என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "on"
- சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
- சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
சேலம் மாவட்டம் எடப்பாடி தாலுகா மல்லிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 30). இவர் எடப்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் வேன் டிரைவராக பணி புரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் சீனிவாசன் 10-ம் வகுப்பு படிக்கும் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பழகி வந்தார். இது சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வரவே அவர்கள் சீனிவாசனை கண்டித்துள்ளனர். இதனையடுத்து சீனிவாசன் மாணவிக்கு செல்போன் வாங்கி கொடுத்து பெற்றோருக்கு தெரியாமல் மீண்டும் பழக ஆரம்பித்தார்.
இந்த நிலையில் சிறுமியிடம் சீனிவாசன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சங்ககிரி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் மீது புகார் அளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் வளர்மதி, சப்-இன்ஸ்பெக்டர் சாரதா ஆகியோர் சீனிவாசன் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் அண்ணன், தம்பி மீது 4 பேர் சரமாரியாக தாக்கினர்.
- போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்:
சேலம் அம்மாபேட்டை புட்டா நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் ஆனந்த். இவர் நேற்று இரவு வீட்டுக்கு செல்வதற்காக புட்டாநாயக்க தெருவில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் 4 பேர் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
அவர்களிடம் ஆனந்த் வழி பாதையை விட்டு ஓரமாக நின்று பேசுங்கள் என கூறினார். இதனால் இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனையடுத்து ஆத்திரம் அடைந்த 4 பேர் ஆனந்தை சரமாரியாக தாக்கினர்.
இதை அறிந்த ஆனந்தின் சகோதரர்கள் கார்த்திக் மற்றும் முரளி இருவரும் வந்தனர். எதிர் தரப்பை சேர்ந்த 4 வாலிபர்களின் நண்பர்கள் பத்துக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அவர்கள் கார்த்திக் முரளியை பயங்கர ஆயுதங்களால் கடுமையாக தாக்கினர்.
பலத்த காயம் அடைந்த கார்த்தி மற்றும் முரளி சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து அம்மாபேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே வாலிபர் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்த சி.சி.டி.வி காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் பெரும் பரபரப்பு நிலவியது. அந்த காட்சிகளை வைத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது.
- சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியில் வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
- அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கினர்.
அன்னதானப்பட்டி:
சேலம் அன்னதானப்பட்டி, வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 23). வெள்ளிப் பட்டறை வைத்து நடத்தி வருகிறார். இவர் தனது வேலை விஷயமாக சீலநாயக்கன்பட்டி வேலு நகர் அருகே இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த சில நபர்கள் அவரை திடீரென வழிமறித்து, தாக்கியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த அன்னதானப்பட்டி போலீசார் , மதன் (26), ஷாஜகான் (22), முருகன் (23), ஏழுமலை (21), தமிழரசன் (20) ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் வழிப்பறி திருடர்களா? என போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சேலம்:
சேலம் சூரமங்கலம் போலீசார், பிரபல ரவுடி தீனா என்கிற தீன தயாளனை கொலை முயற்சி வழக்கில் கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
சம்பவத்தன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சூரமங்கலம் அருகே உள்ள ஜாகிர் அம்மாபாளையம் கல்யாணசுந்தரம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் மகன் ராஜசேகர் (வயது 34) என்பவர், சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சாட்சி அளித்தார்.
பின்னர் அவர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வரும்போது, போலீஸ் பாதுகாப்புடன் வெளியே வந்த ரவுடி தீனதயாளன், எப்படி எனக்கு எதிராக நீ சாட்சி சொல்லலாம்? என ராஜசேகரிடம் கேட்டு மிரட்டல் விடுத்தார்.
இதுகுறித்து ராஜசேகர் அஸ்தம்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் தீனதயாளன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீதிமன்ற வளாகத்திற்குள் கைதி, சாட்சியை மிரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள மருந்து கடைகளில் மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்தில் சுமார் 40-க்கும் மேற்பட்ட கடைகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் இருமலுக்கும் வழங்கப்படும் டானிக்கை விற்ற 3 கடைகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், டாக்டர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது. 3 கடைகள் மீதும் மருந்துகள் மற்றும் அழகு சாதன சட்டம் 1940-ன்படி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து இதுபோல் மருந்து கடைகளில் ஆய்வு செய்யப்படும், என்றனர்.
- காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
- இதில் 75 நிறுவனங்கள் மீது வழக்கு பதவு செய்தனர்.
நாமக்கல்:
நாமக்கல் தொழிலா ளா் உதவி ஆணையா் (அம லாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளா் துணை ஆய்வாளா்கள் மற்றும் உதவி ஆய்வா ளா்களால் காந்தி ஜெயந்தியையொட்டி விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
இந்த ஆய்வின்போது, தொழி லாளா்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை கட்டாயம் அளிக்கப்படுகிா? அல்லது பணியாளா்கள் பணி புரிந்தால் அவா்களுக்கு அன்றைய தினம் இரட்டிப்பு சம்பளமோ அல்லது 3 தினங்களுக்குள் ஒருநாள் மாற்று விடுப்போ வழங்கப்படு வதாக நிா்வாகத்தால் படிவம் சமா்ப்பிக்கப்பட்டுள்ளதா என நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் சங்ககிரி ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இதில், 31 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 25 வணிக நிறுவனங்களிலும், 47 உணவகங்களில் ஆய்வு செய்ததில் 40 இடங்களிலும், 12 மோட்டாா் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 10 நிறுவனங்களிலும் என மொத்தம் 90 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 75 நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளா்களுக்கு காந்தி ஜெயந்தியன்று விடுமுறை அளிக்காமலும், இரட்டிப்பு சம்பளம் வழங்க அல்லது மாற்று வி டுப்பு வழங்க 24 மணி நேரத்திற்கு முன்னதாக படிவம் சமா்ப்பிக்கப்படாததும் தெரியவந்தது.
இதனை யடுத்து சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமை யாளா்கள் மீது தொழிலாளா் நலத்துறையால் வழக்கு பதியப்பட்டது.
- சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
- பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள பொட்டியபுரம், காமலாபுரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த ரவுடி கும்பல் அடிக்கடி பொட்டியபுரம் பகுதியில் மோதிக்கொள்கின்றனர்.
கடந்த 18-ந்தேதி இரவு பொட்டியபுரம் அருகே ரவுடி கும்பல் ஒன்று சாலையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அப்போது ஓமலூரில் இருந்து காமலாபுரம், பொட்டியபுரம் வழியாக தின்னப்பட்டிக்கு அரசு டவுன் பஸ் சென்றது. இந்த பஸ்சை தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த ரமேஷ் குமார் (வயது 40) என்பவர் ஓட்டினார். அரூர் பகுதியைச் சேர்ந்த வேடியப்பன் (35) கண்டக்டர் பணியில் இருந்தார்.
பொட்டியபுரம் அருகே சென்றபோது மர்ம நபர்கள் அரசு பஸ்சை கல்லால் அடித்து பஸ் டிரைவர், கண்டக்டரை சரமாரியாக தாக்கினர். இதில் காயம் அடைந்த ரமேஷ் குமார், வேடியப்பன் ஆகியோர் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலை தேடி வந்தனர். இந்த நிலையில் டிைரவர், கண்டக்டரை தாக்கியதாக பொட்டியபுரத்தை சேர்ந்த பச்சையப்பன் மகன் நவீன் (வயது 27), வேலு மகன் விஜய் (23), தங்கவேல் மகன் சின்னதுரை (25) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.
பின்னர் அவர்களை ஓமலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.
- தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
- எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர்.
குமாரபாளையம்:
குமாரபாளையம் பள்ளிப்பாளையம் சாலை, குமரன் மருத்துவமனை பின்புறம் வசிப்பவர் கலைமணி(வயது 34.). இவர் தனது குழந்தைகள் ரினிதாஸ்ரீ,( 6,) சிவஸ்ரீ, (3,) ஆகிய இருவரையும் மொபட்டில் பள்ளியில் விடுவதற்காக அழைத்து சென்றார். அப்போது தனியார் நிறுவன பஸ் ஒன்று பணியாட்களை அழைத்துக் கொண்டு கே.ஒ.என்.தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வந்தது.
எதிர்பாராதவிதமாக இந்த பஸ் மொபட் மீது மோதியதில் மொபட்டில் வந்த 3 பேரும் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து குமாரபா ளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்.சிவகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.குமாரபாளையம் அருகே நேரு நகரில் வசிப்பவர் அஜித் குமார்(வயது 19.) கட்டுமான கூலி தொழிலாளி. இவர் தன் அண்ணனின் மொபட்டில் சேலம்-கோவை புறவழிச்சாலையில் நேரு நகர் பகுதியில் சாலையை கடக்க முயன்றார். அப்போது சேலம் பக்கமிருந்து வேகமாக வந்த கார், மொபட் மீது மோதியதில் அஜித்குமார் படுகாயமடைந்தார்.
குமாரபாளையம் போலீசார் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் கோவையை சேர்ந்த தீயணைப்பு படை வீரர் கணேஷ்பாபு, (36,) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இவ்விபத்தில் கணேஷ்பாபுவிற்கும் காயமேற்பட்டதால் இவர் ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்