என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "new year 2019 celebration"
தாம்பரம்;
கிழக்கு தாம்பரம் கணபதி புரத்தை சேர்ந்தவர் யுவராஜ் என்கிற பப்லு (வயது 20). கடந்த 31-ந் தேதி இரவு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது யுவராஜூக்கும் அவருடைய நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் இருதரப்பினர் மோதிக் கொண்டனர்.
இந்த நிலையில், யுவராஜை இரும்புலியூர் ஏரிக்கரையில் சிலர் வெட்டிக் கொன்றனர். குற்றவாளிகள் குறித்து தாம்பரம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில் கொலைக்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து துப்பு துலங்கியது. இதையடுத்து கணபதிபுரத்தை சேர்ந்த மணிகண்டன் என்கிற தேரிமணி, ராஜூ, லெனின் என்கிற பில்லா, பட்டாபி ராமத்தை சேர்ந்த முகேஷ் ஆகியோரை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். 4 பேரும் கோர்ட்டில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இவர்கள் தவிர மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
திருவள்ளூர், ஜன. 3-
திருவள்ளூரை அடுத்த மேல்நல்லாத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட நுங்கம்பாக் கம் கிராமத்தில் எல்லையம்மன் கோயில் உள்ளது.
இந்த கோவில் அருகே சர்வதீர்த்த குளக்கரையில் பழமை வாய்ந்த அஷ்ட லிங்கம், நந்தி சிலை வைத்து பக்தர்கள் வழிபாடு செய்து வந்தனர்.
கடந்த 31-ந் தேதி இரவு அங்கு மர்ம நபர்கள் சிலர் புத்தாண்டு கொண் டாட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து மறுநாள் அஷ்ட லிங்கத்தின் சிலை உடைக்கப்பட் டிருந்ததுடன், நந்தி சிலையும் மாயமாகி இருந்தது.
இதையடுத்து, அஷ்ட லிங்க சிலையை சேதப் படுத்தியோரை கைது செய்து, மாயமான நந்தி சிலையை மீட்டுத்தர வலியுறுத்தி திருவள்ளூர் மேற்கு மாவட்ட இந்து முன்னணி தலைவர் வினோத் கண்ணன் தலைமையில் ஏராளமானோர்திருவள்ளூர் -ஸ்ரீபெரும்புதூர் சாலையில் திடீரென ஆர்பாட்டம் மற்றும் மறியலில் ஈடுபட்டனர்.
அனுமதியின்றி சாலை மறியலில் ஈடுபட்ட 10 பெண் கள் உள்பட 31 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்தனர்.
இந்த நிலையில் சிலைகளை சேதப்படுத்தியதாக நுங்கம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த அரவிந்தன், அய்ய னார் ஆகிய 2 பேரை போலீ சார் கைது செய்தனர். அருண் என்பவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
புத்தாண்டு கொண்டாட் டத்தின் போது அஷ்டலிங்கம் சிலையை சேதப்படுத்திவிட்டு நந்தி சிலையை அருகில் உள்ள குளத்தில் வீசியதாக தெரிவித்துள்ளனர். குளத்தில் வீசப்பட்ட நந்தி சிலையை கிராம மக்கள் உதவியுடன் போலீசார் தேடி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்