search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public"

    • 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது.
    • போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்ட வணிகர் சங்க செயலாளர் திருமலை செந்தில் மற்றும் வணிகர் சங்க பொருளாளர் கந்தசாமி, வேதாரண்யம் நகர வணிகர் சங்க செயலாளர் முரளி ஆகியோர் மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங்கை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வேதாரண்யம் நகர கடைத்தெருவில் உள்ள 4 வீதிகளிலும் கடந்த ஒரு ஆண்டாக வடிகால் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் நீண்ட நாட்கள் ஆகியும் முடியாததால் வணிகர்க ளுக்கும், பொதுமக்களுக்கும், அவ்வழியாக செல்லும் போக்குவரத்துக்கும் மிகுந்த இடையூறாக உள்ளது.

    எனவே, நெடுஞ்சாலை துறையினர் எதிர்வரும் தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டு வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் எவ்வித பாதிப்பும் இன்றி போர்க்கால அடிப்படையில் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று க்கொண்ட மாவட்ட கூடுதல் கலெக்டர் ரஞ்சித் சிங் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

    • வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூறாக இருந்து வருகிறது.
    • இதனால் பொதுமக்கள் அச்சத்துடனே சென்று வருகின்றனர்.

    திருவோணம்:

    ஒரத்தநாடு நகர் மற்றும் திருவோணம் பகுதியில் சமீபகாலமாக தெரு நாய்கள் தெருக்களில் கூட்டம் கூட்டமாக வீதி உலா வருகின்றது.

    பள்ளி குழந்தைகள், மாணவ, மாணவிகள், கல்லூரி மாணவிகள், பொதுமக்களுக்கும் துரத்தி அச்சத்தை ஏற்படுத்தும் வகையிலும், வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து இடையூராக இருந்து வருகிறது.

    மேலும் சாலைகளில் நடந்து மற்றும் வாகனங்களில் செல்வோவரை விரட்டி வரும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் பல இடங்களில் விபத்துகள் ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

    மேலும் பெரும்பாலான தெருநாய்கள் நோய் வாய்ப்பட்டு சொறியுடன் காணப்படுகிறது.

    நாய்களுக்குள் அடிக்கடி சண்டை ஏற்படும் போது ஆக்ரோஷமாக தாக்கும் சம்பவம் பொதுமக்களையும் கடித்து குதற பாய்வதாகவும்.

    இதனால் உயிர் அச்சத்துடன் அலறி அடித்து ஓட வேண்டிய நிலையும் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

    இதனால் இப்பகுதியில் சுற்றி திரியும் தெருநாய்க ளை பிடித்து அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    • வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வடக்கு வீதியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
    • வரும் காலங்களில் குடிநீர், சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு வழங்கப்படும்.

    சீர்காழி:

    சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட வடக்கு வீதியில் சிறப்பு கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பூங்கொடிஅலெக்சாண்டர் தலைமை வகித்தார்.

    செயல் அலுவலர் அசோகன்,துணைத்தலைவர் அன்புச்செழியன் முன்னிலை வகித்தனர்.

    இளம் நிலை உதவியாளர் பாமா வரவேற்றார்.

    கூட்டத்தில் கடந்த 2ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேரூராட்சி மன்ற தலைவர் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தார்.

    வரும் காலங்களில் குடிநீர்,சுகாதாரம், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

    இதில் குறைபாடுகள் இருந்தால் பொதுமக்கள் உடனுக்குடன் தெரிவிக்கலாம் என்றார்.

    தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட உள்ள வளர்ச்சி பணிகள் குறித்தும், குறை,நிறைகள் குறித்து பேசினர்.

    தொடர்ந்து ரூ.20கோடி மதிப்பீட்டில் கொள்ளிடம் கூட்டுகுடிநீர் திட்டத்தை உடனே பேரூராட்சி பகுதியில் செயல்படுத்துவது, அனைத்து பயனாளிகளுக்கும் குடிநீர் இணைப்புகளை பெற விண்ணப்பம் செய்வது, நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணியினை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்வது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இதில் திமுக மாவட்ட பொருளாளர் அலெக்சாண்டர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

    • கரூர் மாவட்டம் கந்தப்பாளையத்தில் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்
    • கரூர் மாவட்டம் கந்தப்பாளையத்தில் சாலை அமைக்கும் பணியால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்

    வேலாயுதம்பாளையம், 

    கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலை முதல் கந்தம்பாளையம் வரை தார் சாலையின் இருபுறமும் சாலை விரிவாக்கம் செய்யப்பட்டு பழுதடைந்த தார் சாலையை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சுமார் 3 மாதத்திற்கும் மேலாக இந்தப் பணி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் வேலாயுதம்பாளையம்- நடையனூர் வரை கடந்த நான்கு நாட்களாக பழுதடைந்த சாலையை சீரமைத்து தார் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு கந்தம்பாளையம் பகுதியில் தார் சாலையின் குறுக்கே இரும்பு தடுப்புகள் அமைத்து எந்த வாகனமும் இந்த வழியாக செல்ல முடியாதபடி அடைத்துவிட்டனர். இருசக்கர வாகனங்கள் மட்டுமே சென்று வருகின்றன. இதன் காரணமாக

    இதனால் கொடுமுடி மற்றும் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் நொய்யல் குறுக்குச்சாலையில் இருந்து புன்னம்சத்திரம் வழியாக வேலாயுதம்பாளையம் சென்று அங்கிருந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அதேபோல் சேலம், நாமக்கல், பரமத்தி வேலூர் பகுதியில் இருந்து இந்த வழியாக செல்லும் அனைத்து வாகனங்களும் வேலாயுதம்பாளையத்தில் இருந்து புன்னம் சத்திரம் சென்று நொய்யல் குறுக்குச்சாலை வழியாக செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

    இதனால்இரண்டு பகுதியிலிருந்தும் வந்த அனைத்து வாகனங்களும் வெகுதூரம் சென்று குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மிகவும் காலதாமதமாக வாகனங்கள் செல்ல வேண்டி இடத்திற்கு சென்றுகொண்டிருக்கிறது. இதனால் தொடர்ந்து பொதுமக்கள், மாணவ, மாணவிகள், நோயாளிகள், விவசாயிகள் பாதிப்படைந்து வருகின்றனர். எனவே நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து தார் சாலையின் ஒரு புறமாக வாகனங்கள் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை அமைச்சர் கீதாஜீவன் நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
    • புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக பொதுமக்களின் குறைகளை வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாள ரும், சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக் களை பெற்று வருகிறார்.

    அதன்படி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 45-வது வார்டு லெவிஞ்சிபுரம் பகுதிகளில் உள்ள பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து அப்பகுதியில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு செய்தார். அப்போது புதியசாலை வசதி, கழிவுநீர் தேங்காதவாறு கால்வாய் வசதி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.

    பின்னர் பொது மக்களிடம் அமைச்சர் கீதாஜீவன் கூறுகையில், மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் வசதிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன். இந்த பகுதிக்கு தி.மு.க. ஆட்சி வந்த பிறகு புதிய தார்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை, கால்வாய் வசதிகள் அமைத்து தரப்படும். மேலும் குடிதண்ணீர் சீரான முறையில் வழங்க ப்பட்டு வருகிறது. எந்த குறைபாடுகள் இருந்தாலும் அதை முழுமையாக செய்து தருவேன் என்று உறுதி அளித்தார்.

    அப்போது, மாநகராட்சி பொறியாளர் சரவணன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செய லாளரும் கவுன்சில ருமான ராமகிருஷ்ணன், மாவட்;ட பிரதிநிதி செந்தில் குமார், வட்டச்செயலாளர் சுரேஷ், வட்டப்பிரதிநிதிகள் பாஸ்கர், ரஜினிமுருகன், மற்றும் நடராஜன், மணி, அல்பட் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
    • பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    சென்னை - நாகப்பட்டினம் 4 வழி சாலை பணிகள் நடைபெற்று வருவதால் புதுச்சேரி -விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள திருபுவனை பகுதியில் மேம்பாலங்கள் மற்றும் 3 வழி சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் நேற்று முன்தினம் அதிகாலையில் திருபுவனையில் இருந்து கடலூர் வழியாக முக்கிய கிராமங்களை இணைக்கும் சாலை துண்டிக்கப்பட்டு பள்ளங்கள் தோண்டப்ப ட்டுள்ளன.

    இதனால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

    அதிகப்படியான தொழிற்சாலைகளும் பொதுமக்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகவும் வாகனங்கள் அதிக அளவில் செல்லும் இந்த பகுதியில் தற்போது வாகனங்கள் 3 பக்கமும் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள்.

    தற்போது விழுப்புரம்- புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் மேம்பாலங்கள் வழியாக கனரக வாகனங்கள் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு சுற்றி சென்று தற்போது பயணித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் போக்குவரத்து இயக்கப்படவில்லை.
    • இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி ரெயில் நிலையத்தை தென்னக ரெயில்வே கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் பாார் ஆய்வு செய்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வக்கீல் நாகராஜன், மாவட்ட செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் கோரிக்கை மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிரு ப்பதாவது:-

    திருத்துறைப்பூண்டி, வேதாரண்யத்தில் இருந்து வர்த்தகர்களும், வியாபாரிகளும் தொழில் நிமித்தமாகவும் மற்றும் பல்வேறு காரணங்களுக்காகவும் சென்னைக்கு அதிகமாக செல்ல வேண்டியுள்ளது.

    இந்நிலையில், வேதாரண்யம் மற்றும் திருத்து றைப்பூண்டி- அகஸ்தி யம்பள்ளியில் இருந்து சென்னைக்கு அகல ரெயில் பாதை அமைத்தும் ரெயில் போக்குவரத்து இயக்கப்படவில்லை.

    எனவே, அப்பகுதி மக்களும், வணிகர்களும் சென்னை செல்ல வேண்டும் என்றால் அதிக கட்டணம் கொடுத்து பஸ்களில் தான் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    இதனால் அவர்களுக்கு நேரமும், பணமும் அதிகமாக விரயமாகிறது.

    அகல ரெயில் பாதை அமைக்கப்பட்ட பின்பும் சென்னைக்கு ரெயில் போக்குவரத்து தொடங்கவில்லை என்பது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றமாக உள்ளது.

    எனவே, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக வேதாரண்யம் - சென்னைக்கு திருத்து றைப்பூண்டி வழியாக எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது.
    • ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது.

    உடுமலை

    உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசு,தனியார் அலுவலகங்கள்,தொழில் நிறுவனங்கள், ஜவுளி,மளிகை மற்றும் சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடைகளுக்கு சரக்குகளை ஏற்றிக் கொண்டு வருகின்ற கனரக லாரிகள் பிரதான மற்றும் இணைப்பு சாலைகளில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு விடுகிறது. இதனால் அந்த வழியாக செல்கின்ற வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.இது குறித்து நிர்வாகமும் போக்குவரத்து போலீசாரும் கண்டு கொள்வதில்லை. போக்குவரத்து நெருக்கம் மிகுந்த பகல் வேளையில் கனரக வாகனங்கள் நகருக்குள் வரக்கூடாது என்ற விதி இருந்தும் அதை பின்பற்றாமல் வாகனங்களை கொண்டு வந்து சாலையில் நிறுத்தி விடுகின்றனர்.இதனால் அவசர கால உதவியை பெறுவதில் கூட தடங்கல்கள் ஏற்படுகிறது.

    ஒரு சிலரின் சுயநோக்கம் காரணமாக வாகன ஓட்டிகள் -பொதுமக்கள் அவதிக்கு உள்ளாவது வேதனை அளிக்கிறது. மேலும் சாலையை அடைத்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மாற்று வழியை தேடி செல்ல வேண்டிய சூழலும் வாகன ஓட்டிகளுக்கு ஏற்படுகிறது. இதனால் காலநேர விரையம் ,எரிபொருள் செலவும் கூடுதலாக ஏற்படுகிறது.

    எனவே போக்குவரத்து இடையூறு ஏற்படும் விதத்தில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அத்துடன் கனரக வாகனங்கள் பகல் வேளையில் நகரப்பகுதியில் நுழைவதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

    • தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்
    • பூங்கா முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருளானந்த நகரில் ரூ.11.50 கோடி மதிப்பில் கட்டப்பட்ட அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதப் பூங்காவை (ஸ்டெம் பூங்கா) கடந்த ஜூலை மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

    குழந்தைகளுக்கான விளையாட்டு பூங்கா, ஏசி வசதி உடன் தொழில்நுட்ப கோளரங்கம், விண்வெளிக்கு அனுப்பப்படும் ஏவுகணைகளான பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி ஏவுகணைகள் மாதிரி, 16 வடிவில் ராட்சத டைனோசர் பொம்மைகள் உள்பட பல்வேறு அம்சங்கள் உள்ளன.

    இந்நிலையில் இந்த ஸ்டெம் பூங்காவில் தினமும் மாலை 5 மணி முதல் இரவு 7 ணி வரை மட்டுமே பொதுமக்கள் அனுமதி க்கப்படுகின்றனர்.

    இதனால் விடுமுறை நாட்களில் தங்களது குழந்தைகளை பகலிலே அழைத்து வர முடியாமல் பெற்றோர் அவதிப்படுகின்றனர். மேலும் பூங்காவில் உள்ள ஒவ்வொரு அறிவியல் உபகரணங்களையும் விளக்கி கூற போதிய ஆட்கள் இல்லை.

    பொதுமக்களாகவே பார்த்து தெரிந்து கொள்ள வேண்டி உள்ளது.

    இது தவிர பூங்காவானது முறையாக பராமரிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே பூங்காவுக்குள் அனுமதிக்கப்படும் நேரத்தை அதிகரிக்க வேண்டும்.

    உபகரணங்களை விளக்க ஆட்களை நியமித்து முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல்முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
    • இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள எம். புதுக்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லானேந்தல் கிராமத்தில், பல ஆண்டு களாக மக்கள் கண்மாய் தண்ணீரை தேக்கி வைத்து, அதனை குடிநீராகவும், மற்ற உபயோகத்திற்கும் பயன்படுத்தி வந்தனர்.தற்போது உள்ள கால கட்டத்தில், தனியாரிடம் குடிநீரை குடம் ஒன்று ரூ.7 க்கு விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இந்த நிலையில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், பல்வேறு இடங்களில் போர் வெல் மூலம் ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோ கிக்க பல முறை முயற் சித்தும், அது உப்பு தண்ணீராகவும் குடிநீருக்கு உகந்த தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டதால், பயனளிக்காமல் போய் விட்டது.

    இது குறித்து ஊராட்சித் தலைவர் முருகன் மற்றும் கிராம பொது மக்கள் தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு குடிநீர் கேட்டு பல்வேறு மனுக்களை நேரில் சென்றும் பதிவு தபால் மூலமா கவும் கோரிக்கை மனுவை அளித்தனர். இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், ஊராட்சியின் உபரி நிதியின் கீழ் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் குண்டாற்றில் ஆழ்துளை கிணறு அமைத்து சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரையின் கீழ் பைப் லயன் அமைத்து வில்லானேந்தல் கிராமத்திற்கு முதல் முறையாக குடிநீர் வினி யோகம் வழங்கப்பட்டது.

    இதனை கிராம பொதுமக்கள் பட்டாசு வெடிக்கும் இனிப்பு வழங்கி விழாவாக கொண்டாடினர்.

    • சாலையானது கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது.
    • மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    தாம்பரம்:

    தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட 55-வது வார்டு, தாம்பரம்-சோமங்கலம் சாலையில் சமத்துவ பெரியார் நகர் உள்ளது. சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள்.

    இப்பகுதி அடையாறு மற்றும் பாப்பன்கால்வாய் இணையும் பகுதியில் அமைந்துள்ளது. இங்குள்ள ராகவேந்திரா பிரதான சாலை சுமார் 740 மீட்டர் தூரத்துக்கு படு மோசமடைந்து மண்பாதையாக காட்சி அளிக்கிறது. தார்சாலை அமைக்கப்பட்ட தற்கான எந்த சுவடுகளும் அங்கு இல்லை. அப்பகுதி மக்களால் பிராதானமாக பயன்படுத்தும் இந்த சாலை மிகவும் மோசமாக குண்டும் குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். தற்போது அவ்வப்போது மழை பெய்து வருவதால் சாலையே தெரியாத அளவுக்கு சேறும் சகதியுமாக மாறி காட்சி அளிக்கிறது. இதுகுறித்து பலமுறை அப்பகுதி மக்கள் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த சாலை கடந்த 8 ஆண்டுக்கு முன்பு போடப்பட்டதாக தெரிகிறது. இதன்பின்னர் புதிய சாலை அமைக்க அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    சேதம் அடைந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் முன்வராததால் பொதுமக்களே ஆங்காங்கே உள்ள பள்ளங்களில் தற்காலிகமாக கற்களை கொண்டு சமன் செய்து வருகிறார்கள்.

    மேலும்பருவ மழை காலத்தில் தாழ்வான இந்த பகுதி கடுமையாக பாதிக்கப்படும். அந்த நேரத்தில் அரசு அதிகாரிகள், அரசியல் கட்சியினர் இந்த பகுதிக்கு வந்து அடையாறு ஆற்றங்கரைமற்றும் பாப்பன்கால்வாயை பார்வையிட்டு ஆய்வு செய்வது வழக்கம். ஆனாலும் இங்கு சாலை அமைக்க இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அப்பகுதி மக்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.

    இதுகுறித்து சமத்துவ பெரியார் நகர் பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பெரியார் நகர் பகுதி , அரசு பல இடங்களில் நிலம் கையகப்படுத்தும் போது பொது மக்களுக்கு வழங்கப்பட்ட இடமாகும்.. கடந்த 2009-ம் ஆண்டு இந்தசாலை அப்போதைய பெருங்களத்தூர் பேரூராட்சியிடம் ஒப்ப டைக்கப்பட்டது. அப்போது 2015-ம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் நிதியில் 740 மீட்டர் நீளத்திற்கு தார்ச்சாலை அமைத்து கொடுத்தனர். இதன் பின்னர் தாம்பரம் மாநகராட்சியுடன் இணைந்தது. எனினும் இதுவரை இந்த சாலை சீரமைக்கப்படாமல் மண்பாதையாக மாறி காட்சி அளிக்கிறது. 8 ஆண்டாக மிகவும் மோசமான நிலையில் காணப்படும் இந்த சாலையை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை தாம்பரம் மாநகராட்சியிடம் கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக சாலை மேலும் சேதம் அடைந்து சேறும் சகதியுமாக மாறி உள்ளது. இதனால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள். அடையாறு ஆற்றங்கரையில் உள்ள இப்பகுதியை பலமுறை அதிகாரிகள் ஆய்வு செய்ய வந்துள்ளனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    தற்போது சிறு மழைக்கே சாலை சேறும் சகதியுமாக மாறி பொது மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது. பருவ மழைக்கு முன்பு சாலையை சீரமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொதுமக்கள் சிரம்மபட்டு வருகின்றனர்.
    • போரை செயல்படுத்தினால் அந்த பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி 44 வது வார்டு சிவாஜி நகரில் கடந்த 20 நாட்களாக தண்ணீர் வசதியின்றி பொது மக்கள் சிரம்மபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போர் வசதி இருந்தும் பயன்படாமல் உள்ளது.

    தற்போது அந்த பகுதியில் மாநகராட்சி சார்பாக லாரி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

    அந்த பகுதியில் போர் செயல்பட தொடங்கினால் தண்ணீர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

    எனவே சிவாஜி நகர் பகுதியில் உள்ள போரை செயல்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அந்தப் பகுதியில் தண்ணீர் வசதி கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதனிடம் கேட்டபோது அவர் உடனடியாக அதிகாரியை அைழத்து நாளை முதல் தண்ணீர் தடையின்றி வழங்க உத்தரவிட்டார்.

    ×