என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "pill"
- போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
- போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
ஓசூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் முதலாவது சிப்காட் பகுதியில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், மருந்து, மாத்திரை தயாரிக்கும் கம்பெனிகளும் அடங்கும்.
இந்த நிலையில், தங்கள் தயாரிப்புக்கு எத்தனால் மற்றும் ஆல்கஹால் பயன்படுத்தும் அங்குள்ள 2 மருந்து, மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் பூனப்பள்ளி அருகே செயல்பட்டு வரும் ஒரு தொழிற்சாலை என மொத்தம் 3 தொழிற்சாலைகளில் ஓசூர் சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் நேற்று அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, எத்தனால் மற்றும் ஆல்கஹால் இருப்பு சரியாக உள்ளதா, என்றும் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளனவா, அவற்றின் காலக்கெடு, பாதுகாப்பு தன்மை ஆகியன குறித்தும் போலீசார் நேரில் பார்வையிட்டு சோதனை நடத்தினர்.
- திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர்.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (85), பெங்களூரு விமான நிலையத்தில் அதிக ாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருக்கு 2 மனைவிகள், முதல் மனைவி இறந்த நிலையில் 2-வது மனைவி வசந்தா (60) என்பவருடன் வசித்து வந்தார்.
சாப்ட் வேர் என்ஜினீயர்
இவர்களது மகன் திலக் (38), சாப்ட்வேர் என்ஜினீ யரான இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். கொரோனாவுக்கு பின்னர் வீட்டில் இருந்த படியே பணிபுரிந்து வந்தார். மேலும்
ஆன்லைன் வர்த்தகத்திலும் ஈடுபட்டு வந்தார்.இவரது மனைவி மகேஷ்வரி (33), இவர்களது மகன் சாய் கிரிஷாந்த் (6), இந்த சிறுவனுக்கு வாய்பேச முடியாது. இந்த நிலையில் பெங்க
ளூருவில் உள்ள சகோதரர்
சந்துருவுக்கு வாட்ஸ் அப் மூலம் குழந்தையை குணப்படுத்த முடியாததா லும், கடன் தொல்லையாலும் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள போவதாக திலக் தகவல் அனுப்பி இருந்தார். இதையடுத்து நேற்று காலை போலீசார் வீட்டிற்கு சென்று கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.
4 பேர் சாவு
அப் போது திலக் தனது தாய், தந்தை மற்றும் மனைவி, மகன் ஆகியோருக்கு அள வுக்கு அதிகமாக தூக்க மாத்திரை கொடுத்து விட்டு தான் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதில் சிவராமன், மகேஸ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் அடுத்தடுத்து இறந்தனர். வசந்தா மட்டும் உயிருக்கு போராடிய படி கிடந்தார்.
தொடர் சிகிச்சை
இதனை பார்த்த போலீசார் வசந்தாவை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கடன் தொல்லை மற்றும் தொழில் நஷ்டத்தால் திலக் 4 பேருக்கும் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திைர கொடுத்து கொலை செய்து
விட்டு தானும் தற்கொலை செய்தது தெரிய வந்தது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பேபி ப்ளூஸ் எனும் மனநிலை மாற்றங்களில் அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்
- 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது
பிரசவகாலம் என்பது பெண்களின் வாழ்வின் முக்கியமான பருவம். பிரசவத்திற்கு பிறகு தாயான சந்தோஷ உணர்வும், பிறந்த குழந்தையை குறித்த எண்ணங்களுமே தாய்மார்களின் மனதில் தோன்றிய வண்ணம் இருக்கும்.
ஆனால் ஒரு சில பெண்களுக்கு பிரசவத்திற்குப் பிறகு "பேபி ப்ளூஸ்" (baby blues) எனப்படும் சில மன அழுத்த அறிகுறிகள் தோன்றுகின்றன. இதில் மனநிலை மாற்றங்கள், அழுகை, பதட்டம் மற்றும் தூக்கமின்மை ஆகியவையும் அடங்கும்.
பொதுவாக இந்த அறிகுறிகள் பிரசவத்திற்குப் பிறகு முதல் 2 முதல் 3 நாட்களுக்குள் தொடங்கி 2 வாரங்கள் வரை மட்டுமே நீடிக்கும்.
ஆனால் சில பெண்களுக்கு மகப்பேற்றுக்கு பிறகு ஏற்படும் மனச்சோர்வு, நீண்டகால மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அரிதாக ஒரு சிலருக்கு பிரசவத்திற்குப் பின் ஏற்படும் மனநோய் எனப்படும் தீவிர மனநிலைக் கோளாறாக இது மாறலாம்.
ஒவ்வொரு ஆண்டும் 7 தாய்மார்களில் ஒருவருக்கு எனும் விகிதத்தில் இது தாக்குகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது வரை அமெரிக்காவில், மகப்பேற்றுக்கு பிறகான இந்த மனச்சோர்வுக்கான சிகிச்சை, நரம்புவழி ஊசி வடிவில் மட்டுமே கிடைத்து வருகிறது.
ப்ரெக்ஸனலோன் (Brexanolone) எனப்படும் இந்த ஊசி வடிவிலான சிகிச்சையை பெற தாய்மார்கள், மருத்துவமனையில் தங்க வேண்டும். இதற்கான சிகிச்சை காலம் 60 மணி நேரம் ஆகும். இதற்கான செலவு, ரூ.28 லட்சம் ($34,000) வரை ஆகும்.
இந்நிலையில், அமெரிக்காவின் மஸாசுஸெட்ஸ் மாநிலத்தின் கேம்ப்ரிட்ஜ் பகுதியை சேர்ந்த பயோஜென் அண்ட் ஸேஜ் தெராப்யூடிக்ஸ் நிறுவனம், ஜுர்ஜுவே (Zurzuvae) என பெயரிட்டு முதல்முதலாக ஒரு மாத்திரை வடிவிலான தீர்வை, இந்நோய்க்கு கண்டுபிடித்திருக்கிறது.
இதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) அங்கீகாரம் வழங்கியுள்ளது. கூடிய விரைவில் இது சந்தைக்கு விற்பனைக்கு வரும்.
ஒரு நாளைக்கு ஒன்று என 14 நாட்கள் எடுத்து கொள்ள வேண்டிய இந்த மாத்திரைக்கான விலை இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
ஊசி வடிவில் கிடைத்த சிகிச்சையால் ஏற்பட்டு வந்த சிரமங்கள் குறையும் என்பதால் பல தாய்மார்களுக்கு இந்த செய்தி ஒரு வரப்பிரசாதமாக அமைகிறது.
- போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
- வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது.
புதுடெல்லி:
எத்தியோப்பியாவின் அடிஸ் அபாபாவில் இருந்து டெல்லிக்கு வந்து விமானத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது நைஜீரிய பெண் பயணியின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்து அதிகாரிகள், அவரை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதில் அவரது வயிற்றில் மாத்திரை வடிவில் பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை வெளியே எடுத்தனர்.
95 ஓவல் வடிவ காப்ஸ்யூல்கள் எடுக்கப்பட்டன. அவற்றுக்குள் போதை பொருள் இருப்பது தெரிந்தது. 511 கிராம் எடையுள்ள போதை பொருள் இருந்தது. இவற்றின் மதிப்பு ரூ.75 லட்சம் ஆகும்.
இதையடுத்து நைஜீரிய பெண் கைது செய்யப்பட்டார். அயன் பட பாணியில் போதை பொருளை மாத்திரைகளாக விழுங்கி அப்பெண் கடத்தி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றதால் வாழைப்பழத்தில் விஷ மாத்திரை வைத்து தின்று கூலி தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:
கோபி அடுத்துள்ள குருமந்தூர், பூசாரியூரை சேர்ந்தவர் குமார் (42). இவரது மனைவி சித்ரா. மனைவி அடிக்கடி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கணவர் குமார் கண்டித்து வந்துள்ளார். இதுதொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்நிலையில் சம்பவத்தன்றும் செல்போனில் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்த மனைவியை குமார் கண்டித்துள்ளார். இதனால் கோபமடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.
தனியாக இருந்த கணவர் குமார் மனமுடைந்து வாழைப்பழத்தில் விஷமாத்திரையை வைத்து சாப்பிட்டு சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார்.
பின்னர் குமாரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி குமார் இறந்தார். இது குறித்து நம்பியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
- மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, கும்பகோணம் மாநகராட்சிகள், பட்டுக்கோட்டை நகராட்சி பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கும் வகையில் 8 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த மருத்துவ சேவைகளை மக்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே கிடைக்கும் வண்ணம் 5 ஆயிரம் மக்கள் தொகைக்கு ஒரு புதிய நகர்ப்புற நலவாழ்வு மையம் வீதம் 12 புதிய நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் ஒவ்வொன்றும் தலா ரூ.25 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ளன.
அதன்படி முதல்கட்டமாக கட்டி முடிக்கப்பட்ட 10 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டன.
தஞ்சை மாநகராட்சி பகுதியில் அண்ணாநகர் 14-வது தெரு, சின்னையாபிள்ளை தெரு, ஏ.ஒய்.ஏ.நாடார் தெரு, பூமால் ராவுத்தன்கோவில் தெரு, வண்டிக்காரத்தெரு, நாலுகால்மண்டபம் ஆகிய 6 இடங்களிலும், கும்பகோணம் மாநகராட்சியில் திருநாராயணபுரம், மேலமேடு, காசிராமன்தெரு, பட்டுக்கோட்டை நகராட்சி பகுதியில் நரியம்பாளையம் ஆகிய இடங்களில் திறக்கப்பட்டன.
பள்ளியக்ரகாரம், டவுன்கரம்பை பகுதியில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதையடுத்து தஞ்சையில் அண்ணாநகர் 14-வது தெரு திறக்கப்பட்ட மையத்தில் துரை.சந்திரசேகரன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்து, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கினர்.
இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கலைவாணி, மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, மண்டலக்குழு தலைவர்கள் ரம்யாசரவணன், மேத்தா, கலையரசன் மற்றும் கவுன்சிலர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த மையத்தில் டாக்டர், செவிலியர், சுகாதார ஆய்வாளர், சுகாதார பணியாளர் என 4 பேர் பணியில் இருப்பார்கள்.
காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையும் இந்த மையம் செயல்படும்.
இந்த மையங்களில் அதிநவீன மருத்துவ கருவிகள் பொருத்தப்பட்டு வெளிநோயாளிகள் சிகிச்சை, தாய்சேய் நலம், தொற்றா நோய் சிகிச்சைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உரிய மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது.
- குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
- அனைவரும் தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழி எடுத்து கொண்டனர்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம், ஆயக்காரன்புலம்-3 ஊராட்சியில் உள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேசிய குடற்புழு நீக்க முகாம் நடைபெற்றது.
முகாமை மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்து மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:-
குடற்புழு நீக்க மாத்திரை வழங்குவதில் விடுபட்ட வர்களுக்கு வருகிற 21-ம் தேதி வழங்கப்பட உள்ளது.
1 மற்றும் 2 வயதுடையோருக்கு அரை மாத்திரையும், 2 முதல் 19 வயதுடையோருக்கு ஒரு மாத்திரையும் மற்றும் 20 முதல் 30 வயதுடைய பெண்களுக்கு ஒரு மாத்திரையும் வழங்கப்படும்.
இந்த மாத்திரைகள் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார மையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளி- கல்லூரிகள் மூலம் வழங்கப்படும் என்றார்.
பின்னர், தேசிய குடற்புழு நீக்க நாள் உறுதிமொழியை கலெக்டர் வாசிக்க மாணவிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் அனைவரும் எடுத்து கொண்டனர்.
நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷிணி, வட்டார மருத்துவர் சுந்தரராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
- மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர்.
- 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு மேல்சிகிச்சைக்கு பரிந்துரை.
பேராவூரணி:
தஞ்சாவூர் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், முடச்சிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு துறை சார்பில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.
சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம் குத்துவிளக்கேற்றி முகாமை தொடங்கி வைத்தார். ஊராட்சி மன்ற தலைவர் சக்கரவர்த்தி அனைவரையும் வரவேற்றார்.
வட்டார மருத்துவ அலுவலர் தலைமையில் மருத்துவர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். சித்தா, ஓமியோபதி மருத்துவ அலுவலர்கள் பரிசோதனை செய்து மருந்து, மாத்திரைகள் வழங்கினர். முகாமில் பொதுமக்கள் சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் மேல்சிகிச்சைக்காக 21 பேர் தஞ்சாவூர் மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக பரிந்துரை செய்யப்பட்டனர். முகாமில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
- கர்ப்பிணி பெண்கள், பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு மாத்திரையில் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர்:
கலைஞரின் வரும் முன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் தஞ்சை தென் கீழ் அலங்கம் மாநகராட்சி பள்ளியில் நடைபெற்றது.
இந்த மருத்துவ முகாமை தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் தொடக்கி வைத்தார். இதில் மருத்துவ அலுவலர் சிவகாமசுந்தரி, தலைமை ஆசிரியர் வடிவேலு சிறப்புரையாற்றினர்.
மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மண்டல தலைவர் மேத்தா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த மருத்துவ முகாமில் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், மகப்பேறு மருத்துவம், இசிஜி, ஸ்கேனிங் மக்களை தேடி மருத்துவம், டிபி டெஸ்ட், எக்ஸ்ரே வீடியோ வசதி, சத்துணவு குறித்த விழிப்புணர்வு போன்ற பரிசோதனைகள் செய்யப்பட்டது.
இந்த முகாமில் கர்ப்பிணி பெண்கள் பொதுமக்கள் என அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு அதற்கு ஏற்ப மருந்து மாத்திரையில் வழங்கப்பட்டது.
இந்த மருத்துவ முகாமில் 22 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ஸ்டெல்லா நேசமணி, அப்பகுதி பொதுமக்கள், கர்ப்பிணி பெண்கள் திரளானோர் பங்கு பெற்று பயனடைந்தனர்.
மேலும் இந்த முகாமில் தஞ்சை மாநகராட்சி மேயர் சண் . ராமநாதனுக்கு, துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி பரிசோதனை மேற்கொண்டார்.
- வயிற்றுப் புற்று நோயால் அவதிப்பட்ட பெண் அதிக மாத்திரைகள் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
- கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மதுரை
மதுரை கே.புதூர் கற்பகா நகர், சூசை மனைவி ஜோஸ்பின்கிளாரா (வயது 52). இவருக்கு வயிற்று புற்றுநோய் இருந்தாக கூறப்படுகிறது. இதற்காக அவர் பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார்.
இருந்தபோதிலும் நோய் குணமாகவில்லை. இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த ஜோஸ்பின் கிளாரா சம்பவத்தன்று காலை வீட்டில் அதிகப்படியான மாத்திரைகள் தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.
இதில் மயங்கி விழுந்த அவரை உறவினர்கள் மீட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இது தொடர்பாக கே.புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைபாண்டியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
தேனி:
தேனி வீரபாண்டி போலீஸ் கோட்டத்துக்கு உட்பட்ட லட்சுமிபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். விவசாயி. இவரது மகன் விக்னேஷ்குமார் (வயது 21). கடந்த சில வருடங்களாகவே தந்தை விக்னேஷ்குமாரை ராணுவத்தில் சேர வற்புறுத்தி வந்துள்ளார்.
இருப்பினும் தனக்கு ராணுவத்தில் சேர விருப்பம் இல்லை என்று தந்தையிடம் பல முறை தெரிவித்துள்ளார்.
சம்பவத்தன்று தனக்கு விருப்பம் இல்லை என்று தெரிந்தும் தனது தந்தை மீண்டும் மீண்டும் வற்புறுத்தியதால் விரக்தியடைந்த விக்னேஷ்குமார் தோட்டத்துக்கு சென்று அங்குள்ள தென்னை மரத்துக்கு வைக்கும் விஷ மாத்திரையை தின்று விட்டு பின்னர் தனது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்த தந்தை கண்ணன் மற்றும் அக்கம் பக்கத்தினர் விக்னேஷ் குமாரை மீட்டு தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்