என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "protection"

    • பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது.
    • ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகர்மன்ற தலைவர் சிறப்புறையாற்றினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி உடற்கல்வித்துறை சார்பில் உலக ஒற்றுமை நாள் சுடர் ஓட்டமானது பிட் இந்தியா ப்ரீடம் ரன் 3.0 கொண்டாடப்பட்டது. விழாவிற்கு பள்ளி தலைமையாசிரியர் எஸ். அறிவுடைநம்பி தலைமை வகித்தார். நகர்மன்ற துணை தலைவர் மா. சுப்பராயன் முன்னிலை வகித்தார்.

    ஜோதியை ஏற்றி மாணவர்களுக்கு நகரமன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி ராஜசேகரன் சிறப்புறை யாற்றினார்.ஜோதி ஓட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாட்டினை காவல் ஆய்வாளர் மணிமாறன் மற்றும் காவல் துறையினர் செய்திருந்தனர்

    உடற்கல்வி ஆசிரியர்கள் சக்திவேல் ஹரிஹரன், ராகேஷ் பங்கேற்றனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் முரளி, மார்கண்டன் செய்திருந்தனர். உடற்கல்வி இயக்குனர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.
    • கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் கொசுமருந்து அடிக்கும் பணி.

    வேதாரண்யம்:

    வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் நாகப்பட்டினம் மாவட்டம், தலைஞாயிறு வட்டாரத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது.

    இதனால் நோய் தொற்று பரவாமல் இருக்க கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவுபடியும், மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் அறிவுரைபடியும், தலை ஞாயிறு வட்டார மருத்துவர் (பொஅலுவலர் தேவிஸ்ரீ வழிகாட்டுதல்படியும், வட்டார சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் நாகை.செல்வன் தலைமையில், அவரிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் லலிதா கலைச்செல்வன் முன்னிலையில் கொசுக்களை கட்டுப்படு த்தும் வகையில் கொசும ருந்து அடிக்கும் பணியை அவரிக்காட்டில் வட்டார வளர்ச்சி அலுவலர் செபஸ்தியம்மாள் தொடங்கி வைத்தார்.

    தொடர்ந்து, சுகாதார ஆய்வாளர் மற்றும் களப்பணி யாளர் குழுக்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் குடிநீரில் தினசரி குறிப்பிட்ட விகிதத்தில் குளோரினேசன் செய்து வழங்கப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட்டு குறைபாடுகள் இருப்பின் உடனடியாக குடிநீர் தொட்டி இயக்குபவர்களை கொண்டு குளோரினேசன் செய்யும் பணி துரிதப்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும், வடகிழக்கு பருவமழை காலத்தில் ஏற்படும் நோய் பாதிப்பை எதிர்கொள்ளும் வகையில் சுகாதார ஆய்வாளர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் அடங்கிய விரைவு மருத்துவ குழுக்கள் தயார் நிலையில் உள்ளன என மருத்துவ குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
    • குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    காங்கயம் :

    காங்கயம் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்புக் குழுக் கூட்டம் காங்கயத்தில் நடைபெற்றது.

    காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் டி.மகேஷ்குமாா் தலைமை வகித்தாா். இதில் வெளிமாவட்டத்தில் இருந்து வந்து இப்பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் பணியாற்றிவரும் குழந்தைத் தொழிலாளா்களைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கிராம கோவில்களில் நடைபெறும் குழந்தைத் திருமணங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களிலிருந்து பாதுகாப்பது தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட குழந்தைகள் பாதுகாப்பு தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.

    கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் விமலாதேவி, மகளிா் திட்ட நிா்வாகிகள், காங்கயம் ஒன்றியப் பகுதியைச் சோ்ந்த ஊராட்சித் தலைவா்கள், தொழிலாளா் நலத் துறை அலுவலா்கள், மகளிா் சுய உதவிக்குழு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    • ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.
    • அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் வட்டார வேளாண்மை - உழவர் நலத்துறை சார்பில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தில் சத்துமிகு சிறுதானியங்கள் குறித்த திட்ட விளக்க விழிப்புணர்வு பிரசார வாகனத்தினை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி, வேட்டாம்பாடி கிராமத்தில் நடைபெற்றது.

    அட்மா தலைவர் பழனிவேல் கலந்து கொண்டு, பிரசார வாகனத்தினை கொடி அசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் வேளாண்மை உதவி இயக்குநர் சித்ரா, வேளாண்மை அலுவலர் ரசிகப்பிரியா, உதவி வேளாண்மை அலுவலர்கள் கோபிநாத், சதீஸ்குமார், மாலதி, திலீப்குமார் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்ட அலுவலர்கள் ரமேஷ், கவிசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர்.
    • சந்தனம், குங்குமமிட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    பாபநாசம்:

    பாபநாசம் வட்டார ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக சூலமங்கலத்தில் சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.

    மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்து செல்வன், பாபநாசம் தெற்கு ஒன்றிய செயலாளர் நாசர், மாவட்ட கவுன்சிலர் தாமரைச்செல்வன், பாபநாசம் ஒன்றிய குழு தலைவர் சுமதி கண்ணதாசன், அய்யம்பேட்டை திமுக பேரூர் செயலாளர் வக்கீல் துளசி அய்யா, அய்யம்பேட்டை பேரூராட்சி தலைவர் புனிதவதி குமார், துணைத் தலைவர் அழகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பாபநாசம் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் லதா வரவேற்று பேசினார். இந்த வளைகாப்பு விழாவில் 150-க்கும் மேற்பட்ட கர்ப்பிணி பெண்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வேப்பங்கொழுந்து காப்பு கட்டி வளையல் அணிவிக்கப்பட்டது.

    அனைத்து கர்ப்பிணி பெண்களுக்கும் மாலை அணிவித்து தட்டில் பழங்கள் இனிப்பு வைத்து சீர் வழங்கப்பட்டது அனைவருக்கும் இனிப்புடன் கூடிய ஐந்து வகை சித்ரானங்கள் உணவு விருந்து வழங்கப்பட்டது.

    விழாவில் அய்யம்பேட்டை பேரூராட்சி அதிகாரி ராஜசேகரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவகுமார், ஆனந்தராஜ், ஓய்வு பெற்ற அறநிலையத்துறை அதிகாரி கோவிந்தராஜ் மற்றும் மருத்துவ அலுவலர்கள் செவிலியர்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    முடிவில் குழந்தை வளர்ச்சி திட்ட மேற்பார்வையாளர் சித்ரா நன்றி கூறினார்.

    • தை அமாவாசையையொட்டி ராமேசுவரம் கோவிலில் நாளை பகல் முழுவதும் நடை திறந்திருக்கும்.
    • பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    ராமேசுவரம்

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் நாளை (21-ந்தேதி) தை அமாவாசையை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

    5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜையும், தொடர்ந்து கால பூஜைகளும் நடைபெறும்.

    பகல் 11 மணிக்கு அக்னி தீர்த்தக்கரைக்கு ராமர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி 12 மணிக்கு காசிக்கு நிகராக கருதப்படும் அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற உள்ளது.

    பக்தர்களின் வசதிக்காக தை அமாவாசையை முன்னிட்டு பகல் முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடைபெறும். அக்னிதீர்த்தக்கடல் பகுதியி லுள்ள மண்டகப்படியில் இருந்து இரவு 7 மணிக்கு சுவாமி-அம்பாள் பஞ்சமுர்த்திகளுடன் கருட வாகனத்தில் ராமர் புறப்பாடு நடைபெறும் என்று கோவில் உதவி ஆணையர் மாரியப்பன் தெரிவித்தார்.

    தை அமாவாசை முன்னிட்டு ராமேசுவ ரத்திற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள். அதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தர்கள் வசதிக்காக ராமேசுவரத்தில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை போலீசார் செய்து வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி பாம்பன் முதல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை வரை ஆயிரம் போலீசாரை நியமித்து பாதுகாப்பு அளிக்கவும், நகர் முழுவதும் அக்னிதீர்த்த கடல் மற்றும் கோவில் 4 ரத வீதிகளில் காமிரா அமைத்து கண்காணிக்கவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    • புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்ப தாவது:-
    • ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?

    புதுச்சேரி:

    புதுவை மக்கள் நல பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் ஜி 20 மாநாடு நடைபெறுவதாக அறிவித்துள்ளனர். ஜி 20 மாநாட்டில் உலகத் தலைவர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    அவர்கள் கலந்து கொள்வ தால் புதுவை மாநிலம் பல்வேறு வகைகளில் வளர்ச்சி பெறும் என்று புதுவை மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் கவர்னர் தமிழிசை ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஆனால் அவ்வாறு அவர்கள் அறிவித்தது போல் இதுவரை எந்தவித வளர்ச்சியும் , புதிய வளர்ச்சி காணப்படவில்லை. சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் ரோடு வசதிகள் மற்றும் காவி பெயிண்ட் பூசப்பட்டுள்ளது. இதுதான் அவர்கள் கூறிய வளர்ச்சியா?

    அதேபோல் குறிப்பிட்ட 5 இடங்களுக்கு மட்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அந்த பகுதிகளிலும் தரமான சாலை வசதிகள் கிடையாது. ஏற்கனவே நகர மக்கள் பல்வேறு போக்குவரத்து நெருக்கடிகளில் உள்ளாகி வருகின்றனர். இது தினந்தோறும் வாடிக்கை யாக உள்ளது. மேலும் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசலை உருவாக்கும் வகையில் சட்டத்தை மீறி பேனர்கள் அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது.

    இப்படிப்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து மக்கள் சந்தித்து வருவதால் ஜி20 மாநாடு நடைபெறும் வருகிற 30 மற்றும் 31 தேதிகளில் புதுவை மாநில அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அறிவிக்க வேண்டும்.

    அல்லது குறைந்தபட்சம் கல்லூரி மற்றும் பள்ளிகளு க்காவது விடுமுறை அளிக்க வேண்டும். அப்பொழுது தான் மாணவ- மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் நிம்மதியாக இருக்க முடியும். எனது புதுவை அரசு அனைவருக்கும் பொது விடுமுறை அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்த வேண்டும்.
    • 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ வெளி–யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில், கோடைவெயில் மற்றும் எதிர்வரும் காலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விட இருக்கும் நிலையில், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள், கோடை வெயிலில் தேவையின்றி வெளியே நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

    தற்போது பள்ளிகளில் தேர்வு நடைபெற்று கொண்டிருப்பதால், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகள் பள்ளிக்கு மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பும் பொருட்டும், பள்ளி முடிந்தவுடன் வெளியிடங்களுக்கு பெற்றோர்கள் அனுமதியின்றி நீர் நிலைகளில் விளையாட செல்வதை கண்காணித்து தடுத்து கட்டுப்படுத்திட வேண்டும்.

    ஏதேனும், அசம்பாவிதம் ஏற்பட்டால் அதனை உடனுக்குடன் தீயணைப்பு துறையினருக்கு (இலவச எண்.101) காவல்துறை, தீயணைப்புதுறை மற்றும் மருத்துவதுறையை அழைக்க (இலவச எண்.108), காவல் துறை மற்றும் தீயணைப்புதுறையை அழைக்க (இலவச எண்.112) என்ற 24 மணிநேரமும் இயங்கக்கூடிய இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.

    மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24/7 நாள் முழுவதும் இயங்கக்கூடிய 04366 – 226623 / 1077 கட்டணமில்லா இலவச தொலைபேசி எண்களுடன் கட்டுப்பாட்டு அறை செயல்பட்டு வருகிறது.

    கோடைகாலங்களில் அதிக வெப்ப சலனத்தினால் திருவாரூர் மாவட்டத்தில் உயிர்ச்சேதங்கள் ஏதுமின்றி இருக்க உதவ வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.
    • பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள மானாசிபாளையத்தை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரது மகன் சிவராமகிருஷ்ணன். இவர் திருப்பூர், ராஜீவ்காந்தி நகரை சேர்ந்த தெய்வசிகாமணி என்பவரது மகள் ரம்யாவை கடந்த 6 வருடங்களாக காதலித்து வந்துள்ளார். பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டை விட்டு ரம்யா வெளியேறினார். பின்னர் கோவை மாவட்டம், சூலூர் வட்டம், செஞ்சேரிமலை மந்திரகிரி வேலாயுத சுவாமி கோவிலில் சிவராம கிருஷ்ணனும், ரம்யாவும் திருமணம் செய்து கொண்டனர். திருமணம் முடிந்த நிலையில் பாதுகாப்பு கேட்டு அவர்கள் இருவரும் காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.

    அப்போது தனது பெற்றோர் எங்களை பிரிக்க முயற்சிப்பதாகவும், எனவே தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறும் ரம்யா போலீசாரிடம் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ரம்யாவின் வயது சான்றிதழை ஆய்வு செய்த போது அவர் மேஜர் என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரது விருப்பப்படி கணவர் சிவராமன் வீட்டிற்கு செல்லலாம் என்று தெரிவித்தனர் .இதையடுத்து புதுமண தம்பதிகள் இருவரும் மானாசிபாளையத்தில் உள்ள சிவராமகிருஷ்ணன் வீட்டிற்கு சென்றனர்.

    • இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.
    • போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    நாகப்பட்டினம்:

    உலக புகழ்பெற்ற நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கியமாதா தேவால யத்தில், இயேசு கிறிஸ்து, சிலுவையில் அறையப்பட்ட புனித வெள்ளி தினத்தையொட்டி சிறப்பு திவ்ய நற்கருணை ஆராதனை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    அதிகாலை 5 தொடங்கிய திவ்ய நற்கருணை ஆராத னைகள் பல்வேறு தரப்பினரால் மாலை 5 மணி வரை தொடர்ந்து நடத்தப்படுகிறது.

    அடைக்கல அன்னை அருட்சகோதரிகள், இருதயம் மரியாயின் சேனை, அன்னை தெரசா சபை, ஆங்கில திருப்பயணிகள், நிர்மல் இல்லத்தினர், டி.எம்.ஐ., சகோதரிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து 12 மணி நேரம் திவ்ய நற்கருணை ஆராதனையை நடத்துகின்றனர்.

    தொடர்ந்து இன்று மாலை தேவாலய கலையரங்கில் பேராலய அதிபர் இருதயராஜ் மற்றும் 10 க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் தலைமையில் இறைவழிபாடு, பொது மன்றாட்டு, சிலுவை ஆராதனை நடைபெற உள்ளது.

    சிறப்பு திருப்பலியில் பங்கேற்க பாதயாத்திரையா கவும், வாகனம் மூலமும் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வேளாங்கண்ணியில் குவிந்துள்ளனர்.

    மேலும் வெளிநாட்டினரும் வருகை தந்துள்ளனர்.

    இதனால் வேளாங்கண்ணி கடைவீதி, கடற்கரை உள்ளிட்ட இடங்கள் பக்தர்களும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நிரம்பி உள்ளது.

    பக்தர்கள் குவிந்து உள்ளதை அடுத்து போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு காவல்துறை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.
    • சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    மேச்சேரி:

    சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த மேச்சேரியில் அமைந்துள்ள பத்ரகாளி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு அமாவாசை, பவுர்ணமி மற்றும் விசேஷ நாட்களில் சேலம், ஈரோடு, தர்மபுரி உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வார்கள்.

    இந்த நிலையில், வைகாசி மாத அமாவாசை தினமான இன்று, அதிகாலையில் இருந்தே ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு பத்ரகாளி அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்ட ப்பட்டது.

    திரளான பக்தர்கள் வந்திருந்து, சாமியை தரிசனம் செய்து அருள் பெற்றனர். கோவில் நிர்வாகம் சார்பில் பக்த ர்களுக்கு அடிப்படை வசதிகள் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

    • 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.
    • பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.

    அவினாசி:

    திருப்பூர் மாவட்டம் அவினாசியில் வரலாற்று சிறப்புமிக்க பெருங்கருணை நாயகி- அவினாசிலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கடந்த 22ந் தேதி இரவு புகுந்த நபர் அங்கிருந்த சிலைகள் மற்றும் உண்டியலை சேதப்படுத்தி கருவறைக்குள் புகுந்து பூஜை பொருட்களை தாறுமாறாக தூக்கி வீசி எரிந்துள்ளார்.

    இதுகுறித்து அவினாசி தொகுதி எம்.எல்.ஏ.ப தனபால் கண்டன அறிக்கையில் கூறியதாவது:-

    கோவிலுக்குள் ஒரு நபர் புகுந்து சிலைகளை உடைத்து சேதப்படுத்தியும், பூஜை பொருட்களை தூக்கி எறிந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது தொகுதிக்குட்பட்ட,1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அவினாசி லிங்கேஸ்வரர் கோவிலில்,சம்பவத்தன்று இரவு சமூக விரோதிகளால் 63 நாயன்மார்கள் சிலைகள் அருகே உள்ள சிலைகளை சேதப்படுத்தபட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறேன்.இதற்கு காரணமானவர்களுக்கு உரிய தண்டனை கொடுக்க வலியுறுத்துகிறேன் .பிரசித்த பெற்ற கோவிலின் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கின்றேன்.இவ்வாறு எம்.எல்.ஏ.ப.தனபால் தெரிவித்துள்ளார்.

    ×