search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • கடலூர் மாவட்டத்தில் 3742 இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நாளை நடக்கிறது.
    • பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய் பொதுமக்களை பாதிக்காமல் தடுக்கும் பொருட்டு சிறப்பு கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நாளை (7 ந்தேதி) 3742 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட உள்ளது. இரண்டாவது தவணை செலுத்தியவர்கள் 9 மாத இடைவெளியாக இருந்தது குறைக்கப்பட்டு தற்சமயம் 6 மாத இடைவெளியில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அரசு வழிவகை செய்துள்ளது. மேலும் 15.07.2022 முதல் 30.09.2022 வரை 75 நாட்களுக்கு மட்டுமே 18 வயது முதல் 59 வயது வரை உள்ள அனைவருக்கும் விலையில்லா கூடுதல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது. கடலூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகள் முழுமையாக செலுத்தப்பட்டுள்ளது. 

    கடலூர் மாவட்ட த்தில் தற்போது 12,48,000 பயனாளிகள் கூடுதல் தவணை தடுப்பூசி செலுத்திட வேண்டியுள்ளனர். அவர்கள் இந்த இலவச தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி தடுப்பூசி யினைசெலுத்திக் கொள்ளுமாறு கேட்டு க்கொள்ளப்படுகிறது. பொதுமக்கள் ஏதேனும் அடையாள அட்டை காண்பித்து தங்கள் வீட்டின் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்களில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். கொரோனா தொற்று தற்போது மாவட்ட த்தில் அதிகரித்து வரும் நிலையில் கூடுதல் தடுப்பூசி செலுத்திக் கொ ள்வதன் மூலம் கொரோனா தொற்றுக்குள்ளானாலும் அது தீவிரமாகாது என்பதால், கொரோனா தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்து க்கொள்ள இந்த சிறப்பு தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு கூறப்பட்டு இருந்தது. 

    • வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
    • பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை உண்டியல் திருடப்பட்டது.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டம் அவினாசி ஒன்றியம் பழங்கரை ஊராட்சி கமிட்டியார் காலனியில் வசிப்பவர் சாமிநாதன் , ஓய்வு பெற்ற சர்வேயர். இவரது மனைவி ருக்மணி . இவர்கள் நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு மேட்டுப்பாளையம் சென்றுவிட்டு மாலை 4 மணியளவில் திரும்ப வீட்டிற்கு வந்தனர். அப்போது வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.உள்ளே சென்று பார்த்தபோது இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு அதிலிருந்த துணிகள் மற்றும் பொருட்கள்சிதறிகிடந்தன. மேலும் பிரோவிலிருந்த பணம் ரூ. 40 ஆயிரம் மற்றும் கோவிலுக்கு செல்வதற்காக காணிக்கை போட்டுவைத்திருந்த உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்த பணம்சுமார் ரூ.8 ஆயிரமும் திருடப்பட்டது தெரியவந்தது.

    அதே தெருவில் எதிர்திசையில் சாமிநாதனின் மகள் கோகிலவாணி (36) அவரது கணவர் ரமேஷ் (41) ஆகியோர் வசித்து வருகின்றனர். ரமேஷ் நல்ல கட்டிபாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியராகவும், கோகிலவாணிகருக்கன்காட்டுப்புதூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இவர்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் பள்ளிக்கு சென்று பின்னர் மாலை திரும்பிவந்து பார்த்த போது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவிலிருந்து பணம் ரூ 50 ஆயிரம் அவர்கள் வீட்டில் வைத்திருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்து ரூ10 ஆயிரம் ஆகியவைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. ஒரே பகுதியில் பட்டப்பகலில் எதிர் எதிரே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் வீட்டில் திருட்டு நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடந்த மாதம் 29-ந்தேதி அதே கமிட்டியார் காலனியில் அடுத்தடுத்து தர்மர், மணிகண்டன் ஆகியோரது வீட்டில் புகுந்து பணம் மற்றும் நகைகள் திருடப்பட்டது குறிப்பிடதக்கது.

    அப்பகுதி மக்கள் இதுகுறித்து கூறுகையில் ,குடியிருப்புகள் நிறைந்த இதே பகுதியில் அடிக்கடி திருட்டு நடைபெறுவதால் பகல் சமயத்தில் கூட வீட்டை பூட்டிவிட்டு வெளியில் எங்கும் செல்லமுடியாத நிலை உள்ளது. பாதுகாப்பு இல்லாத நிலை உள்ளது. இதுபோல் தொடர் திருட்டு நடைபெறுவது நாங்கள் மிகவும் அச்சத்தில் உள்ளோம். கமிட்டியார் காலனி பகுதியில் போலீசார் ரோந்துபணியில் ஈடுபடவேண்டும் என்றனர்

    கொள்ளை குறித்த புகாரின்பேரில் அவினாசி போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து பட்டப்பகலில் திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் தடயவியல் நிபுணர்கள் கைரேகைகளை பதிவு செய்து எடுத்து சென்றுள்ளனர்.

    • காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.
    • மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை பொதுமக்கள் செல்பி எடுக்கின்றனர்.

    பரமத்திவேலூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு சுமார் 2 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீராக அதிகரித்துள்ளது.

    இதனால் பரமத்தி வேலூர் காவிரி ஆற்று பாலத்தின் வழியாக இரு கரைகளையும் மூழ்கடித்தப்படி வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. சேலம்- கரூர் தேசிய நெடுஞ்சாலையில் பரமத்தி வேலூர் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள புதிய பாலத்தின் வழியாக செல்லும் கார்கள், இரு சக்கர வாகனங்களை நிறுத்தி குடும்பத்தினருடன் பாலத்தின் மீது நின்று காவிரி ஆற்றில் செல்லும் வெள்ளத்தை பார்க்கிறார்கள்.

    அதேபோல் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடும்பத்தினருடன் காவிரி ஆற்று பாலத்திற்கு வந்து வெள்ளப்பெருக்கை அதிசயமாக பார்க்கின்றனர். மேலும் ஆற்றில் சீறி பாயும் வெள்ளத்தை செல்பி எடுக்கின்றனர்.

    இந்நிலையில் பரமத்தி வேலூர் போலீஸ் டிஎஸ்பி கலையரசன் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு, கண்காணிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். காவிரி ஆற்று பாலத்தில் நெடுகிலும் வாகனங்களை நிறுத்திவிட்டு அதிக நேரம் வாகன ஓட்டிகள் பார்வையிட கூடாது என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் சென்று நீண்ட நேரம் பார்வையிடவும் அனுமதிக்கவில்லை.

    பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அங்கிருந்து செல்லுமாறு அறிவுறுத்தி வருகின்றனர். அங்கு மக்கள் கூட்டம் அதிகரிப்பதால் போலீஸ் சோதனை சாவடி அருகே ஆங்காங்கே புதிய கடைகள் முளைத்துள்ளது. வியாபாரம் களை கட்டுகிறது.

    • முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர்.
    • பொதுமக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை நீலா தெற்கு வீதியில் பிரபல தொழிலதிபர் ரவி என்பவருக்கு சொந்தமான சிவசக்தி என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் உள்ளூர் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வந்தனர். குறிப்பாக சிவசக்தி நிதி நிறுவனத்தில் தனியார் வங்கிகளை விட அதிக வட்டி என்பதால், வைப்பு தொகை, சேமிப்பு கணக்கு, மாத சீட் போன்றவைகளில் பல கோடி ரூபாயை பொதுமக்கள் முதலீடு செய்திருந்தனர்.

    இந்த நிலையில் முதலீடு செய்தவர்கள் கால அவகாசம் முடிந்ததால் சம்மந்தப்பட்ட நிதி நிறுவனத்தில் பணம் கேட்டு சென்றுள்ளனர். ஆனால் நிதி நிறுவன ஊழியர்கள் கால அவகாசம் சொல்லி காலம் தாழ்த்தி வந்துள்ளனர்.

    இந்த நிலையில் ஆத்திரம் அடைந்த வாடிக்கையாளர்கள் நிதி நிறுவனத்தின் வாசலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து பொதுமக்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியதை அடுத்து, பாதிக்கப்பட்டவர்கள் நிதி நிறுவனத்தின் உள்ளே புகுந்து ரகளையில் ஈடுபட்டனர். பின்னர் அங்கு வந்த நிதி நிறுவன உரிமையாளர் ரவி மற்றும் ஊழியர்களிடம் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் சார்பாக தங்களுக்கு வழங்கப்பட்ட காசோலைகள் அனைத்தும் வங்கியில் ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், பணத்தை விரைந்து கொடுக்க காவல்துறை நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பாதிக்கப்பட்ட பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில தலைவர் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 217-ம் ஆண்டு நினைவு தினம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் நாளை (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மகாலில் நாளை காலை 8 மணி முதல் 10 மணிவரை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி இன்றைய இளம் தலைமுறையினர், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் திருப்பூரில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கட்சியின் கவுரவ தலைவர் சரண்யா கே.எம்.முருகேசன், துணைத் தலைவர் சிலீக் என்.எம்.ராமசாமி, பொருளாளர் ஜியோ ஏ.என்.செல்வராஜ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    • டாஸ்மாக் கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது.
    • பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 42-வது வார்டு கே.வி.ஆர். நகர் பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இந்த கடை அருகே தொழில் நிறுவனங்கள் உள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாகும். எனவே அந்த கடையை அகற்ற வேண்டுமென மாகராட்சி கவுன்சிலர் அன்பகம் திருப்பதி மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால் அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    இந்தநிலையில் இன்று காலை அன்பகம் திருப்பதி தலைமையில் பொதுமக்கள் டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதுடன், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இது குறித்த தகவல் அறிந்ததும் திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திக்கேயன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் கலெக்டரிடம் மனு கொடுங்கள் என்றனர்.

    இதையடுத்து மறியலை கைவிட்ட பொதுமக்கள் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி தலைமையில் திருப்பூர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். இது குறித்து அன்பகம் திருப்பதி கூறுகையில், கே.வி.ஆர்.நகர் டாஸ்மாக் கடையால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. கடையை அகற்ற வலியுறுத்தியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கபடாமல் உள்ளது. 10 நாட்களுக்குள் அகற்றாவிட்டால் பொதுமக்களை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

    • சட்ட விரோதமாக கல்குவாரி இயங்கி வருவதாக பொதுமக்கள் புகார்.
    • புதிய குவாரிகளுக்கு அங்கு அனுமதி கொடுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு வட்டம் அங்கேரிப்பாளையம் எம்.எஸ்.எம். மணி நகரில் வசிக்கும் பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-எங்கள் பகுதியில் குடிநீர், தார்ரோடு, சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் இன்றி அவதிப்பட்டு வருகிறோம்.

    எங்கள் பகுதியில் இருந்த பாறைகுழியை மூடியதற்கு பிறகு குப்பை கழிவுகளை எங்கே கொட்டுவது என்று திண்டாடி வருகிறோம். தெருக்களில் மாநகராட்சி சார்பில் குப்பைத் தொட்டியும் அமைக்கப்படவில்லை. குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. சாலைகள் பள்ளம் மேடாக உள்ளது. வாகனங்களில் செல்ல முடியவில்லை. இப்படியாக கடந்த 15 வருடங்களாக அவதிப்பட்டு வருகிறோம். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிட்ம் முறையிட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆகவே இந்த பகுதியில் போதிய அடிப்படை வசதிகளை செய்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும்.
    • பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    சாத்தான்குளம்:

    நெல்லையில் இருந்து முனைஞ்சிப்பட்டி, பேய்க்குளம், சாத்தான்குளம் வழியாக குட்டத்துக்கு அரசு பஸ் தடம் எண் 173 ஜி இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் அதிகாலை நெல்லையில் இருந்து 4 மணிக்கு புறப்பட்டு சாத்தான்குளத்துக்கு 5 மணிக்கு வந்து சேரும். வாரத்தில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை முறையாக இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த பஸ்சை நம்பி வெளியூர்களில் இருந்து அதிகாலை வரும் வியாபாரிகள், கொள் முதல் செய்ய செல்லும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பயனடைந்து வருகின்றனர். ஆனால் இந்த பஸ் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயக்கப்படாமல் நிறுத்தம் செய்யப்படுவதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டு தெரிவித்துள்ளனர்.

    இந்த பஸ் இயக்கப்படாததால் பொதுமக்கள், வியா பாரிகள் பெரிதும் பாதிக்க ப்படுகின்றனர். ஆதலால் போக்கு வரத்து துறை அதிகாரிகள் இதனை கவனித்து தொடர்ந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கொரோனா தினசரி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அதே நேரம் சிகிச்சையில் இருப்பவர்கள் குணமடைந்து வீடு திரும்பி வருகின்றனர்.

    பிற மாவட்டங்களில் தினசரி பாதிப்பு குறைந்து வரும் நிலையில் ஈரோட்டில் கடந்த சில நாட்களாக தினசரி பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

    இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறையினர் வெளியிட்டுள்ள பட்டியல்படி மாவட்டத்தில் ஒரே நாளில் மேலும் 67 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் மொத்தம் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 34 ஆயிரத்து 139 ஆக உயர்ந்துள்ளது.

    மேலும் சிகிச்சையில் இருந்த 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 1 லட்சத்து 32 ஆயிரத்து 984 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 734 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது மாவட்டத்தில் கொரோனா பாதிப்புடன் 421 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    மாவட்டத்தில் மெல்ல மெல்ல கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என சுகாதாரத் துறையினர் வலியுறுத்தியுள்ளனர்.

    • 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை பிரான்சிஸ் வளர்த்து வருகிறார்
    • கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே பருவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரான்சிஸ் ,மளிகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் சுமார் 6 மாதங்கள் ஆன ஆட்டுக்குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார்.

    இந்த நிலையில் இவரது கடை முன்பு ஆட்டுக்குட்டியை கட்டி வைத்திருந்தார். இந்த நிலையில்,கடைக்கு பொருள் வாங்குவது போல வந்த ஒருவர் பிரான்சிஸ் கடைக்குள் வேலையாக இருந்தபோது ஆட்டுக்குட்டியை நைசாக மோட்டார்சைக்கிளில் வைத்து திருடிச் சென்றார். பின்னால் அவரை தொடர்ந்து சென்று அவரை வழிமறித்து அங்குள்ள பொதுமக்களுடன் சேர்ந்து பிடித்து தர்ம அடி கொடுத்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் பிடிபட்டவரிடம் விசாரணை செய்தபோது சூலூரை சேர்ந்த ராமசாமி மகன் பிரகாஷ், (45) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் ஆடு திருடுவதற்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும்.
    • சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது.

    வீரபாண்டி :

    திருப்பூரில் இருந்து பல்லடம் செல்லும் சாலை போக்குவரத்து நெருக்கடி நிறைந்த சாலையாகும். அதிக வாகனங்கள் சென்று வந்து கொண்டிருக்கின்றன. திருப்பூர் மாநகராட்சி 53 -வது வார்டுக்குட்பட்ட இந்த சாலையில் நொச்சிப்பாளையம் பிரிவு, மூலக்கடை அருகே சாக்கடை நீர் செல்லும் வாய்க்கால் அமைக்கப்பட்டு கழிவுநீர் வெளியேற்றப்பட்டு வந்தது.

    இந்நிலையில் கடந்த சில மாதங்களாக சாக்கடை வாய்க்காலில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து சம்பத்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லை. தற்போது அடிக்கடி மழை பெய்து வருவதால் சாக்கடை அடைப்பினால் தேங்கிய நீர் சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாக்கடை நீரில் செல்ல வேண்டியுள்ளது. மேலும் நடந்து செல்பவர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    • சமத்துவபுரத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம்.
    • சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு செய்து கொள்ள வேண்டும் என நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    திருப்பூர் தெக்களூர் மக்கள் சமத்துவபுரம் பராமரிப்பு பணி தொடர்பாக திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளித்தனர்.அதில், நாங்கள் அவினாசி வட்டம், தெக்களூர் சமத்துவபுரத்தில் உள்ள குடியிருப்புகளை விலைக்கு வாங்கி 10 ஆண்டுகளுக்கு மேலாக வசித்து வருகிறோம். அதற்கு பட்டா கேட்டு மனு அளித்துள்ளோம். தற்போது சமத்துவபுரம் வீடு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது.

    இந்நிலையில் சொந்த செலவில் வீட்டின் பராமரிப்பு பணிகளை செய்து கொள்ள வேண்டும் என எங்களது வீடுகளில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இது குறித்து தாங்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது. 

    ×