search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே மகாரா ஜபுரம் கிராமத்தில் கல்லணை பூம்புகார் சாலையில் பொது மக்கள் பயன்பாட்டிற்காக பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டு இருந்தது கடந்த 30 ஆண்டுக்கு மேலாக இருந்த இந்த பயணிகள் நிழற்குடை சாலை விரிவாக்க பணிகளால் இடிக்கப்பட்டது.

    கடந்த இரண்டாண்டுக்கு மேலாக நிழற்குடை இல்லாமல் வெயிலிலும் மழையிலும் பொதுமக்கள் நின்று பேருந்தில் பயணம் செய்யும் நிலை ஏற்பட்டது.

    இதனால் பொது மக்கள் அவதியடைந்தனர்.

    இந்நிலையில் மீண்டும் அதே இடத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்ககோரி கல்லணை பூம்புகார் சாலையை முற்றுகையிட்டு அதேபகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக கல்லணை பூம்புகார் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் பந்தநல்லூர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    பேச்சு வார்த்தை யில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து போ ராட்டம் கைவிடப்பட்டது.

    • சிவலிங்கம் தனது மனைவி பால சரஸ்வதியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்,
    • பின்னர் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது,அவர்களின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சின்னகண்ணு புரத்தைச் சேர்ந்தவர் சிவ லிங்கம் (வயது 39) மெக்கானிக்.

    இவர் தனது மனைவி பால சரஸ்வதியுடன் வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக கடைவீதிக்கு சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு திரும்பி உள்ளனர்,

    அவர்கள் வீட்டின் அருகே வரும்போது எதிரே சந்தேகத்திற்கு இடமான முறையில் ஒரு வாலிபர் சென்றதைப் பார்த்தனர். மேலும் வீட்டுக்கு வந்து பார்க்கும் போது,அவர்களின் பூட்டப்பட்டிருந்த வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது,

    இதனால் அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்த போது வீட்டினுள் வைக்கப்பட்டிருந்த தங்க கம்மல், மோதிரம், நெக்லஸ் உள்ளிட்ட 3 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டு இருந்தது தெரிய வந்தது,

    இதனால் சிவலிங்கம் வீட்டுக்கு வரும்போது எதிரே வரும் வழியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் சென்ற வாலிபர் தான் வீடு புகுந்து திருடியிருக்க கூடும் என சந்தேகமடைந்தார்.

    உடனடியாக அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தகவல் கூறி விரட்டிச் சென்று அந்த வாலிபரை பிடித்து சிப்காட் போலீசில் ஒப்படைத்தனர்.

    இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் விசாரணை நடத்திய போது அவர் தூத்துக்குடி கே.வி.கே.சாமிநகரை சேர்ந்த அழகுராஜா( 29) என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • சோழவந்தான், வாடிப்பட்டியில் வள்ளலார் தினம் கொண்டாடப்பட்டது.
    • இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    சோழவந்தான்

    சோழவந்தான் சன்மார்க்க சங்கம் சார்பாக வள்ளலார் பிறந்த தின விழா கொண்டா டப்பட்டது. இவ்விழாவை முன்னிட்டு புஷ்பலதா மணிகண்டன் ஜோதி விளக்கேற்றினார். வள்ளலார் படம் அலங்கரிக்கப்பட்டு சன்மார்க்க சங்கத்தினர் நகர்வலம் வந்தனர். அகழ் பாராயணம் நடந்து வள்ளலாரும் வள்ளுவரும் என்ற தலைப்பில் கம்பம் மொக்கச்சாமி பக்தி சொற்பொழிவாற்றினார். சன்மார்க்க சங்கத்தின் நிறுவனத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி விழாவிற்கு தலைமை தாங்கினார்.

    செயலாளர் நல்லுச்சாமி, இணைச் செயலாளர் நாகையா, ஆலோசகர் மூர்த்தி ஆகியோர் வரவேற்றனர். சங்கத்தின் மகளிர் அணி செயலாளர் சாந்தி ஜோதி வழிபாடு நடத்தினார். இதைத் தொடர்ந்து இங்கு உள்ள அய்யப்பன் கோவிலில் சன்மார்க்க சங்கத்தின் சார்பாக அன்ன தானம் வழங்கப்பட்டது.

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி கொட்ட மடக்கி கண்மாய்கரையில் இயற்கை எழில்கொஞ்சும் சிறுமலையடிவாரத்தில் 36 அடி உயர லிங்கவடிவிலான அண்ணாமலையார் கோவிலில் வள்ளலார் பிறந்த நாள்விழா கொண்டாடப்பட்டது. இந்தவிழாவை யொட்டி ராமலிங்கவள்ளலாருக்கு திருவருட்பா பாடி சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    இந்தபூஜைகளை மிளகாய்பொடி சாமியார் அங்க முத்து, கிருஷ்ணன் ஆகியோர் செய்தனர். இந்தவிழாவிற்கு மனவளக்கலை மன்ற தலைவர் மணவாளன் தலைமை தாங்கினார். உலக நலசத்தியஞான சித்தாந்தசபை நிர்வாகி பழக்கடைபாண்டி முன்னிலை வகித்தார். ஜோதிடர் ஆனந்தன் வர வேற்றார். அண்ணா மலை யார் கோவில் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ராஜேஸ்வரி கோபிநாத் அன்னதானம் வழங்கினார். இதில் பக்தர்கள், பெண்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் பொது மக்கள் திடீர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    சுவாமிமலை:

    தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் திருநாகேஸவரம் சன்னாபுரம் கிராமத்தில் உள்ள மணல் மேட்டு தெரு, சிவன் திருமஞ்சன வீதி, பனந்தோப்பு தெற்கு தெரு,மேல தெரு, சிவன் சன்னதி மேல மட விளாகம், கீழ மட விளாகம், தெற்கு மட விளாகம்,வடக்கு மட விளாகம், தோப்பு தெரு, நேதாஜி தெரு,எடத்தெரு, செட்டி தெரு, உப்பிலியப்பன் கோவில் திருமஞ்சன வீதி, சந்தன மாரியம்மன்கோவில் தெரு, பழைய செட்டி தெரு, புளியந்தோப்பு, பழைய சேச தெரு, பழைய குடியான தெரு, உப்பிலியப்பன்கோவில் நான்கு வீதிகள் ஆகிய பகுதிகளில் சுமார் 2,000 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்கு இது வரை வீட்டு மனை பட்டா வழங்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில் அவர்கள் பட்டாவிற்காக பலபோராட்டங்களை நடத்தி வந்தனர்.

    இந்நிலையில் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் மேலவீதியில் அரசு பட்டா வழங்க வேண்டும் என கூறி, நுாற்றுக்கணக்கான பொதுமக்கள் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த கும்பகோணம் தாசில்தார் வெங்கடேசன், திருவிடைமருதுார் போலீஸ் துணை சூப்பிரண்டு, ஜாபர் சித்திக் ஆகியோர் திருநாகேஸ்வரம் சன்னாபுரம் குடியிருப்போர் சங்கத் தலைவர் ஆறுமுகம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது, வரும் 20ம் தேதி தாலுகா அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் என அதிகாரிகள் உத்தரவாதம் அளித்தனர். இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    • பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடந்தது.
    • மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி வட்டம் பாமனி ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்மணி தலைமையில் நடைபெற்றது .

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சுந்தரவடிவேல் முன்னிலை வகித்தனர்.

    ஒன்றிய குழு உறுப்பினர்கள் வார்டு உறுப்பினர்கள் முருகதாஸ், இந்துமதி, பிரமிளா, பத்மா ,ஜெயலெட்சுமி, ஜெயந்தி, மதுமதி, சசிகலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    தலைமை ஆசிரியர் கிரிஜா, கிராம அலுவலர் மணிகண்டன், கோசி மணி மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ஊராட்சி செயலர் வெற்றிவேல் நன்றி கூறினார்.

    • கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பொதுமக்கள் சாபம் விட்டனர்.
    • இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    முதுகுளத்தூர்

    முதுகுளத்தூர் அருகே பயிர்காப்பீடு, வறட்சி நிவாரணம் வழங்காததை கண்டித்து, கிராமசபை கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே பொன்னக்கனேரி ஊராட்சிக்கு உட்பட்ட மட்டியாரேந்தல் கிராமத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சத்திய பிரியா தலைமை தாங்கினார்.

    இதில் ஒன்றியக்குழு உறுப்பினர் அர்சுணன், வைகை பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பாக்கிய நாதன் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத் தில் இப்பகுதி விவசாயி களுக்கு கடந்த 2 ஆண்டு களாக வறட்சி நிவாரணம், பயிர் காப்பீட்டுத்தொகை அதிகாரிகளின் அலட்சியம், ஒருதலைப் பட்சமான நடவடிக்கையால் புறக்கணிக்கப்பட்டு வருவதாக புகார் தெரிவித்தனர்.

    மேலும் மானாவாரி நெல் சாகுபடி செய்த வயலில் இறங்கி மண்ணை வாரி தூற்றி அதிகாரிகளுக்கு சாபம் விடுத்து தங்களது கண்ட னத்தை தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • 63 கிலோ வாட் திறன் கொண்ட 2 புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது.
    • நிறுவப்பட்ட புதிய மின்மாற்றிகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மின் கோட்டம் திருவெண்காடு பிரிவுக்கு உட்பட்ட திருநகரி மற்றும் திருவாலி கிராமங்களில் கிராம மேம்பாடு திட்டத்தின் கீழ் ரூபாய் 10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 63 கிலோ வாட் திறன் கொண்ட இரண்டு புதிய மின்மாற்றிகள் நிறுவப்பட்டது. அனைத்து பணிகளும் முடிவடைந்த நிலையில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் அதனை இயக்கி வைத்து பொது மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

    இதன் மூலம் அப்பகுதியில் நிலவி வந்த குறைந்த மின்னழுத்தம் பிரச்சனைக்கு தீர்வு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்விற்கு சீர்காழி மின்வாரிய கோட்ட பொறியாளர் லதா மகேஸ்வரி தலைமை வகித்தார். உதவி செயற்பொறியாளர்கள் விஜய பாரதி, விஸ்வநாதன், திருவெண்காடு உதவி மின் பொறியாளர் ரமேஷ்குமார், சீர்காழி தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் பஞ்சுகுமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுந்தர்ராஜன், தாமரை செல்வி திருமாறன் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

    • நாளை 429 ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெறுவதாக கலெக்டர் கூறினர்.
    • பொதுமக்கள் தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    தமிழ்நாடு ஊராட்சிகள் சட்ட விதிகளின்படி ஒவ்வொரு ஆண்டும் காந்தி ஜெயந்தி அன்று கிராம ஊராட்சிகளில் கிராம சபைக்கூட்டம் நடைபெற வேண்டுமென வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி இந்த ஆண்டு அரசு உத்தரவின் பேரில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை 2-ந் தேதி காலை 11 மணிக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கக இயக்குநரால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடித்து கிராம சபை கூட்டம் நடத்திட உத்தர விடப்பட்டுள்ளது.

    இந்த கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவினம் மற்றும் திட்டப்பணிகள் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் ஏற்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகள், கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நட வடிக்கைகள் குறித்து விவாதித்தல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், அனைத்து கிராம அண்ணா மறு மலர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் இயக்கம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், 2023-24-ம் ஆண்டுக்கான சமூக தணிக்கை செயல் திட்டத்தி னை பொதுமக்களுக்கு அறிவித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, மக்கள் திட்டமிடல் இயக்கம், காசநோய் இல்லா கிராம ஊராட்சியாக அறிவிப்பு செய்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து இந்த கிராம சபையில் விவாதித்திட அரசு தெரிவித்துள்ளது.

    பொதுமக்கள் தாமாகவே முன்வந்து இந்த கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.
    • குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆலோசனை கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு நகர செயலாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார். நாகை நகரில் உள்ள நீர் நிலைகளில் முக்கியமானதாக அக்கரை குளம் உள்ளது.

    தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் இந்த குளத்தை குளிப்பதற்கும், துணி துவைப்பதற்கும் பயன்படுத்தி வருகின்றனர்.

    இது தவிர நகரில் உள்ள ஆன்மீக தலங்களுக்கு வரக்கூடிய பக்தர்கள் இந்த குளத்தில் நீராடி செல்வது வழக்கம்.

    நகரில் பெரும்பாலான தண்ணீர் தேவையை இந்த குளம் பூர்த்தி செய்கிறது.

    தற்போது இந்த அக்கரை குளத்தை சுற்றி கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளது.

    வடிகால் வசதி இல்லாததால் தண்ணீர் மாசடைந்து பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    நாகை நகரில் தற்போது தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், இந்த குளத்தை சீரமைத்து நகரில் நீர் ஆதாரத்தை பெருக்கி பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இது குறித்து நடவடிக்கை எடுக்காவிட்டால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நகர் பகுதியில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    • தளவாபாளையம் பகுதியில் திடீர் மின்தடையால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிப்பு
    • நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர்.

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் தளவாபாளையம், தோட்டக்குறிச்சி புகளூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு திடீரென பலத்த இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.

    இதன் காரணமாக தளவாபாளையம் பீடரில் உள்ள வடிவேலம்பாளையம் அருகில் உயர் அழுத்த மின் பாதையில் மின்சார வயர் திடீரென அறுந்து விழுந்தது. அதேபோல் அந்தப் பகுதியில் உள்ள மின்சார இன்ஸ்டலேட் ஒன்று பழுதானது . இதனால் திடீரென தளவாபாளையம், புகளூர் சுற்றுவட்டார பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததன் காரணமாக மின் வாரிய ஊழியர்கள் மின்சார வயரை சீரமைப்பதில் பணிகள் தாமதப்பட்டது . அதேபோல் மின்சார இன்வேட்டர் பழுதானையும் உடனடியாக சரி செய்ய தொடர்ந்து இரவு நேரமாகியும் பின் சப்ளை இல்லாததால் மளிகை கடைக்காரர்கள், ஓட்டல் கடைக்காரர்கள், டீக்கடைக்காரர்கள், பேக்கரி கடைக்காரர்கள் உள்ளிட்ட பல்வேறு கடைக்காரர்களும்,வியாபார நிறுவனங்களும் வியாபாரம் செய்ய முடியாமல் பாதிப்படைந்தனர். அதேபோல் பொதுமக்கள் மின்சாரம் இன்றி அவதிப்பட்டனர் . இந்நிலையில் இரவு 2 மணி அளவில் மின்வாரிய பணியாளர்கள் அறுந்து விழுந்து கிடந்த மின்சார வயர்களையும் இன் வேட்டர்களையும் சீரமைத்து மின் விநியோகம் செய்தனர். இந்நிலையில் மின்சார வாரிய பணியாளர்கள் இரவில் வேலை செய்து கொண்டு இருந்தபோது அந்தப் பகுதிக்கு 5 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வேகமாக வந்துள்ளது. அதை பார்த்த ஊழியர்கள் சுதாரித்துக் கொண்டு நகர்ந்து விட்டனர். 

    • 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தனர்.
    • காது, மூக்கு, தொன்டை மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    தரங்கம்பாடி தாலுக்கா கிளியனூர் கிராமத்தில் அல்-ஹிதானா மெட்ரிகு லேசன் பள்ளியில், புதிய பாதை அறக்கட்ட ளையும், விநாயகா மிஷன் மருத்துவ கல்லூரியும் இணைந்து இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

    மருத்துவ முகாமிற்கு கிளியனூர் முத்தவல்லி அபுல் ஹசன் தலைமை வகித்தார்.

    ஜாமியா மஸ்ஜித் நாட்டாமை எம்.பி.ஹலில், பா.ம.க மாநில துணை பொதுச்செயலாளர் சித்தமல்லி பழனிசாமி, விடுதலை சிறுத்தை கட்சி இஸ்லாமிய சனநாயக பேரவை மாநில துணைச் செயலாளர் ஆயப்பாடி முஜிபுர் ரகுமான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது வரவேற்றார்.

    இதில், பொது மருத்துவம், மகப்பேறு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், கண் மருத்துவம், பல்ம ருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், குழந்தை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், காது- மூக்கு- தொன்டை மருத்துவம், எலும்பு மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    விநாயக மிஷன் மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் குணசேகரன் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட மருத்துவர்களும் செவிலியர்களும் பங்கேற்று மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர்.

    இதற்கான ஏற்பாடுகளை புதியபாதை அறக்கட்டளை பொறுப்பாளர்கள் செல்வேந்திரன், ரகோத்குமார் அன்பழகன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • இன்னாத்துக்க ன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.
    • அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தஞ்சாவூர்,

    தஞ்சை - புதுக்கோட்டை சாலையில் விமானப்ப டைத்தளம் அமைந்துள்ளது.

    இந்த விமானப்படை தளத்திற்கு கூடுதலாக சுற்றுச்சுவர் கட்ட கடந்த சில மாதங்களுக்கு முன்பு இன்னாத்துக்கன்பட்டியில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த பொது சாலை பகுதி கையகப்படுத்தப்பட்டது.

    இந்த நிலையில் மீதமுள்ள சாலையும் கையகப்ப டுத்தப்பட்டு சுற்றுச் சுவர் கட்டும் பணி தொடங்கியது.

    இன்று காலை இந்த பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து இனாத்துக்கான்பட்டி பொது மக்கள் ஏராளமானோர் திரண்டனர் .

    தகவல் அறிந்த போலீசார் மற்றும் அதிகா ரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள், சாலையை கையகப்படுத்தி சுற்று சுவர் கட்டுவதால் நாங்கள் நகருக்குள் செல்ல வேண்டு மென்றால் வேறு வழியில் சுற்றி செல்ல வேண்டிய நிலை உள்ளது .

    இதனால் கால விரயம் ஏற்படுகிறது.

    1எனவே எங்களுக்கு வேறு வழி ஏற்படுத்தி தர வேண்டும் என்றனர்.

    அதற்கு அதிகாரிகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.இதனை ஏற்று க்கொண்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சம்பவ த்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    ×