search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • மூதாட்டியை தாக்கி கொள்ளையடித்த திருடனை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.
    • திருச்சியில் வீடு புகுந்து

    திருச்சி:

    திருச்சி வயலூர் மெயின் ரோடு கீதா நகர் முதல் கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் கனகாம்பிகை(வயது72). இவர் வீட்டில் தனியாக இருந்தபோது திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர் ஒருவர், குத்துவிளக்கை எடுத்து அவரின் தலையில் தாக்கியுள்ளார். பின்னர் கத்தி முனையில் அவர் அணிந்திருந்த ஐந்தே முக்கால் பவுன் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பி ஓட முயன்றுள்ளார். அப்போது அதிர்ச்சி அடைந்த கனகாம்பிகை திருடன் திருடன் என கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஒன்று திரண்டு தப்பியோட முயற்சித்த மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்தனர்.

    இதனை தொடர்ந்து அளிக்கப்பட்ட தகவலின் பெயரில் உறையூர் போலீசார் அங்கு வந்து திருடனை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு நடத்திய விசாரணையில் இந்த துணிகர செயலில் ஈடுபட்டது மண்ணச்சநல்லூர் அம்மையப்பன் நகரை சேர்ந்த சசிகுமார்(31) என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் வழக்கு பதிந்து சிறையில் அடைத்தனர். வீடு புகுந்து கொள்ளையன் தாக்கியதில் காயமடைந்த கனகாம்பிகை திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஏம்பல் கிராமத்தை இணைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
    • புதிதாக உருவாக்கப்படும் அரிமளம் வட்டத்தில்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் வட்டத்தில் ஏம்பல், இரும்பாநாடு, குருங்களூர், மதகம் மற்றும் திருவாக்குடி ஆகிய ஊராட்சிகளைக் கொண்டு ஏம்பல் வருவாய் கிராமம் (பிர்க்கா) செயல்படுகிறது. இந்நிலையில் ஏம்பல், செங்கீரை, கீழாநிலை ஆகிய வருவாய் கிராமங்களை இணைத்து திருமயம் வட்டத்தில் உள்ள அரிமளத்தை தனி வட்டமாக உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு ஏம்பல் பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு ெதரிவித்து வருகின்றனர்.

    இது குறித்து ஏம்பல் வட்டார வளர்ச்சிக்குழுவினர் கூறியது: ஏம்பலை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டத்தை உருவாக்க வேண்டும் என அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்களிடம் கோரிக்கை மனு அளித்துள்ளோம். ஆனால், ஏம்பல் வருவாய் கிராமத்தை இணைத்து அரிமளத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய வட்டம் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    அவ்வாறு உருவாக்கினால், ஏம்பல் பகுதி மக்கள் 32 கிலோ மீட்டர் தொலைவுக்கு அலைய வேண்டி இருக்கும். எனவே, ஏம்பலை புதிய வட்டமாக உருவாக்க வேண்டும். இல்லையேல், ஏற்கனவே உள்ளபடி ஆவுடையார்கோவில் வட்டத்திலேயே தொடர்வது நல்லது என்றனர்.

    • நீண்ட காலமாக தேங்கி கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை.
    • அகஸ்தியன்பள்ளி- திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்–பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த மறைஞாயநல்லூரில் வட்டார தமிழக ஆசிரியர் கூட்டணி செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வட்டார தலைவர் இந்திரசித்தன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட தலைவர் செந்தில்நாதன், செயலாளர் புயல் குமார், பொருளாளர் மதியரசு, மகளரணி செயலாளர் சாந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார செயலாளர் அண்ணாத்துரை தீர்மானங்களை விளக்கி பேசினார்.

    கூட்டத்தில், திருச்சியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் ஐபெட்டோ பவளவிழா எழுச்சி மாநாட்டில் திரளாக பங்கேற்பது, மாவட்ட கல்வி அலுவலகத்தில் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கோப்புகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அகஸ்தியன் பள்ளி - திருத்துறைப்பூண்டி அகல ரெயில்பாதை திட்டப்பணிகள் ரூ.288 கோடியில் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடைபெற்றுள்ள நிலையில் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ரெயிலை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    இதில் சங்க உறுப்பினர்கள் அம்பிகாநிதி, நீலமேகம், சேகர், ஆனந்த் முருகு, பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார பொருளாளர் குமரவேலவன் நன்றி கூறினார்.

    • நாள் ஒன்றுக்கு 400-க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ளனர்.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பொதுமக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சி.

    நாகப்பட்டினம்:

    நாகை வள்ளலார் தர்ம சாலை, வள்ளலார் கருணை குழு, நாகூர் சித்திக் சேவை குழுமம், அருட்கஞ்சி குழு ஆகியவைகள் இணைந்து, நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகள் மற்றும் அங்கு வருகைதரும் பொது மக்களுக்கு தினமும் காலையில் அரிசி கஞ்சியை இலவசமாக வழங்குகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளாக இச்சேவையை செய்துவரும் இவர்கள் 1000 நாட்களை கடந்தும் இலவச சேவையை செய்து வருகின்றனர்.

    அரிசியுடன் பாசிப்பருப்பு, மிளகு, சீரகம், வெந்தயம், ஓமம், தேங்காய்பால், கீரை வகைகள், பூண்டு, இஞ்சி, உள்ளிட்ட 14 பொருட்களை சேர்த்து இலவசமாக வழங்கப்படும் அரிசி கஞ்சியை நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி குடித்து செல்கின்றனர்.

    நாள் ஒன்றுக்கு 400 க்கும் மேற்பட்டோர் பயன்பெறுவதாக தெரிவித்துள்ள சமூக ஆர்வலர்கள், கருணை யுள்ளம் கொண்டோரின் நிதி பங்களிப்பு காரணமாகவே இது சாத்தியமாகி இருப்பதாகும் தொடர்ச்சியாக இந்த சேவையை செய்வோம் என்று தெரிவித்தனர்.

    நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு ஆயிரம் நாட்களை கடந்துள்ள வள்ளலார் அமைப்பினரின் இலவச கஞ்சி ஊற்றும் தொண்டு சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

    • குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.
    • குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி அவரப்பாளையம் பகுதியில் காட்டில் இருந்து வழிதவறிய குரங்கு ஓன்று அந்தப்பகுதியில் சுற்றி திரிந்து கொண்டு பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இது குறித்து பல்லடம் பா.ஜ.க. வடக்கு ஒன்றிய தலைவர் பூபாலன் திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ்கிருஷ்ணனிடம் தகவல் தெரிவித்தார். அவரது அறிவுறுத்தலின்படி வனச்சரகப் பணியாளர் மணிகண்டன் அவரப்பாளையம் வந்து குரங்கை தேடி கண்டு பிடித்தார். அந்த குரங்கை வாழைப்பழம் கொடுத்து பிடித்து, உடுமலை சின்னாறு வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார். குரங்கை பிடித்த வனத்துறையினருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார்.
    • இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.

    திருப்பூர் :

    பல்லடம் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கோவை எம்.பி., நடராஜன், திட்ட பணிகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு வருகிறார். அதன்படி பல்லடம் ஒன்றியம், கரைப்புதூர் ஊராட்சியில் நடந்த ஆய்வு கூட்டத்தில், கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.

    அப்போது பொதுமக்கள் சார்பில் அளிக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாநகராட்சியை ஒட்டியுள்ள கரைப்புதூர், கணபதிபாளையம் ஊராட்சிகளை சார்ந்து ஏறத்தாழ ஒரு லட்சம் மக்கள் வசிக்கின்றனர். தினசரி வேலை நிமித்தமாக வந்து செல்பவரின் எண்ணிக்கையும் அதிகம்.

    தொழிலாளர்கள் நிறைந்த இப்பகுதிகளில் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் அதிக அளவில் நடக்கின்றன.புகார் அளித்து போலீசார் பல்லடத்தில் இருந்து வருவதற்குள் சம்பவங்களின் போக்கு மாறிவிடும். இப்பகுதியில், சமூக விரோத செயல்கள் நடக்காத நாட்களே கிடையாது என்று கூறலாம்.இதனால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் அதிகரித்துள்ளது. குற்ற சம்பவங்களை தடுக்க போலீசாரின் கூடுதல் கண்காணிப்பு அவசியமாகிறது.எனவே, அருள்புரத்தை மையமாக கொண்டு கூடுதல் போலீஸ் நிலையம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகிறோம். பொதுமக்கள் அமைதியுடன், பாதுகாப்புடன் வசிக்கஇக்கோரிக்கையை நிறைவேற்றி தர வேண்டும்.இவ்வாறு அதில் அவர்கள் கூறினர்.மனுவை பெற்று கொண்ட எம்.பி., நடராஜன், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

    • மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.
    • மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .

     திருப்பூர் : 

    திருப்பூர் அடுத்த பல்லடம் இச்சிப்பட்டி சிங்கப்பூர் நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று திருப்பூர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளனர் அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- எங்கள் பகுதியில் 400க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன .மக்கள் குடியிருப்புக்கு மத்தியில் தனியார் மில் ஒன்று செயல்பட்டு வருகிறது.மில்லில் பஞ்சுகளை அரவை இயந்திரம் மூலம் அரைத்து வருகின்றனர். அதிலிருந்து வெளிவரும் கழிவுப்பஞ்சுகள் கம்பரசர் ஏர் மூலம் அடித்து வருகின்றனர்.

    இதனால் நகர் முழுவதும் காற்றின் மூலமாக கழிவு பஞ்சு படர்கிறது. மேலும் அனைத்து வீடுகளுக்கும் காற்றில் பரவுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் அனைவரும் மூச்சு திணறல், சளி, இருமல் போன்ற தொந்தரவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே மாசு ஏற்படுத்தும் இந்த நிறுவனத்தை வேறு பகுதிக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறோம் .இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

    • அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது.
    • பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    திருப்பூர் : 

    கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களிலிருந்து கடந்த 2009 பிப்ரவரி மாதம் திருப்பூரை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

    அப்போது அவிநாசி தாலுகாவில் இருந்த அன்னூர் ஒன்றியம் கோவை மாவட்டத்திலும், அவிநாசி ஒன்றியம் திருப்பூர் மாவட்டத்திலும் சேர்க்கப்பட்டன. புதிய மாவட்டம் பிரித்தபோது அன்னூரை ஒட்டி உள்ள பொங்கலூர் ஊராட்சி மக்கள் தங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்தில் சேர்க்கும்படி கோரிக்கை வைத்தனர். இருந்தும் இந்த ஊராட்சி திருப்பூர் மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டது.

    இதனால் 12 ஆண்டுகளாக கடும் சிரமத்துக்குள்ளாகி வருவதாக அந்த ஊராட்சி மக்கள் கூறுகின்றனர்.

    இதுகுறித்து பொங்கலூர் ஊராட்சி மக்கள் கூறியதாவது:- கோவையில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அன்னூரில் இருந்து, 8 கி.மீ., தூரத்தில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூர் ஊராட்சியில், தாசராபாளையம், அய்யப்பநாயக்கன்பாளையம், மொண்டிபாளையம், திம்மநாயக்கன்புதுார், பாப்பநாயக்கன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் உள்பட 9 ஊர்கள் உள்ளன. பிரசித்தி பெற்ற மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில் இந்த ஊராட்சியில் தான் அமைந்துள்ளது.

    கோவை-சத்தியமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் பொங்கலூர் உள்ளது. பொங்கலூரை அடுத்துள்ள ஆம்போதி ஊராட்சியும், பொங்கலூருக்கு முன்னதாக உள்ள பசூர் ஊராட்சியும் கோவை மாவட்டத்தில் உள்ளன. ஆனால் நடுவில் உள்ள பொங்கலூர் ஊராட்சி மட்டும் திருப்பூர் மாவட்டத்தில் உள்ளது.

    இப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு செல்லவும், தாலுகா அலுவலகம் செல்லவும், மூன்று பஸ்கள் மாறி அவிநாசி செல்ல வேண்டிய நிலை உள்ளது. திருப்பூர் கலெக்டர் அலுவலகம் செல்ல வேண்டும் என்றாலும் 3 பஸ்கள் மாறி தான் செல்ல வேண்டும். அதேநேரம் கோவை மாவட்டத்துடன் சேர்க்கப்பட்டால் மிக அருகிலேயே ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் ஆகியவை அன்னூரில் உள்ளன. உதவி மின்வாரிய பொறியாளர் அலுவலகம், உதவி கோட்ட பொறியாளர் அலுவலகம் கோவை மாவட்டத்தில் உள்ள பசூர் மற்றும் அன்னூரில் உள்ளன.

    எங்கள் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க கோரி பொங்கலூர் ஊராட்சி மன்ற கூட்டத்தில் இரண்டு முறை தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை, திருப்பூர் கலெக்டர் மற்றும் தமிழக அரசுக்கு பலமுறை மனுக்கள் அனுப்பி, 12 ஆண்டுகளாக போராடி வருகிறோம். எங்களது சிரமத்தை போக்க அரசு பொங்கலுார் ஊராட்சியை கோவை மாவட்டத்துடன் சேர்க்க வேண்டும் என்றனர்.

    • 68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.
    • உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார்.

    பல்லடம்  : 

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் தொங்குட்டி பாளையம் ஊராட்சியில் தமிழக அரசின் மக்கள் தொடர்பு முகம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர் பிரியா நடராஜன் வரவேற்றார். பொங்கலூர் ஒன்றிய குழுத் தலைவர் வக்கீல் எஸ். குமார், துணைத் தலைவர் அபிராமி அசோகன், ஒன்றிய கவுன்சிலர் ஜோதிபாசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட சப்- கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மொத்தம்68 மனுக்கள் வரப்பெற்றதில் 26 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மீதம் 42 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. நிகழ்ச்சியின் போது விபத்தில் காயம் அடைந்த தொங்குட்டி பாளையத்தைச் சேர்ந்த சாமிநாதன் (வயது 61) என்பவர் ஆட்டோவில் இருந்து இறங்கி வர முடியாமல் அங்கேயே அமர்ந்திருந்தார். இதனை அறிந்த சப் கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் நேரடியாக ஆட்டோவின் அருகில் சென்று அவருக்கு விபத்து உதவித்தொகையான மாதம் ரூ. 1000க்கான உத்தரவு நகலை வழங்கினார். தொடர்ந்து அவர் முகாமில் கலந்து கொண்டு பேசும்போது, கல்வியின் அவசியம் குறித்து பெற்றோர்கள் குழந்தைகளுக்கு தெரிவிப்பதுடன் அவர்களை தினசரி கண்காணித்து ஊக்கப்படுத்த வேண்டும். குப்பை இல்லாத ஊராட்சியாக மாற்றுவதற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இந்த மக்கள் தொடர்பு முகாமில் ஒன்றிய கவுன்சிலர் பாலுசாமி, ஊராட்சி துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், பொங்கலூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சுந்தரவேல், தனி தாசில்தார் (ஊட்டச்சத்து) கோவிந்தராஜ், (சமூக பாதுகாப்பு திட்டம்) பாபு, வருவாய் ஆய்வாளர் மா.கருணாநிதி, கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ், ஊராட்சி செயலர் ஆனந்த் மற்றும் கால்நடை, தோட்டக்கலைத்துறை, வேளாண்மை துறை, சுகாதாரத்துறை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை
    • போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார்.

     பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஆர் .எஸ் .சில் உள்ள வருவாய் துறை அலுவலகத்தில் 195 குடும்பங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி காத்திருப்பு போராட்டம் நடந்தது. இதற்கு தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்டு புறநகர் மாவட்ட செயலாளர் கே. எம். இசாக் தொடங்கி வைத்தார். இதில் கடந்த 4 ஆண்டுகளாக இலவச வீட்டு மனை பட்டா கேட்டு பல கட்ட போராட்டங்கள் நடத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. ஆகவே ஊத்துக்குளி ஒன்றிய வருவாய் துறையை கண்டித்து தற்போது காத்திருப்பு போராட்டம் நடந்தது. 

    இதில் சிபிஐ. புறநகர் மாவட்ட துணை செயலாளர் ஜி.ரவி, சிபிஐ. மாவட்ட செயலாளர் பி. பழனிசாமி,சிபிஐ தாலுகா செயலாளர் வி. எஸ்.சரவணன்,மாவட்ட செயலாளர் சின்னசாமி, தாலுகா முன்னாள் செயலாளர் முத்துசாமி, ஊராட்சி தலைவர் பி.எஸ். செல்வி, ஆர். சுப்புலட்சுமி மற்றும் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஏ .ஐ. டி. யு .சி. மாவட்ட தலைவர் எம். மோகன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் செய்திருந்தது.

    • சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது.
    • கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது.

     பெருமாநல்லூர் :

    ஊத்துக்குளியில் இருந்து சென்னிமலை செல்லும் வழியில் ரெயில்வே பாலத்தின் அடியில் மழைக்காலங்கள் மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளாக சாக்கடை நீர் தேங்கி நின்று துர்நாற்றம் வீசுசுகிறது. இதனால் இந்த வழியாக நடந்து செல்லும் பள்ளி மாணவ மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர். இதனால் கொடிய நோய்கள் பரவும் நிலை உள்ளது. இது குறித்து ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் பலமுறை பொதுமக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்த சாக்கடை நீர் காவேரி நகர் பகுதியில் இருந்து கரைபுரண்டு ஓடி வருகிறது. அப்படி கரைபுரண்டு வரும் சாக்கடை கழிவு நீரை தடுப்பு கற்கள் மூலம் தடுத்து நிறுத்தியும் சிறிது சிறிதாக கரைந்து மீண்டும் பாலத்தின் அடியில் கழிவு நீர் தேங்கி நிற்கிறது. இதன் மூலம் வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர் .மூக்கை பிடித்துக் கொண்டுதான் நடந்து செல்ல முடிகிறது.அது மட்டுமில்லாமல் நடந்து செல்லும் போது அந்த கழிவு நீர் கால்களில் படும்போது தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், நாங்கள் பலமுறை ஊத்துக்குளி ஒன்றிய நிர்வாகத்திடம் குறை சொல்லிவிட்டோம். ஆனால் அவர்கள் எங்களுக்கும் நிர்வாகத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.இது ரெயில்வே சம்பந்தப்பட்டது என்று கைவிரித்து விடுகிறார்கள்.இதனால் மக்களின் பாதுகாப்புக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. ஆகவே இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உடனடியாக தலையிட்டு இதற்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றனர். 

    • வார சந்தை சீரமைப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்
    • சேரும் சகதியுமாக இருந்தது

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் நகராட்சிக்குட்பட்ட வார சந்தை நீண்ட நாட்களுக்கு பிறகு நகராட்சி மூலமாக ஏலம் தனிநபருக்கு விடப்பட்டுள்ளது. மேலும் சந்தை முழுவதும் சேரும் சகதியுமாக கிடந்த நிலையில் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்கறி வாங்க வருபவர்கள் மிக சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

    இந்நிலையில் ஏலம் எடுத்த குத்தகைக்காரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் சகதி மற்றும் நீண்ட நாட்களாக பயன்பாட்டில் இல்லாத இடங்களை சரி செய்து வியாபாரிகள் அமர்வதற்கான ஏற்பாடுகள் செய்து மழை காலங்களில் பொதுமக்கள் நடந்து வருவதற்கு சிரமம் இல்லாமல் காய்கறிகள் வாங்கி செல்வதற்கு நடைபாதை முழுவதும் மண் அடித்து சரி செய்து உள்ளனர்.

    இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் மிக ஆர்வமாக சந்தைக்கு வந்து காய்கறிகள் வாங்கிச் செல்கின்றனர். சந்தையை சீரமைத்ததால் 50க்கும் மேற்பட்ட காய்கறி வியாபாரிகள் கடை போடுவதற்கு வாய்ப்பு உள்ளதால் வியாபாரிகள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். மேலும் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கு பாதுகாப்பாக கேமராக்கள் பொருத்தப்படுவதாக தெரிவித்தனர்.

    ×