என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pocso act"

    • சிறுமி திடீரென மயங்கி விழுந்ததில் பாட்டி அதிர்ச்சி அடைந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
    • வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சேலம் அருகே உள்ள நாழிக்கல்பட்டியை சேர்ந்தவர் ஆகாஷ் (வயது 19). பெற்றோரை இழந்த இவர், அன்னதானப்பட்டி பகுதிக்கு கூலிவேலைக்கு வந்தார். அப்போது 14 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது.

    இந்த சிறுமி தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து படித்து வந்தார். இதற்கிடையில் வாலிபர் ஆகாஷ் அடிக்கடி சிறுமியை சந்தித்துள்ளார். கடந்த 6-ந் தேதி சிறுமி திடீரென மயங்கி விழுந்தார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார். அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர்கள், சிறுமி 4 மாத கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தனர்.

    இது பற்றி சிறுமியிடம் விவரத்தை கேட்டபோது, வாலிபர் ஆகாஷ், தன்னுடன் நெருங்கி பழகினார் எனவும், மேலும் அவர், திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி தன்னை கற்பழித்துவிட்டார் எனவும் கண்ணீர் மல்க கூறினார்.

    இது குறித்த புகாரின்பேரில் சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, வாலிபர் ஆகாஷ் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிறுமி 14 வயதில் கர்ப்பமாக இருப்பதால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம்பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    திருப்பதி

    ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டம், கோலிமி குண்ட்லா பகுதியை சேர்ந்தவர் கூலி தொழிலாளி. இவருக்கு ஒரு மகன் 2 மகள்கள் உள்ளனர். இளைய மகள் வாய் பேச முடியாத, காது கேட்காத மாற்றுத்திறனாளி. அதே பகுதியை சேர்ந்தவர் வெங்கட்ராம்.

    இந்த நிலையில் கடந்த வாரம் இளம் பெண்ணின் பெற்றோர் வேலைக்கு சென்று இருந்தனர். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார்.

    இதனை அறிந்த வெங்கட்ராம் இளம் பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அப்போது மாற்றுத்திறனாளி இளம் பெண்ணே பலாத்காரம் செய்ய முயற்சி செய்தார்.

    இதற்கு மாற்றுத்திறனாளி பெண் எதிர்ப்பு தெரிவித்ததால் அவரை சரமாரியாக தாக்கி காலை உடைத்தார். மாற்றுத்திறனாளி பெண் வலியால் அலறி கூச்சலிட்டார்.

    அவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் வந்தபோது வெங்கட்ராம் அங்கிருந்து தப்பிச்சென்றார். இது குறித்து அங்கு இருந்தவர்கள் பெண்ணின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வீட்டிற்கு வந்து படுகாயம் அடைந்த மகளை மீட்டு சர்வஜனா ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

    இதுகுறித்து இளம் பெண்ணின் பெற்றோர் நந்தியாலா போலீசில் புகார் செய்தனர். இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த எம்.எல்.ஏ. குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க கூடாது என போலீசில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இதனால் குற்றவாளி மீது வழக்கு பதிவு செய்யாமல் பாதிக்கப்பட்ட இளம் பெண் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த சம்பவம் எதிர்க்கட்சிகளுக்கு தெரிய வந்ததையடுத்து அவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதையடுத்து போலீசார் வெங்கட்ராம் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

    • லாரி டிரைவர் மகேஷ் 7 வயது சிறுமி ஒருவரிடம் சில்மிஷம் செய்துள்ளார்.
    • சிறுமி கத்தி கூச்சலிடவே மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

    நெல்லை:

    பாளை அருகே உள்ள சீவலப்பேரி பொட்டல் நகர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 31). லாரி டிரைவர். சம்பவத்தன்று மகேஷ் ஒரு 7 வயது சிறுமியிடம் சில்மிஷம் செய்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி கத்தி கூச்சலிடவே அக்கம் பக்கதினார் ஓடி வந்தனர்.

    இதனைப் பார்த்த மகேஷ் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பின்னர் சம்பவம் குறித்து சீவலப் பேரி போலீசில் புகார் செய்யப்பட்டது.

    கைது

    போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய மகேசை பிடித்து கைது செய்தனர்.அவர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    • சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
    • செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர்.

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை பாரதி நகர் காட்டன் பஜார் தெருவை சேர்ந்தவர் சுந்தர்ராஜ்(28). இவர் சிப்காட்டில் உள்ள தனியார் ஷூ கம்பெனியில் டிரைவராக பணியாற்றி வருகிறார். சுந்தர்ராஜுக்கு திருமணமாகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர்.

    இந்நிலையில் சுந்தர்ராஜ் பணிபுரியும் நிறுவனத்தில் ராணிப்பேட்டை அருகே ஒரு பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி வேலைக்கு சேர்ந்து சில மாதங்கள் பணியாற்றி உள்ளார். அப்போது, சுந்தர்ராஜ் மற்றும் சிறுமிக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது.

    இந்நிலையில் சிறுமி வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டு மீண்டும் பள்ளியில் சேர்ந்து 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    இதற்கிடையே, கடந்த 13-ந்தேதி சுந்தர்ராஜ் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தி சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் காணாமல் போன சிறுமியின் பெற்றோர் தனது மகளை காணவில்லை என ராணிப்பேட்டை சிப்காட் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

    இதில் செல்போன் எண் பதிவுகள் மூலம் சிறுமியையும், சுந்தர்ராஜையும் கொடைக்கானலில் கண்டுபிடித்து போலீசார் அழைத்து வந்தனர். கொடைக்கானலில் அறை எடுத்து மாணவியை பாலியல் துன்புறுத்தல் செய்ததாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாக, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார் வாசுகி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சுந்தர்ராஜை கைது செய்து வேலூர் மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • மாணவி 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.
    • மாணவியை தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    தருமபுரி:

    தருமபுரியை அடுத்துள்ள டி.கடிகார அள்ளி கிராமத்தை சேர்ந்தவர், 17 வயது மாணவி. இவர் ஒரு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார்.

    இதே பள்ளியில் படிக்கும் உம்மியம்பட்டி பகுதியை சேர்ந்த பிளஸ் 2 மாணவனுக்கும் காதல் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்லும்போது, மாணவியிடம் ஆசை வார்த்தைகள் பேசி மயக்கிய அந்த மாணவன் பல முறை பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.

    இதில் அந்த மாணவி, 6 மாத கர்ப்பம் அடைந்த நிலையில், இதுகுறித்து, மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

    இதையடுத்து அந்த மாணவியை தருமபுரி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்து மருத்துவ பரிசோதனை நடத்தினர்.

    பின்னர் பெற்றோர் உதவியுடன் மாணவி கொடுத்த புகாரின் பேரில், தருமபுரி அனைத்து மகளிர் போலீசார், மாணவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 4 பேர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனார்.
    • அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த பெருங்குடி மேலத்தெருவைச் சேர்ந்த விக்னேஷ் (வயது23).

    இவர் ஒரு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் இவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைந்தனர்.

    அரித்துவாரமங்கலம் மேல காலனியை சேர்ந்த கார்த்தி (35),சுதாகர் (34), ராஜேந்திரன் (60) ஆகிய 3 பேரும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் இவர்கள் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் 4 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டார்.

    இதனை தொடர்ந்து 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது.

    பின்னர் குண்டர் சட்டத்தில் விக்னேஷ், கார்த்தி, சுதாகர், ராஜேந்திரன் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • போக்சோ சட்டத்தில் நடவடிக்கை
    • ெஜயிலில் அடைப்பு

    வாலாஜா:

    வாலாஜாப்பேட்டை தென்கடப்பந்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இவர் பள்ளமுள்ளுவாடி கிராமத்தில் உள்ள தனது நண்பர் வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

    அப்போது வழியில் அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி, பேனா வாங்குவதற்காக கடைக்கு சைக்கிளில் சென்றுள்ளார்.ஏரிக்கரை ஓரமாக உள்ள சாலையில் சிறுமி சைக்கிளில் வருவதை கண்ட மணிகண்டன், அவரை நிறுத்தி தனது நண்பனின் வீட்டிற்கு செல்ல விலாசம் கேட்டுள்ளார்.சிறுமி சைக்கிளை நிறுத்தி விட்டு கீழே இறங்கி விலாசம் கூறுகையில், திடீரென மணிகண்டன், சிறுமியை பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் சிறுமி கூச்சலிட்டதால் இளைஞர் தனது இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றார். அப்போது அந்த வாகனத்தில் பதிவு எண்ணை சிறுமி குறித்து வைத்துள்ளார்.இது பற்றி தகவல் அறிந்த பெற்றோர்கள், இளைஞர் மீது புகார் கொடுக்க வந்த போது சாலையில் அதே வாகனத்தை கண்டதால் அந்த வாகனத்தில் சென்ற இளைஞரை நிறுத்தும்படி கூறியபோது, இளைஞர் அவர்களை கண்டதும் மின்னல் வேகத்தில் வாகனத்தை ஓட்டியுள்ளார்.

    விடாமல் பெற்றோர்களும் அதிவேகமாக சுமார் 2 கிமீ தூரம் துரத்தி சென்ற நிலையில், அந்த இளைஞர் லாவகமாக தப்பி சென்றுள்ளார்.

    இதனை வீடியோ பதிவு செய்து சிறுமியின் பெற்றோர்கள் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

    இருசக்கர வாகனத்தின் பதிவு எண் உதவியோடு மணிகண்டனை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

    • உறவினர் சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.
    • போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சருத்துபட்டியை சேர்ந்தவர் முனீஸ்வரன் (வயது32). இவருக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவரது உறவினர் 14 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது நைசாக பேச்சு கொடுத்தார்.

    பின்னர் சிறுமியை அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி இதுகுறித்து அவரது பெற்றோரிடம் கூறி உள்ளார். அவர்கள் பெரியகுளம் தென்கரை போலீசில் புகார் அளித்தனர்.

    அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து முனீஸ்வரனை கைது செய்தனர். பெரியகுளம் சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி முனீஸ்வரனை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    • புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
    • ஆசிரியர் பாலசுப்பிரமணியனை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் சிவகிரி பகுதியில் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்த பள்ளியில் தமிழ் ஆசிரியராக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சோழபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(வயது 47) என்பவர் பணியாற்றி வருகிறார்.

    இவர் மாணவிகளிடம் ஆபாசமாகவும், இரட்டை அர்த்தங்களிலும் பேசி வருவதாக அடிக்கடி புகார் எழுந்து வந்தது. சமீபகாலமாக சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் அவர் அவதூறாக பேசியதாக அந்த மாணவிகள் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறி உள்ளனர்.

    ஆனால் பள்ளி நிர்வாகம் அதனை கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்ததாக கூறி நேற்று முன்தினம் மாணவிகள் மற்றும் அவர்களது பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டனர்.

    உடனடியாக புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக், தாசில்தார் பழனிசாமி, இன்ஸ்பெக்டர் ஜெயலெட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவிகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது அவர்கள், ஆசிரியர் பாலசுப்பிரமணியனை கைது செய்ய வேண்டும். பணியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதன்படி அவரை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

    மேலும் பள்ளி நிர்வாகம் அவரை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டது. தொடர்ந்து பாலசுப்பிரமணியனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார்.
    • பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாகூர்:

    புதுவை அரியாங்குப்பத்தை அடுத்த நோணாங்குப்பம் பகுதியை சேர்ந்த 17 வயது மாணவி மணவெளி தந்தை பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 வகுப்பு படித்து வருகிறார்.

    இந்த மாணவி நேற்று முன்தினம் இரவு சிவராத்திரியை முன்னிட்டு கோவிலுக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி சென்றார். ஆனால் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை.

    பல்வேறு கோவில்களிலும் தேடிப்பார்த்தும் மாணவி கிடைக்காததால் பெற்றோர் அரியாங்குப்பம் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகார் அடிப்படையில் யாரேனும் மாணவியை கடத்தி சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் மாணவி சுண்ணாம்பாற்று பாலத்தின் மீது இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை முயற்சி செய்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆற்றில் குதித்து அந்த மாணவியை மீட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் தவளக்குப்பம் மற்றும் அரியாங்குப்பம் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்தனர்.

    ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட மாணவிக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அரியாங்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவி தற்கொலை முயற்சி குறித்து விசாரணை நடத்தினர்.

    போலீசாரின் தீவிர விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல் தெரிய வந்தது. அதில் தற்கொலை முயற்சி மேற்கொண்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளானதும் கரிக்கலாம்பாக்கம் பகுதியை சேர்ந்த தனியார் பஸ் டிக்கெட் பரிசோதகர் பாபு அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது.

    இதனைத் தொடர்ந்து பாபு மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர். மேலும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாணவி குழந்தைகள் நல பாதுகாப்பு குழு சார்பில் புதுவை மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையிலான போலீசார் அரியாங்குப்பம் சந்திப்பில் நின்றிருந்த பாபுவை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    விசாரணையில் ஆசைவார்த்தை கூறி காதலிப்பதாக நாடகமாடி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததை பாபு ஒப்புக்கொண்டார். மேலும் பாபுவிற்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ள நிலையில் பஸ்சில் பழக்கம் ஏற்பட்ட ஒரு பெண்ணை பாபு 2-வது திருமணம் செய்து கொண்டதும் தெரியவந்தது.

    மேலும் இதுபோல் பல பெண்களை பாபு ஏமாற்றினாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போக்சோவில் நடவடிக்கை
    • போலீசார் விசாரணை

    கலசபாக்கம்:

    கலசபாக்கத்தை அடுத்த வீரளூர் பகுதியை சேர்ந்த 19 வயதுடைய பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். ஒருவர், பள்ளி மாணவியிடம் காதலிப்பதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் சம்பவத் தன்று கல்லூரி மாணவரும், அவரது நண்பர்கள் 2 பேரும் பள்ளி மாணவியிடம் சென்று காதலிக்குமாறு வற்புறுத்தி உள்ளனர். மேலும் மாண வியை கேலியும், கிண்டலும் செய்துள்ளனர்.

    இதுகுறித்து மாணவியின் பெற்றோர் கடலாடி போலீ சில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து, 3 பேரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.
    • தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தில் பிளஸ்-1 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 6091 மாணவர்கள், 7023 மாணவிகள் என மொத்தம் 13 ஆயிரத்து 114 பேர் 53 மையங்களில் தேர்வு எழுதினர். மாற்றுத்திறனாளி மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவ-மாணவிகள் தேர்வு எழுத சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. முதல் நாளான நேற்று தமிழ் தேர்வு நடந்தது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் அருகே திருப்புட் குழி அரசு மேல் நிலைப் பள்ளி தேர்வு மையத்தில் முசரவாக்கம் பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி மாணவி ஒருவர் தேர்வு எழுத வந்தார். அவருக்கு தனி அறை ஒதுக்கப்பட்டு இருந்தது. மாணவிக்கு உதவுவதற்காக தனியார் பள்ளி ஆசிரியரான ஜெகன்நாத் என்பவர் நியமிக்கப்பட்டு இருந்தார்.

    தேர்வு எழுதிக் கொண்டு இருந்தபோது ஆசிரியர் ஜெகன்நாத், மாணவிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. ஆனால் இதுபற்றி மாணவி அப்போது மற்ற ஆசிரியர்களிடம் தெரிவிக்கவில்லை.

    தேர்வு முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவி பள்ளியில் தனக்கு நேர்ந்தது குறித்து பெற்றோரிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியபோது மாணவிக்கு ஆசிரியர் ஜெகன்நாத் தேர்வு எழுத உதவியபோது பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

    இதையடுத்து ஆசிரியர் ஜெகன்நாத்தை போலீசார் கைது செய்தனர். அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    ×