என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "power tower"
- ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.
- 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பொன்னேரி:
வடசென்னை அனல்மின் நிலையம் அத்திப்பட்டு புதுநகரில் செயல்படுகிறது. இங்கு 800 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் 3-வது அலகு அமைக்கப்பட்டுள்ளது.
இங்கு உற்பத்தியாகும் மின்சாரத்தை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு கொண்டு செல்ல இடையஞ் சாவடி மின் சேமிப்பு நிலையம் வரை 20 உயர்மின் அழுத்த கோபுரங்கள் நிறுவ வேண்டும்.
இதில் 2 கோபுரங்கள் கொசஸ்தலை ஆற்றின் நடுப்பகுதியில் அமைகிறது. ஆனால் ஆற்றின் மையப் பகுதியில் மின் கோபுரம் அமைப்பதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும், 39 ஏக்கர் அலையாற்றி காடுகளும் அழிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஏற்கனவே மீனவர்களின் போராட்டங்களை சமாளித்து ஒரு கோபுரம் அமைக்கப்பட்டுவிட்டது. இப்போது அத்திப்பட்டுக்கும் காட்டுக்குப்பத்துக்கும் இடையே ஒரு கோபுரம் மட்டும் அமைக்க வேண்டும். இந்த கோபுரத்தை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னக்குப்பம், தாழங்குப்பம் உள்பட 8 மீனவர் குப்பங்களை சேர்ந்த மீனவர்கள் போராடி வருகிறார்கள்.
அவர்கள் கூறும்போது, ஆற்றின் நடுவே கோபுரம் அமைக்க மண், ஜல்லிகளை கொட்டி சாலையும் அமைக்கப்படுகிறது. பணிகள் முடிந்து சாலையை அகற்றி விடுவதாக அதிகாரிகள் கூறினாலும் 20 அடி ஆழமுள்ள ஆற்றில் மண் கொட்டி போடப்படும் சாலை முற்றிலுமாக அகற்றப்படாது. இதனால் மீன் பிடிக்க படகுகளில் செல்வது சிரமமாகும். மீன்களின் இனப்பெருக்கமும் குறையும். இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என்கிறார்கள்.
அதே நேரம் இந்த கோபுரம் வேறு பாதை வழியாக அமைக்கத்தான் முதலில் திட்டமிடப்பட்டது. அந்த வரைபடமே இருக்கிறது. ஆனால் ஆற்றின் குறுக்கே அமைக்கிறார்கள் என்றனர்.
இதுபற்றி மின்வாரிய அதிகாரிகள் கூறும்போது, இந்த ஒரு மின் கோபுரம் அமைக்கப்பட்டால்தான் மின்சாரத்தை கொண்டு செல்ல முடியும்.
ஆற்றில் அமைக்கப்படும் இந்த கோபுரத்தால் சுற்றுச் சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. கோபுரம் அமைக் கப்பட்டதும் சாலை முற்றிலுமாக அகற்றப்படும் என்றனர்.
இந்த விவாரம் தொடர்பாக மீனவர் சங்க பிரதிநிதிகளும், மின் வாரிய அதிகாரிகளும் இன்று பிற்பகலில் திருவள்ளூர் கலெக்டரை நேரில் சந்தித்து பேசுகிறார்கள்.
ஆரணி:
ஆரணி அடுத்த ஏந்துவாம்பாடியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது32) கூலி தொழிலாளி. இவரது மனைவி கீதா (28). இவர்களுக்கு கிரிஜா (8). ஆரியா (6). என 2 மகள்கள் உள்ளனர். சென்னையில் வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் ஊருக்கு வந்த அவர் திரும்பவும் சென்னைக்கு வேலைக்கு செல்லவில்லை. இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று இரவு கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால் மனமுடைந்த ரமேஷ் இன்று அதிகாலை வீட்டை விட்டு வெளியே சென்றார். பின்னர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து நெல்வாய்பாளையம் என்ற இடத்திற்கு சென்று அங்கு பயன்பாட்டிற்கு வராத 100 அடி உயர மின் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்ளபோவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவரது மனைவி கீதாவிற்கும் களம்பூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் உறவினர்கள் ரமேஷிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் ரமேஷ் கீழே இறங்க மறுத்து விட்டார்.
இதையடுத்து போலீசார் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து பாதுகாப்பு வலைகளை மின் கோபுரம் அருகே பிடித்தவாறு நின்றிருந்தனர். அப்போது ஊர் காரர்கள் சிலர் மின் கோபுரம் மீது ஏறும் முயற்சியில் ஈடுபட்டனர்.
தன்னை யாரேனும் காப்பாற்ற முயற்சி செய்தால் கீழே குதித்து விடுவேன் என்றும் மிரட்டல் விடுத்தார்.
தொடர்ந்து போலீசார் 5 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியும் ரமேஷ் கீழே இறங்க வில்லை. அப்போது அங்கு வந்த டி.எஸ்.பி. செந்தில் ரமேஷின் செல்போனுக்கு போன் செய்து பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனாலும் ரமேஷ் தற்கொலை முயற்சியை கைவிடவில்லை.
பேசி கொண்டே இருந்த அவர் சற்றும் யாரும் எதிர்பாராத நிலையில் திடீரென மேலே இருந்து கீழே குதித்தார். அப்போது பாதி வழியில் மின் கோபுர கம்பியின் மீது ரமேஷின் தலை மோதி மூளை சிதறியது. இதில் சம்பவ இடத்திலேயே ரமேஷ் துடி துடித்து பரிதாபமாக இறந்தார்.
இதனை கண்ட அவரது மனைவி, குழந்தைகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர். போலீசார் உடலை மீட்டு ஆரணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்