என் மலர்
நீங்கள் தேடியது "petitions"
- ஒரு வருடத்தில் 1 லட்சம் மரக்கன்றுகள் நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயம்.
- திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களை கொண்ட மிகப்பெரிய சரணாலயம்.
பூதலூர்:
பூதலூர் ஊராட்சி ஒன்றியம் கச்சமங்கலம் கிராமத்தில் மக்கள் குறைதீர்க்கும் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. முகாமிற்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை வகித்தார்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்திரா வரவேற்புரை ஆற்றினார்.
முகாமில் கூடுதல் கலெக்டர் ஸ்ரீகாந்த், துரை சந்திரசேகரன் எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, பூதலூர் ஒன்றிய குழு தலைவர் அரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
முகாமில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டு தங்கள் துறை ரீதியான திட்டங்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளின் சார்பில் 347 பேருக்கு ரூ.72 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் வழங்கி பேசியதாவது :-
ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிராமத்தை தேர்ந்தெடுத்து மக்கள் நேர்காணல் முகாம் நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி முகாம் நடைபெற்று வருகிறது.
முகாம் நடைபெறுவதற்கு முன்னதாக இந்த கிராமத்தில் முகாமிட்டு கிராம மக்களின் கோரிக்கைகள் குறித்து மனுக்கள் பெறப்பட்டன. பெரும்பாலான மனுக்களுக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்த முகாமில் கொடுக்கப்படும் மனுக்கள் மீதும் உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
வீட்டுக்கு ஒரு விருட்சம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு கிராமத்திலும் வீடுகள் தோறும் மரங்கள் நடுவதை ஒரு இயக்கமாக தொடங்கி நடந்து வருகிறது.
தஞ்சை மாவட்டத்தில் ஒரு வருட காலத்தில் 1 லட்சம் மரக்கன்றுகளை நட்டு மரமாக வளர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு செயல்படுத்தி வருகிறது.
நமது கிராமத்தின் அருகே திருமலைசமுத்திரம் பகுதியில் 214 வகையான பல்வேறு மரங்களைக் கொண்ட மிகப்பெரிய சரணாலயம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
அனைவரும் அதை சென்று பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.மக்கள் நேர்காணல் முகாமில் பல்வேறு துறைகளில் சார்பில் காட்சி அரங்குகள் வைக்கப்பட்டிருந்தன. முகாமில் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
முடிவில் பூதலூர் தாசில்தார் பெர்சியா நன்றி கூறினார்.
- ஆரம்ப சுகாதார நிலையம் கட்டி தர வேண்டும் மற்றும் தேங்கி நிர்க்கும் கழிவுநீரை அகற்ற வேண்டும் என பல கோரிக்கை விடுத்தனர்.
- பொதுமக்களின் குறைகளை கண்டறிந்து மனுக்கள் பெறப்பட்டது.
சீர்காழி:
சீர்காழி வாணி விலாஸ் தொடக்கப்பள்ளியில் ஈசான்ய தெரு 6வது வார்டு சார்பில் வார்டு குழு பகுதி சபா கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற கவுன்சிலர் பாலமுருகன் தலைமை வைத்தார் கணக்கர்கள் ராஜகணேஷ் ரமேஷ் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் சீர்காழி நகர மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜ சேகர் கலந்து கொண்டு பொதுமக்களின் குறை களை கேட்டறிந்தார் பின்பு பொதுமக்கள் வழங்கிய மனுக்களை பெற்று க்கொண்டார் கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள் சீர்காழி ஈசான்ய தெருவில் அமைந்துள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்டிடம் அருகே கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதோடு தொற்று நோய் பரவும் அபாயம் இருந்து வருகிறது உடனடியாக தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஈசான்ய தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதி செய்து தர வேண்டும் மழைக் காலம் தொடங்கி விட்டதால் கொசு மருந்து அடிக்க வேண்டும் சீர்காழி நகராட்சி பகுதியில் வார சந்தை செயல்பட்ட வந்த நிலையில் கொரோனா காலத்தில் மூடப்பட்ட நிலையில் தற்போது வரை வாரசந்தை நடைபெறவில்லை உடனடி யாக மக்கள் பயன்பெறும் வகையில் இடத்தை தேர்வு செய்து வார சந்தை அமைத்து தினந் தோறும் துப்புரவு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கூட்டத்தில் 6வது வார்டு பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொ ண்டனர்.
- மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் வருகிற 8-ந்தேதி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடக்கிறது.
- காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
மதுரை
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் குறைகளை நிவர்த்தி செய்வதற்கு வாரந்தோறும் ஒவ்வொரு செவ்வாய்கிழமை வார்டு மறுவரையறை செய்யப்பட்ட 5 மண்டலங்களுக்கு அந்தந்த மண்டல அலுவலகங்களில் குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது.
அதன்படி வருகிற 8-ந்தேதி (செவ்வாய்கிழமை) ரேஸ்கோர்ஸ் சாலையில் உள்ள மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம்-2 அலுவலகத்தில் காலை 10மணி முதல் 12.30 வரை பொது மக்கள் குறைதீர்க்கும் முகாம் மேயர், ஆணையாளர் ஆகியோர் தலைமையில் நடைபெற உள்ளது.
இதில் வடக்கு மண்டலத்துக்குட்பட்ட விளாங்குடி, கரிசல்குளம், ஜவகர்புரம், விசாலாட்சி நகர், அருள்தாஸ்புரம், தத்தனரி மெயின் ரோடு, அய்யனார்கோவில், மீனாட்சிபுரம், பீ.பீ.குளம், நரிமேடு, அகிம்சாபுரம், கோரிப்பாளையம், தல்லாகுளம், சின்னசொக்கிக்குளம், கே.கே.நகர், அண்ணா நகர், சாத்தமங்கலம், பாத்திமா நகர், பெத்தானியாபுரம், பி.பி.சாவடி, கோச்சடை ஆகிய பகுதி பொதுமக்கள் குடிநீர், பாதாள சாக்கடை இணைப்பு, வீட்டு வரி பெயர் மாற்றம், புதிய சொத்து வரி விதிப்பு, கட்டிட வரைபட அனுமதி, தெருவிளக்கு, தொழில்வரி உள்ளிட்ட கோரிக்கை மனுக்களை கொடுத்து பயன் பெறலாம்.
- 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
- இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரச நடவடிக்கைகளில் நீதிபதிகள் ஈடுபட்டனர்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் மக்கள் நீதிமன்றம் என்ற லோக் அதாலத் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு திருவாரூர் மாவட்ட நீதிபதி சாந்தி தலைமை வகித்தார். இந்த முகாமில் மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி சங்கர், மாவட்ட குற்றவியல் நடுவர் பாலமுருகன், சார்பு நீதிபதி சரண்யா, திருவாரூர் குற்றவியல் நடுவர் ரெகுபதி ராஜா, கூடுதல் மகிளா நீதிமன்ற நடுவர் சிந்தா ஆகியோர் கலந்து கொண்டு மனுக்களை விசாரித்தனர்.
இந்த முகாமில் சிவில் வழக்குகள், ஜீவனாம்சம் வழக்குகள், திருமண விவாகரத்து தொடர்பான வழக்குகள், காசோலை வழக்குகள் மற்றும் வங்கி சாரா வாரா கடன் வழக்குகள் உள்ளிட்ட 2636 மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இந்த முகாமில் வழக்கு முறையிட்டார் உள்ளிட்ட இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து சமரசம் நடவடிக்கைகளில் நீதிபதிகளை ஈடுபட்டனர். அதில் 1443 மனுக்களுக்கு சமரசத் தீர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த வழக்குகள் மூலம் ரூபாய் 1 கோடியே 96 லட்சத்து 8 ஆயிரத்து 835க்கான சமரசத்தொகை தொகை முறையீட்டாளர்களுக்கு வழங்கப்பட்டது.
- பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
- சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் வழங்கல்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பொது–மக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை, ஆக்கிரமிப்பு அகற்றுதல், கல்விக்கடன், வீட்டு–மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்த 268 மனுக்களை கலெக்டரிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக் கொண்ட கலெக்டர், சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
பின்னர், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் பணிக்காலத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசு–தாரர்கள் 3 நபர்களுக்கு கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணையினை வழங்கினார்.
தமிழக அரசால் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற மன்னார்குடி வட்டம், பாலையக்கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுகலை ஆசிரியர் ராச கணேசனை பாராட்டினார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிதம்பரம், ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் சந்திரா உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை கலெக்டர் பெற்றார்.
- ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
அம்மாபேட்டை:
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, அருந்தவபுரம் கிராமத்தில் மக்கள் நேர்காணல் முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்யாண–சுந்தரம் எம்.பி., அம்மா–பேட்டை ஒன்றியக்–குழு தலைவர் கே.வீ.கலைச் செல்வன், துணை தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், ஒன்றிய கவுன்சிலர் குமார், அருந்தவபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதா ஆசைத்தம்பி ஆகியோர் முன்னிலை வகித்து பேசினர்.
கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு கலெக்டர் தினேஷ்பொன்ராஜ்ஆலிவர் தலைமை வகித்து பொது–மக்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் வீட்டுமனை பட்டா, உதவித்தொகை, உள்பட 345 பயனாளிகளுக்கு ரூ.94 லட்சத்து 52 ஆயிரம் மதிப்பிலான பல்வேறு துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
முடிவில் கும்பகோணம் கோட்டாட்சியர் பூர்ணிமா நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் பாபநாசம் தாசில்தார் பூங்கொடி மற்றும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்பட அனைத்துத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை ஊரக வளர்ச்சித்துறையினர், வருவாய்த்துறையினர் மற்றும் அருந்தவபுரம் ஊராட்சி மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.
- பட்டா, உதவித்தொகை, குடும்ப அட்டை, கல்வி கடன் என பல கோரிக்கை மனு பெறப்பட்டது.
- உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி பேசியதாவது :-
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் இந்த மனுக்களை விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்த விவரத்தை உடனடியாக மனுதாரருக்கு தெரிவிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் வருவாய் துறை சார்பில் ஓரத்தநாடு வட்டத்தைச் சார்ந்த 1 மாற்றுத்திறனாளிக்கு மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணையினை வழங்கினார்.
இக்கூட்டத்தில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்ரா, ஸ்ரீகாந்த், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) தவவளவன் மற்றும் அனைத்து அரசுதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
- ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
- பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் மனுக்களை பெற்றார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ், தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் 263 கோரிக்கை மனுக்கள் பெற்று மனுதாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்க ளிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையினை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் பெறப்பட்ட மனுக்களில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனி நபர் வீடு வழங்கும் திட்டம், பட்டா பெயர் மாற்றம், குடும்ப பிரச்சனைகள் தீர்த்து வைத்தல் குறித்த மனுக்களே அதிகளவு வரப்பெற்றன.
பின்னர் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ராமநாதபுரம் மாவட்ட பிரிவு விளையாட்டு விடுதியில் தங்கி பயிலும் டி.டி.விநாயகர் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 38-வது மாநில அளவிலான 19 வயதுக்கு உட்பட்ட பாரதியார் தின குழு ஹாக்கி விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கம் வென்றதையொட்டி மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர்.
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
- 12 மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டது மீதமுள்ள மனுக்கள் விரைவில் எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நாகப்பட்டினம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறிந்து 29 மனுக்களை பெற்றார்.
அதில் 12 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மேலும் மீதமுள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்று பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.
மேலும் காவல்துறையிடம் பொதுமக்கள் தங்களது குறைகளை நேரடியாக தெரிவிக்க இலவச எண்கள் மூலம் கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை மற்றும் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள பிரச்சினைகள் குறித்து நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்ட் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுகுமாரன், வேணுகோபால், நாகப்பட்டினம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன், மற்றும் காவல் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
- மதுபான கடையை மூட வேண்டும் என கலெக்டரிடம் பாஜக வக்கீல் அணியினர் மனு கொடுத்தனர்
- மது குடிக்க செல்பவர்கள் டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழிப்பாதையில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
திருச்சி:
பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் அணி மாநில செயலாளர் மாரியப்பன் மற்றும் நிர்வாகிகள் திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் சென்னை செல்லும் பைபாஸ், சர்வீஸ் ரோட்டில் நடத்தப்பட்டு வந்த டாஸ்மாக் கடையானது, நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில் மூடப்பட்டது. தற்போது டி.வி.எஸ். டோல்கேட் ஒரு வழி பாதையில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மது குடிக்க செல்பவர்கள் அதே வழியில் திரும்பி வருவதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
அது மட்டுமல்லாமல் அந்த கடைக்கும் டி.வி.எஸ்.டோல்கேட் பஸ் ஸ்டாப்பிற்கும் 200 மீட்டர் அளவே தூரம் உள்ளது. அந்த பஸ் நிறுத்தத்தில் அந்தப் பகுதியில் உள்ள மூன்று கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பஸ்களில் ஏறி இறங்குகின்றனர். மேலும் அந்த கடைக்கு பக்கத்தில் பக்தர்கள் வழிபடும் சங்கிலியாண்டவர் முத்து மாரியம்மன் கோவில் ஐயப்ப சேவா சங்கம் இருக்கிறது. உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவின்படி அதிகாரிகள் நடந்துகொள்ளவில்லை.
ஆகவே பொது மக்கள், கல்லூரி மாணவர்கள், பயணிகள், வியாபாரிகள், குடியிருப்புவாசிகள் என அனைத்துத் தரப்பு மக்களின் நலனை கருத்தில் கொண்டு தேசிய நெடுஞ்சாலையி டி.வி.எஸ். டோல்கேட், தஞ்சாவூர் வழி பஸ் நிறுத்தத்திற்கு அருகாமையில் ஒருவழி சாலையில் மீண்டும் திறக்கப்பட்டுள்ள டாஸ்மாக் கடையை முற்றிலுமாக அகற்றி விபத்துகள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
- மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தனர்
- ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஆன்லைன் டோக்கன் முறையை ரத்து செய்ய கோரி மனு அளித்தனர்.
திருச்சி:
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழக நிறுவன தலைவர் வக்கீல் பொன்.முருகேசன் தலைமையில் திருச்சி துவாக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜல்லிக்கட்டு மாடு உரிமையாளர் பொன்.ரவி என்கிற பெருமாள் ஆகியோர் மாடு மற்றும் மாடுபிடி வீரர்களுடன் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-தமிழகத்தின் முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் நடைபெற்றது. அந்த ஜல்லிக்கட்டுக்கு டோக்கனுக்கு ரூ.1,000 பெற்றுக் கொண்டனர். நான் 2 ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு ரூ.2,000 கொடுத்து டோக்கன் கேட்டோம். அதற்கு 20 ரூபாய் நோட்டுகளை கொடுத்தார்கள்.பின்னர் திடீரென தேதி மாற்றப்பட்டு கடந்த 8-ந்தேதி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்கு டோக்கன் ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளும்படி புதுக்கோட்டை கலெக்டர் அறிவித்தார். அதன்படி விண்ணப்பித்து அரசின் முத்திரையுடன் 200-வது டோக்கன் எங்களுக்கு வழங்கப்பட்டது.ஆனால் போட்டி நடைபெற்ற அன்று தங்கள் விருப்பம் போல மாடுகளை வாடிவாசலில் அவிழ்த்து விட்டனர். இதனால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆன்லைன் டோக்கன் முறையால் ஏழை விவசாயிகளுக்கு தங்களது காளைகளை களமிறக்க வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.ஆகவே இனிமேல் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆன்லைன் விண்ணப்பத்தை ரத்து செய்து பழைய முறையிலேயே டோக்கன் வழங்க வேண்டும். டோக்கன் வழங்குவதில் வி.ஐ.பி.க்களுக்கு முன்னுரிமை அளிப்பதால் சாதாரண மாட்டு உரிமையாளர்களுக்கு டோக்கன் போய் சேர்வதில்லை.ஆகையால் ஊழல் தடுப்பு அதிகாரி ஒருவரை நியமித்து ஜல்லிக்கட்டு குழுவினர் டோக்கன் வழங்க வேண்டும். ஜாதிய அடையாளங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
- கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது.
- ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள்கிழமை மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மாவட்டம் முழுவதிலும் இருந்து பொதுமக்கள் சாலை வசதி, குடிநீா் வசதி, முதியோா் உதவித் தொகை, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் மனுவாக கொடுத்து வருகின்றனர்.
நேற்று நடந்த மக்கள் குறைதீர்க்கும் முகாமில் திருப்பூர் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் கலந்துகொண்டு தங்களது கோரிக்கைகளை மனுவாக கலெக்டரை சந்தித்து வழங்கினர். அதன்படி நேற்று ஒரே நாளில் மட்டும் 638 மனுக்கள் பெறப்பட்டன.
இம்மனுக்களின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு மாவட்ட ஆட்சியா் எஸ்.வினீத் அறிவுத்தினாா். முகாமில், மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம், சாா் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய்நாராயணன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.