search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது.
    • வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் அலுவலகத்தில் நகா்மன்றத் தலைவா் ந.சூரியபிரகாஷ் தலைமையில்மக்கள் குறைதீா் கூட்டம் நடைபெற்றது.இதில் காங்கயம் நகராட்சிப் பகுதியில் குடிநீா்க் கட்டணமாக ரூ.150 வசூலிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களின் சிரமத்தைக் கருத்தில் கொண்டு குடிநீா்க் கட்டணமாக ரூ.100 மட்டுமே நிா்ணயிக்க வேண்டும். வாரச் சந்தை வளாகத்தில் இருக்கும் நூலகத்துக்கு குடிநீா் இணைப்பு வழங்க வேண்டும். நகரில் மின் விளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைளை பொதுமக்கள் வலியுறுத்தினா்.

    பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் உடனடியாக நிறைவேற்றப்படும் என்று நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் உறுதியளித்தாா்.கூட்டத்தில் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ், நகரமைப்பு ஆய்வாளா் எம்.மகேந்திரகுமாா், நகா்மன்ற நோ்முக உதவியாளா்சுப்பிரமணி மற்றும் நகா்மன்ற வாா்டு உறுப்பினா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

    • கொரோனா வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
    • நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது.

    நெல்லை:

    தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்திருந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களாக உயர தொடங்கியுள்ளது.

    சிறப்பு முகாம்கள்

    இதன் காரணமாக கொரோனா வழிகாட்டு முறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இதற்கிடையே கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இன்று சிறப்பு மெகா தடுப்பூசி முகாம்கள் தமிழக முழுவதும் அமைக்க அரசு உத்தரவிட்டது.

    2,012 மையங்கள்

    அதன்படி நெல்லை மாவட்டத்திலும் இன்று மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதற்காக மாவட்டம் முழுவதும் மொத்தம் 2,012 மையங்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடப்பட்டது. ஆனால் பெரும்பாலான முகாம்களில் பொதுமக்கள் கூட்டத்தை காண முடியவில்லை. ஒரு சில முகாம்களில் 10-க்கும் குறைவான பொதுமக்களே தடுப்பூசி செலுத்தி இருந்தனர்.

    வெறிச்சோடிய மையங்கள்

    முதல் தவணை செலுத்தி 2-வது தவணை செலுத்த வேண்டிய காலகட்டம் முடிந்த பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் பெரும்பாலான தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது.

    இது தவிர 102 நடமாடும் குழுக்கள் மூலம் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதிலும் பெரும்பாலான வீடுகளில் இருந்தவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயக்கம் காட்டினர்.

    நெல்லை மாநகரில் மட்டும் மொத்தம் 251 மையங்களில் தடுப்பூசி மையம் அமைக்கப்பட்டிருந்தது. பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வண்ணார்பேட்டை மேம்பாலம் உள்ளிட்ட பஸ் நிறுத்தங்கள், பெரிய ஜவுளிக்கடைகள் உள்ளிட்ட இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு இருந்தது. இவற்றில் 10-க்கும் குறைவான பொதுமக்கள் மட்டுமே தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

    இதில் 12 வயதுக்கு மேற்பட்ட முதல் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்த காலம் தவறியவர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் தடுப்பூசி தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

    • தேவகோட்டை வட்டத்தில் வருகிற 13-ந் தேதி மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது.
    • தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம், கண்ணங்குடி உள்வட்டம், கண்டியூர் கிராமத்தில் வருகிற 13-ந் தேதி (புதன்கிழமை) காலை 10 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

    இதில் அரசுத்துறை அலுவலர்களை ஒருங்கிணைத்து அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு, பொதுமக்களுக்கு எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இந்த மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, கண்டியூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம். மேற்கண்ட தகவலை சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    • முதியோர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர்.
    • 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    அவினாசி :

    திருப்பூர் மாவட்டத்தில் கைரேகை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. இதில் முதியோர் உள்ளிட்ட மாற்றுதிறனாளிகளுக்கு கைரேகை பதிவாகாமல் ரேஷன் பொருட்கள் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவர்கள் பயன்பெறும் வகையில் அவினாசி தாலுகா அலுவலகத்தில் ஆதார் பதிவில் கைரேகை புதுப்பித்தல் சிறப்பு முகாம் நடந்தது. இதில் முதியோர் உள்ளிட்டநூற்றுக்கு மேற்பட்டவர்கள் காலை 8 மணி முதல் ஆதார் சேவை மையத்தில் காத்திருந்தனர். 10.30 மணி அளவில அலுவலர் வந்து 60 நபர்களுக்கு மட்டுமே இன்று பதிவு செய்யப்படும் என்றதால் பயனாளிகள் அனைவரும் நாங்கள் காலை 8 மணிமுதல் இதற்காக காத்து நிற்கிறோம். அனைவருக்கும் இன்றே பதிவு செய்ய வேண்டும் என்று அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இது குறித்து ஆதார் பதிவு அலுவலர் கூறுகையில் ,ஒரு நபருக்கு முழுமையாக பதிவு செய்வதற்கு 20 நிமிடங்கள் ஆகிறது. இரவு 8 மணி வரை எவ்வளவு பேருக்கு பதிவு செய்ய முடியுமோ அதை செய்யஉள்ளதாக கூறினார்.

    • கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார்.
    • ஒர்க்‌ஷாப்பில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் கோவில்பாளையத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 34). இவர் அவினாசிபாளையத்தில் ஒர்க்‌ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையில் கடந்த மாதம் 26-ந் தேதி 30 கிலோ இரும்பு திருட்டு போனது. இதனைத்தொடர்ந்து அவர் சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்தபோது 2பேர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

    இந்த நிலையில் நேற்று சி.சி.டி.வி. கேமராவில் காணப்பட்ட இருவரும் அவினாசிபாளையம் பகுதியில் சுற்றித்திரிந்ததை மகேஷ் கண்டுபிடித்தார். இதனைத் தொடர்ந்து அருகில் உள்ளவர்களுக்கு தகவல் தெரிவித்து அந்த இருவரையும் விரட்டி பிடித்தனர். பின்னர் இருவருக்கும் பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர். மேலும் அவர்களில் ஒருவர் திருப்பூர் புதுரோட்டை சேர்ந்த சுப்பிரமணி மகன் சேகர் (43 ), மற்றொருவர் திருப்பூர் பலவஞ்சிபாளையத்தை சேர்ந்த மணி என்பவரது மகன் ஆனந்த் (53) தெரியவந்தது. தொடர்ந்து அவர்கள் இருவரையும் அவினாசிபாளையம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் போலீசார் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்க்குமாறு கூறி உள்ளனர்.

    இதனால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவில் அவர்கள் இருவரையும் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    • 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது.
    • பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாலுக்கா கண்டியூர் ஊராட்சியில் அமைந்துள்ளது நரசிங்கமங்க–ளம் கிராமம்.இங்கு ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.இந்த கிராமத்துக்காக 1 கிலோ மீட்டர் தொலைவில் சுடுகாடு ஒன்று கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டி கொடுக்கப்பட்டது. ஆனால் பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்படவில்லை.

    இதனால் யாரேனும் இறந்து போனால் அவர்களை வயல், வரப்புகளில் இறங்கி சுமந்து கொண்டு செல்லும் அவல நிலை நீடித்து வருகிறது. மழைக்காலங்களில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகும் நிலையில் இருப்பதாகவும் வயல்களில் விவசாயம் செய்த பிறகு அதை மிதித்து பயிர்களை சேதப்படுத்தி செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.எனவே உடனடியாக சுடுகாட்டுக்கு செல்ல பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நெரூர் காவிரி ஆற்று பகுதி பூங்காவை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கழிப்பிடங்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

    கரூர்:

    தமிழகத்தில் ஆடிப்பெருக்கு விழா வரும் ஆகஸ்ட் 3ல் கொண்டாடப்பட உள்ளது. காவிரி பகுதியில் பொதுமக்கள் புனித நீராடுவர். அதில் கரூர் மாவட்டத்தில் வேலாயுதம் பாளையம், புகழூர், வாங்கல், நெரூர் மற்றும் மாயனூர், லாலாபேட்டை, குளித்தலை ஆகிய பகுதிகளில் ஆடிப்பெருக்கு விழா களைகட்டி இருக்கும். புதுமண தம்பதிகள் ஆற்றில் வந்து சுவாமியை வழிபடுவர். சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் மஞ்சள் கயிறுகளை கட்டிக் கொள்வது வழக்கம். காவிரி ஆற்றுப் பகுதி ஆன நெரூரில் சதாசிவ பிரம்மேந்திர கோவில் உள்ளது. அங்கு செல்லும்போது பொதுமக்கள் காவேரி ஆற்றில் குளித்துவிட்டு வழிபாடு செல்வது வழக்கம். இதனால் காவேரி ஆற்றின் கரையோர பகுதியில் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பிடங்கள், சிறுவர் பூங்கா ஆகியவை பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. ஆனால் தற்போது பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இந்நிலையில் ஆடிப்பெருக்கு விழாவுக்கு இன்னும் குறைவான நாட்களை உள்ள நிலையில் கழிப்பிடம் மற்றும் பூங்காவை சீர் செய்ய வேண்டி பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர்.
    • இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் கடை வீதியில் அமைந்துள்ள பொங்காளியம்மன் திருக்கோவிலில் தினமும் சுமார் 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக இங்கு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்று கோவிலுக்கு வழக்கம் போல் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் வந்தனர்.

    அவர்களில் சிலர் சுகாதார வளாகத்தை பயன்படுத்த முயன்ற போது அது பூட்டி இருந்தது. இதுகுறித்து அங்குள்ள அலுவலகத்தை அவர்கள் தொடர்பு கொள்ள முயன்ற போது அதுவும் பூட்டி இருந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர். மேலும் இதுகுறித்து அவர்கள் கூறுகையில் ,சாமி தரிசனம் செய்ய வரும் நேரங்களில் சுகாதார வளாகத்தை பூட்டி விட்டு அலுவலகத்தையும் பூட்டிவிட்டு அதிகாரிகள் எங்கு சென்றனர் என்று தெரியவில்லை.

    பதில் சொல்லவும் ஆளில்லை. இதனால் இயற்கை உபாதையை கழிக்க கடும் அவதி பட வேண்டி உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • புகை மண்டலமாக மாறி அப்பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
    • பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    கடையநல்லூர்:

    கடையநல்லூர்- கிருஷ்ணாபுரம் 5-வது வார்டு மேற்கு மலம்பேட்டை ரோடு பகுதியில் குப்பைகளை தரம் பிரிக்கும் குப்பை கிடங்கு உள்ளது.

    அதனை துப்புரவு பணியாளர்கள் உரமாக்கும் கிடங்கிற்கு முழுமையாக அள்ளி செல்லாமல் விட்டு செல்கின்றனர். இதனால் மர்ம நபர்கள் மீதி குப்பைகளுக்கு தீ வைத்து விடுவதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறி அப்பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இன்று காலை 6 மணிக்கு குப்பை கிடங்கில் இருந்து புகை வந்தது. இதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் குப்பைகளை கொட்ட வந்த நகராட்சி குப்பை லாரிகளை சிறை பிடித்து போராட்டம் நடத்தினர்.

    அதன் பின்னர் நகராட்சி ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    • இந்த டவர் அமைந்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள்.
    • மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன, அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் நல்லூர் புதுநகரில் 200 வீடுகள் உள்ளன. இங்கு மொபைல் டவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த டவர் அமைந்தால் 500 மீட்டர் சுற்றளவுக்கு கதிர்வீச்சு அதிகளவில் இருக்கும் .

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த கதிர்வீச்சால் பாதிக்கப்படுவார்கள். பலவிதமான நோய்கள் தாக்கும் வாய்ப்பும் உள்ளது .மேலும் இந்த பகுதியில் மயில்கள், குருவிகள் என பலவிதமான பறவைகள் வாழ்ந்து வருகினறன. அவை அனைத்தும் பாதிக்கப்படும்.

    எனவே பொதுமக்களின் நலன் கருதி அந்தப் பகுதியில் மொபைல் டவர் அமைக்காமல்இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுநகர் பகுதி பொதுமக்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

    • பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.
    • உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.

    மடத்துக்குளம்:

    தமிழ்நாடு அரசின் நகர் ஊரமைப்புத்துறை உத்தரவுப்படி 2016ம் ஆண்டுக்கு முன் கிரயம் செய்த, அங்கீகாரம் இல்லாத மனைகளை வரன்முறை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் வாங்கியவர்கள், அதற்கான வளர்ச்சி கட்டணம், மேம்பாட்டு கட்டணங்களை செலுத்தி மனையை வரன்முறை செய்து கொள்ளலாம்.

    பொதுமக்கள் வாங்கி உள்ள மனைப்பிரிவில், யாராவது ஒரு தனிமனையை அங்கீகாரம் செய்து, அங்கீகார எண் பெற்றிருந்தால் மற்ற மனைகளை எளிதாக வரன்முறை செய்யலாம். அதற்கான பட்டியல், சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் உள்ளன.இதனால் திருப்பூர் மாவட்டத்தில் பல பகுதிகளில், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளை வரன்முறை செய்ய மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.இருப்பினும், பொதுமக்களும் பலமுறை அலைந்த பின்னரே வரன்முறை சான்று பெற முடிகிறது.

    இது தொடர்பாக எழுந்த புகாரின் பேரில்சிறப்பு முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது குறித்து ஒன்றிய அதிகாரிகள் கூறியதாவது:-

    திருப்பூர், அவிநாசி உள்ளிட்ட சில ஒன்றியங்களில் மட்டுமே வீட்டுமனை அங்கீகாரம் வழங்கும் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் ஒன்றியங்களில் அதற்கான தேவை கிடையாது.ஏற்கனவே அங்கீகாரமற்ற மனைகள், வரன்முறை செய்யப்பட்டுள்ளது. சிலர் அங்கீகார அனுமதி எண் பெற்ற மனைப்பிரிவுகளில் உள்ள, மனை உரிமையாளர், உரிய கட்டணத்தை செலுத்தி வரன்முறை செய்து கொண்டும் வருகின்றனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • நெல்லிக்குப்பத்தில் தி.மு.க. சார்பில் அமைச்சர் சி.வெ‌ கணேசன் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
    • நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் நகர தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் கொடியேற்று விழா நெல்லிக்குப்பம் பகுதியில் நடைபெற்றது. இதற்கு நகர திமுக செயலாளர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர் சங்க கவுரவ செயலாளர் ராதாகிருஷ்ணன், கவுன்சிலர் ஜெயபிரபா மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும், மேற்கு மாவட்ட செயலாளருமான சி.வெ.கணேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி பேசினார். இதில் நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், நகர அவைத் தலைவர் ஷேக் மொய்தீன், துணைச் செயலாளர் பார்த்தசாரதி, மூத்த நிர்வாகி வேலு, இளைஞர் அணி அமைப்பாளர் சாமிநாதன், துணை அமைப்பாளர் மாருதி ராஜா, தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் அருள் மற்றும் கவுன்சிலர்கள் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    ×