search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து உள்ளனர்.
    • தொற்றுக்கான இடர்வாய்ப்பு இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலையும் இதன்மூலம் வழங்கியிருக்கிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பன்முக சிகிச்சைப் பிரிவுகளுடன் கூடிய மிகப்பெரிய மருத்துவமனையாகத் திகழும் மீனாட்சி மருத்துவமனையின் 10-ம் ஆண்டு விழா நடந்து வருகிறது.

    அமைச்சர் சுப்பிரமணியன்

    இதன் ஒரு பகுதியாக பச்சிளம் குழந்தைகளுக்கான தீவிர சிகிச்சை பிரிவு மற்றும் மேம்பட்ட பேச்சு சிகிச்சை மையத்தை தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் இன்று தொடங்கி வைத்தார்.

    அப்போது அவர் பேசியதாவது ;-

    "சென்னை போன்ற பெருநகரத்தில் பன்முக சிறப்பு பிரிவுகளை கொண்ட பெரிய மருத்துவமனையைத் தொடங்கி நிர்வகிப்பது என்பதே ஒரு பெரிய சவாலாக இருக்கின்ற நிலையில், மூன்றாம் அடுக்கு நகரமாக இருக்கின்ற போதிலும் கூட இங்கு தொடங்கப்பட்ட மீனாட்சி மருத்துவமனை பெருவளர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

    அதுமட்டுமன்றி, ஒட்டுமொத்த டெல்டா பிராந்தியத்தில் பொதுமக்கள் சிகிச்சைக்காக விரும்பித் தேடிவரும் மருத்துவமனையாக உயர்ந்திருப்பது.

    இதன் பெருமையை எடுத்துக்கூறுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாரடைப்பு போன்ற அவசரநிலை நேர்வுகள் ஏற்படும்போது, இப்பகுதி மக்கள் நோயாளிகளை சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அழைத்து ச்செல்ல வேண்டிய கட்டாயமிருந்தது.

    ஆனால், இப்போது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையின் காரணமாக, தஞ்சை நகரிலேயே மிதமான கட்டணத்தில் மேம்பட்ட மருத்துவ சிகிச்சையை உரிய நேரத்திற்குள் பெறுவது சாத்தியமாகியிருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் 10 லட்சம் நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சையளித்து உள்ளனர்.

    6 அடுக்கு பாதுகாப்பு

    குறிப்பாக 2018-ம் ஆண்டில் கஜா புயலின் காரணமாக, டெல்டா பிராந்தியத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு இலவச வீடுகளை கட்டித்தந்தது மற்றும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு மீண்டும் உயிரூட்டுவதற்காக இலவச தென்னை மரக்கன்றுகளை விவசாயிகளுக்கு வழங்கியதற்காக மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கரை பாராட்டுகிறேன்.

    கோவிட் பெருந்தொற்று பரவல் காலத்தின்போது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இம்மருத்துவமனையும் மற்றும் இதன் மருத்துவர்களும் சிறப்பாக பணிபுரிந்துள்ளனர்.

    6 அடுக்கு கொண்ட பாதுகாப்பு கட்டமைப்பையும் இம்மருத்துவமனை அறிமுகம் செய்து, நோயாளிகளுக்கும், மருத்துவர்களுக்கும் மற்றும் பிற பணியாளர்களுக்கும் தொற்றுக்கான இடர்வாய்ப்பு இல்லாத ஒரு பாதுகாப்பான சூழலையும் இதன்மூலம் வழங்கியிருக்கிறது.

    அறுவை சிகிச்சை அரங்குகளில் மருத்துவர்களுக்கு ஒரு ஹுட் வழியாக வென்ட்டிலேட்டரி சர்க்கியூட்ஸ்களிலிருந்து அடுத்தக்கட்ட மருத்துவ தரத்திலான காற்றினை பாதுகாப்பாக வழங்கக்கூடிய உலகின் முதல் சாதனை அமைப்பான தஞ்சாவூர் காற்று சுத்திகரிப்பு சுவாச சாதனம் என்ற குறைந்த செலவிலான ஒரு நவீன சாதனத்தை இம்மருத்துவமனை கண்டறிந்து அறிமுகம் செய்தது என்பதை நான் அறிந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கே பெருமையளிக்கின்ற ஒரு விஷயம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    டாக்டர் குருசங்கர்

    இதையடுத்து மீனாட்சி மருத்துவமனை தலைவர் டாக்டர் குருசங்கர் பேசியதாவது ;-

    "டெல்டா பிராந்தியத்திற்கு உலகத்தரத்திலான என்.ஐ.சி.யூ பிரிவை நிறுவி, அறிமுகம் செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.

    பச்சிளம் குழந்தைகளுக்கு, குறிப்பாக உரிய காலத்திற்கு முன்பு குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு விரிவான சிகிச்சைப் பராமரிப்பை வழங்குவதற்கு அனைத்து வசதிகளையும், சாதனங்களையும் இது கொண்டிருக்கிறது.

    இதைப்போலவே இங்கு புதிதாக தொடங்கப்பட்டிருக்கும் எமது பேச்சு சிகிச்சை மையமும் நவீனமானது.

    அவசியமான சாதனங்கள், கட்டமைப்பு வசதிகளுடன் குழந்தைகளது செவித்திறன் மற்றும் தகவல் பரிமாற்ற கோளாறுகளுக்கு சிகிச்சையளிக்க பேச்சு மொழி சிகிச்சை நிபுணர்கள், கேள்திறன் மருத்துவ நிபுணர் மற்றும் ஒரு முழுமையான மருத்துவ மேலாண்மைக் குழு இம்மையத்தில் இருக்கிறது.

    ஒட்டுமொத்த டெல்டா பிராந்தியத்தில் 6 தேசிய அளவிலான தர சான்றாக்கங்களைப் பெற்றிருக்கும் ஒரே மருத்துவமனை எங்களுடைய என்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம்.

    கடந்த காலத்தில் பரவலாக விளையாடப்பட்ட விளையாட்டுகளை நினைவுபடுத்தும் வகையில் "திருவிழா" என்ற நிகழ்வையும் மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் பங்கேற்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கொண்ட "ஸ்டார் நைட்" நிகழ்வையும் இன்று ஏற்பாடு செய்து நடத்துகிறோம்.

    தஞ்சை மற்றும் சுற்றுப்புறங்களிலிருந்து 20,000-க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், தஞ்சை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • உள்ளாட்சி நிர்வாகம் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
    • வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சை மாவட்டம் பூதலூர் அருகே கோவில்பத்து ஊராட்சிக்கு உட்பட்ட கெங்கைசமுத்திரம் குடியிருப்பில் வசிக்கும் ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மயானம் வயல்களுக்கு நடுவில் அமைந்துள்ளது.

    புல்பூண்டுகள் சூழ்ந்துள்ள இந்த இடத்தில் உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் கைபம்பு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது.

    இந்த மயானத்தில் அடக்கம் செய்ய மூன்று சிறு வாய்க்கால்கள், பயிர் செய்யப்பட்டு உள்ள பயிர்களின் ஊடாக இறந்தவர்களின் உடல் வைக்கப்பட்ட பாடையை சுமந்து வரவேண்டிய நிலை உள்ளது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இறந்த ஒரு பெண்ணின் உடலை பாடையில் வைத்து உறவினர்கள் வளர்ந்த நெல் பயிரின் ஊடாக தடுமாறி சுமந்து வந்தனர்.

    மற்றவர்கள் வரப்புகளில் நடந்து வந்தனர்.

    மயானம் உள்ளதாககூறப்படும் இடத்திற்கு வந்ததும் பாடையை இறக்கி வைத்து அடக்கம் செய்தனர். இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

    வயல்களுக்கு நடுவில் உள்ள மயானத்துக்கு பதில் வேறு இடத்தில் தங்களுக்கு மயானம் அமைத்து தர வேண்டும் என்று பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர்.

    எனவே இனியாவது மயானத்துக்கு வேறு இடம் ஒதுக்கி தர வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி உள்ளனர்.

    • காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
    • குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது.

    நெல்லை:

    பொங்கல் பண்டிகையை யொட்டி வெளியூரை சேர்ந்தவர்கள் சொந்த ஊர் வந்துள்ளனர்.

    காணும் பொங்கலை யொட்டி நெல்லை மாவட்டத்தில் நேற்று சுற்றுலாத்தலங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.

    இந்நிலையில் தொடர் விடுமுறையையொட்டி இன்றும் சுற்றுலாத் தலங்களில் ஏராள மானவர்கள் குவிந்தனர்.

    நெல்லை மாவட்ட அறிவியல் மையத்தில் வழக்கமாக வாரவிடுமுறை நாட்களிலும், அரசு விடுமுறைநாட்களில் அதிகளவு கூட்டம் காணப்படும். இன்று விடுமுறைையயொட்டி காலை முதலே பொதுமக்கள் கூட்டம் பெருமளவில் வரத்தொடங்கினர்.

    மதியம் நேரம் பொதுமக்கள் வீடுகளில் தயார் செய்த உணவுகளை கொண்டு வந்து அறிவியல் மையத்தில் அமர்ந்து குடும்பத்துடன் சாப்பிட்டனர். ஊஞ்சல், சறுக்குதளம் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு உபகரணங்களில் விளையாடி மகிழ்ந்தனர்.

    வாலிபர்கள் அங்குள்ள டைனோசர் மற்றும் பல்வேறு இடங்களில் நின்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இன்று பிற்பகலுக்கு பின்னர் கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. இதனால் மாவட்ட அறிவியல் மையம் இன்று பொதுமக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. இதேபோல் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள சுற்றுலாத்தலங்களிலும் பொதுமக்கள் சென்று ஆற்றில் நீராடினர். இதை யொட்டி நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

    அகஸ்தியர் அருவியில் சுற்றுலா பயணிகள் குடும்பம், குடும்பமாக குழந்தைகளுடன் குளித்து சென்றனர். கூட்டம் அலைமோதியதால் சோதனை சாவடியில் இருந்து நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. களக்காடு தலையணையில் காலை முதலே பொதுமக்கள் குவிந்த வண்ணம் இருந்தனர்.

    குற்றாலம் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுலாத் தலங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் இன்று அலைமோதியது. ஐந்தருவி, பழைய குற்றாலம், மெயின் அருவி உள்ளிட்டவற்றில் மிகவும் குறைந்த அளவே தண்ணீர் விழுந்தது.

    எனினும் பொதுமக்கள் வரிசையில் நின்று குளித்து வருகின்றனர். குற்றாலம் மெயின் அருவி அருகே உள்ள பேரூராட்சி பூங்காக்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து சமைத்து கொண்டு வந்த உணவை பரிமாறி உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.

    இதனால் தென்காசி மாவட்ட போலீசார் அதிகள வில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    • வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
    • 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    கும்பகோணம் கோட்டம் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் போக்குவரத்து கழக மேலாண் இயக்கு னர் ராஜ்மோகன் வெளி யிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிட் சார்பில் பொதுமக்கள் எளிதாக எவ்வித சிரமம், இடையூறின்றி, பயணம்செ ய்ய ஏதுவாக சென்னையிலிருந்து கும்பகோணம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர்,

    திருத்துறை ப்பூண்டி, வேதா ரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை ,

    காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 24-ந் தேதி வரையும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன .

    இதேபோல் திருச்சியில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மதுரை ஆகிய இடங்களுக்கும் மதுரை, கோயம்புத்தூர், திருப்பூர் ஊர்களிலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போக்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கு வருகிற 12-ந் தேதி முதல் 14-ந் தேதி வரையும் அனைத்து முக்கிய நகரங்களிலிருந்து அனைத்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டுற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மேலும் பொங்கல் முடிந்து திரும்ப அவரவர் ஊர்களுக்கு செல்ல 16-ந் தேதி முதல் 18-ந் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சிவகாசியில் பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகள் மேயர் வழங்கினார்.
    • சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி மாநகராட்சியில் தமிழக அரசின் இலவச பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி மேயர் சங்கீதா, துணை மேயர் விக்னேஸ்பிரியா தொடங்கி வைத்தனர்.

    தி.மு.க., மாநகர செய லாளர் உதயசூரியன், பகுதிகழக செயலாளர் காளிராஜன், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் சக்திவேல், வர்த்தக அணி துணை அமைப்பாளர் இன்பம், ராஜேஸ், பலர் கலந்து கொண்டனர்.

    இதே போல் வார்டு கவுன்சிலர்கள் ரேணு நித்திலா, ராஜேஷ், உள்ளிட்டோர் அவரவர் வார்டுகளில் உள்ள ரேஷன் கடைகளில், பயனாளி களுக்கு பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

    சிவகாசி ஒன்றியங்களில், கட்டளைப்பட்டி, எம்.புதுப்பட்டியில் ஒன்றிய துணைத்தலைவர் விவேகன் ராஜ் பொங்கல் தொகுப்பு வழங்கினார். இதேபோல் தேவர்குளம் ஊராட்சியில் தலைவர் முத்துவள்ளி, ஆனையூர் ஊராட்சியில் பொறுப்பு தலைவர் முத்துமாரி, விஸ்வநத்தம் ஊராட்சியில் தலைவர் நாகராஜ், சித்துராஜபுரம் ஊராட்சியில் தலைவர் லீலாவதி, நாரணாபுரம் ஊராட்சியில் தலைவர் தேவராஜன், அனுப்பன்கு ளம் ஊராட்சியில் தலைவர் கவிதா, செங்கமல நாச்சியார்புரம் ஊராட்சியில் தலைவர் கருப்பசாமி, பள்ளபட்டி ஊராட்சியில் பொறுப்பு தலை வர் ராஜபாண்டி, பொங்கல் தொகுப்பினை வழங்கினர்.

    • வரிசையில் காத்து நின்று வாங்கிச் சென்றனர்.
    • 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.

    கோவை,

    பொங்கல் பண்டிகை வருகிற 15-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.பொங்கல் பண்டிகையையொட்டி ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    நடப்பாண்டிலும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு, ரூ.1000 ரொக்கம் ஆகியவை அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

    அதன்படி இன்று சென்னையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதனை அடுத்து அனைத்து மாவட்டங்களிலும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரிசி குடும்ப அட்டைதாரரர்கள் உள்ளனர். இவர்கள் அனைவருக்கும் வீடுகளுக்கு சென்று பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் வழங்கப்பட்டிருந்தது.

    இந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கும் நாள், வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை இடம் பெற்று இருந்தது. அந்த நேரத்தில் சென்று பொங்கல் தொகுப்பினை மக்கள் பெற்றுக்கொண்டனர். பொங்கல் தொகுப்பில் ஏதாவது குறைகள் இருந்தால் அது குறித்து புகார் தெரிவிக்க எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் பொங்கல் தொகுப்பு பெற்றவுடன் அதுகுறித்த குறுஞ்செய்தி குடும்ப அட்டைதாரர்களின் செல்போன் எண்ணுக்கு அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சத்து 88 ஆயிரம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1089 பேர் இலங்கை தமிழர்கள். இவர்கள் அனைவருக்கும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. முதல் நாளான இன்று ரேஷன் கடைகளில் வந்த மக்கள் பொங்கல் பரிசு தொகுப்பை ஆர்வத்துடன் பெற்று சென்றனர்.

    சில ரேஷன் கடைகளில் பயோ மெட்ரிக்கில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. இந்த தகவல் அதிகாரிக்கு தெரிவிக்கப்பட்டது.

    உடனே அவர் பழைய முறையில் குடும்ப அட்டைதாரர்களின் பெயர் மற்றும் கையெழுத்தை பெற்று பொங்கல் பரிசு தொகுப்பை வழங்க உத்தரவிட்டார். இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.

    • பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது.

    பல்லடம்:

    பல்லடம் தாலுகாவில் 80,420 பேருக்கு பொங்கல் பண்டிகை பரிசு தொகுப்பு வழங்கப்படவுள்ளது. தமிழக அரசு சார்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு ரொக்கம் ரூ.ஆயிரம், ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு கிலோ வெல்லம்,ஒரு முழு கரும்பு உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியை நாளை 9-ந் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். அன்றைய தினமே தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் செய்து வருகிறார்கள்.

    பல்லடம் பகுதியில் உள்ள 134 ரேசன் கடைகளில்,80,420 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ரேசன் கடைகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே டோக்கன் வழங்கப்படுகிறது. இந்த பணி தொடங்கியது. அந்தந்த பகுதி ரேசன் கடைஊழியர்கள் வீடுவீடாக சென்று டோக்கன் வழங்கி கொண்டிருக்கிறார்கள். அந்த டோக்கனில் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள், நேரம் ஆகியவை இடம் பெற்று உள்ளது. இந்த நிலையில், கடந்த ஆண்டு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கிய போது பொருட்களை துணிப்பையில் போட்டு அரசு வழங்கியது. இந்த முறை துணிப்பை வழங்கப்படாது என்றும், பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு வரும் குடும்ப அட்டைதாரர்கள் துணிப்பை எடுத்து வந்து பொங்கல் பரிசுப் பொருட்களை வாங்கிச் செல்ல அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

    • டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.
    • டவுன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சாலியர் தெரு,நல்ல முத்தம்மன் கோவில் தெரு, மற்றும் கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார தெருக்களில் சுற்றித்திரிந்த 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உதவியோடு வலை விரித்து பிடித்தனர்.

    நெல்லை:

    நெல்லை மாநகராட்சிக் குட்பட்ட டவுன் பகுதிகளில் பொது மக்களுக்கு இடை யூறாக தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருவதாக மாநகராட்சிக்கு புகார்கள் வந்தது.

    இதனையடுத்து சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை பிடிக்க மாநகராட்சி கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தர விட்டார்.

    அதன்பேரில் நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன் அறிவுறுத்தலின் பேரில் மாநகர நல அலுவலர் சரோஜா, நெல்லை மண்டல உதவி கமிஷனர் வெங்கட்ராமன் ஆகியோர் வழிகாட்டுதலின் கீழ் சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் ஊழியர்கள் முருகன், பாலமுருகன் பணியாளர்கள் திவாகர், மணிகண்டன் ஆகியோர் டவுன் பகுதிகளில் திரியும் தெரு நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது மாநகர பகுதிகளில் தெருநாய்கள் தொந்தரவு குறித்து பொதுமக்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்குமாறு ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்பட்டது.

    தொடர்ந்து டவுன் 16-வது வார்டுக்கு உட்பட்ட சாலியர் தெரு,நல்ல முத்தம்மன் கோவில் தெரு, அக்கசாலை விநாயகர் கோவில் தெரு, கருவேலங்குன்று தெரு, குற்றாலம் ரோடு, லாலுகாபுரம் மற்றும் கண்டியப்பேரி உழவர் சந்தை மற்றும் அதன் சுற்று வட்டார தெருக்களில் சுற்றித்திரிந்த 31 நாய்களை மாநகராட்சி பணியாளர்கள் தூய்மை பணியாளர்கள் உதவியோடு வலை விரித்து பிடித்தனர்.

    • பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
    • சார்பதிவாளர்கள் காலதாமதமாக அலுவலகத்திற்கு வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் சார்பதிவாளராக பணியாற்றி வந்த வசந்தி என்பவர் சில நாட்களுக்கு முன்பு பதிவுத்துறை விதிகளுக்கு மாறாக செயல்பட்டதாக கூறி சஸ்பெண்டு செய்யப்பட்டார்.அதன் பிறகு மாவட்ட பதிவுத்துறையால் நாள் தோறும் தற்காலிக சார் பதிவாளர்களை பாவூர்சத்திரம் சார்பதி வாளர் அலுவலகத்திற்கு பணிக்கு அனுப்பி வருகிறது.


    ஆனால் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் சார்பதிவாளர்கள் அனைவருமே காலையில் மிகவும் காலதாமதமாக வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதனால் முதியோர்கள், பெண்கள் கைக்குழந்தைகளுடன் கர்ப்பிணிபெண்கள் , சிறு வணிகர்கள்,வியாபார பெருமக்கள்,அரசு அலுவலர்கள், விவசாய பெருமக்கள் ஆகியோர்கள் பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்து பத்திரப்பதிவு செய்ய முடியாமல் காத்திருக்கும் அவலநிலை உள்ளது.இதனால் அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது.

    மேலும் பழைய பிறப்பு, இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற மனு அளித்து இரண்டு மாதம் ஆனாலும் தற்காலிக சார்பதிவாளர்களால் கிடப்பில் போடப்பட்டு வருகிறது. பிறப்பு மற்றும் இறப்பு பதிவின்மை சான்றிதழ் பெற முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    எனவே பாவூர்சத்திரம் சார்பதிவாளர் அலுவ லகத்திற்கு நிரந்த சார்பதிவாளரை நியமித்து அப்பகுதி பொதுமக்களின் தேவைகளை நிறைவேற்று மாறு சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.
    • ஊராட்சி தலைவரும், செயலாளரும் சேர்ந்து துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    தென்காசி:

    சங்கரன்கோவில் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள்பட்டி ஊராட்சியின் தலைவராக குருவம்மாள் என்பவர் பதவி வகித்து வருகிறார்.

    இவரும், ஊராட்சி செயலாளரான சீனியம்மாள் என்பவரும் சேர்ந்து பெருமாள்பட்டி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மாரியம்மாளின் கையெழுத்தை போலியாக பதிவு செய்து அரசு ஆவணமாக காட்டி வங்கியில் இருந்து ரூ.9 லட்சம் வரை கையாடல் செய்ததாக புகார் எழுந்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து அந்த புகார் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டு பணம் கையாடல் செய்யப்பட்டது உறுதியானதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரன் கோவில் யூனியன் வட்டார வளர்ச்சி அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில், முறைகேட்டில் ஈடுபட்ட ஊராட்சி செயலாளரான சீனியம்மாளை இதுவரை பணியிடை நீக்கம் செய்யாமல் அதே பணியில் உள்ளதால் அந்த ஊராட்சியில் தொடர் முறைகேடுகள் நடப்பதாகவும், முறைகேடுகள் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்ட நாள் முதல் ஊராட்சி செயலாளர் விடுமுறையில் உள்ளதால் பெருமாள்பட்டி பகுதியில் எந்தவிதமான அடிப்படை பணிகளும் மேற்கொள்ளப்படாமல் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும் பொதுமக்கள் சார்பில் தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.


    • பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர்.
    • கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

    மேலூர்

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள நாவினிப்பட்டியில் சாலையை அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் அங்கு குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

    இதன் காரணமாக நாவினிப்பட்டியில் 15 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை. குடிநீர் பிரச்சினையால் அந்தப்பகுதி மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.

    இதை கண்டித்து இன்று காலை பொதுமக்கள் பஸ் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

    இதற்காக 50-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். தகவல் அறிந்த மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் ஜெயன்பாண்டியன், ஏட்டுகள் முருகேசன், தினேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர்.

    கிராம நிர்வாக அதிகாரி மணிகண்டன் குடிநீர் பிரச்சினைக்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    • மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.
    • இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள மங்களம் சாலையில் செல்போனில் பேசியப்படி பயணி ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார்.

    அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி செல்ல முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் திருடன்... திருடன்... என்று சத்தம் போட்டார். இதனைப் பார்த்த பொதுமக்கள் சிலர் செல்போனை பறித்து சென்ற வாலிபர்களை சிறிது தூரம் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

    போலீசார் நடத்திய விசாரணையில் திருப்பூர் கல்லூரி சாலையை சேர்ந்த விஜய்,பிரவீன் என்பதும் அவர்கள் ஓட்டி வந்த வாகனம் கர்நாடகா எண் கொண்ட திருட்டு வாகனம் என தெரிய வந்தது.அதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தையும்,செல்போனையும் பறிமுதல் செய்து விஜய்,பிரவீன் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    மேலும் இவர்களுக்கு வேறு கொள்ளையில் தொடர்புள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.செல்போனை பறித்து கொண்டு இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்ற இருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×