search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rajarajacholan"

    • இலங்கையை வெற்றி கொண்டதன் அடையாளமாக ராஜராஜசோழன் காலத்தில் வெளியிடப்பட்ட செப்பு நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டது.
    • தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்பட்டுள்ளது.

    விருதுநகர் 

    விருதுநகர் மாவட்டம், மம்சாபுரத்தில் உள்ள சிவந்திப்பட்டி நாடார் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி வரலாறு ஆசிரியர் செல்வத்திடம், இளந்திரை கொண்டான் என்னும் ஊரைச் சேர்ந்த ஒரு மாணவர் 12 ஆண்டுகளுக்கு முன் ஒரு பழமையான செப்புக்காசை கொடுத்துள்ளார். அக்காசு பற்றி எதுவும் தெரியாததால் செல்வம் அதை பத்திரமாக பாதுகாத்து வந்துள்ளார்.

    ஆசிரியர் செல்வம்

    இந்த நிலையில் கடந்த 6-ந்ம் தேதி ஆசிரியர்க ளுக்கான தொல்லியல் பயிற்சியின் முதல் சுற்று மதுரையில் நடைபெற்றது. இதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். இப்பயிற்சியில் நாணயங்களின் வரலாற்றுச் சிறப்புகள் பற்றி தஞ்சாவூர் ஆறுமுக சீதாராமன் வகுப்பெடுத்தார். இதன்பின் தன்னிடம் இருந்த இந்த காசு முதலாம் ராஜராஜ சோழனால் வெளி யிடப்பட்டது என்பதை அவர் அறிந்து கொண்டார்.

    இதுபற்றி ஆசிரியர் செல்வம் கூறியதாவது:-


    ஆசிரியர் செல்வம்

    12 ஆண்டுகளாக என்னிடம் இருந்தும் அதன் முழுப்பெருமையும் தெரியவில்லை. மதுரையில், நடந்த தொல்லியல் பயிற்சியால் அக்காசின் சிறப்பை தெரிந்து கொண்டேன். தமிழ்நாடு அரசு வழங்கிய இந்தப் பயிற்சி எனக்குள் தொல்லியல் தேடலை விதைத்துள்ளது. இதை என் மாணவர்களுக்கும் கற்றுத்தருவேன். பயிற்சி வழங்கிய அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்ச ருக்கும், ஆணை யருக்கும் நன்றியை தெரிவி த்துக் கொள்கிறேன் என்றார்.இந்த காசு குறித்து பயிற்சியை ஒருங்கிணைத்த திருப்புல்லாணி அரசு மேல்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.ராஜ குரு கூறியதாவது:-

    வரலாற்றைத் அறிய நாணயங்கள் உதவுகின்றன. மன்னர்கள் தங்களின் போர் வெற்றியைக் கொண்டாட சிறப்பு நாணயங்களை வெளியிட்டுள்ளார்கள். அவ்வாறு போர் மூலம் இலங்கையை முதலாம் ராஜராஜசோழன் வெற்றி கொண்டதன் பின்னணியில் தன் பெயர் பொறித்த ஈழக்கா சுகளை வெளி யிடப்பட்டுள்ளார். இவை முதலாம் ராஜராஜ சோழன் முதல் முதலாம் குலோத்து ங்கசோழன் காலம் வரை பயன்பாட்டில் இருந்து ள்ளன. பொன், வெள்ளி, செம்புகளில் இந்த காசுகள் வெளியிடப்ப ட்டுள்ளன. செம்பால் ஆன காசு ஈழக்கருங்காசு எனப்படுகி றது.இந்த காசுகளின் ஒரு பக்கம் கையில் மலரை ஏந்தியவாறு ஒருவர் நிற்க, அவரது இடப்பக்கம் 4 வட்டங்களும், சங்கும் உள்ளன. அவற்றின் மேலே பிறையும் கீழே மலரும் உள்ளன. வலதுபக்கம் திரிசூலம், விளக்கு உள்ளது. மறுபக்கம் கையில் சங்கு ஏந்தி ஒருவர் அமர்ந்தி ருக்கிறார். அவரின் இடது கை அருகே தேவநாகரி எழுத்துகளில் "ஸ்ரீராஜராஜ" என 3 வரிகளில் எழுதப்ப ட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
    தஞ்சாவூர்:
        
    தஞ்சை பெரிய கோவிலில் இருந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் 60 ஆண்டுக்கு முன்பு திருடு போனது. அந்த சிலைகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசார் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து அந்த சிலைகள் பலத்த பாதுகாப்புடன் சென்னைக்கு கொண்டு வரப்பட்டது.

    இதற்கிடையே, மீட்கப்பட்ட ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி ஐம்பொன் சிலைகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வந்தடைந்தது. அங்கு அந்த சிலைகளுக்கு கோவில் தீட்சிதர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர்.

    இந்நிலையில், குஜராத்தில் இருந்து மீட்கப்பட்டு தஞ்சை வந்தடைந்த ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகளுக்கு பெரிய கோவிலில் இன்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இந்த சிலைகளுடன் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையில் கூடுதல் டி.எஸ்.பி. ராஜாராமன் மற்றும் போலீசாரும் வந்தனர்.

    ராஜராஜ சோழன் மற்றும் லோகமாதேவி சிலைகள் தஞ்சை பெரிய கோயிலுக்கு கொண்டுவரப்பட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு பின் தஞ்சைக்கு வந்த சிலைகளுக்கு பொதுமக்கள் மலர்களை தூவி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    சிலைகள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் 24 மணி நேரமும் கேமராக்கள் மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிலைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும்  போடப்பட்டுள்ளது. #Tamilnew
    ×