search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது.
    • முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    திருத்துறைப்பூண்டி:

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக முத்துப்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட ஆசாத் நகர் பகுதியில் வடிகால் வாய்க்கால் தூர்ந்து போய் இருந்ததால் 5-வது வார்டு பகுதியில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது.

    பின்பு, பேரூராட்சி பணியாளர்களால் தோண்டி எடுக்கப்பட்டு மழைநீர் அப்புறப்படுத்த ப்பட்டது. அப்போது, சாலையின் சில பகுதியும் தோண்டப்பட்டு பள்ளத்தை சுற்றி 'பேரிகார்டுகள்' வைத்து தற்காலிகமாக தடுப்பு வைக்கப்பட்டிருந்தது.

    குறிப்பாக, அதிகமான கடைகள், மீன் மார்க்கெட், பள்ளிக்கூடங்கள் என எப்போதும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடமாக காணப்படும் ஆசாத்நகர் பகுதியின் முக்கிய சாலையில் தோண்டப்பட்ட பள்ளம் இரண்டு மாதங்களாகியும் இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    இதுகுறித்து பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகம் சென்று கோரிக்கை விடுத்தும் பயனில்லை.

    எனவே, விபத்துகள் ஏற்படும் முன் மக்களின் நலன் கருதி தோண்டப்பட்ட மழைநீர் வடிகாலை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பாக உள்ளது.

    • கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்து விளக்கினர்.
    • முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்ட சுகாதார துணை இயக்குனர் அலுவலகம் மற்றும் சாத்தி தொண்டு நிறுவனம் இணைந்து மல்லிப்பட்டினம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கொரோனா தடுப்பூசி குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

    கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருப்பது குறித்தும், அரசு அறிவுறுத்தும் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், கொரோனா தடுப்பூசியின் அவசியம் குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இந்நிகழ்வில் சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் ராமலிங்கம், மருத்துவ அலுவலர் சேது, கிராம சுகாதார செவிலியர் மாலதி, சாத்தி தொண்டு நிறுவன மாவட்ட திட்ட அலுவலர் ரமேஷ் மற்றும் கொரோனா தடுப்பூசி ஊக்குவிப்பாளர்கள் நித்தேஷ், பிரபாகரன், அன்னலட்சுமி, ரேவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது.
    • கொசுக்கள் தேங்கி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    இதற்காக கரந்தை, வடக்கு வாசல், பள்ளிஅக்ரகாரம், மாரிக்குளம் உள்ளிட்ட இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இங்கிருந்து கழிவுநீர் ராட்சத குழாய்கள் மூலம் சமுத்திரம் ஏரியில் உள்ள பாதாள சாக்கடை கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்துக்கு கொண்டு செல்லப்படுகிறது.

    அங்கு கழிவுநீர் சுத்திகரிக்கப்பட்டு தண்ணீர் பாசனத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    மேலும் தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடைகளில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களில் ஆள்நுழை குழிகளும் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஆள்நுழை குழிகள் மீது கான்கிரீட் மூடியும் போடப்பட்டுள்ளது.

    ஒரு சில பகுதிகளில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் இந்த குழிகள் வழியாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. சில இடங்களில் அந்த குழிகள் மீது போடப்பட்டுள்ள மூடி உடைந்து விடுவதால் கழிவுநீர் வெளியேறி சாலைகளில் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது.

    இந்த நிலையில் தஞ்சை கீழவாசல் டவுன் போலீஸ் நிலையம் ரோட்டில் ஆள்நுழை குழி வழியாக கழிவுநீர் வெளியேறி சாலையில் வழிந்தோடுகிறது. வெளியேறும் கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அந்த பகுதியில் துர்நாற்றமும் வீசுகிறது. மேலும் கொசுக்கள் தேங்கி நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

    இந்த சாலையில் எப்போதும் ஆள்நடமாட்டம் அதிக அளவில் காணப்படும். ஏராளமான வாகனங்கள் சென்று வரும்.

    தற்போது கழிவு நீர் தேங்கி இருப்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் சிரமத்துடனே சென்று வருகின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காரையூரில் மக்கள் தொடர்பு முகாம் நடந்தது.
    • இதில் பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தில் வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் மக்கள் தொடர்பு நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். முகாமில் பல்வேறு துறைகளின் மூலம் 53 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, இலவச வீட்டுமனை பட்டா போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. மேலும் முகாமில் பெற்ற கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த முகாமில் வட்டாட்சியர் வெங்கடேசன், தனி வட்டாட்சியர் ராஜா மற்றும் கண்ணதாசன், மண்டல துணை வட்டாட்சியர் செல்லமுத்து, வருவாய் ஆய்வாளர் மன்சூர் அலி, ஊராட்சி மன்ற தலைவர் செந்தமிழ் செல்வி மதியழகன், உப தலைவர் அருணகிரி, இளைஞர் அணி துணை அமைப்பாளர் தமிழ் நம்பி, திருப்பத்தூர் கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் மற்றும் வட்டத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், அங்கன்வாடி உதவியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.
    • நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

    சீர்காழி:

    சீர்காழியில் தி.மு.க. அரசை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.சீர்காழியில் பழைய பேருந்துநிலையத்தில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பி.வி.பாரத தலைமை வகித்தார்.

    நகர செயலாளர் வினோத், ஒன்றிய செயலாளர்கள் ரவிச்சந்திரன், சந்திரசேகரன், நற்குணன், சிவக்குமார், முன்னாள் எம்எல்ஏ ம.சக்தி முன்னிலை வகித்தனர்.

    மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் எஸ்.பவுன்ராஜ் கண்டன உரையாற்றி பேசுகையில், சீர்காழி நகரில் பள்ளிகள், மருத்துவமனை, வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குப்பைகள் அள்ளப்படாமல் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாகவும், நகராட்சி நிர்வாகம் சரிவர செயல்படவில்லை எனவும், வரி மற்றும் உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைப்பதாக குற்றஞ்சாற்றி கண்டன உரை ஆற்றினார்.

    தொடர்ந்து சீர்காழி நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராகவும், தமிழக அரசை கண்டித்தும் அதிமுகவினர் கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் மாவட்ட துணை செயலாளர் செல்லையன், முன்னாள் நகர செயலாளர் பக்ரிரிசாமி, பேரவை செயலாளர் மணி, நிர்வாகிகள் ரவி சண்முகம், லாட்ஜ் மணி, அகணி மதியழகன், மருதங்குடி அலெக்சாண்டர், கொண்டல் விஜயன், மாலினி, லட்சுமி, அஞ்சம்மாள், வக்கீல்கள் தியாகராஜன், நெடுஞ்செ ழியன், பாலாஜி, அம்சேந்திரன், ஒன்றிய குழு உறுப்பினர் நடராஜன், விஜயகுமார் உள்ளிட்ட பல கலந்து கொ ண்டனர். முடிவில் நகர துணை செயலாளர் பரணிதரன் நன்றி கூறினார்.

    • கடந்த 2 ஆண்டுகளில் சைபர் கிரைம் குற்றங்கள் மூலம் பொதுமக்கள் ரூ.3.11 கோடியை இழந்ததாக போலீஸ் சூப்பிரண்டு தகவல் தெரிவித்துள்ளார்.
    • பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் நடந்த போலீஸ் குறைதீர்ப்பு முகாமில் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை தலைமை தாங்கி பொது மக்களிடம் மனுக்களை பெற்றார்.

    இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் க ள் உன்னிகிருஷ்ணன், பாஸ்கரன், ராமநாதபுரம் டி.எஸ்.பி, ஜெயச்சந்தின் மற்றும் உட்கோட்ட வாரியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். முகாமில் 41 மனுக்கள் பெறப்பட்டது.

    இந்த முகாமில் மண்டபம் மறவர் தெருவைச் சேர்ந்த தில்லை ரேவதி ஆன்லைன் தகவலை நம்பி ரூ. 19 ஆயிரத்து 999-யை இழந்திருந்தார். அந்த பணத்தை போலீசார் மீட்டதற்கான சான்றிதழை போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, தில்லை ரேவதியிடம் வழங்கினார்.

    கடந்த அக்டோபர் முதல் இதுநாள் வரை போலீஸ் சூப்பிரண்டு குறைதீர்ப்பு முகாம், முதல்வரின் தனிப்பிரிவு மனு, டிஜிபி அலுவலக மனுக்கள் என 1415 மனுக்கள் பெறப்பட்டுள்ளது.

    இதில் 1259 மனுக்களுக்கு புகார்தாரர் க ளுக்கு திருப்திகரமாக முடித்து வைக்கப்பட்டுள்ளது. 156 மனுக்கள், திருப்தி இல்லை என விசாரணையில் உள்ளது. தற்போது 41 மனுக்கள் பெறப்பட்டு உரிய நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளில் போலியான தகவல்களை நம்பி பணத்தை இழந்த1274 பேர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தனர்.

    இதன்மூலம் பொது மக்கள் மொத்தம் ரூ.3.11 கோடி பணம் இழந்தனர். இதில் 98 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக குறிப்பிட்ட வங்கிகளில் 73 லட்சத்து 10 ஆயிரத்து 347 ரூபாய் போலீசாரால் முடக்கப்பட்டது.

    இதில் 15 லட்சத்து 91 ஆயிரத்து 660 ரூபாய் சம்பந்தப்பட்டவர் க ளிடம் ஒப்படைக்கப்பட்டது.

    ராமநாதபுரம் போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை கூறும் போது, பொதுமக்கள் ஆன்லைனில் வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிப்பது, பரிசு பொருட்கள் விழுந்திருப்ப தாக கூறுவது, ஆன்லைனில் முதலீடு செய்வது, பணம் இரட்டிப்பாக வழங்கப்படுவதாக கூறும் விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம். விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.

    • தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது
    • தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி மாவட் டத்தில் பொதுமக்களின் குறைதீர்க்கும் மனு கூட்டம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.

    2 வாரங்களுக்கு ஒருமுறை புதன்கிழமைகளில் முகாம் நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தர விட்டுள்ளார். அதன்படி காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அலுவல கத்தில் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் ஏற்கனவே புகார் அளித்து திருப்தியடையாத 45 மனுதாரர்கள் மற்றும் புதிதாக மனு கொடுக்க வந்த 16 மனுதாரர்கள் என மொத்தம் 61 பேர் தங்கள் குறைகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணனிடம் நேரடியாக தெரிவித்து புகார் மனு அளித்தனர்.

    பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்த அவர் உடனடியாக விசார ணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தர விட்டார்.

    • மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதால் பொதுமக்கள் அச்சம்
    • தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை

    திருச்சி 

    திருச்சி மணிகண்டம் ஒன்றியம் நாச்சி குறிச்சி ஊராட்சிக்கு உட்பட்ட இனியானூர் கிராமத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேலும் இந்த கிராமத்தில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் பகுதிகளிலும் பொதுமக்கள் குடியேறி வருகின்றனர்.

    இந்த கிராமத்திலிருந்து சோமரசம்பேட்டை மற்றும் இரட்டை வாய்க்கால்,குழுமாயி அம்மன் தொங்கு பாலம் வழியாக திருச்சிக்கு செல்லும் முக்கிய சாலையின் ஓரத்தில் சமீபகாலமாக அல்லித்துறை சோமரசம்பேட்டை மற்றும் இரட்டை வாய்க்கால் பகுதிகளில் செயல்படும் மருத்துவமனைகளின் கழிவுகள் கொட்டப்படுவதால் இப் பகுதிகள் வசிக்கும் மக்கள் மிகுந்த அச்சமடைகின்றனர்.

    இந்த மருத்துவ கழிவுகளை எரியூட்டும் போது ஏற்படும் புகை மூட்டத்தால் பல்வேறு நோய்கள் வருவதாகவும் மேலும் மருத்துவக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தின் அருகே தொடக்கப்பள்ளி செயல்படுவதால் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவ கழிவுகள் கொட்ட ப்படுதை தடுத்து அதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    • சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.
    • சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு:

    திருச்செங்கோடு நகராட்சி தொண்டிக்கரடு முனியப்பன் கோவில் குப்பண்ணன் காடு பகுதியில் இருந்து கடந்த 50 வருடங்களாக தீர்க்கப்படாமல் இருந்த மழைநீர் ரோட்டில் தேங்கும் பிரச்சினைக்குதீர்வு காண சீத்தாராம் பாளையத்தில் இருந்து சுமார் 1.5 கிமீ தூரத்திற்கு ரூபாய் ஒருகோடி மதிப்பில் மழைநீர் கால்வாய் அமைக்க திட்டவரைவு தயாரிக்கப்பட்டு சூரியம்பாளையம் பகுதி வழியாக அதனை கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்து நமக்குநாமே திட்டத்தில்ரூ.33 லட்சம் பொதுமக்கள் பங்களிப்பாக நகராட்சியில் செலுத்தப்பட்டது.

    இதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள் நடந்து வந்த நிலையில் இதனை அறிந்த சூரியம் பாளையம்பகுதி பொதுமக்கள் இந்த கால்வாய் அமைவதனால் 4 வார்டுகளில் இருந்த மழைநீர் மற்றும் கழிவு நீர் தங்களது பகுதி வழியாக செல்லும் எனவும் அவ்வாறு செல்வதால் தங்களது குடிநீர் ஆதாரங்கள் பாதிக்கப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படும் எனவும் தங்களது பகுதியாக வழியாக கொண்டு செல்லக் கூடாது என நகராட்சி நிர்வாகத்தை வலியுறுத்தி இன்று திடீர் சாலை மறியிலில் ஈடுபட்டனர்.

    திருச்செங்கோடு தேவானங்குறிச்சி சாலையில் நடந்த இந்த மறியலில் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீஸ் டிஎஸ்பி பொறுப்பு பழனிசாமி, நகர காவல் ஆய்வாளர் செந்தில் குமார், நகராட்சி ஆணையாளர் கணேசன், பொறியாளர் சண்முகம், மேலாளர் குமரேசன் ஆகியோர் பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள் . உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் சுமார் ஒருமணி நேரம் நடந்த சாலைமறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த போராட்டத்தால் சூரியம் பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
    • மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட அன்பு நகர், பூக்காரத் தெரு, முனியாண்டவர் காலனி, விளார்ரோடு, 20 கண் பாலம் ஆகிய இடங்களில் பன்றிகள் தொல்லை அதிகமாக காணப்பட்டது. பன்றிகள் தொல்லையை கட்டுப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதையடுத்து பன்றிக ளைப் பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி தெருக்களில் சுற்றி தெரிந்த பன்றிகளை போலீசார் உதவியுடன் சம்பந்தப்பட்ட கோட்ட துப்புரவு ஆய்வாளர்கள் தலைமையில் 18 பன்றிகளை பிடித்து அப்புறப்படுத்தினர்.

    மேலும் பொது மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படாத வகையில் இது போன்று பன்றிகள் பிடிக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளது.

    சுகாதார சீர்கேடு விளைவிக்கும்படி பன்றிகள் மாநகராட்சி எல்லைக்குள் சுற்றி திரிந்தால் அவற்றை வளர்க்கும் உரிமையாளர் மீது பொது சுகாதார சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தெரிவித்தார்.

    • அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது.
    • கோபூஜை செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான வள்ளலார் கோயில் எனப்படும் வதான்யேஸ்வரர் கோயில் உள்ளது.

    இக்கோயிலில் கடைசியாக 2004-ஆம் ஆண்டு 26-வது குரு மகா சன்னிதானத்தின் அருளாட்சி காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

    இந்நிலையில் கோயிலில் மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டு இன்று பாலாலய விழா நடைபெற்றது.

    தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் கலந்து கொண்டு அடிக்கல் எடுத்து வைத்து திருப்பணிகளை தொடக்கி வைத்தார்.

    முன்னதாக, சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வெள்ளி கவசம் சாத்தப்பட்டது. பின்னர், கோயிலில் யாகம் வளர்க்கப்பட்டு மகா பூர்ணாகுதி செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் கோபூஜை செய்து வழிபாடு நடத்தினர். பூஜைகளை கோயில் அர்ச்சகர் பாலச்சந்திர சிவாச்சாரியார் செய்து வைத்தார்.

    இதில் ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத கட்டளை விசாரனை தம்பிரான் சுவாமிகள் வள்ளலார் கோயில் மற்றும் நகர மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில்குமார், ரங்கராஜன், வாஞ்சிநாதன், தர்மபுரம்‌ கல்லூரி செயலர் செல்வநாயகம், முதல்வர் சுவாமிநாதன், திருக்கோயில் சிப்பந்திகள் மற்றும் நகர முகவர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
    • ரேசன்கடை பொறுப்பாளர் கலந்து கொண்டார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டத்தின் அனைத்து தாலுகாவிலும் ஒரு கிராமத்தில் சுழற்சி முறையில் பொது விநியோகத்திட்ட குறை தீர்க்கும் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. நேற்று 9 கிராமங்களில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.

    ராமநாதபுரம் அருகே உள்ள வாணி கிராம ரேசன் கடையில் குறை தீர்க்கும் முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் மரகதநாதன் தலைமையில் நடந்தது. தனி வட்டாட்சியர் (குடிமைப்பொருள் வழங்கல்) தமிம்ராசா முன்னிலை வகித்தார். ரேசன் ஸ்மார்ட் கார்டில் பெயர் சேர்க்க 6 மனுக்களும், பெயர் நீக்கம் மற்றும் திருத்தம் உட்பட 28 மனுக்கள் பெறப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    முதுநிலை வருவாய் அலுவலர் சிவக்குமார் ஆதி, ரேசன்கடை பொறுப்பாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். 

    ×