என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Puliyankudi"
- புளியங்குடி சாலையில் சுற்றித்திரிந்த ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
- சிறுவன் உள்ளிட்ட 26 பேரை கடித்து குதறியது
புளியங்குடி:
புளியங்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக சாலைகளில் நாய்கள் சுற்றித்திரிந்தது. இந்நிலையில் நேற்று அதில் ஒரு நாய்க்கு திடீரனெ வெறி பிடித்தது.
சாலையில் சுற்றித்திரிந்த அந்த நாய் அந்த வழியாக சென்றவர்களை கடிக்க ஆரம்பித்தது. இதில் பள்ளி சென்று கொண்டிருந்த 9 வயது சிறுவன் மற்றும் பெண்கள், வயதான ஆண்கள் என 26 பேரை அந்த நாய் கடித்து குதறியது.
இதில் பாதிக்கப்பட்டவர்கள் புளியங்குடி அரசு மருத்துவ–மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்த நகர சேர்மன் விஜயா சவுந்தரபாண்டியன் புளியங்குடி அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களுக்கு பழம், பிரட் உள்ளிட்டவைகளை வழங்கினார்.
அதனை தொடர்ந்து மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சைகளை விரைந்து வழங்க அறிவுறுத்தினார். வெறிநாயை உடனடியாக பிடிக்க தனிக்குழுவை அமைக்க நகராட்சி அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அதன்படி இன்று காலை அந்த குழு அமைக்கப்பட்டு, அவர்கள் வெறிநாயை பிடித்தனர். பின்னர் அதனை காட்டுப்பகுதியில கொண்டு விட்டனர்.
- புளியங்குடி மகளிர் காவல்துறை சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
- தவறுதலாக ஏதாவது செயலியில் நீங்கள் பார்வையிட்டால் உங்களின் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும் என அறிவுறுத்தினர்.
சிவகிரி:
சிவகிரி சேனைத் தலைவர் மேல்நிலைப்பள்ளி கூட்டரங்கில் வைத்து புளியங்குடி மகளிர் காவல்துறை சார்பாக பள்ளி மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். செயலாளர் தங்கேஸ்வரன் முன்னிலை வகித்தார். தலைமையாசிரியர் சக்திவேலு வரவேற்று பேசினார். உதவி தலைமையாசிரியர் இசக்கிமுத்து தொகுப்புரை நிகழ்த்தினார்.
விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புளியங்குடி மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி, சப்-இன்ஸ்பெக்டர் மாலா ஆகியோர் கலந்து கொண்டு பேசுகையில்:- பள்ளி மாணவ- மாணவிகள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். தவறான வழியில் செல்லக்கூடாது, தேர்ந்தெடுக்கவும் கூடாது. செல்போனில் பாடம் சம்பந்தப்பட்ட பதிவுகளை மட்டும் பார்க்க வேண்டும். தவறுதலாக ஏதாவது செயலியில் நீங்கள் பார்வையிட்டால் உங்களின் பெற்றோருக்கு பாதிப்பு ஏற்படும்.
ஆகவே நீங்கள் பள்ளி ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு தடம் மாறாமல் நல்ல முறையில் படித்து எதிர்காலத்தில் நல்ல முறையில் உயர்ந்த பதவியில் அமர்ந்து உங்களை வளர்த்து ஆளாக்கிய பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நல்ல பெயரை பெற்றுத்தர வேண்டும். உங்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் சார்ந்த ஆலோசனைகள் தொடர்பாக மகளிர் காவல் நிலையத்தை எப்போது வேண்டுமானாலும் தொடர்பு கொள்ளலாம் எனவும் பேசினர். தமிழாசிரியை சுப்புலட்சுமி நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் முதல்நிலை காவலர் ஆனந்தி, ஆசிரியர் ஆசிரியைகள், மாணவ- மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள தலைவன் கோட்டை சர்ச் தெருவை சேர்ந்தவர் அய்யனார் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஊருக்கு அருகே உள்ள தனது தோப்பிற்கு சென்று அங்கு கீழே கிடந்த தேங்காய்களை சேகரித்துக் கொண்டிருந்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கால் தடுமாறி அருகிலிருந்த கிணற்றில் விழுந்துவிட்டார்
அய்யனார் நீண்ட நேரமாக வராததால் அவரது மகன் சண்முகவேல் தனது தோப்பிற்கு சென்று பார்த்தபோது தந்தையின் செருப்பு கிணற்றின் அருகே கிடப்பதைக்கண்டு அதிர்ச்சியடைந்து அவரை கிணற்றில் தேடியபோது அவர் கால்தடுமாறி கிணற்றில் விழுந்து இறந்து போனது தெரியவந்தது.
இதுகுறித்து புளியங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள பட்டகுறிச்சி கிராமத்தை சேர்ந்தவர் கனகவள்ளி (வயது 24). இவர் சம்பவத்தன்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மர்மநபர் வீட்டிற்குள் புகுந்து கனகவள்ளி கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றார். இதையடுத்து கண்விழித்த அவர் செயினை இறுக்கமாக பிடித்து கொண்டார். இதில் செயின் 2 பகுதியாக துண்டானது. இதில் 2 பவுன் நகையுடன் மர்ம நபர் தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து கனகவள்ளி புளியங்குடி போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கொள்ளையனை தேடி வருகின்றனர்.
கடந்த மாதம் புளியங்குடி அருகே உள்ள முள்ளிக்குளம் பகுதியில் இதே போன்று இரவில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பெண்ணிடம் சங்கிலியை பறித்த சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்