search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "plastic cup"

    • முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.
    • வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி 36-வது வார்டில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில் தெரு பகுதியில் டெங்கு தடுப்பு பணி மற்றும் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்தார்.

    துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி, மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முகாமில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு டாக்டர் முத்துக்குமார் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்து, தேவைப்படுவோருக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.

    முகாமில் மாநகராட்சி கவுன்சிலர் கண்ணுக்கினியாள், துப்புரவு ஆய்வாளர் ஜோசப் சேவியர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து டெங்கு காய்ச்சல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிளாஸ்டிக் கப், தேங்காய் சிரட்டை, டயர், உடைந்த பாத்திரங்கள் ஆகியவற்றில் கொசுப்புழு உற்பத்தியாகாத வண்ணம் அகற்றப்பட்டது.

    மேலும் வீட்டில் உள்ள தொட்டிகளில் சிறிய தொட்டிகளில் பிளீசிங் பவுடர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டதுடன், கொசுப்புழு உற்பத்தி ஆகாத வண்ணம் தொட்டியை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதியிலிருந்து பிளாஸ்டிக் தடை அமலுக்கு வர உள்ள நிலையில், பேப்பர் கப்களுக்கு தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. #Plastic #PlasticBan #KCKaruppannan
    சென்னை:

    14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்படுகிறது.

    இதையொட்டி சென்னை கிண்டியில் உள்ள மாசுக் கட்டுப்பாடு வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விழிப்புணர் கருத்தரங்கம், கண்காட்சி நடந்தது.

    இதில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி. கருப்பண்ணன் பேசியதாவது:-

    தமிழக அரசு அமைத்த வல்லுனர் குழுவின் அறிக்கை அடிப்படையிலேயே பிளாஸ்டிக் பொருட்களுக்கு வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து பிளாஸ்டிக் பொருட்களுக்கும் தமிழக அரசு தடை விதிக்கவில்லை. ஒருமுறை பயன்படுத்தப்படும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது.

    பேப்பர் கப்களில் பிளாஸ்டிக் இழை தடவப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது. இந்த பிளாஸ்டிக் இழையின் அளவு 6 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக மாற்றினால் பேப்பர் கப்களுக்கு தடையில் இருந்து விலக்கு அளிக்க பரிசீலிக்கப்பட்டு வருகிறது.


    ஜனவரி 1-ந் தேதிக்குப் பின்பு ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி, விற்பனை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்படும்.

    பிளாஸ்டிக் தடையின் மூலம் பாக்குமட்டை, கரும்பு சக்கை, மண்பாண்டங்கள், துணிப்பை போன்ற இயற்கை சார்ந்த பொருட்களுக்கு வரவேற்பு பெருகும். இதன் மூலம் விவசாயம், குடிசைத் தொழில் நன்கு வளர்ச்சி அடையும்.

    பிளாஸ்டிக் ஒழிப்பு திட்டத்துக்குப்பின்பு திடக்கழிவு மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். திடக்கழிவு மேலாண்மை மூலம் சேகரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருள்களைக் கொண்டு மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Plastic #PlasctiBan #KCKaruppannan
    தமிழகத்தில் ஜனவரி 1-ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை உத்தரவு அமலுக்கு வர உள்ள நிலையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கப்பட உள்ளது. #Plastic #PlasticBan
    சென்னை:

    பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் சுகாதாரம் மற்றும் சுற்றுச் சூழலுக்கு கடும் பாதிப்பு ஏற்படுவதாகவும், சில வகை பிளாஸ்டிக்கால் புற்று நோய் ஏற்படுவதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்தனர்.

    பிளாஸ்டிக் கவர்களில் சூடான டீ-காபி வழங்குவது, உணவு பொருட்களை பார்சல் வாங்கிச் செல்வது போன்றவையும் சுகாதாரத்துக்கு கடுமையான ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்பட்டது.

    மேலும் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை குப்பை மேடுகளிலும், தெருக்களிலும் ஆங்காங்கே வீசுவதால் அவை மழை நீர் கால்வாய்களிலும், சாக்கடை கால்வாய்களிலும் புகுந்து அடைப்பு ஏற்படுத்துகிறது. இதனால் மழை காலங்களில் வெள்ளம் வழிந்தோட வழியில்லாமல் தெருக்களில் தேங்கி பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    இதே போல் பிளாஸ்டிக் கழிவுகள் மண்ணில் புதையும் போது அதில் மக்கும் தன்மை இல்லாததால் நிலத்தடி நீர்மட்டத்தையும் அதிகரிக்க விடாமல் தடை செய்கிறது. மொத்தத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் சுற்றுச்சூழலுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஆராய தமிழக அரசு நிபுணர் குழுவை அமைத்தது. இந்த குழுவினர் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் பேப்பர்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள் போன்றவற்றை தடை செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினர்.

    அவற்றுக்குப் பதில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் வாழை இலைகள், பாக்கு மட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கலாம் என்றும் சிபாரிசு செய்தனர்.


    இதையடுத்து உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5-ந்தேதி அன்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டில் ஜனவரி 1-ந்தேதி முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிப்பதாக சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டார்.

    அதன்படி மக்காத பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் டீ கப்கள், தண்ணீர் கப்கள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சி குழல் (ஸ்டிரா), பிளாஸ்டிக் கைப்பைகள் (கேரி பேக்), பிளாஸ்டிக் கொடிகள் உள்பட 14 வகையான பொருட்களுக்கு தடை விதிக்கப்படுகிறது.

    இந்த வகை பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ, சேமித்து வைக்கவோ, பயன்படுத்தவோ கூடாது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986-ன் கீழ் இவைகள் தமிழ்நாடு முழுவதும் தடை செய்யப்படுவதாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

    ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடையை தீவிரமாக அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பொதுமக்களும், வியாபாரிகளும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு பதில் துணிப்பைகள், காகித உறைகள் போன்ற மக்கும் பொருட்களைப் பயன்படுத்த பழகிக் கொள்ள ஏதுவாக அரசு 6 மாதம் கால அவகாசம் அளித்தது.

    மேலும் பிளாஸ்டிக் தடையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து திட்டமிட்டபடி வருகிற ஜனவரி 1-ந்தேதி முதல் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருகிறது.

    பிளாஸ்டிக் தடையை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், ஊராட்சிகளில் அதிகாரிகள் குழு அமைத்து கண்காணிக்க முடிவு செய்துள்ளனர்.

    பிளாஸ்டிக் தடையில் இருந்து பால், தயிர், எண்ணை பாக்கெட்டுகள், மருத்துவப் பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் கவர்களுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    பேப்பர் கப்களில் தற்போது பிளாஸ்டிக் கலவை 6 சதவீதமாக உள்ளது. அதை 4 சதவீதமாக குறைத்து தயாரித்தால் பேப்பர் கப்களை அனுமதிக்கலாம் என்றும் அரசு அறிவித்து உள்ளது.

    பிளாஸ்டிக் தடையை மீறினால் 5 ஆண்டு ஜெயில் அல்லது ரூ.1 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்கவும் தொடர்ந்து சட்டத்தை மீறினால் நாள் ஒன்றுக்கு ரூ.500 அபராதம் விதிக்கவும் மத்திய அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் வகை செய்கிறது.

    இந்த சட்டத்தை மாநில அரசு பின்பற்றுவதா? அல்லது முதல் தடவையாக எச்சரிக்கை விடுப்பது சிறிய தொகை அபராதம் விதிப்பது போன்ற நடவடிக்கைகள் எடுப்பதா? என்பது பற்றி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

    இதுபற்றி சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி செந்தில்நாதன் கூறியதாவது:-

    பிளாஸ்டிக் தடை தொடர்பாக நாங்கள் தேவையான அளவு விழிப்புணர்வு பிரசாரம் செய்து இருக்கிறோம். மறுசுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை அரசு தடை செய்துள்ளது குறித்து விளக்கி கூறியுள்ளோம். மாணவர்கள், வியாபாரிகள், பெண்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளோம்.

    இதையும் மீறி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் முதலில் அவற்றை பறிமுதல் செய்வோம், உபயோகப்படுத்துபவர்கள், விற்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு அபராத தொகை எவ்வளவு என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். அதை நாங்கள் செயல்படுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார். #Plastic #PlasticBan
    ×