search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • அஞ்சலகங்களையே பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • அப்பகுதி மக்கள் நீண்ட தூரம் கடந்து தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சுவாமிமலை:

    காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்ட பொதுச்செயலாளரும், கவுன்சிலருமான அய்யப்பன் தலைமை அஞ்சல் அதிகாரிக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

    அதில் கூறியிருப்பதாவது:-

    கும்பகோணம் பகுதி மக்கள் வெளியூர்களுக்கு கடிதம் அனுப்ப, சிறுசேமிப்பு பதிவு அஞ்சல்கள், பார்சல் அனுப்ப முதலிய சேவை களுக்கு அஞ்சலகங்களையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், கும்பகோணம் கடைவீதி, மேலக்காவேரி, காந்தி பூங்கா, கம்பட்ட விசுவநாதர் கீழவீதி, சவுராஷ்ட்ரா நடுத்தெரு ஆகிய பகுதிகளில் இருந்த கிளை அஞ்சலகங்கள் திடீரென மூடப்பட்டன.

    இதனால் அப்பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள் தபால் அனுப்ப வேண்டும் என்றால் நீண்ட தூரம் கடந்து மகாமகக்குளம் தலைமை அஞ்சலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    எனவே, ஏழை நடுத்தர மக்களுக்கு நலன் கருதி மூடப்பட்ட கிளைஅஞ்சல கங்களை உடனடியாக திறக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம்.

    கடலூர்:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூர் ெரயில் நிலையம் அருகே குப்பன் குளம் பகுதி உள்ளது.இந்த பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ெரயில் நிலையம் மேம்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகின்றது. இதனை தொடர்ந்து இன்று காலை ெரயில் நிலையம் ஓரமாக தடுப்பு கட்டை அமைக்கும் நடவடிக்கையாக முதற்கட்டமாக பலகை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

    இதனை பார்த்த குப்பன் குளம் சேர்ந்த பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ெரயில்வே நிர்வாகம் சார்பில் நடைபெற்று வரும் பணியை தடுத்து நிறுத்த திரண்டு வந்தனர். இத்தகவல் அறிந்த மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா, கவுன்சிலர் தஷ்ணா, அ.தி.மு.க.நிர்வாகி நாகராஜன் மற்றும் பொதுமக்கள் அப்பகுதியில் திரண்டனர். இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இந்த நிலையில் ெரயில் நிலைய அதிகாரிகள் பிரபாகரன் மற்றும் வாசுதேவன் ஆகியோர் மாநகர தி.மு.க.செயலாளர் ராஜா மற்றும் திரண்டு இருந்த பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது பொதுமக்கள் பேசுகையில், குப்பன் குளம் பகுதியில் நூற்றுக்க ணக்கான குடும்பத்தினர்கள் வசித்து வருகின்றோம். மேலும் இவ்வழியாக தான் கார், ஆம்புலன்ஸ், தீயணைப்பு துறை வாகனம் போன்றவற்றை வந்து செல்கின்றன. தற்போது திடீரென்று ெரயில்வே நிர்வாகம் தடுப்பு கட்டை அமைத்தால் எந்த வாகனமும் குப்பன் குளத்திற்கு வர முடியாத அவல நிலை ஏற்படும். ஆகையால் அனைத்து வாகனங்களும் வந்து செல்லும் நடவடிக்கையாக இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ெரயில்வே துறை அதிகாரிகள் இது சம்பந்தமாக உயர் அதிகாரியிடம் கலந்து ஆலோசித்து பதில் தெரிவிக்கின்றோம் என உத்தரவாதம் அளித்தனர். அதன் பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
    • பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு மயிலாடுதுறை கொத்ததெரு தரங்கம்பாடி சாலையில் அமைந்துள்ள இந்திரா காந்தியின் திரு உருவ சிலைக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவரும், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினரும்மான ராஜ்குமார் கலந்து கொண்டு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    ரெங்கநாதன் கொடியே ற்றினார்.இதில் காங்கிரஸ் கட்சி மாநில பொதுகுழு உறுப்பினர் கனிவ ண்ணன், நகர தலைவர் ராமானுஜம், துணைத் தலைவர் குருமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் வடவீர பாண்டியன், மகளிர் அனியினர் சுதா உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் மகளீரனினர் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

    • மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்‌.
    • தடையின்றி மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    பூதலூர்:

    திருக்காட்டுபள்ளி நகரில் அதிகாலை 12.30 மணியில் இருந்து திடிர் என மின்சாரம் தடைபட்டது.

    தூறல் மழையும் குளிரிலும் தவித்த மக்கள் மின்சாரம் தடைபட்டதால் இருளில் கொசுக்கடியால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினார்கள்.

    மின்சாரம் எப்போது வரும் என்று தெரியாத நிலையில் திருக்காட்டுபள்ளி நகர மக்கள் விடிய விடிய அவதிப்பட்டனர்.

    5மணி நேர மின்சார தடைக்கு பிறகு காலை 6 மணியளவில் மீண்டும் மின்சாரம் கிடைத்தது.

    இரவு நேரங்களில் தடையின்றி மின்சாரம் கிடைக்க உரியவாறு மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.
    • சாலை பாதுகாப்பு நிகழ்ச்சிகள் நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு இன்று தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கலை அறிவியல் கல்லூரியில் நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் (ம) பராமரிப்பு அலகு சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடியசைத்து துவங்கி வைத்தார்.

    இப்பேரணியில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் கொண்ட பதாகைகளை மாணவ- மாணவியர் கைகளில் ஏந்தி பேரணியாக சென்றனர்.

    இப்பேரணி முக்கிய சாலைகள் வழியாக எலிசா நகர் வரை சென்று மீண்டும் மன்னர் சரபோஜி கல்லூ ரியில் நிறைவடைந்தது.

    முன்னதாக கலெக்டர் கூறும்போது:-

    மாணவர்கள் அனைவரும் ஹெல்மெட் பயன்படுத்து கிறார்களா? எனவும், இரு சக்கர வாகனங்களுக்கு உரிமம் வைத்திருக்க வேண்டும்.

    சாலைகளில் பாதுகாப்பாக வாகனங்கள் ஓட்ட வேண்டும் என அறிவுறுத்தினார்.

    மேலும் இதுபோன்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடர்ந்து நடத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

    இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் கட்டுமானம் (ம) பராமரிப்பு செந்தில்குமார், சாலை பாதுகாப்பு அலகு திருச்சி கோட்ட பொறியாளர் புவனேஸ்வரி, உதவி கோட்ட பொறியாளர்கள் கீதா, செந்தில்குமார், பிரமிளா, விஜயகுமார், பானுதாசன், செந்தில்குமார், உதவி பொறியாளர்கள் மோகனா, கணேசன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொள்ளவும்.
    • குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி ஆணையர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்கு றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட சிரேஸ்சத்திரம் சாலையில் பாதாள சாக்கடை பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த குழாயின் மேல் பகுதியில் குடிநீர் பகிர்மான குழாய் அமைந்துள்ளதால் பணிகள் மேற்கொள்வதற்கு ஏதுவாக குடிநீர் குழாய்களை அகற்றி விட்டு பாதாள சாக்கடை பிரதான குழாய் உடைப்பு சரி செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

    எனவே மாநகராட்சி வார்டு எண் 1 முதல் 51 வரை அனைத்து வார்டுகளுக்கும் நாளை (சனிக்கிழமை), நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் இருக்காது.

    எனவே பொதுமக்கள் தேவையான அளவு குடிநீரை சேமித்து வைத்துக்கொ ள்ளவும், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பயணிகள் சாலையில் காத்திருப்பதும், மழையில் நனையும் சூழ்நிலையும் உள்ளது.
    • வெயிலுக்கும் ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

    பேராவூரணி:

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அரசு மருத்துவமனை அருகில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்த தஞ்சை பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பழணிமாணிக்கம் (தி.மு.க) தொகுதி மேம்பாட்டு நிதியில் நிழற்குடை அமைக்கப்பட்டு 7 ஆண்டுக்கும் மேலாக பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது.

    இந்நிலையில் கடந்த இரண்டு ஆண்டுக்கு பேராவூரணி நகர் பகுதியில் பட்டுக்கோட்டை சாலை, சேது சாலை, அறந்தாங்கி சாலை, புதுக்கோட்டை சாலையை விரிவு படுத்தினர்.பட்டுக்கோட்டை சாலை மற்றும் அறந்தாங்கி சாலை பகுதியில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.மேலும் மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டது.

    மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காக பொதுமக்கள் பயணிகள் பயன்பாட்டில் இருந்து வந்த பயணியர் நிழற்குடை அப்புறப்ப டுத்தப்பட்டது.

    இதனால் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் மாலை நேரத்தில் வீட்டிற்கு செல்ல பேருந்துக்காக சாலையில் காத்திருக்கும் போது மழையில் நனையும் நிலை உள்ளது.

    கொன்றைக்காடு, காலகம், திருப்பூரணிக்காடு, நாடங்காடு, களத்தூர், ஒட்டங்காடு பகுதி செல்லும் பயணிகள், அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், அரசு மற்றும் தனியார் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள், பள்ளி மாணவிகள் மழை மற்றும் வெயிலுக்கு ஒதுங்க இடமில்லாமல் தவித்து வருகின்றனர்.

    மதிய நேரங்களில் உட்கார இடமில்லாமல் பயணிகள் வெயிலில் சாலை ஓரத்தில் அமர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

    பயணிகள் இன்னலை போக்க போர்க்கால அடிப்படையில் பயணிகள் நிழற்குடை இருந்த அதே இடத்தில் மீண்டும் பயணியர் நிழற்குடை அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் சார்பாக சமூக ஆர்வலர் துரைராஜன் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    • பொதுமக்களுக்கு அ.தி.மு.க.வினர் உதவிட ஆர்வம் காட்ட வேண்டும்.
    • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    மதுரை

    மதுரை மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இன்றூ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட புதிய வாக்காளர் சேர்ப்பு மற்றும் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம், முகவரி மாற்றம், திருத்தம் உள்ளிட்ட பணிகளுக்காக வாக்காளர் சிறப்பு முகாம் மதுரையில் நாளை (சனிக்கிழமை) நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்கள் நடைபெறுகிறது. மதுரை மாநகர் மாவட்ட பகுதிகளில் உள்ள அனைத்து வாக்கு சாவடிகளிலும் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இந்த முகாம்களில் புதிதாக வாக்காளர்களை சேர விரும்புபவர்கள் மற்றும் முகவரி மாற்றம் திருத்தம் உள்ளிட்ட பணிக ளுக்காக சிறப்பு முகாம்க ளுக்கு வரும் பொது மக்களுக்கு கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் மேலான ஆணைக்கிணங்க அந்தந்த பகுதி, வட்ட, பூத் கமிட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆர்வத்துடன் உதவிட வேண்டும்.

    பொது மக்களுக்கு தேவையான விண்ணப்ப படிவங்களை பெற்று தருவதிலும் அதை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் ஒப்படைக்கும் பணியிலும் அ.தி.மு.க. நிர்வாகிகள் கவனத்துடன் செயல்பட்டு வருகிற பாராளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தலில் புதிய வாக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களிக்கும் வகையில் அனைத்து பணிகளையும் முன்னின்று செய்திட வேண்டுகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • நர்சிங் மாணவிகள் பங்கேற்று பரிசோதனைகள் மேற்கொண்டனர்.
    • முடிவில் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் மற்றும் ரோட்டரி சங்கம் இணைந்து பொது மக்களுக்கு ரத்த அழுத்தம், ரத்தவகை கண்டறியும் முகாமை நடத்தியது.

    ரோட்டரி சங்கத் தலைவர் சத்தியநாராயணன் தலைமை வகித்தார்.

    செயலாளர் கே.சுரேஷ்குமார், முன்னாள் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.

    ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் கல்யாணசுந்தரம் முகாமினை தொடங்கிவைத்தார்.

    தனியார் பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் மதியழகன் தலைமையில் நர்சிங் மாணவிகள் பங்கேற்று பரிசோ தனைகள் மேற்கொண்டனர்.

    ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர்கள் சுசீந்திரன் ,சுப்பிரமணியன், பெஸ்ட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் எஸ்.எஸ்.என்.ராஜ்கமல், பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலை ப்பள்ளியின் முதல்வர் இராமலிங்கம், ரோட்டரி சங்கத்தின் முன்னாள் செயலர்கள் கந்தசாமி, எஸ்.கே.ஆர்.மணிகண்டன் பங்கேற்றனர்.

    முடிவில் நாட்டு நலப்பணி த்திட்ட அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.

    • 100 நாள் வேலை திட்டத்தில் முறையாக சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது.
    • பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும்.

    மதுக்கூர்:

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில், வேலை பார்த்தவர்களுக்கு மாதக்கணக்கில் வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை வழங்காத பாஜக அரசை கண்டித்தும், சம்பள பாக்கியை நிலுவையின்றி உடனடியாக வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மதுக்கூர் ஒன்றியக் குழு சார்பில், மதுக்கூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மனுக்கொடுத்து காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

    போராட்டத்திற்கு, சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சிதம்பரம் தலைமை வகித்தார்.

    மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் ஆர்.கலைச்செல்வி காத்திருப்பு போராட்டத்தை துவக்கி வைத்து உரையாற்றினார்.

    முடிவில் மாவட்டச் செயலாளர் பாண்டியன் நன்றி கூறினார்.

    காத்திருப்பு போரா ட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் மாதக் கணக்கில் வேலை பார்த்தவர்களுக்கு முறையாக சம்பளங்கள் வழங்கப்படாமல் உள்ளது.

    அதனை உடனடியாக வழங்க வேண்டும்.

    தீபாவளி பண்டிகை காலத்தில் பொதுமக்கள் நலன் கருதி சம்பள பாக்கியை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • கூட்டத்தில் பொதுமக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.
    • கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும்.

    தஞ்சாவூர்:

    உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நாளை (புதன் கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 589 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

    இந்த கூட்டத்தில் கிராம ஊராட்சிகளின் வளர்ச்சி திட்டங்கள் குறித்து பொது மக்களுடன் அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்று விவாதிக்க உள்ளனர்.

    எனவே இந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் பங்கேற்று சிறப்பித்திட வேண்டும் என்று கலெக்டர் தீபக்ஜேக்கப் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    • முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.
    • இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் பேரூராட்சிக்குள்பட்ட 14 மற்றும் 15-வது வார்டு பகுதியில் உள்ள முதலூர் சாலை, தோப்புவளம்சாலை மற்றும் தச்சமொழி நாடார் தெருக்களில் அமைக்கப்படடுள்ள தெரு விளக்குகளில் மின்விநியோகம் செய்யும் வகையில் தோப்புவளம் சாலையில் மின்மாற்றி அமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

    இதில் முதலூர் சாலை, தோப்புவளம் சாலை மற்றும் நாடார் தெற்கு தெருவில் அமைக்கப்பட்டுள்ள தெருவிளக்குகள் முறையாக எரிவது இல்லை என அப்பகுதியினர் புகார் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, பல நேரங்களில் இரவில் தெருவிளக்குகள் எரியாமல் இருளில் முழ்கி காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். தோப்புவளம் சாலையில் உள்ள மின்வயரில் மரக்கிளைகள் உரசுவதால் அடிக்கடி தெருவிளக்குகள் எரியாமல் உள்ளது.

    இது தொடர்பாக மின்வாரிய அதிகாரிகளுக்கு தெரியபடுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தெருவிளக்குகள் சீராக எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    ×