search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • இன்றும் 3-வது நாளாக வனத்துறை மற்றும் போலீசார் காட்டெருமையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வன பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வன கால்நடை மருத்துவ குழுவுடன் 10 பேர் கொண்ட 2 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் பகுதியில் நேற்று முன் தினம் நள்ளிரவு நேரத்தில் காட்டெருமை ஒன்று சுற்றித் திரிந்தது. அந்த காட்டெருமை கலெக்டர் அலுவலக வளாகத்தில் புகுந்தது.

    3-வது நாளாக தேடும் பணி

    உடனே வனத்துறை ஊழியர்கள் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் காவல்துறையினருடன் இணைந்து காட்டெருமையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அந்த காட்டெருமை அங்கிருந்து ஓடி விட்டது.அதனை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.

    இரவு நேரம் ஆகிவிட்டதால் நேற்று 2-வது நாளாக வனத்துறையினர் காட்டெருமையை தீவிரமாக தேடி வந்தனர்.

    ஆனால் காட்டெருமை சிக்கவில்லை. தொடர்ந்து இன்றும் 3-வது நாளாக வனத்துறை மற்றும் போலீசார் காட்டருமையை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இது தொடர்பாக மாவட்ட வன அலுவலர் முருகன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வனத்துறை வேண்டுகோள்

    வண்ணார்பேட்டை பகுதியில் இதுவரை அந்த காட்டெருமை தென்படவில்லை. இதனால் வன பாதுகாவலர், வனச்சரக அலுவலர், வன கால்நடை மருத்துவ குழுவுடன் 10 பேர் கொண்ட 2 தனி குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த குழு கடந்த 2 நாட்களாக இரவு பகலாக தேடி வருகிறோம். காட்டெருமை நடமாட்டத்தை பொதுமக்கள் வெளியே பார்த்தாலோ அல்லது காட்டெருமை குறித்து தகவல் கிடைக்கப்பெற்றாலோ உடனடியாக நெல்லை மாவட்ட வன அலுவலக கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 0462 2553005 என்ற எண்ணுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கவும். மேலும் பொதுமக்கள் நேரில் கண்டால் அதன் அருகில் சென்று செல்பி எடுக்கவோ அதனை விரட்டவோ முயற்சிக்க வேண்டாம்.

    இவ்வாறு அதில் கூறியிருந்தார்.

    • சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.
    • திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி துணை அஞ்சல் நிலையத்திற்கு உட்பட்டு அவரப்பாளையம், நொச்சிப்பாளையம், குப்பாண்டம்பாளையம், வீரபாண்டி, பலவஞ்சிபாளையம், வித்யாலயம்,கரைப்புதூர், சென்னிமலைபாளையம் உட்பட சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்கள் வருகின்றன.

    இந்த அஞ்சல் நிலையத்தில் ஆதார் கார்டில் திருத்தம் செய்ய காலை 8மணிமுதல் பொதுமக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.

    காலை 9மணிக்கு அஞ்சல் நிலையம் திறக்கப்படுகிறது. ஆனால் காலை 10.30 மணிக்கு பணிகள் தொடங்கும் நிலையில் நெட்வொர்க் வேலை செய்யவில்லை. நாளை வாருங்கள் என்று திருப்பி அனுப்பபடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    இதனால் வேலைக்கு செல்லாமல் காலையிலிருந்து காத்து நிற்கும் பொதுமக்கள் கவலை அடைகின்றனர். எனவே இதற்கு தீர்வு காண அஞ்சல் துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன.
    • பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் அயோத்தியாப் பட்டணம், வாழப்பாடி, பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூர் பேரூராட்சிகள் சேலம்–-சென்னை தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் அமைந்துள்ளன. இந்த 4 பேரூராட்சிகளும் அருகிலுள்ள கிராம மக்களின் போக்குவரத்துக்கு முக்கிய மையமாக விளங்கி வருகின்றன.

    சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பெரும்பாலான தனியார் பஸ்கள், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி, புத்திர–கவுண்டன்பாளையம், பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் காரிப்பட்டி ஆகிய ஊருக்குள் செல்வதில்லை. சேலம்-சென்னை புறவழிச்சாலையிலேயே இயக்கப்படுகின்றன.

    இதனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில், இப்பகுதியைச் சேர்ந்த பயணி–களை ஏற்ற மறுக்கின்றனர். இதனால், குறித்த நேரத்திற்கு பயணிக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வாழப்பாடி வட்டாட்சியர், மோட்டார் வாகன ஆய்வாளர், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோரை ஒருங்கிணைத்து 3 ஆண்டுக்கு முன் அமைதிக்குழு கூட்டி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

    சேலம்-–ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் ஊருக்குள் சென்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்ல நடவடிக்கை எடுப்பதென இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    ஆனால், சேலம் மற்றும் ஆத்தூர் பஸ் நிலையங்களில் இருந்து பெரும்பாலான தனியார் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதும், வாழப்பாடி பகுதி பயணிகளை ஏற்றிச் செல்வதற்கு மறுப்பதும் தொடர்ந்து வருகிறது. இதனால், சேலம்– ஆத்தூர் வழித்தடத்திலுள்ள பேரூராட்சிகள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    எனவே, சேலம் –ஆத்தூர் வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள் புறவழிச்சாலையில் இயக்கப்படுவதை தடுக்கவும், இந்த வழித்தடத்திலுள்ள அனுமதிக்கப்பட்ட பஸ் நிறுத்தங்களில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்–செல்வதற்கும், வருவாய்த்துறை, போக்கு–வரத்துத்துறை, காவல்த்துறை அதிகாரிகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென, இப்பகுதி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    • அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.
    • மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் சாயப்பட்டறை வீதி நீர்நிலை புறம்போக்கில் பொதுமக்கள் வசித்து வந்தனர். இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி அதிகாரிகள் அப்பகுதியில் இருந்த பொதுமக்களுக்கு வீடுகளை காலி செய்யச்சொல்லி, நோட்டீஸ் வழங்கினர். இதையடுத்து பொதுமக்கள் வீடுகளை காலி செய்ய போதிய கால அவகாசம் வழங்கப்பட்டது. நெருப்பெரிச்சல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்கப்பட்டது. மேலும் பயனாளிகளுக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்ய குலுக்கல் முறை நடந்தது. அரசுக்கு செலுத்த வேண்டிய பங்களிப்புத்தொகைக்கு கடன் உதவி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டது.

    இந்தநிலையில் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு உரிய தகவல் அளிக்காததால் தொகை செலுத்துவதில் குழப்பம் ஏற்பட்டது. இது தொடர்பாக இன்று அதிகாரிகளுடன் அப்பகுதி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனிடையே மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட நிலையில், வீடுகள் இடிக்கும் பணி 2 நாட்களில் தொடங்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
    • முன்னதாக ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.

    கபிஸ்தலம்:

    தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர்கள் ராஜ்குமார், சிவரஞ்சனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் வட்டார சுகாதார மேற்பரப்பு பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

    சிறப்பு விருந்தினராக கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி சுகாதார செவிலியர் முத்து மாலை, கிராம சுகாதார செவிலியர்கள் ஜான்சி ராணி, சங்கவை, செந்தமிழ் செல்வி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது.
    • ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே கேத்தனூரில் கோவை எம்.பி. நடராஜன் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கேத்தனூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு கோவை எம்.பி., பி.ஆர்.நடராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கேத்தனூர் ஊராட்சியில் சீரான குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை தொட்டி கட்ட தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏழரை சதவீதம் மருத்துவ படிப்பு படிக்க தனி இட ஒதுக்கீடு மற்றும் 6 ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கு கல்லூரி மேல்படிப்புக்கு மாதம் ரூ.ஆயிரம் உதவி தொகை வழங்கப்படும் என்ற தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பால் அரசு பள்ளிகளில் தங்களது குழந்தைகளை பெற்றோர் சேர்த்து வருகின்றனர். குறிப்பாக தனியார் பள்ளிகளில் படிக்க வைக்கும் பெற்றோர் அப்பள்ளிகளில் இருந்து தங்களது குழந்தைகளை விடுவித்து அரசு பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். அதனால் அரசு பள்ளிகளில் வகுப்பறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகள் போதாத நிலை உருவாகியுள்ளது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று தீர்வு காணப்படும். அதே போல் ஊராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு மாத ஊதியமாக ரூ.3600 மட்டுமே வழங்கப்படுகிறது. அத்தொகையை உயர்த்தி வழங்கிட தமிழக அரசை கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் பொங்கலூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் குமார், ஊராட்சி தலைவர் சித்ரா ஹரிகோபால், ஒன்றிய கவுன்சிலர்கள் ஸ்ரீ பிரியா புருஷோத்தமன்,லோகு பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர் மகேஷ்வரன் மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர்கலந்துகொண்டனர்.

    • 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக குடிநீர் சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது.
    • குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி சாதாரண கூட்டம் கூட்டம் அரங்கில் நடந்தது.

    கூட்டத்தில் மேயர் தினேஷ்குமார் பேசியதாவது:-

    மாநகராட்சிக்கு 497 பேட்டரி வாகனங்கள் வாங்கியதாக ஆவணங்கள் உள்ளது. இதில், தற்போது 202 மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. வாகனங்கள் சப்ளை செய்த நிறுவனம், அதை பெற்று கொண்ட அதிகாரிகள், பயன்படுத்த வழங்கிய அலுவலர்கள் அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும்.

    குடிநீர் பிரச்னையில் 4வது குடிநீர் திட்டப் பணிகள் காரணமாக சப்ளையில் சற்று தாமதம் ஏற்பட்டது. பயன்பாட்டில் இல்லாத மேல்நிலைத் தொட்டிகள் கணக்கெடுக்கப்பட்டு–ள்ளன. அவை முறையாக பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.குழாய் பதிப்பு பணிக்குப்பின் சாலை முறையாகப் பராமரிக்காவிட்டால் ஒப்பந்ததாரர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து பணி நடைபெறும் இடங்களில் உரிய விவரங்களுடன் தகவல் பலகை வைக்கப்படும்.விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வர திட்டமதிப்பீடு செய்யும் பணி நடைபெறுகிறது.

    விடுபட்ட பகுதிகள் குறித்து கவுன்சிலர்கள் தகவல் அளிக்கலாம். குப்பை அகற்றும் பணிக்கு புதிய குப்பை தொட்டிகள், வாகனங்கள் வாங்கப்படும்.ஊட்டச்சத்து துறை மூலம் அங்கன்வாடிகள் மேம்படுத்தப்படும். மாநக ராட்சியில் மக்கள் குறை கேட்புக்காக 155304 என்ற டோல் பிரீ எண் பெறப்பட்டுள்ளது. இதனால், வசதிகள் உள்ளிட்ட எந்த துறை குறித்த புகார்களும் பெறப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விரைவில் இது பயன்பாட்டுக்கு வரும்.இவ்வாறு அவர் பேசினார்.

    • கமுதி யூனியனில் வளர்ச்சி பணிகள் ஆய்வு செய்து பொதுமக்களை சந்தித்து குறைகளை கலெக்டர் கேட்டறிந்தார்.
    • இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ கோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன்அச்சங்குளம் ஊராட்சி காடநகரி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 9.04 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டடப் பணி, பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்

    ரூ. 511.25 லட்சம் மதிப்பீட்டில் பார்த்திபனூர்-கமுதி ரோடு முதல் நகரத்தார்குறிச்சி வழியாக அபிராமம் வீரசோழன் சாலை வரை சுமார் 10 கிலோமீட்டர் தூரம் அமைக்கப்பட்டு வரும் தார் சாலை பணிகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    நகரத்தார் குறிச்சி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 1.60 லட்சம் மதிப்பீட்டில் புதுபிக்கப்பட்ட நூலகக் கட்டடப் பணியினையும், மண்டல மாணிக்கம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ. 5.25 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுவரும் பொது சுகாதார வளாக கட்டடப் பணியினையும் பார்வையிட்டார்.

    கமுதி யூனியன் கோடங்கிப்பட்டி தொடக்கப்பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளிடம் கலெக்டர் கலந்துரையாடினார். பின்னர் கோடாங்கிப்பட்டி கிராம மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பூமாலைப்பட்டி கிராமத்தில் இருந்து கோடாங்கிப்பட்டி கிராமத்திற்கு தார் சாலை அமைக்கும் பணி மற்றும் குடிதண்ணீர் பிரச்சினைக்கு நிரந்திர தீர்வு காணப்படும் என கிராம மக்களிடம் கலெக்டர் தெரிவித்தார்.

    இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொண்டு பொது இடங்களில் மரம் வளர்த்து பசுமை கிராமமாக மாற்ற முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

    பின்னர் கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானிடாம்வர்கீஸ் திடீர் ஆய்வு செய்தார்.அங்குள்ள இ-சேவை மையத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்து எவ்வளவு நாட்களில் தீர்வுக்காணப்படுகிறது? போன்ற விவரங்களை கேட்டறிந்தார்.

    முன்னதாக கமுதி அரசு மருத்துவமனையிலும் கலெக்டர் ஆய்வு செய்து பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

    இந்த ஆய்வின் போது ராமநாதபுரம் ஊரக வளர்ச்சித் துறை செயற்பொறியாளர் சுந்தரேசன், கமுதி வட்டாட்சியர் சிக்கந்தர் பபிதா, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜ கோபால், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது.
    • பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெற்றிருந்தன.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம், காணை ஊராட்சி ஓன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில் தமிழக அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. புகைப்படக் கண்காட்சியில், தமிழ்நாடு முதல்மை-அச்சர் பொறுப்பேற்று, முதல் பணியாக 5 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டு, நடைமுறைப்படுத்திய திட்டங்களான ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்தல், நகரப் பஸ்களில் பெண்கள் இலவச பயணத்திட்டம், முதலமை ச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தனியார் மருத்து வமனையில் கொரோனா சிகிச்சை பெறும் திட்டம் உள்ளிட்ட திட்டங்கள் குறித்து புகை ப்படங்கள் பொது மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் இடம்பெ ற்றிருந்தன.

    மேலும், தமிக முதல்-அமை ச்சரின் 1 லட்சம் விவசா யிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம், கொரோனா தடுப்பு ஆய்வுப்பணிகள், திருக்கோவில்களில் நிலையான மாத சம்பளம் இன்றி பணியாற்றி வரும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் மற்றும் இதர பணியாளர்களுக்கு கொரோனா கால நிவாரண உதவித்தொகை ரூ.4,000 மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டம், மக்களை தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வித்திட்டம், இருளர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தேவையான நலத்திட்டங்கள், இலங்கை தமிழர்களுக்கான நலத்திட்டங்கள், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான திட்டங்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வரின் கனமழை மற்றும் வெள்ள மீட்பு பணி ஆய்வு புகைப்படங்கள் உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் பற்றிய புகைப்படங்கள் இடம் பெற்றிருந்ததை அனுமந்தபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டனர்.

    • மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் நாளை (13-ந் தேதி) நடைபெற இருந்த மக்கள் தொடர்பு முகாம் தற்போது மாற்றம் செய்யப்பட்டு வருகிற 15-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.

    இதில் அரசு அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களை கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கம் ஆகும்.

    எனவே கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம்.மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • சென்னிமலை பேரூராட்சி குப்பை கிடங்கில் திடீர் புகை மண்டலத்தால் பொதுமக்கள் அச்சமடைந்தனர்.
    • உடனே தீயணைப்பு அலுவலகத்திற்கு தெரிவிக்கப்பட்டது.அவர்கள் வந்து தண்ணீரை பீய்ச்சி அடிச்சி தீயை அணைத்தனர்.

    சென்னிமலை:

    சென்னிமலை டவுன், உப்பிலிபாளையம் ரோட்டில் குன்று பகுதியில் பேரூராட்சி குப்பைகள் கொட்டப்படும் கிடங்கு உள்ளது.

    நேற்று காலை குப்பைகள் கொட்டியுள்ள பகுதியிலிருந்து திடீரென தீப்பிடித்து எறிய தொடங்கியது. சிறிது நேரத்தில் அப்பகுதியே புகை மண்டலமாக காட்சியளித்தது. இதனால் அந்த வழியாக செல்பவர்கள் மற்றும் அருகில் வசிக்கும் மக்கள் குப்பைகளில் இருந்து வெளியேறிய புகையால் திணறினர்.

    உடனே பேரூராட்சி அலுவலகத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் கொடுத்தனர். பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் தீயணைப்பு நிலையத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். தீயணைப்பு வீரர்கள் குப்பைகளை கிளறி அதில் உள்ள தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். அப்போது பேரூராட்சி பணியா–ளர்களும் உடனிருந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

    இப்பகுதியில் ஏற்பட்ட திடீர் புகை மண்டலம் சிறிது நேரம் மக்களுக்கு மூச்சு திணறல் ஏற்படுத்தியதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் தெரிவித்தனர். குப்பைகளில் பிடித்த தீ முழுவதும் அணைக்க–ப்பட்டதால் புகை மண்டலம் கட்டுக்குள் கொண்டு–வரப்பட்டு இயல்பு நிலை திரும்பியது. குப்பையில் தீப்பிடித்தது எப்படி என்பது குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.–––

    • மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா நடைபெற்றது.
    • சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    பள்ளிப்பாளையம்:

    பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை அடுத்த ஆனங்கூர் அண்ணாநகர் பகுதியில் ஸ்ரீ விச்வசேனர், ஸ்ரீ தேவி -பூ தேவி சமேதாய ஆதிகேசவ பெருமாள் சக்கரயோக நரசிம்மர், ஸ்ரீ தன்வந்திரி, ஸ்ரீ பக்த ஆஞ்சநேய சாமி , நவக் கிரஹ மூர்த்திகளுக்கு 5 ஆண்டுக்கு ஒரு முறை பாரம்பரியமாய் கொண்டாடும் கும்பிடுதல் விழா கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி 3 நாட்கள் சிறப்பாக நடைபெற்றது.

    தொடக்க விழாவில் அனங்கூர் பஞ்சாயத்து தலைவர் சிங்காரவேலு தலைமையில் அன்னதானம் நடந்தது. இதனை முன்னாள் அமைச்சர் தங்கமணியின் மகன் தரணிதரன் தொடங்கி வைத்தார். சுமார் 5 ஆயரத்திற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    ×