்ட இடத்தையும் போலீசாரிடம் கிரீஷ்மா காட்டியுள்ளார்.
இன்று காலை குமரி மாவட்டத்தில் கிரீஷ்மா- ஷாரோன்ராஜ் சுற்றித் திரிந்த பகுதிகளுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டனர். இதற்காக கிரீஷ்மாவை இன்று குமரி மாவட்டம் அழைத்து வந்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணயைில் கடந்த 2 மாதங்களில் காதலன் சரோனை 10 முறை கொல்ல முயன்றதாக காதலி க்ரீஷ்மா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
- தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி.
- இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார்
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் கோமதியாபுரம் 2-வது தெருவை சேர்ந்தவர் தங்கமாரி செல்வம். கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலெட்சுமி (வயது 42). தங்கமாரிசெல்வத்திற்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்துள்ளதாக தெரிகிறது.
இதனால் அவர் தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்துள்ளார். சம்பவத்தன்று தங்கமாரிசெல்வம் மதுகுடித்து விட்டு வந்துள்ளார்.
இதனால் கணவன் - மனைவிக்கிடையே வாக்கு–வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த தங்கமாரிசெல்வம் மனைவியை சரமாரியாக தாக்கினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுதொடர்பான புகாரின்பேரில் சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கமாரி–செல்வத்தை கைது செய்தனர்.
இந்நிலையில் மருத்துவ–மனையில் சிகிச்சை பெற்று வந்த தனலெட்சுமி இன்று காலை உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து கொலை வழக்காக போலீசார் மாற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டுவிட்டு தலைமறைவாகிவிட்டார்.
- அவரை நாடு கடத்த இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கோரிக்கை விடுத்தது.
ஆஸ்திரேலியாவின் குயீன்ஸ்லேண்ட் மாநிலத்தில் உள்ள வாங்கெட்டி கடற்கரை பகுதியில் கடந்த 2018ம் ஆண்டு, 24 வயது நிரம்பிய இளம்பெண் டோயா கார்டிங்லி படுகொலை செய்யப்பட்டார். அவரது உடல் முழுவதும் காயங்கள் இருந்தன. போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளி குறித்து விசாரணை நடத்தினர்.
அப்போது இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ராஜ்வீந்தர் சிங் (வயது 38) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. தன் மனைவி மற்றும் 3 குழந்தைகளை விட்டு விட்டு தலைமறைவான அவரைப் பற்றி துப்பு கொடுத்தால் 1 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் (ரூ.5.5 கோடி) சன்மானம் வழங்கப்படும் என குயீன்ஸ்லேண்ட் காவல்துறை அறிவித்தது. இது குயீன்ஸ்லாந்து காவல்துறை வரலாற்றில் மிக அதிகமான சன்மானம் ஆகும்.
இதனையடுத்து விமானம் மூலம் ராஜ்வீந்தர் சிங் இந்தியா தப்பி வந்துவிட்டதாகவும், அவரை நாடு கடத்தவேண்டும் என்றும் இந்தியாவிடம் ஆஸ்திரேலிய அரசு கடந்த 2021ம் ஆண்டு கோரிக்கை விடுத்தது. அவரை கைது செய்து ஒப்படைக்க இந்தியா ஒப்புதல் அளித்திருந்தது.
இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய போலீசார் மற்றும் இந்திய சட்ட அமலாக்கப் பிரிவினரின் உதவியுடன் டெல்லி காவல்துறையின் சிறப்புப் படையினர் ராஜ்வீர் சிங்கை நேற்று கைது செய்தனர். உடனடியாக அவர் டெல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 30ம் தேதி வரை நிதிமன்றக் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.
- 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்
- 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரி:
காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமு. இவரது 2-வது மனைவி எழிலரசி. எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகிய 2 பேர் மீதும் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் 2 பேரும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், 2 பேரையும் காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என போலீஸ் சூப்பிரண்டு சுப்பிமணியம், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி ஆகியோர் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 2 பேரையும் 144 சட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்துக்குள், நேற்றி லிருந்து 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.
- இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
- காயத்ரிக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூர் :
சிங்கப்பூரில் வசித்து வருபவர் இந்திய வம்சாவளி பெண் காயத்ரி முருகையன் (வயது 41). கடந்த 2015-ம் ஆண்டு இவரது வீட்டில் மியான்மர் நாட்டை சேர்ந்த பியாங் நகாய்டான் என்ற பெண் வீட்டு வேலை பணிக்கு சேர்ந்தார்.
இந்த சூழலில் கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை மாதம் பியாங் மர்மமான முறையில் உயிரிழந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்தபோது, பல மாதங்களாக அவர் கொடூரமாக சித்ரவதை செய்யப்பட்டதால் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் காயத்ரி தனது வீட்டு பணிப்பெண் பியாங்குக்கு சரியாக உணவு அளிக்காமல் அடித்து கொடுமைபடுத்தி வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. இதற்கு காயத்ரியின் தாயார் பிரேமா நாராயணசாமி உடந்தையாக இருந்ததும் தெரிந்தது. இந்த கொலை சம்பவம் சிங்கப்பூரையே உலுக்கியது.
இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக காயத்ரி மற்றும் பிரேமா மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். பின்னர் கோர்ட்டில் விசாரணை நடந்தது. இதில் காயத்ரிக்கு கடந்த 2021-ம் ஆண்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த வழக்கில் காயத்ரியின் தாயார் பிரேமாவுக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சிங்கப்பூர் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது.
- சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார்.
- இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கிருஷ்ண ராஜபுரம் 3-வது தெருவை சேர்ந்தவர் ஜெயமுருகன் ( வயது 74). தொழிலாளி. இவரது மனைவி சுதந்திரகனி (60). இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.
தகராறு
இதில் ஒரு மகனை தவிர அனைவருக்கும் திருமண மாகி தனியாக வசித்து வருகிறார்கள். ஜெய முருகனுக்கு குடிபழக்கம் உள்ளது. இதனால் தினமும் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
சம்பவத்தன்று இரவில் ஜெயமுருகன் குடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்தார். இதனை சுதந்திரகனி கண்டித்துள்ளார்.
அரிவாள் வெட்டு
இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட் டுள்ளது. ஆத்திரம் அடைந்த ஜெயமுருகன் சரமாரியாக அரிவாளால் வெட்டினார். இதில் பலத்த காயம் அடைந்த சுதந்திரகனியை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர்.
இதற்கிடையே இதுதொடர்பாக வடபாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயமுருகனை கைது செய்தனர். பின்னர் அவர் தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டார்.
பரிதாப சாவு
இந்நிலையில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுதந்திரகனி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சிவராஜன் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி விசாரணை நடத்தி வருகிறார்.
- அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்
- விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது.
திருப்பூர்:
விருதுநகரை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது 35) . இவர் மங்கலம், கோம்பக்காட்டு புதுாரில் பகுதியில் தங்கியிருந்து கட்டட தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகி, இரு மகன்கள் உள்ளனர்.
முத்துசெல்வம் கடந்த ஜனவரி 1-ந் தேதி அதிகாலை நேரத்தில் அறையில் இருந்து சென்றவர் நீண்ட நேரமாக காணவில்லை. இதையடுத்து அவரை நண்பர்கள் தேடிய போது அங்குள்ள விசைத்தறி கூடம் அருகே ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.இது குறித்து மங்கலம் போலீசார் விசாரித்தனர்.
இதில் அதிகாலை நேரத்தில் விசைத்தறி கூடம் அருகே முத்து செல்வம் நடந்து சென்ற போது திருடன் என சந்தேகித்து, விசைத்தறி கூட உரிமையாளர் முத்துசெல்வத்தை தாக்கியதால் அவர் இறந்தது தெரிந்தது. இதுதொடர்பாக, துரைபழனிசாமி (45), சவுந்தரராஜன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய சிலரை தேடி வந்தனர்.
போலீசாரின் தொடர் தேடுதல் வேட்டையில் இச்சிபட்டியை சேர்ந்த மணிகண்டன் (50), கோம்பக்காட்டு புதுாரை சேர்ந்த முருகேசன் (35) ஆகிய இருவரை மங்கலம் போலீசார் கைது செய்தனர்.
- கொலை செய்தமைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை நீதிபதி வழங்கினார்.
- 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள ஒரிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். கடந்த 2021-ம் ஆண்டு மார்ச் மாதம் முன் விரோதம் காரணமாக சதீஷ்குமார் வேலை செய்த கடையின் உரிமையாளர் மற்றும் அவரது உறவினர்கள் சதிஷ்குமாரை வெட்டி கொலை செய்தனர்.
இது குறித்து ஆப்பக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்த னர்.
இந்த வழக்கானது பவானி மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லதா தீர்ப்பு கூறினார்.
இதில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டன் (45), ஆனந்த பிரபு (37), சூரியகுமார் (27) மற்றும் வெங்கடேஷ்குமார் (38) ஆகிய 4 பேருக்கும் கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும் வீடு புகுந்து அத்துமீறி கொலை செய்த மைக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் நீதிபதி வழங்கினார். இதை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் தீர்ப்பு கூறினார்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கோவை மத்திய சிறையில் மீண்டும் அடைத்தனர்.
- கொலை வழக்கில் நடவடிக்கை
- ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் அருகே அவளூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்டஜாகீர்தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் பாபு (வயது 42). இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு ராணிப் பேட்டை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கு சம்பந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் பாபு இருந்துள்ளார். இதையடுத்து பாபுவை கைது செய்ய நீதிபதி பிடிவாரண்டு பிறப்பித்தார்.
இதனையடுத்து அவளூர்போலீசார் நேற்று பாபுவை கைது செய்து, ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
- விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது.
- விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் ஆக்ராவை சேர்ந்த விஜய் ஷர்மா என்பவரது மனைவி நீலம் ஷர்மா கடந்த 2014-ம் ஆண்டு பிப்ரவரி 20-ந்தேதி வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.
விஜய் ஷர்மா தனது மகன், மகளுடன் வெளியே சென்றிருந்த போது வீட்டில் தனியாக இருந்த நீலம் ஷர்மாவை மர்மநபர்கள் கூர்மையான ஆயுதத்தால் கொலை செய்தது தெரியவந்தது.
மேலும் வீட்டில் இருந்த பொருட்களும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. ஆனாலும் கொலையாளிகள் பற்றி எந்த தடயமும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் விஜய் ஷர்மா வீட்டில் வளர்த்து வந்த அவரது செல்ல கிளி நீலம் ஷர்மாவின் கொலைக்கு பிறகு சாப்பிடாமல் அமைதியாக இருந்தது. இதைப்பார்த்த விஜய் ஷர்மா கொலையை கிளி நேரில் பார்த்திருக்கலாம் என சந்தேகப்பட்டார்.
இதனால் அவர் சந்தேகப்படும் சில நபர்களின் பெயர்களை ஒவ்வொன்றாக கிளியிடம் கூறினார். அப்போது அவர் தனது மருகமன் ஆசு பெயரை கூறிய போது கிளி ஆவேசமடைந்து ஆசு.. ஆசு... என கத்தியது.
இதுகுறித்து விஜய் ஷர்மா போலீசாரிடம் கூறினார். உடனே போலீசாரும் கிளி முன்பு பலரின் பெயர்களை கூறிய நிலையில் ஆசுவின் பெயரை கூறிய போது மட்டும் கிளி கத்தியது.
இதையடுத்து போலீசார் ஆசுவை பிடித்து விசாரித்தனர். அப்போது ஆசு தனது நண்பர் ரோனியுடன் சேர்ந்து நீலம் ஷர்மாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில் சிறப்பு நீதிபதி முகமது ரஷீப் தீர்ப்பு கூறினார். அப்போது குற்றம் சாட்டப்பட்ட ஆசு, ரோனி மாசி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.72 ஆயிரம் அபராதம் விதித்தும் அவர் தீர்ப்பு கூறினார்.
- 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
- கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
கோவை:
கோவை மாநகர ரேஸ்கோர்ஸ் போலீசார் நேற்று நள்ளிரவு ரெயில் நிலையம் அருகே ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 3 வாலிபர்கள் போலீசார் வருவதை பார்த்ததும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர்.
இதனை பார்த்து சந்தேகம் அடைந்த போலீசார் அந்த 3 வாலிபர்களையும் மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நெல்லை மாவட்டம் மானூரைச் சேர்ந்த மாடசாமி (வயது27), அவரது தம்பி சுபாஷ் (25), அதே ஊரைச் சேர்ந்த பசும்பொன் (27) என்பது தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் கடந்த 2021-ம் ஆண்டு பாளையங்கோட்டை மத்திய ஜெயிலில் மூன்றடைப்பை சேர்ந்தவர் முத்து மனோ (28) என்பவர் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையவர்கள் என்பது தெரிய வந்தது. இவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது.
3 பேரிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கோவையில் யாரையாவது கொலை செய்யும் நோக்கில் அவர்கள் கூலிப்படையாக கோவைக்கு வந்தார்களா என்பது பற்றி போலீசார் விசாரித்தனர்.