search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PUBLIC SERVICE"

    • அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
    • தன்னலமற்ற சேவையை காமராஜர் செய்து அணைகள் பல கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டுக்கு உட்பட்ட கே.வி. ஆர்.நகர், செல்லம்நகர் மாநகராட்சி பள்ளிகளில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும், 42-வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தலைமை தாங்கி காமராஜர் உருவ படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட்டன.

    போட்டியை தொடங்கி வைத்து கவுன்சிலர் அன்பகம் திருப்பதி பேசும்போது, 'தன்னலமற்ற சேவையை காமராஜர் வழங்கினார். அணைகள் கட்டி நீர்ப்பாசன புரட்சியை ஏற்படுத்தினார். அவரைப்போல் பொதுநல சேவையை மாணவ- மாணவிகள் செயல்படுத்த உறுதி ஏற்க வேண்டும்' என்றார். பின்னர் மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

    இதில் பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் தலைமை ஆசிரியர் மருதையப்பன், நிர்வாகிகள் சிட்டி பழனிச்சாமி, கிருஷ்ணமூர்த்தி, பொன் மருதாசலம், மாரிமுத்து, தமிழன், அய்யப்ப சேவா சங்க தலைவர் சுனில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பா.ஜ.க. தலைவர் சொந்த செலவில் பொது சேவை செய்தார்.
    • காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    மதுரை

    மதுரை அவனியாபுரம், இந்திரா நகர், 100-ம் வார்டில் உள்ள போக்கு வரத்து சாலைகளில், கழிவு நீர் குப்பைகள் கொட்டப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்தன.

    எனவே அந்தப்பகுதியில் வசிக்கும் மக்கள், இது தொடர்பாக மாநகராட்சிக்கு புகார் கொடுத்தனர். ஆனாலும் நடவடிக்கை எடுக்கப் படவில்லை.

    இந்த விஷயம் பா.ஜனதா நிர்வாகிகள் கவனத்திற்கு வந்தது. அப்போது பா.ஜ.க. மேற்கு மாவட்ட ஊடகப்பிரிவு தலைவர் காளிதாஸ், சொந்த செலவில் போக்குவரத்து ரோட்டில் தேங்கிக் கிடக்கும் குப்பை கழிவுகளை அகற்றுவது என்று முடிவு செய்தார்.

    எனவே அங்கு உடனடியாக ஜே.சி.பி எந்திரம் வரவழைக்கப்பட்டது. இதன் மூலம் அவனியாபுரம் சாலையில் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

    மதுரை அவனியாபுரத்தில் சொந்த செலவில் ஜே.சி.பி. எந்திரம் வைத்து போக்குவரத்து சாலையை சுத்தம் செய்த பா.ஜ.க. தலைவர் காளிதாசுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

    • பொதுப்பணித்துறை வேலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும் - ஜே.சி.பி. வாகன உரிமையாளர்கள் வலியுறுத்தல்
    • திருச்சி மாவட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது.

    திருச்சி,

    திருச்சி மாவட்ட ஜே.சி.பி. உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பாலாஜி சுரேஷ், செயலாளர் ரியாஸ் பாஷா, பொருளாளர் மித்ரா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் நிர்வாகிகள் கதிரவன், ராஜேந்திரன், ஜோசப், கும்கி மணி, ராயல் வினோத், முத்து மணல் கோபி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் பொதுப்பணித்துறை சம்பந்தமான ஒப்பந்த வேலைகளில் திருச்சி மாவட்ட ஜே.சி.பி. வாகனத்தின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கான ஏற்பாடுகளை நாச்சியா சுரேஷ் செய்திருந்தார்.

    ×