search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Railway maintenance work"

    • அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.
    • இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல்-பழனி ரெயில் தண்டவாள பகுதியில் அறிவு திருக்கோயில் அருகே சிதறி கிடக்கும் மணல் மற்றும் ஜல்லிக்கற்களை வாகனங்கள் மூலம் ரெயில்வே ஊழியர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

    இதனால் அந்தப் பகுதி முழுவதும் மணல் தூசியுடன் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. இதனால் அந்த வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மூச்சு திணறலுக்கு உட்பட்டு பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.

    ஆகவே முன்னறிவிப்பு செய்து இந்த பணிகளை ரெயில்வே நிர்வாகம் தொடர வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ரெயில் நிலைய பராமரிப்பு பணிகள் நடப்பதால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.#TNTrains
    மதுரை:

    ரெயில் நிலைய பராமரிப்பு பணிகள் நடப்பதால் மதுரையில் இருந்து செல்லும் பயணிகள் ரெயில் ரத்து செய்யப்படுகிறது.

    இது தொடர்பாக மதுரை ரெயில்வே கோட்ட செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி வீராசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மதுரை ரெயில் நிலையத்தில் நடைமேடை மேம்பாலம் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

    அதன்படி பழனி-மதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண்:56709) இன்று கூடல்நகர்-மதுரை இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-பழனி பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56710) இன்றும், நாளையும் மதுரை-கூடல் நகர் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    விழுப்புரம்-மதுரை பயணிகள் ரெயில் (வண்டி எண்: 56705) இன்று திண்டுக்கல்-மதுரை இடையே பகுதிநேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-விழுப்புரம் பயணிகள் ரெயில் (வண்டி எண்:56706) இன்றும், நாளையும் மதுரை -திண்டுக்கல் இடையே பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை, செங்கோட்டை இடையேயான பயணிகள் ரெயில்கள் (வண்டி எண்கள்: 56734, 56735) இன்று மதுரை-விருதுநகர் இடையே இரு மார்க்கங்களிலும் பகுதி நேரமாக ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #TNTrains
    விழுப்புரம் ரெயில் நிலைய ‘யார்டில்’ தண்டவாள பராமரிப்பு பணி நடைபெற்றது. இதன் காரணமாக ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டது.
    விழுப்புரம்:

    விழுப்புரம் ரெயில் நிலையத்தில் உள்ள ‘யார்டில்’ (ரெயில்கள் பராமரிக்கும் இடம்) நேற்று தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற்றது. இதற்காக ‘பேக்கிங் மெஷின், பேலஸ் கிளினீர் மெஷின்’ என்ற ராட்சத எந்திரங்கள் திருச்சியில் இருந்து வரவழைக்கப்பட்டு ரெயில்வே நிலைய யார்டில் பராமரிப்பு பணிகள் நடந்தது.

    தண்டவாளத்தை உறுதிப்படுத்தும் வகையில் பழைய ஜல்லிக்கற்கள், மண் ஆகியவை அகற்றப்பட்டு புதிதாக கொட்டப்பட்டது. அதேபோல் பழைய சிலிப்பர் கட்டைகளும் அகற்றப்பட்டு புதிதாக பொருத்தப்பட்டது. காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த இந்த பணியில் எலக்ட்ரிக்கல், சிக்னல் உள்ளிட்ட பல்வேறு துறையை சேர்ந்த ஊழியர்கள் 20-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர்.

    இந்த பணிகள் காரணமாக நேற்று சென்னை எழும்பூரில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய பயணிகள் ரெயில், திருப்பதியில் இருந்து புதுச்சேரி செல்லக்கூடிய பயணிகள் ரெயில் ஆகிய 2 ரெயில்களும் திண்டிவனம் ரெயில் நிலையம் வரையும், மேல்மருவத்தூர்- விழுப்புரம் பயணிகள் ரெயில் முண்டியம்பாக்கம் வரையும் இயக்கப்பட்டது.

    அதேபோல் திருச்சி- சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை எழும்பூரை 30 நிமிடம் தாமதமாக சென்றடைந்தது. மேலும் சென்னை எழும்பூரில் இருந்து மதியம் 1.40 மணிக்கு மதுரைக்கு புறப்பட வேண்டிய வைகை எக்ஸ்பிரஸ் ரெயில் 1 மணி நேரம் தாமதமாக மதியம் 2.40 மணிக்கும், விழுப்புரத்தில் இருந்து மாலை 4.35 மணிக்கு காட்பாடிக்கு புறப்பட வேண்டிய பயணிகள் ரெயில் 45 நிமிடம் தாமதமாக மாலை 5.20 மணிக்கும் புறப்பட்டன. 
    ×