என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "polcie inquiry"
- லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் கச்சேரிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் லால்ஜூ. இவர் கடந்த 2021-ம் ஆண்டு கும்பலங்கி பகுதியில் நடந்த ஆணடனி லாசர் என்பவர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவார். நேற்று இரவு பள்ளுருத்தி பகுதியில் இரு தரப்பினருக்கிடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் லால்ஜூ மற்றும் பள்ளுருத்தியை சேர்ந்த ஜோஜி ஆகிய இருவருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இதில் படுகாயமடைந்த இருவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் லால்ஜூ ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். அவரது உடல், பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது.
ஜோஜி ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.
- மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த என்ஜினீயரிங் மாணவர் அங்குள்ள கல்லூரியில் பிடெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். இவர் தனது செல்போனில் ஆன்லைன் விளையாட்டுகளில் ஈடுபட்டார்.
இந்த விளையாட்டுகளில் அதிக அளவில் பணத்தை கட்டி இழந்தார். விளையாட்டு மோகம் காரணமாக லோன் ஆப் போன்றவற்றில் கடன் வாங்கி பணத்தை கட்டினார்.
லோன் ஆப் மூலம் பெற்ற கடன் தொகை ரூ.3 லட்சத்தை திருப்பி செலுத்திய பிறகும் அவர்கள் தொல்லை கொடுக்க தொடங்கினர்.
அதனால் மனமுடைந்த மாணவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மாணவரின் தற்கொலைக்கு காரணமான லோன் ஆப் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவரது பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள தேவம்பாடிவலசை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மகள் அனிதா (வயது 18). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். சிறிது நேரத்தில் மயங்கினார். இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அனிதாவை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவரை டாக்டர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வடக்கிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்