என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "National welfare project"
- கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
- வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர்.
வருசநாடு:
கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் கடந்த 3 நாட்களாக நாட்டு நலப்பணிகள் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
இதில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு கடமலைக்குண்டு மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார வளாகத்தில் முட்செடிகளை அகற்றுதல், வைகை ஆற்றில் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை அப்புறப்படுத்துதல், கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளில் மாணவர்கள் ஈடுபட்டனர்.
முகாமின் இறுதி நாளான நேற்று வேம்பு, தேக்கு, தோதைகத்தி, அரச மரம் உள்ளிட்ட விதைகள் அடங்கிய 20 ஆயிரம் விதை பந்துகளை மாணவர்கள் தயாரித்தனர். கடமலைக்குண்டு கிராமத்தில் நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் மகேந்திரன், தமிழ் ஆசிரியர் செல்வம் தலைமையில் போதை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.
- சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
- கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.
வள்ளியூர்:
நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் கலந்து கொண்டு பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவை கல்லூரியின் தலைவர் டி.டி.என். லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.
நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தூய்மையான உலகை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் தருண் ஆண்டனி வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர் குணசீலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி செய்திருந்தார்.
- பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர் பேட்டை அரசினர் மேல்நிலைப்பள்ளி நாட்டு நல பணி திட்ட மாணவர்கள் சார்பில் சிறப்பு முகாம் குடியாத்தம் அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி கல்மடுகு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒரு வார காலம் நடைபெற்றது.
இதன் நிறைவு விழா நேற்று நடைபெற்றது. நிறைவிழாவுக்கு மேல்முட்டுக்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சுந்தர் தலைமை தாங்கினார்.ஒன்றிய குழு உறுப்பினர்கள் செல்விசிவகுமார், சூரியகலாமனோஜ்குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் நித்யாவாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.தலைமை ஆசிரியர் திருநாவுக்கரசு வரவேற்றார்.
நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ஆனந்திமுருகானந்தம் அரிமா சங்க நிர்வாகி பொன்னம்பலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் அமலுவிஜயன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சிறப்புரையாற்றி, மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிர்வாகி முருகானந்தம், திமுக மாவட்ட பிரதிநிதி பாபு, அரசு மருத்துவமனை ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியமூர்த்தி உள்பட ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் பள்ளியின் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்