search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • தொல்காப்பியர் சதுக்கம் பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.
    • சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் கடந்த 1995-ம் ஆண்டு உலகத் தமிழ் மாநாடு நடந்தது. அதன் நினைவாக தஞ்சாவூர் தொம்பன் குடிசை பகுதியில்

    5 அடுக்கு கோபுரம் அமைப்பாக தமிழ் மொழிக்கு தொன்மையான இலக்கணம் படைத்த "தொல்காப்பியர் நினைவு கோபுரம்" அமைக்கப்பட்டது.

    தஞ்சையிலிருந்து நாகை -பட்டுக்கோட்டை சாலைகள் பிரியும் சந்திப்பில் இந்த இடம் "தொல்காப்பியர் சதுக்கம்" என பெயரிடப்பட்டது.

    இங்கு பூங்காவுடன் அமைக்கப்பட்ட கோபுரம் இப்பகுதியை சுற்றியுள்ள குடியிருப்பு மக்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தும் இடமாக விளங்கியது.

    இந்த பூங்காவில் செயற்கை நீரூற்றுகள், சிறுவர்கள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கி விளையாடுவதற்கு இடம் என பார்த்து பார்த்து அமைக்கப்பட்து.

    இப்படி தஞ்சாவூர் அடையாளமாக விளங்கிய தொல்காப்பியர் சதுக்கம் நாளடைவில் போதிய பராமரிப்பு இன்றி செடி கொடிகள் வளர்ந்து புதர் மண்டி காட்சியளித்தது.

    செயற்கை நீரூற்றுகள் மற்றும் சிறுவர்கள் விளையாடுவதற்கு வைக்கப்பட்டிருந்த அனைத்து உபகரணங்களும் சேதமடைந்தன.

    பூங்கா வளாகத்திற்குள் சமூக விரோதிகள் சிலர் உள்ளே ஏறி குதித்து மதுவை குடித்து விட்டு பாட்டில்களை அப்படியே போட்டு சென்றனர்.

    இதனால் பூங்காவுக்கு வர பொதுமக்கள் அச்சப்பட்டனர்.

    இந்த நிலையில் இன்று மதியம் தொல்காப்பியர் சதுக்கம் பூங்காவில் மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் திடீரென பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    தொல்காப்பியர் சதுக்கத்தில் செய்ய வேண்டிய மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.

    இது குறித்து அவர் கூறியதாவது :-

    தஞ்சாவூர் அடையாளமாக

    தொல்காப்பியர் சதுக்கம் விளங்கியது. சமூக விரோதிகள் செயலால் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் இங்கு வர அச்சப்படுகின்றனர்.

    அந்த நிலையை மாற்ற முடிவு செய்துள்ளோம். மாவட்ட கலெக்டரின் ஒப்புதல் பெற்று தொல்காப்பியர் சதுக்கத்தில் விரைவில் பராமரிப்பு , புனரமைப்பு பணிகள் நடைபெறும்.

    இதற்கு முன்னர் இருந்ததை விட கூடுதலாக பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

    சிறுவர்கள் விளையாட்டு உபகரணங்கள் சரி செய்யப்பட்டு கூடுதலாக உபகரணங்கள் அமைக்கப்படும்.

    சிறுவர்கள் மட்டுமின்றி பெரியவர்களும் பொழுது போக்குவதற்கு ஏற்ற இடமாக மாற்றப்படும்.

    வாகனங்கள் நிறுத்துவதற்கு தனியாக பார்க்கிங் வசதி ஏற்படுத்தப்படும்.

    வளாகம் சுத்தப்படுத்தப்பட்டு பராமரிக்கப்படும். முழு பாதுகாப்புடன் தொல்காப்பியர் சதுக்கம் இருக்கும்.

    இதன் மூலம் சமூக விரோதிகள் நடமாட்டம் முற்றிலும் இருக்காது.

    மின்விளக்கு, குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

    ஒட்டு மொத்தத்தில் அனைத்து விதமான வசதிகளும் ஏற்படுத்தி தொல்காப்பியர் பூங்கா பராமரிக்கப்படும் .

    கலெக்டர் ஒப்புதல் உடன் விரைவில் புனரமைப்பு பணிகள் தொடங்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏப்ரல் 1 முதல் 2 ஆகிய தேதிகளில் திருவிழா நடைபெறுகிறது.
    • பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    நீடாமங்கலம்:

    கும்பகோணம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் மாரியம்மன் கோவில் பங்குனி பெருந்திருவிழாவை முன்னிட்டு, இன்று மற்றும் நாளை பல்லக்கு திருவிழாவும், ஏப்ரல் 1 முதல் 2 வரை நடைபெறும் திருவிழாவை முன்னிட்டு, இரவு, பகல் முழுவதும் தஞ்சாவூர், கும்பகோணம், நீடாமங்கலம், குடவாசல், பாபநாசம் மற்றும் மன்னார்குடி உள்ளிட்ட சுற்றுப்புற ஊர்களில் இருந்து பொதுமக்கள் திருவிழாவில் கலந்து கொள்ளும் வகையில் வலங்கைமானுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.
    • இதில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் வெண்ணத்தூர் ஊராட்சி, சம்பை கிராமத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.

    இதில் கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    மக்கள் தொடர்பு முகாம் நடைபெறும் கிராமத்தில் ஒரு மாதத்திற்கு முன்பாக அரசின் அனைத்துத் துறைகளின் அலுவலர்கள் சம்மந்தப்பட்ட கிராமத்தில் முகாமிட்டு அந்த கிராம மக்களின் கோரிக்கைகள் அடங்கிய மனுவினை நேரடியாக பெறுவார்கள்.

    மக்களைத் தேடி வந்து மனுக்களை மட்டும் பெறாமல் மனுக்கள் மீதான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. தீர்வு காணப்பட்ட மனுக்க ளுக்கு அரசின் நலத் திட்டங்கள் வழங்கப்படுகின்றன. மக்கள் தொடர்பு முகாமில் அனைத்து துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கும் வகையில் அரங்கு கள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் அரசின் திட்டங்களை அறிந்து கொண்டு பயன் பெறலாம். அதேபோன்று தற்போது இணையதளம் மூலம் அரசின் அனைத்து துறை களின் திட்டங்கள் குறித்து சமூக வலைதளங்களில் ஸ்மார்ட்போன் மூலம் அறிந்து பயன்பெறலாம். தனிநபர் பொருளாதர முன்னேற்றத்திற்கு அரசு எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதை தகுதியுடையோர் பயன்பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதைத்தொடர்ந்து 68 பயனாளிகளுக்கு ரூ.4.25 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் கோபு, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பிரபாகரன், ராமநாதபுரம் வட்டாட்சியர் சுரேஷ் குமார், ஊராட்சி மன்ற தலைவர் ஹேமலதா, அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் தயார் செய்து மக்களுக்கு வழங்கி வருகிறார்.
    • சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திட்டச்சேரி கிராமத்தில் வசித்து வரும் சித்தமருத்துவர் அஜ்மல்கான் இலவச மருத்துவ சேவையை செய்து வருகிறார்.

    கடந்த 20 ஆண்டு காலமாக இப்பணியை செய்து வரும் இவர் வருமுன் காப்போம் என்ற விழிப்புணர்வு சேவை மையத்தை நடத்தி வருகிறார் .

    இதன் மூலம் டெங்கு மலேரியா மற்றும் மர்ம காய்ச்சலுக்கு ஆண்டுக்கு 70 ஆயிரம் லிட்டர் வரை நிலவேம்பு கசாயம் சொந்த பணத்தில் தயார் செய்து அனைத்து தரப்பு மக்களுக்கும் இலவசமாக வழங்கிவருகிறார்.

    கொரோனா காலத்தில் கபசுர குடிநீர் மற்றும் விழிப்புணர்வு பணியை தொடங்கிய இவரது சமூக சேவை 750 நாட்களை கடந்துள்ளது.

    கொரோனா முதல் அலையில் இருந்து மூன்றாவது அலை வரை நாகை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு இலவசமாக சித்த மருத்துவ சேவையை செய்து வருகிறார்.

    திருமருகல், திட்டச்சேரி, நாகூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரணியம் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீர் மற்றும் கொரோனா, தற்பொழுது நிலைவி வரும் இன்புளுன்சா குறித்து இலவசமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் சித்த மருத்துவருக்கு அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

    இந்தப் பணி தனக்கு மன திருப்தியை அளிப்பதாக சித்த மருத்துவர் கூறியுள்ளார்.

    • தினசரி அதிக அளவில் இருசக்கர, 4 சக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.
    • பழனிக்கு செல்ல இந்த பிரதான சாலையையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

    காங்கயம் :

    காங்கயம் - களிமேடு பகுதி போக்குவரத்து மிகுந்த ஒரு முக்கிய சாலையாகும். இந்த சாலை வழியாக தினசரி அதிக அளவில் இருசக்கர வாகனங்கள், 4 சக்கர வாகனங்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன. ஈரோடு, சேலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பழனிக்கு செல்ல இந்த பிரதான சாலையையே பலரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி, போலீஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், நீதிமன்றம், வணிக வளாகங்கள் செயல்பட்டு வருவதால் எப்போதும் இங்கு போக்குவரத்து மிகுந்து காணப்படும்.

    இந்த நிலையில் காங்கயம் - தாராபுரம் சாலையில், காங்கயம் போலீஸ் நிலைய ரவுண்டானா பகுதியில் இருந்து, அரசு மேல்நிலைப்பள்ளி வரை சாலை விரிவாக்க பணிக்காக சாலையின் ஒரு புறம் பள்ளம் தோண்டப்பட்டு, சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வந்தது.ஆனால் நீண்ட நாட்களாகியும் சாலை விரிவாக்க பணிகள் முடிவடையாமல் உள்ளது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் அவ்வப்போது இரு சக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுவதும் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகள் தங்கள் வீடுகளுக்கு செல்ல மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அவ்வப்போது போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலை விரிவாக்க பணிகளை விரைவாக முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இது பற்றி களிமேடு பகுதியான காங்கேயம் நகராட்சியின் 17-வது மற்றும் 16-வது வார்டு பொதுமக்கள் அமைச்சர். மு.பெ.சாமிநாதன்,தொகுதி எம்.பி.யான கணேசமூர்த்தி மாவட்ட கலெக்டர் டாக்டர்.வினித் ஆகியோருக்கு இது சம்பந்தமாக மனு கொடுத்துள்ளனர்.விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் பொது நலன் கருதி சாலை மறியல் செய்ய வேண்டி வரும் எனக் கூறியுள்ளனர்.

    • அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
    • அதில், 2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற உறுப்பினரும், வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் கடந்த 2 நாட்களாக தூத்துக்குடியில் ஆய்வு செய்து பொதுமக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

    3-வது நாளாக ஆய்வு

    இந்நிலையில் 3-வது நாளாக மாநகராட்சி 28-வது வார்டுக்குட்பட்ட இரண்டாம் கேட் பகுதியில் கொளுத்தும் வெயிலில் நடந்து சென்று பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அமைச்சர் கீதாஜீவனிடம் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை மனுவாக அளித்தனர். அதில் வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, முதியோர் உதவித்தொகை, சாலை வசதி, குடிநீர் வசதி, மின்விளக்கு வசதி, கால்வாய் வசதி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கியிருந்தது.

    2-ம் கேட் பகுதியில் குறைகளை கேட்ட அமைச்சரிடம் 3 சக்கர சைக்கிள் கேட்டு முதியவர் ஒருவர் மனு அளித்தார். மற்றொருவர் அப்பகுதியில் சில தெருக்களில் குண்டும், குழியுமாக இருப்பதாக கூறி மனு அளித்த பின் அதனால் ஏற்பட்ட சம்பவத்தில் பலர் பாதிக்கப்பட்டதும் சிலர் காயம் அடைந்த வீடியோவையும் காண்பித்தார்.

    அமைச்சர் உறுதி

    பின்னர் அப்பகுதியில் ஏற்கனவே நடைபெற்று வரும் கழிவுநீர் கால்வாய் கட்டும் பணியை அமைச்சர் கீதாஜீவன் நடந்தே சென்று பார்வையிட்டர். தொடர்ந்து ராஜமன்னார் தெருவில் பாதிப்புக்குள்ளான பகுதியில் முழுமையாக ஆய்வு மேற்கொண்டு அடிப்படை வசதிகள் அனைத்தும் நிறைவேற்றி தருவேன் என்று உறுதியளித்தார்.

    நிகழ்ச்சியில் மாநகர தி.மு.க. செயலாளர் ஆனந்தசேகரன், மாநகராட்சி மண்டல தலைவர் கலைச்செல்வி, அரசு வக்கீல் சுபேந்திரன், மாநகர மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், கவுன்சிலர் ராமுத்தம்மாள், வட்ட செயலாளர் அந்தோணி லாசர், மாவட்ட பிரதிநிதிகள் செந்தில்குமார், நாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர் நாகராஜன், முன்னாள் கவுன்சிலர்கள் குருசாமி, மீனாட்சி சுந்தரம், வட்ட பிரதிநிதி பாஸ்கர் மற்றும் சிவா, மாரியப்பன், அல்பட், மணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.
    • கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் பேரூராட்சியில் சாலையில் அதிக அளவில் நாய்கள் சுற்றித்திரிந்து வந்தன. குறிப்பாக.

    கீழ்வேளூர் 4-வது வார்டு பகுதியில் வெள்ளந்திடல், பிள்ளை தெருவாசல் பகுதியில் கடந்த சில நாட்களாக நாய்கள் கூட்டமாக சாலைகளில் சுற்றித்திரிந்தன.

    இந்த நாய்கள் சாலைகளில் மோட்டார் சைக்கிளில் செல்லுபவர்களை விரட்டி சென்று கடித்து வந்தன.

    மேலும் சாலைகளில் நடந்து சென்ற குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்து வந்தது.

    ஆடுகளை கடித்து குதறின வயல்வெளி பகுதிகளில் மேய்ச்சலுக்காக செல்லும் ஆடுகளை, நாய்கள் கடித்து குதறி வந்தன.

    வீடுகளில் வளர்க்கப்படும் கோழிகளையும் வேட்டையாடி வந்தன.

    வெள்ளந்திடல் பகுதியை சேர்ந்த 2 பேரை நாய்கள் கடித்தது.

    இதில் காயம் அடைந்த 2 பேரும் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இதனால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வந்தனர்.

    சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையில் சுற்றித்திரியும் நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    நாய்களை பிடிக்க பயிற்சி பெற்ற பணியாளர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

    இதை ெதாடர்ந்து அவர்கள் கடந்த 2 நாட்களாக பேரூராட்சி பகுதியில் சுற்றித்திரிந்த 200 நாய்களை பிடித்தனர்.

    பிடிக்கப்பட்ட நாய்களுக்கு கால்நடை துறையினர் மூலம் வெறிநோய் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

    சாலைகள் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து தடுப்பூசி போடப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர் குகன் தெரிவித்தார்.

    • இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் குறித்து எடுத்து கூறினார்.
    • பொதுமக்களுக்கு துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    மெலட்டூர்:

    தஞ்சை மாவட்டம், பாபநாசம் விவேகானந்தா சமூக கல்வி சங்கம் மற்றும் ஆர்விஎஸ் வேளாண்மை கல்லூரியில் இறுதிஆண்டு படிக்கும் மாணவிகள் இணைந்து நடத்திய இயற்கை முறையில் வேளாண் சாகுபடி செய்வது மற்றும் சிறு தானியங்கள் உபயோகம் மற்றும் உற்பத்தி செயவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

    விவேகானந்தா தொண்டு நிறுவனச் செயலாளர் தங்க.கண்ணதாசன் வழிகாட்டுதலுடன் கோவில் தேவாராயன்பேட்டை, அன்னுகுடி கிராமங்களில் நடைபெற்றது.

    இதில் ஆர்விஎஸ் கல்லூரி மாணவிகள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் களப்பணியாளர்கள் விவசாயிகளை நேரடியாக சந்தித்து இயற்கை வேளாண்மை சாகுபடி செய்வதால் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றியும், அவற்றின் அவசியம் பற்றியும் எடுத்துக் கூறினார்.

    மேலும் சிறுதானியங்கள் ஏன் பயிரிட வேண்டும், அவற்றின் தொழில் நுட்பங்கள், சரி விகித உணவு வகைகள், சிறுதானியங்கள் சந்தை வாய்ப்புகள் பற்றி கிராமப்புற பெண்கள், மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மற்றும் பொதுமக்களுக்கு எடுத்துக் கூறி துண்டு பிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் வேளாண் கல்லூரி முன்னோடி மாணவி ஜனோ அபிஷா தலைமையில் 10க்கும் மேற்பட்ட மாணவிகள், விவேகானந்தா சமூக கல்வி சங்கத் தலைவர் தேவராஜன், சங்க உறுப்பினர் சிவக்குமார் களப்பணியாளர் புனிதவள்ளி மற்றும் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கண்காணிப்பு அலுவலர் தெரிவித்தார்.
    • வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துத் துறைகளின் சார்பில் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்ப ணிகள் தொடர்பாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் உணவு பாதுகா ப்புத்துறை ஆணையர் லால்வேனா, அனைத்து துறை முதல்நிலை அலுவ லர்களுடன் ஆலோசனை நடத்தினார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

    இந்த கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் பேசியதாவது:-

    சிவகங்கை மாவட்ட த்தில் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து நலத்திட்ட ங்களும், மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் வசிக்கும் மக்களுக்கும் கிடைக்கப்பெறும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தொடர்பாக பொதுமக்களுக்கு தேவை யான அடிப்படை வசதி களை அனைத்துப்ப குதிகளிலும் மேம்படுத்தும் வகையிலும் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் தொடர்பாகவும் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறைகளின் சார்பில் இதுவரை மேற்கொண்ட திட்டப்ப ணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள், தேவையான நிதிநிலை தொடர்பாக அலுவலர்கள் எடுத்துரைத்து, அவைகள் தொடர்பான விவரங்களை அறிக்கை யாக சமர்ப்பிக்கலாம். அவ்வாறு மேற்கொ ள்ளப்பட்ட ஆய்வு அறிக்கைகளுடன் தங்களது துறைகளின் சார்பில் மேற்கொ ள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பாக அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, பொதுமக்களின் தேவைகளை நிறைவே ற்றுவதற்கான நடவடி க்கைகள் மேற்கொ ள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், வருவாய் கோட்டாட்சியர்கள் சுகிதா (சிவகங்கை), பால்துரை (தேவகோட்டை) மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

    • மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை.
    • மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம்.

    தாம்பரம்:

    குரோம்பேட்டை ரெயில் நிலையம் அருகே ராதா நகர் சுரங்கப்பாதை கட்டப்பட்டு வருகிறது. இந்த சுரங்கப்பாதை ஜி.எஸ்.டி. மெயின் ரோட்டில் இணையும் இடத்தில் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்த பெரிய அரச மரம் இருந்தது.

    சுரங்கப்பாதை பணிக்காக ஜி.எஸ்.டி. சாலையில் இருந்த அரசமரம் நெடுஞ்சாலைத் துறையினரால் வெட்டி அகற்றப்பட்டது. இதுநாள் வரை பல லட்சம் பேருக்கும் நிழலாக இருந்த அரச மரம் வெட்டப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். இந்த மரத்தை வெட்டாமல் பணியை தொடர்ந்து இருக்கலாம் என்றும் தெரிவித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் அரச மரம் வெட்டப்பட்டதற்கு சமூகநல ஆர்வலர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஏராளமானோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். கற்பூரம் ஏற்றியும் வழிபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதற்கிடையே அரச மரம் வெட்டப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பசுமை தாயகம் அமைப்பு சார்பில் இன்று காலை மரம் இருந்த இடத்தில் மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். இந்த மரத்தை உடனடியாக வெட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று கூறி அவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே.மூர்த்தி, பசுமைத்தாயகம் மாநில துணை பொது செயலாளர் ஐநா கண்ணன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.

    இது குறித்து அதிகாரிகள் கூறும்போது, சுரங்கப்பாதை பணிக்காக அரசமரம் வெட்டி அகற்றப்பட்டது. இதனை வேராடு பிடுங்கி வேறு இடத்தில் நடமுடியாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து 10 மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு வனத்துறையினர் மூலம் மரக்கன்று நடப்படும். இதுவரை சுரங்கப்பாதை பணிகள் 70 சதவீதம் முடிந்து உள்ளது. ரெயில் நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் சுரங்கப்பாதையை இணைக்கும் பணி நடந்து வருகிறது. வருகிற மே மாதத்தில் சுரங்கப்பாதை பயன்பாட்டுக்கு வரும் என்றார்.

    இது தொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறும்போது, இப்போது இந்த அரச மரத்தை வெட்ட வேண்டிய அவசியம் இல்லை. எனினும் மரம் இருந்த இடத்தில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்த பின்னர் நினைவு சின்னம் வைப்போம் என்றனர்.

    • உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி பொதுமக்கள் விரும்பி குடித்து, சாப்பிட்டு வருகின்றனர்.
    • ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சு ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கோடை காலம் தொடங்கும் முன்னரே பல்வேறு மாவட்டங்களில் வெயில் சுட்டெரித்து வருகிறது. தஞ்சை மாவட்டத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வெப்பத்தால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    இதனால் வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்து கொள்ள இளநீர், பழ ஜூஸ், தர்ப்பூசணி, வெள்ளரி பிஞ்சு போன்ற உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை வாங்கி விரும்பி குடித்து, சாப்பிட்டு வருகின்றனர்.

    இவற்றில் வெள்ளரி பிஞ்சு விற்பனை தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. தஞ்சை மாநகரில் பல்வேறு இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து வெள்ளரி பிஞ்சுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி சாப்பிட்டு வருவதால் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.உடலுக்கு குளிர்ச்சியும் அதே வேளையில் மருத்துவ குணங்கள் வாய்ந்த வெள்ளரிப்பிஞ்சுவை ஏராளமானார் வாங்கி செல்கின்றனர்.

    ஒரு கட்டு வெள்ளரிப்பிஞ்சு ரூ.10 முதல் ரூ. 20 வரை விற்பனை செய்யப்படுகிறது. தனி பெரிய அளவிலான வெள்ளரிப்பிஞ்சு ரூ.15 வரை விற்கப்படுகிறது. தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் விளையும் வெள்ளரிப்பிஞ்சுகள் அறுவடை செய்யப்பட்டு தஞ்சைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தற்போது அவற்றின் விற்பனை மும்முரமாக பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

    • பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.
    • சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையம், பொதுகழிப்பறை, சட்டநாதர் கோவில் கீழவீதி, நகராட்சி குப்பை கிடங்கு, மற்றும் குப்பைகளை பதப்படுத்தி உரம் தயாரிக்கும் பகுதிகளை மாவட்ட கலெக்டர் மகாபாரதி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பொது கழிப்பறை ஆய்வின்போது கழிவறையை சுகாதாரமாக பாதுகாத்த தூய்மை பணியாளருக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து பாராட்டினார்.

    ஆய்வின் போது பொதுமக்களிடம் வீடுகளுக்கே சென்று குறைகள் குறித்து கேட்டறிந்தார்.

    அப்பொழுது குப்பைகள் முறையாக அகற்றப்படவில்லை எனவும், கோயில் அருகே குப்பைகள் அள்ளப்படாமல் தேங்கி கிடப்பதாகவும் பொதுமக்கள் சிலர் குறைகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து உடனடியாக அனைத்து பகுதிகளிலும் குப்பைகளை அகற்ற நகராட்சி அதிகாரிகளுக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து சீர்காழி எரிவாயு தகன மேடையில் நடைபெற்று வரும் சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்க அறிவுறுத்தினார்.

    மாவட்ட ஆட்சியரின் ஆய்வின்போது கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி வட்டாட்சியர் செந்தில்குமார், நகராட்சி ஆணையர் வாசுதேவன், நகர் மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி, மேலாளர் காதர் கான், உடன் இருந்தனர்.

    ×