என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Natarajar statue"
- கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.
- தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர்.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் பழமை வாய்ந்த அகிலாண்ட ஈஸ்வரி சமேத கோதண்ட ராமேசுவரர் கோவில் உள்ளது.
சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் இருந்த 15-ம் நூற்றாண்டை சேர்ந்த நடராஜர் சிலை உள்பட 4 சிலைகள் கடந்த 1972-ம் ஆண்டு திருட்டு போனது. இது தொடர்பாக கோவில்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி 3 சிலைகளை மீட்டனர். நடராஜர் சிலையை தேடி வந்தனர்.
இந்நிலையில் கடந்த 16-ந் தேதி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் ஒரு ஏல மையத்தில் நடராஜர் சிலையை ஏலமிடத் திட்டமிட்டு உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நடத்தப்பட்ட விசாரணையில் அது கயத்தாறு கோதண்ட ராமேஸ்வரர் கோவிலில் 50 ஆண்டுகளுக்கு முன்பு திருட்டு போன நடராஜர் சிலை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு உயர் அதிகாரிகள், இந்திய தொல்லியல்துறை மூலமாக நடராஜர் சிலை ஏலமிடப்படுவதை தடுத்து நிறுத்தினர். அந்தச் சிலையை இந்திய தூதரகம் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சமீர்பானு, சப்-இன்ஸ்பெக்டர் சகாய செல்வின் ஆகியார் அடங்கிய குழுவினர் நேற்று கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு வந்து ஆய்வு நடத்தினர்.
அப்போது கோவிலில் நடராஜர் சிலை எந்த இடத்தில் இருந்தது? எப்படி திருட்டு போனது? என்பது தொடர்பாக கோவில் ஊழியர்கள், பக்தர்களிடம் சிலை தடுப்பு குழுவினர் விசாரித்தனர்.
தொடர்ந்து பிரான்ஸ் தலைநகர் பாரீசில் கண்டுபிடிக்கப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு இந்திய தூதரகம் மூலம் மீட்டு 3 மாதத்தில் கயத்தாறு கோதண்ட ராமேசுவரர் கோவிலுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
- மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.
- முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, ‘எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க’ என்று அசரீரி எழுந்தது.
உலகின் முதல் நடராஜர் சிலை நெல்லை மாவட்டம் செப்பறை என்ற தலத்தில் உள்ளது.
சோழநாட்டை இரணியவர்மன் ஆட்சி செய்து வரும்போது அவனுக்கு ஏற்பட்ட நோயை எந்த வைத்தியத்தினாலும் சரிசெய்ய முடியவில்லை. கானகத்தில் அலைந்து திரிந்து கொண்டிருந்த அவன் பேச்சு சப்தம் கேட்டு நின்றான்.
அங்கு இருந்த பதஞ்சலி, வியாக்ரபாதர் முனிவர்களை வணங்கி தன் நிலையைக் கூற அவர்கள் அருகிலுள்ள குளத்தில் நீராடி வரும்படி சொல்ல அவ்வண்ணம் நீராடியவனுக்கு அவன் நேய் நீங்கியது கண்டான்.
திரும்பி வந்து பார்த்தபோது முனிவர்கள் இருவருக்கும் இறைவன் தில்லைக் கூத்து ஆடிக்காட்டிக் கொண்டிருந்தான். மகிழ்ந்த மன்னன் ஊர் திரும்பியதும் தானும் முனிவர் பெருமக்களும் கண்டு களித்த இறைவனின் ஆனந்தக் கூத்தினை உலக உயிர்கள் அனைத்தும் கண்டு களித்திட எண்ணி அந்த உருவத்தைச் சிற்பமாக வடிக்க நமசிவாய முத்து என்ற சிற்பிக்குக் கட்டளையிட்டான்.
சிற்பியும் அப்பணியைச் செவ்வனே செய்து முடிக்க, செப்பு உலோக மேனியைக் கண்டவனுக்கு பொன்மேனியாக காண ஆவலேற்பட சிற்பியிடம் சொல்லி பொன்னால் சிலை செய்து மகிழ்ந்தான்.
ஆனால், மன்னன் கண்களுக்கு பொன்னாகத் தெரிந்த சிலை மற்றவர்களுக்குச் செம்பாகத் தெரிய, வருத்தமடைந்த மன்னன் கனவில் பொன்மேனியைச் சிதம்பரத்தில் நிறுவிவிட்டு செப்பு மேனியைத் தென்னாட்டிற்கு எடுத்து செல்ல இறை பணிக்க அவ்வாறு செய்தான்.
முதலில் தயாரித்த செப்புமேனியைத் தலைமேல் சுமந்துகொண்டு நமசிவாயமுத்து செல்லும்போது, 'எந்த இடத்தில் அதன் பாரத்தைத் தாங்கமுடியாமல் இருக்கின்றதோ அங்கு அதை கீழே வைக்க' என்று அசரீரி எழுந்தது.
மணப்படை வீடு என்ற ஊரைத் தலையிடமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்த இராமபாண்டியன், வடகரை இராஜவல்லிபுரத்தில் இருந்து தினமும் தாமிரபரணியில் குளித்து தென்கரையில் நெல்லையப்பர்- கந்திமதி ஆலயத்தில் தரிசனம் முடித்தே ஆகாரம் எடுப்பது வழக்கம். அன்று தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட ஆற்றைக்கடந்து தரிசனம் செய்யமுடியவில்லை.
வருத்தமுற்ற மன்னன் கனவில் சிதம்பரத்திலிருந்து ஸ்தபதி ஒருவர் சிலை ஒன்றை சுமந்து வந்து பாரம் தாங்காமல் அரண்மணைக்கருகில் கீழே வைத்து விடுவார். அப்போது அது மறைந்து இலுப்பை வனத்தில் சதங்கை ஒலிக்கும் இடத்தில் தேடினால் கிடைக்கும். அதை எடுத்து தனியறையில் நிறுவி வழிபடு என்று சொல்லி மறைந்தார். மன்னன் அச்சிலையை இலுப்ப வனத்தில் கண்டு ஒரு செப்பு அறையை ஏற்படுத்தி நிறுவினான். பின்னர் நெல்லையப்பரையும் காந்திமதியையும் எழுந்தருளச் செய்து சிவாலாயம் கட்டினான். இத்தலம் செப்பறை என்று அழைக்கப்படுகிறது. இங்குள்ளதே உலகின் முதல் நடராஜர் திருமேனி.
திருநெல்வேலியில் இருந்து சுமார் 8 கி.மீ. தூரத்தில் உள்ளது இராஜவல்லிபுரம். இங்கே தாமிரபரணியின் கரையில் அமைந்துள்ளது செப்பறை அழகிய கூத்தர் கோவில்.
சிதம்பரம் மற்றும் நெல்லை மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கரிவேலாங்குளம், கட்டாரிமங்களம் ஆகிய ஊர்களில் உள்ள ஐந்து ஆடவல்லான் சிலைகள் ஒரே சிற்பியால் வடிவமைக்கப்பட்டவை ஆகும்.
-வீரமணி
ராமநாதபுரம் மாவட்டம், உத்தரகோசமங்கையில் பிரசித்தி பெற்ற மங்கள நாதர் சமேத மங்களேஸ்வரி கோவில் அமைந்து உள்ளது. இங்கு நடராஜருக்கு என உள்ள தனி சன்னதியில் 5ம அடி உயர பச்சை மரகத கல்லால் ஆன நடராஜர் சிலை உள்ளது.
350 ஆண்டுகள் பழமையான இந்த சிலைக்கு ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டு வழிபாடு நடத்தப்படும். மார்கழி மாதம் வரும் ஆருத்ரா தரிசன நாளில் மட்டும் சந்தனம் களையப்பட்டு பூஜைகள் நடைபெறும்.
கோவிலில் நேற்று அதிகாலை புகுந்த கொள்ளையர்கள் விலை மதிப்பு மிக்க இந்த சிலையை திருட முயற்சி செய்தனர்.
அப்போது காவலாளி செல்லமுத்து தடுக்க முயன்றதால் அவரை கொள்ளையர்கள் தலையில் தாக்கினர். இதில் அவர் படுகாயம் அடைந்தார்.
நடராஜர் சன்னதி கதவை உடைக்க முயன்ற போது அலாரம் ஒலித்ததால் கொள்ளையர்கள் திருட்டு முயற்சியை கைவிட்டு தப்பினர்.
தமிழகம் முழுவதும் திருட்டு போன கோவில் சிலைகளை மீட்டெடுக்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் உத்தர கோசமங்கை கோவிலில் நடந்துள்ள இந்த கொள்ளை முயற்சி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கோவிலில் சிலைகளை திருட முயன்றது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா நேரடி விசாரணை நடத்தினார். மேலும் கொள்ளையர்களை பிடிக்க கீழக்கரை டி.எஸ்.பி. முருகேசன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கொள்ளையர்களால் தாக்கப்பட்ட காவலாளி செல்ல முத்துவிடம் விசாரணை நடத்தினர்.
சிலையை திருட முயன்றது வடநாட்டு கும்பலா? அல்லது உள்ளூரைச் சேர்ந்தவர்களா? என தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கோவிலில் நடந்த இந்த திருட்டு சம்பவம் குறித்து ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #NatarajarStatue
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள புண்ணியத் தலங்களில் ஒன்றாக விளகுங்வது உத்தரகோசமங்கை மங்களநாதசுவாமி கோவில். மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்ற சிறப்புகளை இந்த ஆலயம் கொண்டுள்ளது.
நடராஜப்பெருமாள் சிதம்பரத்தில் அம்பலத்தில் ஆடியதாகவும், மதுரையில் கால் மாறி ஆடியதாகவும், திருஉத்தரகோசமங்கையில் அறையில் ஆடியதாகவும் வரலாறு. மற்ற கோவில்களில் நடராஜரின் கற்சிலைகள், பஞ்சலோக சிலைகளையே காண முடியும்.
ஆனால் இங்கு பச்சை மரகதக்கல்லால் உருவாக்கப்பட்ட நடராஜர் சிலை இருக்கிறது. இது 6 அடி உயரம் உடையது. இந்த சிலையின் வீரியத்தை பக்தர்கள் தாங்க முடியாது என்பதால், ஆண்டு முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருக்கும். மார்கழி ஆருத்ரா தரிசனத்தன்று மட்டும் திருமேனி (சிலை) மீது சாத்தப்பட்ட சந்தனக்காப்பு களையப்படும்.
இன்று அதிகாலை கோவிலுக்குள் புகுந்த மர்ம கும்பல் மரகதக்கல் நடராஜர் சிலையை கொள்ளையடிக்க முயன்றுள்ளது. வெளிப்புற கதவை உடைக்க முயற்சிக்கும்போது அலாரம் பயங்கர சத்தத்துடன் ஒலித்தது.
அலாரம் சத்தத்தை கேட்டதும் பக்கத்தில் உள்ள பொதுமக்கள் திரண்டு வந்தனர். கோவிலின் முக்கிய இடங்களில் 6 வீடியோ கேமரா பொருத்தப்பட்டும் சன்னதி அருகே கேமரா இல்லாததால் கொள்ளையர்களை கண்டு பிடிப்பதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து கோவில் திவான் பழனிவேல் பாண்டியன் கூறியதாவது:-
கோவிலில் மரகத நடராஜர் சிலையை திருட முயற்சித்துள்ளனர். மற்ற படி எதுவும் திருட்டு போகவில்லை. தடுக்க சென்ற காவலாளி செல்லமுத்துவுக்கு காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
அதிகாலை 3 மணிக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று மற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டேன். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார். #NatarajarStatue
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி கோவிலில் 36 வருடங்களுக்கு முன்பு திருட்டுபோன ரூ.30 கோடி மதிப்புள்ள நடராஜர் சிலை கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. அந்த சிலையை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு தமிழகம் கொண்டுவர சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியில் குலசேகரமுடையார் அறம் வளர்த்த நாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் குலசேகர பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது ஆகும். மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 5.7.1982 அன்று மிகப்பெரிய அளவில் சிலைகள் திருட்டுபோன சம்பவம் நடந்தன.
நடராஜர் சன்னதியின் இரும்பு கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு, கோவிலில் இருந்த 4 ஐம்பொன் சிலைகள் திருட்டு போய்விட்டதாக கல்லிடைக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. 600 வருடங்கள் பழமையான 2½ அடி உயரமுள்ள ஐம்பொன் நடராஜர் சிலை, 2 அடி உயரமுள்ள ஐம்பொன் சிவகாமி அம்மன் சிலை, 1½ அடி உயரமுள்ள ஐம்பொன் மாணிக்கவாசகர் சிலை, 1 அடி உயரமுள்ள ஐம்பொன் ஸ்ரீபலி நாயகர் சிலை என 4 சிலைகள் திருட்டுபோனதாக போலீசில் கொடுக்கப்பட்ட புகாரில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த 4 ஐம்பொன் சிலைகளும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடையவை ஆகும். கடந்த 36 வருடங்களாக விசாரணை நடத்தியும் இந்த சிலை திருட்டு வழக்கில் கல்லிடைக்குறிச்சி போலீசாரால் துப்புதுலக்க முடியவில்லை. வழக்கு விசாரணையை கைவிட்டு விட்டனர்.
இந்தநிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் தலைமையில் போலீஸ் அதிகாரிகள் அசோக் நடராஜன், ராஜாராம் ஆகியோர் அடங்கிய தனிப்படை போலீசார் கடந்த 1½ ஆண்டுகளாக, இந்த சிலை திருட்டு தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
தீவிர விசாரணையில் திருட்டுபோன ஐம்பொன் நடராஜர் சிலை ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு அருங்காட்சியகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சிலையை கடத்தி சென்ற திருட்டு கும்பல் ஆஸ்திரேலியாவில் அச்சிலையை விற்பனை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
திருட்டு போனதில் ஒரு சிலை மட்டும் (நடராஜர்) ரூ.30 கோடி மதிப்புடையது ஆகும். இந்த சிலை உள்பட 8 சிலைகளை ஆஸ்திரேலியாவில் இருந்து மீட்டு கொண்டுவர சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.
இந்த வழக்கை கல்லிடைக்குறிச்சி போலீஸ் விசாரணையில் இருந்து, சிலை கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது.
மேற்கண்ட தகவல் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது .#NatarajarStatue
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்