search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rainwater leaking"

    • சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.
    • வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாச்சலம், திட்டக்குடி, சிதம்பரம் காட்டுமன்னார்கோவில், வேப்பூர் மற்றும் மாவட்டம் முழுவதும் பெய்துள்ளது.


    கனமழை காரணமாக கடலூர், வடலூர், காட்டுக் கூடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆங்காங்கே மரங்கள் விழுந்துள்ளன.


    கடலூர் மாவட்டம் முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீர் சூழ்ந்து பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக முடங்கி உள்ளது. முக்கிய சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் வாகன ஓட்டிகள் சிரமத்துக் குள்ளாகி உள்ளனர்.

    • தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது.

    நெல்லை:

    தென் மாவட்டத்தில் முக்கிய மருத்துவமனையில் ஒன்றாக நெல்லை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு தினமும் ஆயிரக்க ணக்கனோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில் நேற்று பெய்த கோடை மழை காரணமாக அவசர சிகிச்சை பிரிவின் மேற்கூரையில் இருந்து மழைநீர் கசிந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அவதி அடைந்தனர்.

    சமீபத்தில் புதிதாக கட்டப்பட்ட இந்த கட்டிடத்தில் மேற்கூரையில் இருந்து மழை நீர் கசிந்தது நோயாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×