search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Palkuda procession"

    • கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும் நடந்தது.
    • இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது.

    உடன்குடி :

    உடன்குடி யூனியனுக்கு உட்பட்ட பரமன்குறிச்சி அய்யனார் நகர் முத்தா ரம்மன் கோவில் கொடை விழா கடந்த 8-ந் தேதி கும்பாபிஷேகத்துடன் தொடங்கியது. மதியம் அன்னதானம் நடந்தது.

    கடந்த 9-ந் தேதி இரவு 7 மணிக்கு நாட்டில் கனமழை வேண்டி திருவிளக்கு பூஜையும், இரவு 10 மணிக்கு வில்லிசையும், இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும் நடந்தது. நேற்று காலை செல்லபிள்ளை அய்யனார் கோவிலில் இருந்து 108 பால் குடம் ஊர்வலம் தொடங்கி கோவிலை வந்தடைந்ததும், முத்தாரம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு பால் அபிஷேகம் நடந்தது. பகல் 10 மணி, இரவு 9 மணிக்கு வில்லிசையும், பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு சிறப்பு பூஜையும், அம்மன் கும்பம் வீதி உலா மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

    இன்று வில்லிசை, மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, அம்மன் மஞ்சள் நீராடுதல், கும்பம் தெரு வீதி உலாவும், நள்ளிரவு 1 மணிக்கு சிறப்பு பூஜையும், கும்பம் தெரு வீதி உலாவும் நடக்கிறது. நாளை (12-ந் தேதி) அதிகாலை உணவு பிரி த்தல் நிகழ்ச்சியும், நாளை மறுநாள் 13-ந் தேதி கிழக்கெத்தியான் சுவாமி கோவில் கொடை விழா நடக்கிறது.

    ஏற்பாடுகளை நிர்வாகி கள் சிவராமன் லெட்சு மணன், கணே சன் முரு கன் நாடார், கனகராஜ் சுப்புக்குட்டி, சரவணன், சந்திரசே கரன், செல்வ குமார், முத்து லிங்கம், கணேசன் மற்றும் பாரத மாதா நண்ப ர்கள் அன்ன தானக்குழு நிறுவனர் ஆர்.எஸ்.பாண்டி யன் மற்றும் ஊர் மக்கள் செய்து வருகின்றனர்.

    • கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
    • கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது.

    கடையம்:

    கீழக்கடையம் 18 பட்டி நாடார்களுக்கு பாத்தியப்பட்ட பத்திர காளியம்மன் கோவில் கொடை விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    இதைத்தொடர்ந்து கோவிலில் கடந்த 24-ந்தேதி இரவு திருக்கால் நாட்டுதல் நடைபெற்றது. பின்னர் தினமும் அம்மனுக்கு காலை ,மாலை தீபாராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இந்த நிலையில் இன்று காலை வடக்கு உடையார் பிள்ளையார் கோவிலிருந்து, 18 பட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக பால்குடம் மற்றும் தீர்த்தம் கொண்டு வரப்பட்டு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை சிறப்பு பூஜை நடைபெற்றது.

    இதையடுத்து இரவு திரலான பக்தர்களின் காப்பு கட்டுதல் நிகழ்வு நடைபெறுகிறது. பின்னர் நாளை (புதன்கிழமை), நாளை மறுதினம் (வியாழக்கிழமை) காலை,மாலை அம்மனுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை நடக்கிறது.

    இதைத்தொடர்ந்து 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருத்தேர் கால்நாட்டுதல் நடைபெறுகிறது. பின்னர் 5-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை)இரவு அம்மன் கண் திறப்பு. 6-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 18 பட்டிகளுக்கு அம்மன் ஊர் விளையாடல், பின்னர் 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) காலை அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, மதியம் அல தீர்த்தம், அம்மன் ஊர் விளையாடல் நடைபெறுகிறது.

    இரவில் அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், நள்ளிரவில் அலதீர்த்தம், நையாண்டி மேளம் வாணவேடிக்கையுடன் சிறப்பு பூஜை, அம்மன் பூ பல்லக்கில் வீதி உலா நடக்கிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக அம்மன் திருத்தேரில் எழுந்தருளி மூலஸ்தானம் சென்றடைதல் நடைபெறுகிறது.

    பின்னர் அன்னதானம் நடக்கிறது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை கொடைவிழா நடத்தும் 4-ம் திருநாள் மண்டகபடிதாரர்கள் கீழக்கடையம் வரிதாரர்கள் மற்றும் 18 பட்டி ஊர் பொதுமக்கள் செய்துள்ள னர்.

    இதே போல் கடையம் முப்புடாதி அம்மன் கோவில் திருவிழா கடந்த 24-ந்தேதி கால்நாட்டுதலுடன் தொடங்கியது. விழாவில் ஒவ்வொரு நாளும் அம்பாளுக்கு தீபாராதனை, சிறப்பு பூஜை மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இன்று காலை தீர்த்த குடம், பால்குடம் எடுத்து வருதல் , மதியம் அபிஷேகம், அன்னதானம் நடைபெற்றது. விழாவில் ஒவ்வொரு நாளும் பல்வேறு மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.விழாவில் பிப்ரவரி 7-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) 8-ந் திருநாளில் காலையில் அபிஷேகம் மற்றும் அலகு தீர்த்தம் எடுத்து வருதல்,வில்லிசை, மதியம் கொடை ,சிறப்பு அபிஷேகம், தீபாரதனை, இரவு அலகு தீர்த்தம் எடுத்தல் நடைபெறுகிறது.

    பின்னர் திருநாண் பூட்டுதல், அம்பாள் திருத்தேர்க்கு எழுந்தருளல், திருத்தேர் வடம்பிடித்தல் நடை பெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை 3-ம் திருநாள் மண்டகப்படிதாரர்கள் மற்றும் கொடை விழா கமிட்டியினர் செய்துள்ள னர்.

    • ஆடி முதல் வெள்ளிக்கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது.
    • தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது.

    செங்கோட்டை:

    ஆடி முதல் வெள்ளிக் கிழமையையொட்டி செங்கோட்டை நித்திய கல்யாணி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை நடந்தது. இதையொட்டி பால் குட ஊர்வலமானது குலசேகரநாத கோவில் முன்பு அக்ரஹார வழியாக கோவிலை வந்தடைந்தது.

    அதனைத்தொடர்ந்து மகா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளைச் அக்ரஹார இளைஞர்கள் மற்றும் பெரியோர்கள் செய்திருந்தனர்.

    இதனை போன்று மேலூர் உச்சிமகாளி அம்மன் கோவில், முத்துகிழவி அம்மன் கோவில் உள்பட செங்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார கோவில்களில் ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பக்தர்களுக்கு ஆடி கூழ் வழங்கி வழிபட்டனர்.

    ×