என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "police suicide"
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடியை சேர்ந்தவர் மாமணி (வயது 45). இவர் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
மாமணிக்கும், வளர்மதி என்ற பெண்ணுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அவர்களுக்கு மதுமதி (12) என்ற மகளும், கலைமணி (9) என்ற மகனும் உள்ளனர். இவர்கள் தேத்தாக்குடியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர்.
மாமணி விடுமுறை கிடைக்கும் போது தேத்தாக்குடி சென்று அங்கு வசிக்கும் தனது பெற்றோருக்கு உதவிகள் செய்வது வழக்கம். கடந்த வாரம் மாமணியின் தாயின் உடல் நிலை மோசமடைந்தது. அவரை கவனித்து வந்த மாமணி திடீரென விஷம் குடித்து விட்டார். அவரை உறவினர்கள் மீட்டு வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் தஞ்சையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வேதாரண்யம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாமணி தற்கொலைக்கு அவர் தாயை கவனிக்க உயர் அதிகாரிகள் விடுமுறை அளிக்காத மன உளைச்சல் காரணமா? என்று விசரணை நடத்தி வருகின்றனர்.
தலைமை காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் வேதாரண்யம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவான்மியூர்:
சென்னை நீலாங்கரையை அடுத்த ஈஞ்சம்பாக்கம், தட்கல் நகர் பொதிகை தெருவை சேர்ந்தவர் விஜய ரங்கன். இவரது மகன் பால முருகன் (வயது28). ஐ.டி. முடித்த இவர் போலீஸ் வேலைக்கு சேர்ந்தார்.
அசோக்நகரில் உள்ள போலீஸ் பயிற்சி அகாடமியில் 2 வருடமாக பயிற்சி பெற்று வந்தார். அவருக்கு கம்ப்யூட்டர் டைப் செய்யும் பிரிவில் பணி வழங்கப்பட்டு இருந்தது.
பாலமுருகனுக்கு விடுமுறை கொடுக்காமல் இரவு பகலாக பணி வழங்கப்பட்டது. அதிக வேலைப்பளு காரணமாக அவர் அவதிப்பட்டு வந்தார்.
இதுதொடர்பாக அவர் தனதுதந்தையிடம் கூறி வருத்தப்பட்டார். அவரிடம் தந்தை ஐ.டி.படித்துவிட்டு ஏன் போலீஸ் வேலைக்கு போக வேண்டும்? வேறு ஏதாவது வேலைப்பார்க்கலாம் என்று கூறி சமாதானப்படுத்தினார். இதனால் கடந்த 2 நாட்களாக பாலமுருகன் வேலைக்கு செல்லவில்லை.
நேற்று இரவு உடனே வேலைக்கு வருமாறு பாலமுருகனுக்கு அழைப்பு வந்தது. இதனால் மன உளைச்சல் அடைந்த அவர் மீண்டும் தனது தந்தையிடம் கூறி புலம்பினார். அவர் மகனை சமாதாப்படுத்தினார். ஆனால் பாலமுருகன் ஆறுதல் அடையவில்லை.
இன்று அதிகாலை பாலமுருகன் தனது அறையில் தாயாரின் சேலையை மின்விசிறியில் கட்டி தூக்கில் தொங்கினார். இன்று காலையில் மகனை எழுப்புவதற்காக விஜயரங்கன் அறைக்கதவை திறந்தார். அப்போது மகன் மின்விசிறியில் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனடியாக தூக்கில் இருந்து மகனை இறக்கி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், பாலமுருகன் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நீலாங்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
பணிச்சுமையால் போலீசார் தற்கொலை செய்துகொள்வதாகவும், எனவே அவர்களின் தற்கொலையைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ராஜலட்சுமி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வி.பார்த்திபன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர், பல்வேறு இயற்கை சூழல்களில் தொடர்ந்து பணியாற்றுவதாலும், விடுப்பு இல்லாமல் பணிபுரிவதாலும் போலீசார் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு மன ரீதியாகவும் ஓய்வு தேவை. எனவே, அவர்களின் தற்கொலையைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்பது குறித்து தமிழக தலைமைச் செயலாளர், டி.ஜி.பி., உள்துறைச்செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். #policesuicide
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்