என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Police case filed"
- பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர்.
- ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவொற்றியூர்:
தண்டையார்பேட்டை, சேனி அம்மன் கோவில் தெருவில் நேற்று இரவு ஜெயலலிதா பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெற்றது.
இதில் அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்றார். இந்த பொதுக்கூட்டம் நடத்த போலீசாரிடம் ஏற்கனவே அனுமதி கேட்டு இருந்தனர். ஆனால் போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இந்நிலையில் பொதுக் கூட்டத்தில் அனுமதி இல்லாமல் எல்.இ.டி. திரைகள் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பற்றி அவதூறாக ஒளி பரப்பியது உள்பட பல்வேறு புகார்கள் குறித்து தி.மு.க. வின் 42-வது வட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன் தண்டையார் பேட்டை போலீசில் புகார் மனு அளித்தார்.
இதைத்தொடர்ந்து அ.தி.மு.க.வடக்கு, கிழக்கு மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர். கே. நகர்பகுதி செயலாளர் சீனிவாச பாலாஜி, 42-வது வட்ட செயலாளர் எஸ். ஆர் அன்பு உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து லக்னோ, பிரயாக்ராஜ், ஜான்ப்பூர், ஜான்சி, கானுஜ், பால்ராம்ப்பூர், கோராக்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் சமாஜ்வாடி கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் போலீசாருடன் மோதல் ஏற்பட்டது. இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தினர். பிரயாக்ராஜ் பகுதியில் போலீசாரின் தாக்குதலில் தர்மேந்திர யாதவ் எம்பி உள்ளிட்ட சிலர் காயமடைந்தனர்.
இவ்வாறு மாநிலம் முழுவதும் நடைபெற்ற பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 2 எம்பிக்கள் உள்ளிட்ட 46 முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட 296 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அகிலேஷ் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம் நேற்று உ.பி. சட்டமன்றம் மற்றும் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது. சமாஜ்வாடி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. #AkhileshStopped #SamajwadiProtest
திருவாரூர் அருகே கடாரம் கொண்டான் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி செயல்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குடிநீர் வசதி வேண்டி பி.ஏ. தமிழ் 2-ம் ஆண்டு மாணவர் மாரிமுத்து தலைமையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்லூரி வளாகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை போராட தூண்டியதாக மாரிமுத்துவை கல்லூரியில் இருந்து நீக்கி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.
இதனை கண்டித்து நேற்று திருவாரூர் அரசு கலைக் கல்லூரியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திருவாரூர்- நாகை தேசிய நெடுஞ்சாலையில் கடாரம் கொண்டான் என்ற இடத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை ஒட்டி சாலை மறியலில் ஈடுபட்ட 100 மாணவர்கள் 200 மாணவிகள் உட்பட 300 பேர் மீது இன்று திருவாரூர் தாலுகா போலீசார் 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
மாணவர்கள் காவல்துறை அனுமதி இன்றி சாலை மறியலில் ஈடுபடுதல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், சட்டவிரோதமாக மாணவர்கள் செயல்படுதல் என 3 பிரிவுகளில் மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமுக வலைதளங்களால் கிடைக்கும் நன்மைகளை போல தீமைகளும் உள்ளன.
இன்றைய இளைய சமுதாயத்தினர் வாட்ஸ்அப், பேஸ்புக், டுவிட்டர், யூடியூப் என சமுக வலைதளங்களில் மூழ்கி கிடந்து வாழ்க்கையை வீணாக்குவதாக குற்றச்சாட்டு உள்ளது.
சமுக வலை தளங்களில் தவறான தகவல்கள் வேகமாக பரவி சமூகத்தில் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்திய சம்பவங்கள் பல நடந்துள்ளன. இதன் உச்சமாக திருப்பூரில் ‘யூ-டியூப்’பில் வீடியோ பார்த்து வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் இளம்பெண்ணின் உயிரை பறித்த அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
திருப்பூர் காங்கயம் ரோடு புதுப்பாளையம் அருகே உள்ள ரத்தினகிரீஸ்வரர் நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 34). பனியன் வர்த்தக நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கிருத்திகா (28). தனியார் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார்.
நிறைமாத கர்ப்பிணியான கிருத்திகாவுக்கு கடந்த 22-ந்தேதி பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து கார்த்திகேயன் தனது நண்பர் பிரவீனுக்கு தகவல் தெரிவித்தார். உடனே பிரவீன் தனது மனைவி லாவண்யாவுடன் கார்த்திகேயன் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் கிருத்திகா வலியால் துடித்துக்கொண்டிருந்தார். இதையடுத்து யூடியூப்பில் சுகப்பிரசவம் பார்ப்பது எப்படி? என்று செல்போனில் தெரிந்து கொண்டு அதன்படி கிருத்திகாவுக்கு அவரது கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோர் பிரசவம் பார்த்துள்ளனர்.
இதையடுத்து சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. குழந்தை 3.3 கிலோ எடை இருந்தது. ஆனால் கிருத்திகாவின் உடலில் இருந்து நஞ்சு வெளியேறாமல் அதிக அளவு ரத்தம் வெளியேறியதால் அவர் மயக்கம் அடைந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் கிருத்திகாவையும், குழந்தையையும் ஆம்புலன்சில் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு கிருத்திகாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து கிருத்திகாவை தகனம் செய்ய மின் மயானத்துக்கு கொண்டு சென்றனர். ஆனால் சான்றிதழ் இல்லாமல் தகனம் செய்ய முடியாது என்று அறிவித்ததால் கிருத்திகாவின் தந்தை சுப்பிரமணி நல்லூர் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இல்லை என்று கூறியதையடுத்து 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் கிருத்திகாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது.
கிருத்திகா பெற்றெடுத்த பெண் குழந்தை நல்ல ஆரோக்கியமாக உள்ளது. இந்த குழந்தை ஆஸ்பத்திரியில் வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, வீட்டில் வைத்து நடத்திய பிரசவம் பெண்ணின் உயிரை பறித்த தகவல் சுகாதாரத்துறை மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மாநகராட்சி நகர்நல அதிகாரி பூபதி திருப்பூர் ரூரல் போலீசில் புகார் செய்தார். அந்த புகாரில், ஆஸ்பத்திரிக்கு சென்று மருத்துவம் பார்க்கும் வசதி இருந்தும் கார்த்திகேயன் வீட்டில் வைத்து மனைவிக்கு பிரசவம் பார்த்தது எதற்காக? என்று விசாரிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர் மற்றும் போலீசார் கிருத்திகாவின் கணவர் கார்த்திகேயன், நண்பர் பிரவீன், அவரது மனைவி லாவண்யா ஆகியோரிடம் விசாரணையை நடத்தினர். இதைத்தொடர்ந்து கார்த்திகேயன், பிரவீன், லாவண்யா ஆகியோர் மீது கர்ப்பிணிக்கு மருத்துவ வசதி தடை செய்ததாக வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். #SocialNetwork #homebirthattempt
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்