search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pig"

    • அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார்
    • டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்

    அமெரிக்காவில், ரிக் ஸ்லாய்மென் என்ற 62 வயது நபர், கடந்த 11 வருடங்களாக சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில், 2018-ம் ஆண்டு அவரின் 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. அப்போது மாசசூசெட்ஸ் Massachusetts மருத்துவமனையில் அவருக்கு சிறுநீரக மாற்று அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் உயிர் பிழைத்தார்.

    ஆனால், அறுவை சிகிச்சை முடிந்து ஐந்து வருடங்களுக்குள்ளாகவே மீண்டும் அவருக்கு 2 சிறுநீரகமும் செயல் இழந்துள்ளது. ஆகவே அவருக்கு அறுவை சிகிச்சை நடைபெற்ற மருத்துவமனையிலேயே அவருக்கு டயாலிஸஸ் சிகிச்சை செய்யப்பட்டது. அதன் உதவியால் உயிர் வாழ்ந்து வந்துள்ளார்.

    ஆனாலும் டயாலிஸ் சிகிச்சையும் ஓரளவிற்கு மேல் கைகொடுக்கவில்லை. அவர் தன் வாழ்வின் இறுதிக் கட்டத்தை எட்டியிருந்தார்.

    அப்போது, மருத்துவர் டாட்சுவோ கவாய், தனது கடைசி முயற்சியாக நோயாளியான ரிக்ஸ்லாய்மென்னிடம், பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி பார்க்கலாம் என்று அனுமதி கேட்டுள்ளார்.

    நோயாளியும் தனது இறுதிக்கட்டத்தை நெருங்கி இருந்ததால், மருத்துவரின் ஆலோசனைக்கு ஒத்துக்கொண்டார். இதனால், மருத்துவர்கள் குழுவானது இவருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி, அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

    இது தொடர்பாக பேசிய, மருத்துவர் டாட்சுவோ கவாய், "பன்றியின் சிறுநீரகம் மனித சிறுநீரகத்தின் அளவை ஒத்ததாக இருக்கும். பன்றியின் இரத்த நாளங்களை நோயாளியின் இரத்த நாளங்களுடன் இணைக்கும் பொழுது, நாங்கள் எதிர்பார்த்தபடி உடனடியாக அது வேலை செய்ய ஆரம்பித்து, நோயாளியின் உடலிலிருந்து சிறுநீர் பிரிய ஆரம்பித்தது. இது எங்கள் ஆராய்ச்சி குழுவிற்கு கிடைத்த வெற்றி என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், இந்த முறை வெற்றிபெற்றால், பல நோயாளிகள் பலனடைவார்கள். விலங்குகளின் உறுப்புகளை மனிதனுக்கு மாற்றுதலால் உறுப்பு பற்றாக்குறை குறையும்" என்றும் கூறியுள்ளார்.

    மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ரிக் ஸ்லாய்மெனின் உடலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இவர் வீட்டிற்கு திரும்புவார் என்றும் சொல்லப்படுகிறது.

    • தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.
    • எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள எலத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன். இவர் 4 ஏக்கர் விவசாய தோட்டத்தில் மக்காச்சோளம், மஞ்சள், வெற்றிலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்து வருகிறார்.

    கடந்த சில நாட்களாக தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், வெற்றிலை உள்ளிட்ட பயிர்களை பன்றிகள் மிகவும் கடுமையாக சேதப்படுத்தியுள்ளது.

    இதுகுறித்து விவசாயி வரதராஜன் கூறுகையில் எலத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதியில் சிலர் இறைச்சிக்காக பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பன்றிகளை பட்டியில் அடைத்து வளர்க்காமல் திறந்தவெளியில் நூற்றுக்கணக்கான பன்றிகளை வளர்ப்பதால் தோட்ட த்து பகுதிகளில் புகுந்து அறுவடைக்கு தயாராக உள்ள மக்காச்சோளம், கரும்பு பயிர்களை சேதம் செய்ததால் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் நாங்கள் பல லட்சம் ரூபாய் முதலீடு செய்து பயிர்களை வளர்த்தால் ஒரே நாளில் இந்த பன்றிகள் மிகுந்த சேதத்தை ஏற்படுத்துகிறது. இதுகுறித்து எலத்தூர் பேரூராட்சி மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என வேதனையுடன் கூறினார்.

    எனவே இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து பயிர்களுக்கு பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சியில் குடிநீர் தொட்டியில் செத்து கிடந்த பன்றி குட்டி
    • பன்றிகுட்டி செத்து மிதப்பதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி

    திருச்சி,

    திருச்சி மாநகராட்சி குமரன் நகர் முதல் தெருவில் பொது குடிநீர் குழாய் ஒன்று உள்ளது. இந்த குழாய் பள்ளத்தில் அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே அதில் பொதுமக்கள் இறங்கி தண்ணீர் குடிப்பதற்கு வசதியாக படியுடன் தொட்டி அமைத்துள்ளனர்.இந்த நிலையில் இரு தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள தெருநாய்கள் ஒரு பன்றி குட்டியை விரட்டி உள்ளது. இதில் அந்தப் பன்றி குட்டி அந்த குடிநீர் தொட்டிக்குள் விழுந்தது.இதில் காயமடைந்த அந்த பன்றி குட்டியால் வெளியே வர இயலவில்லை. இதற்கிடையே அந்த குடிநீர் குழாயும் உடைந்து தொட்டியில் தண்ணீர் நிரம்பியது. இதனால் தப்பிக்க இயலாமல் பன்றி குட்டி தண்ணீரில் செத்து மிதந்தது.இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் செத்து மிதந்த பன்றியை அப்புறப்படுத்தினர்.மேலும் தொட்டியில் தேங்கிய தண்ணீரும் அகற்றப்பட்டது.இருப்பினும் தொட்டிக்குள் இருந்த குடிநீர் குழாய் உடைந்ததால் பன்றி செத்து மிதந்த அசுத்த நீர் வீடுகளுக்கு ரிவர்ஸ் ஆகி சென்றிருக்கும் என பொதுமக்கள் கூறினர். ஆகவே தரை மட்டத்தில் இருக்கும் இது போன்ற குடிநீர் தொட்டிகளை மூடி பாதுகாப்பான முறையில் மாநகராட்சி நிர்வாகம் பராமரிக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர்.
    • மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது.

    சென்னை பல்லாவரத்தில் இங்கிலீஷ் எலக்ட்ரானிக் நகர் உள்ளது. நூற்றுக்கணக்கான வீடுகள் அந்த நகரில் உள்ளன.

    இங்கிலீஸ் எலக்ட்ரானிக் கம்பெனி என்ற தொழில் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் மனைகள் வாங்கி அங்கு வீடு கட்டி குடியேறினார்கள். இதனால் அந்த பகுதி இங்கிலீஸ் எலக்ட்ரானிக் நகர் என்று பெயர் பெற்றது.

    அந்த நகரின் ஒரு பகுதியில் சாக்கடை கால்வாய் உள்ளது. அங்கு அடர்ந்த புதர்களும் உள்ளன. இதை பயன்படுத்தி அங்கு சிலர் பன்றிகளை வளர்த்து வருகிறார்கள். நூற்றுக்கணக்கான பன்றிகள் அங்கு உள்ளன.

    அந்த பன்றிகளால் கடும் இடையூறு ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் பல மாதங்களாக புகார் சொல்லி வருகிறார்கள். பன்றிகள் தொல்லையால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த பகுதி மக்கள் சொல்கிறார்கள்.

    சில ஆண்டுகளுக்கு முன்பு பன்றிகள் தொல்லை பற்றி இ.இ.நகர் பகுதி மக்கள் செங்கல்பட்டு கலெக்டரிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பன்றிகள் அங்கு இருந்து அகற்றப்பட்டன.

    ஆனால் கடந்த சில மாதங்களாக மீண்டும் அங்கு பன்றிகள் வந்து விட்டன. கடந்த ஜனவரி மாதம் நிறைய பன்றிகள் உயிரிழந்து துர்நாற்றம் வீசியதாக குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.

    மாநகராட்சி பகுதிக்குட்பட்ட இடங்களில் பன்றிகள் வளர்க்க கூடாது என்று தடை உள்ளது. எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து பன்றிகளை அகற்ற வேண்டும் என்று இ.இ.நகர் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கோவிந்தன் மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார்
    • வெடி மருந்தினை பசுமாடு கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது.

    விழுப்புரம்:

    திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமர் மகன் கோவிந்தன்(55) இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்த்து விட்டு மாலை வீட்டிற்கு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தார். வரும் வழியில் ஒரு கரும்பு தோட்டத்தில் கரும்புகளை நாசம் செய்யும் காட்டு பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடி மருந்தினை பசுமாடு கடித்தது கடித்த உடன் வெடித்து வாய் சிதறி ரத்தம் கொட்டியது. பன்றிகளை கொல்ல வைத்த வெடியை மாடு கடித்த போது மாட்டின் வாய் சிதறி ரத்தம் கொட்டிய சம்பவம் இப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • ஆப்பிரிக்கன் காய்ச்சல் எதிரொலியாக 63 பன்றிகள் ஊசி போட்டு கொல்லப்பட்டன.
    • பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் அமீர்பாளையம் பகுதியில் கடந்த மாதம் ஒரு பன்றி இறந்து கிடந்தது. அந்த பன்றியின் உடலை கால்நடை அதிகாரிகள் கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர். அப்போது அந்த பன்றி ஆப்பிரிக்கன் காய்ச்சலால் இறந்தது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த பகுதியில் ஆப்பிரிக்கன் காய்ச்சல் பாதிப்புக்குள்ளான 63 பன்றிகளை ஊசிபோட்டு கொல்ல மாவட்ட கால்நடைதுறை அதிகாரிகள் முடிவு செய்து அந்த பன்றிகளுக்கு ஊசிபோட்டு கொன்றனர். அதற்காக 18 அடி நீளம், 20 அடி அகலத்தில் குழி வெட்டி பன்றிகளை புதைத்தனர்.

    மாவட்ட கால்நடைதுறை இணை இயக்குநர் கோவில்ராஜா இதுகுறித்து கூறுகையில், ஆப்பிரிக்கன் காய்ச்சலால் பன்றிகள் மட்டுமே பாதிக்கப்படும். வேறு விலங்குகளுக்கோ, மனிதர்களுக்கோ பரவாது. காய்ச்சல் பாதிக்கப்பட்ட பன்றிகள் கொல்லப்பட்டுவிட்டன. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட வேண்டியதில்லை என்றார்.

    • பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள்‌‌ கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது.
    • ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே கல்லாங்குளம் என்ற இடத்தில் ராஜாமணி என்பவர் கடந்த சில வருடங்களாக வெண்பன்றி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.

    அவரது பண்ணையில் வளர்க்கப்பட்ட 2 பன்றிகள் கடந்த சில தினங்களுக்கு முன் திடீரென உயிரிழந்தது. இதனை தொடர்ந்து நாமக்கல்லில் உள்ள கால்நடை மருத்துவ கல்லூரிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    அங்கு சென்ற மருத்துவ குழுவினர் அவற்றின் மாதிரிகளை சேகரித்து போபாலில் உள்ள ஆய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தனர். ஆய்வின் முடிவில் ஆப்பிரிக்கா வைரஸ் தாக்கி பன்றி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.

    இந்நிலையில் அந்த பண்ணையை இன்று கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு குட்டிகள் உட்பட 20 பன்றிகளுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்துள்ளதால், அவற்றை 15 அடி ஆழம் குழி தோண்டி புதைக்க அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

    மேலும் 1 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு, பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    ஆனால் பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குநர் டாக்டர் பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    ராசிபுரம் பண்ணையில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்க வைரஸ் உறுதி செய்யப்பட்டதால் அவற்றை அழைக்க நடவடிக்கை எடுக்கபப்ட்டு உள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து மனிதர்களுக்கோ, மாடு, ஆடு போன்ற வளர்ப்பு கால்நடைகளுக்கோ பரவாது. ஒரு பன்றியில் இருந்தே மற்றொரு பன்றிக்கு மட்டும் பரவக்கூடிய நோய் ஆகும். எனவே விவசாயிகள் பண்ணையாளர்கள், கால்நடை வளர்ப்போர் மற்றும் பொதுமக்கள் இதுகுறித்து எவ்வித பீதியும் அடையத் தேவையில்லை

    மாவட்டத்தின் வழியாக பன்றிகள் வாகனங்களில் ஏற்றிச் செல்லும்பொழுது அதுகுறித்து தீவிர விசாரணை செய்யவும், நடவடிக்கை மேற்கொள்ளவும் காவல்துறை மற்றும் போக்குவரத்து துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நோயானது பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கும், நோய் தாக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள், தீவன சாக்குப்பைகள் மூலம் பிற பன்றிகளுக்கும் மட்டுமே பரவக்கூடியதாகும்.

    இது ஒரு வைரஸ் கிருமியால் ஏற்படும் நோயாதலால் தகுந்த உயிர் பாதுகாப்பு நடவடிக்கைகளான சுத்தமாக பண்ணையை பராமரித்தல், ரசாயன கலவை கொண்ட நடைபாதை அமைத்தல், நீர் மற்றும் கழிவுகள் தேங்காமல் பராமரித்தல், ஓட்டல் மற்றும் விடுதிகளில் இருந்து பெறப்படும் கழிவுகளை பன்றிக்கு தீவனமாக வழங்காமல் இருப்பது மற்றும் அந்நியர்கள் பண்ணையில் நுழைவது தடுப்பது ஆகிய நடவடிக்கைகள் மூலம் இந்த நோயை கட்டுப்படுத்தலாம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • பல்வேறு இடங்களில் சுற்றிதிரிந்தன 50-க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.
    • பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும் பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர்.

    சீர்காழி:

    சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 24 வார்டுகளில் பெரும்பாலான வார்டுகளான ஈசானியத் தெரு, நங்கநலத் தெரு, கீழ தென்பாதி ஊழியக்காரன் தோப்பு, பனங்காட்டு தெரு உள்ளிட்ட நகரின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறாக பன்றிகள் சுற்றி திரிந்தன.

    இதனை பிடித்து அப்புறப் படுத்த வேண்டும் என பொதுமக்கள், நகர்மன்ற உறுப்பினர்கள், சீர்காழி நகர்மன்றத் தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரனிடம் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து நகர்மன்ற தலைவர் உத்தரவின்படி பன்றிகள் பிடிக்க ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு சீர்காழி போலீசார் உதவியுடன், தூய்மை பணியாளர்கள் ஒத்துழைப்புடன் எம்.எஸ்.கே. நகர், இரணியன் நகர், ஊழியக்காரன் தோப்பு, கிருஷ்ணமூர்த்தி நகர், கற்பக நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் முதல் கட்டமாக 50 -க்கும் மேற்பட்ட பன்றிகள் வலை வைத்து உயிரோடு பிடித்து லாரியில் ஏற்றி கொண்டு சென்றனர்.

    பன்றி வளர்ப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பொதுமக்கள், குடியிருப்பு வாசிகள் வரவேற்றுள்ளனர். அப்போது நகராட்சி ஆணையர் (பொ) ராஜகோபாலன், நகராட்சி மேலாளர் காதர்தான், நகரமைப்பு ஆய்வாளர் நாகராஜன், சுகாதார ஆய்வாளர் செல்லதுரை, பணி மேற்பார்வையாளர் விஜயேந்திரன், வருவாய் ஆய்வாளர் ராஜகணேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×