search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "offering sweets"

    • சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.
    • நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    சேலம்:

    சென்னை உயர்நீதிமன்றம் அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் பொதுக்குழு எடுத்த முடிவுகள் செல்லும் என தீர்ப்பு வழங்கியது.

    திருச்செங்கோடு

    இதனை கொண்டாடும் வகையில் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினருமான பொன் சரஸ்வதி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் நகர துணை செயலாளர், நகர மன்ற உறுப்பினர்கள் ராஜவேல், மல்லிகா, கார்த்திகேயன், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர், நகர வங்கி தலைவர் ராமமூர்த்தி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், எட்டிமடை அ.தி.மு.க. நிர்வாகி குணசேகர், அசோக்குமார், சரவணன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர் லோகநாதன், செந்தில்குமார், முனியப்பன், குணவேல், சிறு மொளசி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடாசலம், நகர நிர்வாகி சந்திரன் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள், மகளிர் அணி நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நாமக்கல்

    இதேபோல் நாமக்கல்லில் ஸ்ரீதேவி மோகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    தீவட்டிப்பட்டி

    சேலம் மாவட்டம் காடையாம்பட்டி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தீவட்டிப்பட்டி பஸ் நிலையம் அருகில் கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் விஜயன் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜன், வேப்பிலை ஊராட்சி மன்ற தலைவர் வைத்திலிங்கம், தீவட்டிப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் தங்கராஜ், எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட இணைச் செயலாளர் ராமசாமி வெள்ளையன் என்கிற ராஜமாணிக்கம், ராஜகுரு, பீட்டர், ரஜாக், மணி, ராஜேஷ், நைனாகாடு ராஜா, பாபுலால், வேலு, நாராயணன் குலாப்ஜான், வேப்பிலை ரவி, காசி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    வாழப்பாடி

    உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று வாழப்பாடி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் சதீஸ்குமார் தலைமையில் வாழப்பாடி பஸ் நிலையம் முன்பு அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    இதில் நிர்வாகிகள் குபேந்திரன், சிவக்குமார், பத்மாவதிகுமரன், செல்லையா, பார்த்திபன், வெங்கடேசன், அனிதா பழனிமுத்து, பழனிசாமி, மதியழகன், ராஜா, சுப்பிரமணி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.
    • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

    தஞ்சாவூர்:

    கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.

    இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு க்கள் வழங்கப்பட்டன.

    பின்னர் தஞ்சாவூர் வடக்கு வீதி மற்றும் மாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்தி சிலை, கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து அனைவ ருக்கும் இனிப்புக்கள் வழங்கி காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

    மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநகர, மாவட்ட துணைத் தலைவர் செந்தில் நா.பழனிவேல், மாவட்ட ஊடகப்பிரிவுத் தலைவர் பிரபு மண்கொண்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், மேல உளூர் சிவானந்த வாண்டையார், மாநில பேச்சாளர் பால குலோத்துங்கன், மகளிர் பிரிவைச் சேர்ந்த சசிகலா, சாந்தாராமதாஸ், கலைச்செல்வி, சுவிதா ஞானப்பிரகாசம், மாவட்ட கலை இலக்கியப் பிரிவுத் தலைவர் கலைச்செல்வன், அருண்சுபாஷ், சிவக்குமார், பாரத், மணிகண்டன், துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சண்முகம், கோபாலய்யர், கல்விராயன்பேட்டை கருணாநிதி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.
    • பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி பாரதமாதா ஆதரவற்ற பெண்கள் இல்லத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டது.

    பாரத மாதா சேவை நிறுவனங்களின் நிறுவனர் முனைவர் எடையூர் மணிமாறன் தலைமை வகித்தார்.

    காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் சந்திரசேகரன், பிரதிநிதி அமராவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    காப்பீட்டு கழக அலுவலர் சுவாமிநாதன் வரவேற்றார்.

    உலகில் வாக்கு அளிக்கின்ற ஓட்டு போடும் உரிமையை பெண்களுக்கு முதன்முதலாக வழங்கிய அதிகாரப்பூர்வமான தினமாகவும் பெண்கள் சுயசார்புடன் கல்வி, பொருளாதாம், சமூக ரீதியாகவும், வலிமைமிக்க, அதிகாரமிக்க தலைமை பண்புடன் வாழ்வதற்கு வழிவகை செய்த நாளாக உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகின்றது.

    இப்படி கொண்டாடப்படும் இந்த நல்ல நாளில் நிராதரவாக அன்புக்கு ஏங்கி நிற்கும் பெண்களுக்கு நாம் அனைவரும் உறுதுணையாக இருப்போம் என்று காப்பீட்டு கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் தினத்தில் பெண்கள் இல்லத்தில் தங்கியுள்ள அனைத்து பெண் பயனாளிகளுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு, வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் பாரதமாதா இல்லக் காப்பாளர்கள் புனிதா, கனிமொழி, துர்காதேவி, உளவியல் ஆற்றுப்படுத்தனர் கௌசல்யா மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க செயலாளர் காந்தி நன்றி கூறினார்.

    • சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • பேரணியில் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கினர்.

    சீர்காழி:

    சீர்காழி புதிய பேருந்து நிலையம் வளாகத்தில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    சீர்காழி மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி தலைமை வகித்தார்.

    சீர்காழி நகராட்சி நகரமைப்பு ஆய்வாளர் மரகதம், நகர்மன்ற உறுப்பினர் ஜெயந்தி பாபு முன்னிலை வகித்தார். சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகர் மகளிர் தின விழாவை முன்னிட்டு கேக் வெட்டி இனிப்பு வழங்கி பேரணியை தொடங்கி வைத்தார்.

    பேரணியில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி மாணவிகள், சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பேரணி புதிய பேருந்து நிலையத்தில் தொடங்கி முக்கிய வீதி வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது விழாவில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் அறிவுடைநம்பி, உதவி தலைமை ஆசிரியர் முரளிதரன் கலந்து கொண்டனர் முடிவில் ஆரோக்கிய அன்னை பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் வினோதா நன்றி கூறினார்.

    ×