என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "North Chennai Thermal Power Station"
பொன்னேரி:
பலத்த மழை காரணமாக மீஞ்சூரை அடுத்த வடசென்னை அனல் மின் நிலையத்தில் உள்ள நிலக்கரி சேமிப்பு கிடங்கில் மழை நீர் தேங்கி உள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.
இதற்கிடையே வட சென்னை அனல் மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆய்வு மேற்கொண்டார். அவர், அனல் மின் நிலையத்தில் உள்ள கிடங்கில் நிலக்கரி இருப்பு குறித்த விவரங்களை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் நிலக்கரி இருப்பு, மின் உற்பத்தி குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழையால் மின் உற்பத்தி பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தற்போது அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் மழைநீர் தேங்கியுள்ளதால் 400 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. அனல் மின் நிலைய நிலக்கரி கிடங்கில் தேங்கியுள்ள மழைநீரை போர்க்கால அடிப்படையில் வெளியேற்றும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. வடசென்னை அனல் மின் நிலையத்தில் பாதிக்கும் மின் உற்பத்தி அளவை தூத்துக்குடி, மேட்டூர் அனல் மின் நிலையங்களில் உற்பத்தி செய்து தடையின்றி மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 4 ஆயிரம் மின்பொறியாளர்கள், 36 ஆயிரம் பணியாளர்கள் என மொத்தம் 40 ஆயிரம் ஊழியர்கள் மழைக்கால பாதிப்புகளை சரிசெய்யும் களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
மழைக்காலங்களில் மின் கம்பங்கள் சேதம் அடைந்தால் அவற்றை உடனடியாக மாற்றும் வகையில் 1 லட்சத்து 32 ஆயிரம் மின்கம்பங்கள் தயார் நிலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. பருவமழைக்கு முன்னரே பழுதடைந்த 25 ஆயிரத்து 500 மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளுக்கு தேவையான வகையில் சூரிய மின்சக்தி, நீர், கேஸ் மின்உற்பத்தி திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கடந்த ஆட்சியில் மழை காலத்தில் மின் விநியோகம் பல நாட்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மழையால் ஏற்படும் பாதிப்பை ஒரே நாளில் சீரமைத்து மீண்டும் மின் விநியோகம் செய்து வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...மழை சேதம்: மத்திய அரசிடம் நிவாரண நிதி கேட்க விபர அறிக்கை- அதிகாரிகளுக்கு ரங்கசாமி உத்தரவு
பொன்னேரி:
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வட சென்னை அனல் மின்நிலையத்தில் இரண்டு நிலைகள் உள்ளன. இதில் உள்ள ஐந்து அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட்டும், இரண்டாவது நிலையில் 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்நிலையில் அனல்மின் நிலையத்தில் இரண்டாவது நிலை 2-வது அலகில் 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மிகை மின் உற்பத்தி காரணமாக 2-வது அலகில் பணிகளை நிறுத்தி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீஞ்சூர்:
மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள வட சென்னை அனல்மின் நிலையத்தில் 3-ம் நிலையில் விரிவாக்க பனிநடைபெற்று வருகிறது.
இதில் பீகார் மாநிலம் லகரியா லேகர் கிராமத்தைச் சேர்ந்த ரிகேஷன் (53) என்பவர் வேலை செய்து வந்தார். நேற்று மாலை ஊழியர்கள் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அப்போது ரிகேஷனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவர் மயங்கி கீழே விழுந்தார். இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
ஊழியர்கள் அவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ரிகேஷன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்டூர் போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்
பொன்னேரி:
மீஞ்சூர் அடுத்த அத்திபட்டுபுதுநகர் வட சென்னை அனல் மின் நிலையத்தில் முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும், 2-வது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் முதல்நிலை மூன்றாம் அலகில் கொதிகலன் குழாய் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
2-வது நிலை இரண்டாவது அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின்சாரம் என மொத்தம் 810 மெகாவாட் நிறுத்தபட்டுள்ளன. பழுதினை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருவதாகவும் விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் உற்பத்தி தொடங்கப்படும் என அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
மீஞ்சூர் அருகே உள்ள அத்திப்பட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு 2 நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெறுகிறது.
இதில் முதல் நிலையில் உள்ள 3 அலகுகளில் தலா 210 வீதம் 630 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதேபோல் 2-ம் நிலையில் உள்ள 2 அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்தநிலையில் முதல் நிலையில் உள்ள முதல் அலகின் கொதிகலன்களில் நேற்று திடீரென பழுது ஏற்பட்டது. இதன் பழுது காரணமாக 210 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
பழுதான கொதிகலன்களை சரிசெய்யும் பணியில் மின் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கும் என்று அனல் மின்நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே அம்பத்தூர் கள்ளிக்குப்பம் ராஜிவ்காந்தி நகரில் திடீர், திடீரென மின்தடை ஏற்பட்டு வருகிறது.
தினமும் குறைந்தது 4 முறை மின்தடை ஏற்படுவதால் பொது மக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதிப்படுகின்றனர். மின் வாரிய அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டால் சரிவர பதில் அளிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டுபுதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது. இங்குள்ள இரண்டு நிலைகள், ஐந்து அலகுகள் மூலம் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
முதல் நிலையில் உள்ள மூன்று அலகுகளில் தலா 210 வீதம் என 630 மெகாவாட் மின்சாரமும் இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டுவந்தன. இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டது. முதல் மற்றும் இரண்டாம் நிலைகளில் 1620 மெகாவாட் மின் உற்பத்தி மட்டும் நடைபெறுகிறது.
கொதிகலன் குழாய் பழுதினை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள். விரைவில் பழுது சரி செய்யப்பட்டு அந்த அலகில் மின் உற்பத்தி தொடங்கப்படும் என்று அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். #Tamilnews
பூந்தமல்லி:
எண்ணூர், அன்னை சிவகாமி நகரைசேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது44). வட சென்னை அனல்மின் நிலையத்தில் செங்கல் மணல், பெயிண்டிங் உள்ளிட்ட பல வகையான வேலைகளை ஒப்பந்த முறையில் செய்து வந்தார்.
நேற்று மதியம் அவர் காரில் வடசென்னை அனல் மின்நிலையத்துக்கு வந்தார். அப்போது மர்மகும்பல் ஜேம்சை சுற்றிவளைத்து சரமாரியாக வெட்டினர். இதில் அவர் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார்.
இந்த தாக்குதலில் காரை ஓடிவந்த மதன், உடன்வந்த மேற்பார்வையாளர் ராஜேந்திரன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது. அவர்களுக்கு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
மீஞ்சூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்தநிலையில் இந்த கொலை தொடர்பாக மீஞ்சூரை சேர்ந்த ராஜ்குமார், எட்வின் நேதாஜி, ராஜா சூர்யா, தனுஷ் சந்தோஷ், செல்வா ஆகிய 8 பேர் இன்று காலை பூந்தமல்லி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.
பொன்னேரி:
எண்ணூர் பர்மா நகரைச் சேர்ந்தவர் ஜேம்ஸ் (38). இவர் அத்திப்பட்டில் உள்ள வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் ஊழியர்களை பணிக்கு அனுப்பும் ஒப்பந்தரராக உள்ளார்.
இன்று காலை அவர் நண்பர்கள் 3 பேருடன் காரில் வடசென்னை அனல்மின் நிலையத்துக்கு வந்தார். பின்னர் அவர்கள் 2-வது நிலையில் இருந்து வெளியே வந்தனர். அப்போது எதிரே வேகமாக வந்த மற்றொரு கார் ஜேம்ஸ் வந்த காரை மறித்தப்படி நின்றது.
அதிர்ச்சி அடைந்த ஜேம்சும், உடன் இருந்த நண்பர்களும் வெளியே இறங்க முயன்றனர். இதற்குள் காரில் இருந்து இறங்கிய முகமூடி அணிந்த 7 பேர் கும்பல் அவர்களை சுற்றி வளைத்தனர்.
ஜேம்சை மட்டும் குறி வைத்து அவர்கள் சரமாரியாக வெட்டினர். காரில் இருந்து அவரை வெளியே இழுத்து தாக்கினர். இதில் பலத்த காயம் அடைந்த ஜேம்ஸ் காருக்குள்ளேயே பரிதாபமாக இறந்தார்.
இதை பார்த்த அவரது நண்பர்கள் காரில் இருந்து இறங்கி தப்பி ஓட்டம் பிடித்தனர். உடனே கொலை கும்பல் தாங்கள் வந்த காரில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
மிகவும் பரபரப்பாக காணப்படும் வடசென்னை அனல்மின் நிலைய நுழைவு பகுதியில் நடந்த இந்த கொலையால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
தகவல் அறிந்ததும் மீஞ்சூர் போலீசார் விரைந்து வந்து ஜேம்சின் உடலை மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ் பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
ஜேம்சுக்கும், வடசென்னை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்ததாரராக உள்ள மற்றொருவருக்கும் இடையே தகராறு உள்ளது. இந்த மோதலில் கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் உள்ள வடசென்னை அனல் மின் நிலையத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை பார்த்தவர் தனசேகர். நிலக்கரி கையாளும் பணியில் ஈடுபட்டு வந்தார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இதில் கலந்து கொண்டதற்காக ஊழியர் தனசேகர் மற்றும் ஒருவரை ஒப்பந்த நிறுவனம் வேலையை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. இந்த நிலையில் தனசேகர் இன்று காலை 7 மணிக்கு அனல்மின் நிலையத்துக்கு வந்தார்.
அப்போது ஒப்பந்த நிறுவன ஊழியர்கள் அவரை தடுத்து நிறுத்தினார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த தனசேகர், நிலக்கரி கன்வேர் பெல்ட் உள்ள சுமார் 60 அடி உயர டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தார்.
பணியில் மீண்டும் சேர்க்க வேண்டும், பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகள் வர வேண்டும் என்று தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் இதுபற்றி மீஞ்சூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்பு வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தனசேகரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பின்னர் காலை 10 மணியளவில் அவர் கீழே இறங்கினார். இதனால் அனல்மின் நிலைய பகுதி சுமார் 3 மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது.
இதற்கிடையே தனசேகருக்கு ஆதரவாக மேலும் 4 ஒப்பந்த ஊழியர்கள் டவரில் ஏற முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கீழே இறங்கச் செய்தனர்.
மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு வடசென்னை அனல் மின் நிலையத்தில் இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் 1830 மெகா வாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இங்கு நிலக்கரி கையாளுதல், பராமரிப்பு பணி போன்றவற்றை மேற்கொள்வதற்காக ஒப்பந்த அடிப்படையில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுழற்சி முறையில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்கள்.
இவர்கள், கடந்த 5 ஆண்டுகளாக தங்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக நாள் ஒன்றுக்கு ரூ.600 வழங்க வேண்டும், பணி நிரந்தரம், அடையாள அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிறார்கள்.
ஆனால் தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. இதனை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற வலியுறுத்தியும், ஒப்பந்த தொழிலாளர்கள் நேற்று முதல் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மின்வாரிய அதிகாரிகளை ஏற்றி வந்த பஸ்சை அனல் மின் நிலையத்திற்குள் செல்ல விடாமல் சிறைப்பிடித்தனர்.
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டம் நீடித்து வருகிறது. அவர்கள் அனல் மின் நிலைய நுழைவு வாயில் அருகே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று மாலை 3 மணிக்கு மேல் தொழிலாளர்கள் மற்றும் மின் அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளளது. அதற்கு பின்னர் போராட்டம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
தொழிலாளர்களின் பணி புறக்கணிப்பு போராட்டத்தால் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கையாளுவது, சாம்பல் கையாளும் பணி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலை உருவாகி இருக்கிறது.
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின் நிலையம் உள்ளது.
இரண்டு நிலைகளில் உள்ள 5 அலகுகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. 3 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரமும், இரண்டாவது நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 மெகாவாட் என 1200 மெகாவாட் மின்சாரமும் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த நிலையில் 2-வது நிலை இரண்டாம் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. இதேபோல் முதல் நிலை இரண்டாவது அலகில் பராமரிப்பு பணிக்காக 210 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் வட சென்னை அனல் மின் நிலையத்தில் ஒரே நேரத்தில் 810 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டு இருக்கிறது. கொதிகலன் குழாய் பழுதை சரிசெய்யும் பணியில் ஊழியர்களும் அதிகாரிகளும் ஈடுபட்டு வருகிறார்கள்.
முதல்நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக நேற்று 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டு இருந்தது. இன்று காலை பழுது செய்யப்பட்டு அந்த அலகில் 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
இதையடுத்து அனல்மின் நிலையத்தில் மொத்தம் 1020 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி தொடர்ந்து நடக்கிறது.
மீஞ்சூரை அடுத்த அத்திபட்டு புதுநகரில் வட சென்னை அனல் மின்நிலையம் உள்ளது. இங்கு இரண்டு நிலைகளில் மொத்தம் 1830 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது. முதல் நிலையில் மூன்று அலகுகளிலும் தலா 210 முதல் 630 மெகாவாட்டும், இரண்டாம் நிலையில் இரண்டு அலகுகளில் தலா 600 வீதம் 1200 மெகாவாட்டும் மின்உற்பத்தி செய்யப்பட்டு வந்தது.
இந்த நிலையில் முதல் நிலை முதல் அலகில் கொதிகலன் குழாயில் திடீரென பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக அந்த அலகில் உற்பத்தி செய்யப்பட்டு வந்த 210 மெகாவாட் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. மின் உற்பத்தி பாதிக்கப்பட்ட பகுதியை மின் ஊழியர்கள் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்