என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "rally"

    • சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.
    • தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    சங்ககிரி:

    சேலம் மாவட்டம் சங்ககிரி போலீஸ் ஸ்டேஷன், போக்குவரத்து போலீஸ் மற்றும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசார இருசக்கர வாகன பேரணியை நடத்தியது.

    சங்ககிரி டி.எஸ்.பி. ஆரோக்கியராஜ், பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். சங்ககிரி புதிய பஸ் நிலையத்தில் இருந்து 200-க்கும் மேற்பட்ட போலீசார், இந்தியா சிமெண்ட்ஸ் நிர்வாக அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து இருசக்கர வாகனத்தில் வி.என்.பாளையம், பட்டறைமேடு, பழைய பஸ் ஸ்டாண்ட், பவானி மெயின் ரோடு, பச்சக்காடு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் உள்ள தியாகி தீரன்சின்னமலை நினைவு மண்டபம் வரை பேரணியாக சென்று பொது மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

    இதில் தலைக் கவசம் அணிவதின் அவசியம், சாலை பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. சங்ககிரி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தேவி, தினகரன் (போக்குவரத்து), எஸ்.ஐ.க்கள் ஸ்ரீராமன், ராமச்சந்திரன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முதன்மை மேலாளர், பொதுஜன தொடர்பு மற்றும் பாதுகாவல் அதிகாரி ஆத்மராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
    • எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

    ஜெயங்கொண்டம், 

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை எம்.எல்.ஏ. கண்ணன் துவக்கி வைத்தார்.பேரணிக்கு கல்லூரி முதல்வர் கலைச்செல்வி தலைமை வகித்து பேசினார். பேரணியானது கல்லூரியில் துவங்கி அண்ணா சிலை, நான்கு ரோடு, பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.முன்னதாக போதைப் பொருள் ஒழிப்பு குறித்து வாசகங்களை எம்.எல்.ஏ. வாசிக்க பின் தொடர்ந்து மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் வாசித்து உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர். போதைப் பொருட்களால் ஏற்படும் விளைவுகள் சமூகத்தில் சில குடும்பங்கள் படும் அல்லல்கள் போன்றவற்றைப் பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. கல்லூரி பேராசிரியர்கள் தமிழ்த்துறை வடிவேல், கணினி துறை கார்த்திகேயன், வணிகவியல் துறை சக்திமுருகன் மற்றும் அனைத்து துறைத்தலைவர்கள் பேராசிரியர்கள், போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தங்கமணி உள்ளிட்ட போலீசார் மாணவ, மாணவிகள் பலரும் கலந்துகொண்டனர். இறுதியில் கல்லூரி செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் வடிவேலன் நன்றி கூறினார்.

    • ஜெயங்கொண்டத்தில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும்

    ஜெயங்கொண்டம்:

    அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பாத்திமா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியை ஜெயங்கொண்டம் வட்டாட்சியர் துரை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் ரோஸ் அலெக்சாண்டர், தேர்தல் துணை வட்டாட்சியர் மீனா, வி.ஏ.ஓ. வேல்முருகன், வருவாய் ஆய்வாளர் செல்லகணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.ஊர்வலத்தில் வாக்களிப்பதன் அவசியம், வாக்களிப்பது எனது உரிமை, வாக்காளர் என்பதில் பெருமை கொள்வோம், 18 வயது பூர்த்தி அடைந்த அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும், அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும், ஓட்டுக்கு நோட்டு வாங்க மாட்டோம், அனைவரும் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறும் முழக்கங்கள் செய்தவாரே ஊர்வலமாக சென்றனர். ஊர்வலத்தில் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகள் வாக்காளர் உறுதிமொழி ஏற்றனர். முடிவில் பள்ளி முதல்வர் உர்சலாசமந்தா நன்றி கூறினார்.

    • சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
    • சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையம் பகுதியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பேரணி நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று பழைய பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

    பேரணியில் கலந்து கொண்ட மாணவ-மாணவிகள் வாக்காளர் விழிப்புணர்வு குறித்த கோஷங்கள்எ ழுப்பியும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியும் இளம் வாக்காளர்களை ஊக்குவித்தல் 100 சதவீத வாக்குப்பதிவை உறுதிப்படுத்துதல் வாக்குரிமை நமது உரிமை வாக்களிப்பது நமது கடமை என்பது உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சீர்காழி தாசில்தார் செந்தில்குமார் தேர்தல் தனி தாசில்தார் ரஜினி, ஒருங்கிணைப்பாளர் தனியார் பள்ளி தாளாளர் சக்திவீரன், கிராம நிர்வாக அலுவலர் மோகன் உள்ளிட்டோர் தேசிய வாக்காளர் தின உறுதிமொழியை வாசிக்க அதனை பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் ஏற்றுக் கொண்டனர்.

    • கால்நடை பராமரிப்புதுறை சார்பாக
    • வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ேபரணி நடைபெற்றது

    கரூர்,

    குளித்தலை நகராட்சி அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டம் சார்பாக வெறிநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு மற்றும் நாய்களுக்கு இலவச வெறி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.முகாமை குளித்தலை நகர் மன்ற தலைவர் சகுந்தலா பல்லவிராஜா தொடங்கி வைத்தார், மேலும் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட முக்கிய வீதிகளில் கல்லூரி மாணவிகள், குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்கள் மற்றும் மருத்துவர்கள், கொண்டு விழிப்புணர்வு பதாகைகள் கையில் ஏந்தி விழிப்புணர்வு பேரணியும் நடைபெற்றது, தொடர்ந்து குளித்தலை மணதட்டை பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளுகிடையே வெறிநோய் தடுப்பூசி, வெறி நோய் பரவுவது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது,நிகழ்ச்சியில் குளித்தலை நகர் மன்ற கவுன்சிலர் சையத் உசேன், நகர் மன்ற அலுவலர் கோவிந்தராஜ், நகர்மன்ற மேலாளர் சிவலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் இஸ்மாயில், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • தோகைமலை அரசுபள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
    • தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது

    தோகைமலை:

    தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் ரத்த தான விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமை ஆசிரியை வளர்மதி பேரணியை தொடங்கி வைத்தார். திருச்சி மெயின் ரோடு, குளித்தலை - மணப்பாறை மெயின்ரோடு, கடைவீதி, தோகைமலை பஸ் ஸ்டாண்டு வழியாக மீண்டும் பள்ளி வளாகத்தில் பேரணி நிறைவடைந்தது. இதில், மனித நேயம் காப்போம், ரத்த தானம் கொடுப்போம், 3 மாதங்களுக்கு ஒரு முறை ரத்ததானம் கொடுக்க உறுதிமொழி ஏற்போம் என பல்வேறு கோஷங்களை எழுப்பிக்கொண்டு, கையில் பதாகைகளை ஏந்தி, மாணவ, மாணவியர் சென்றனர். தொடர்ந்து பள்ளி வளாகத்தில் கருத்தரங்கு நடந்தது. இதில், முசிறி தனியார் வேளாண் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி மாணவியர் பங்கேற்று பேசினர்.


    • பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
    • மாணவ- மாணவிகளின் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    முத்துப்பேட்டை:

    முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஜூனியர் ரெட்கிராஸ்) இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவர்கள் சார்பில் ஸ்பர்ஷ் தொழுநோய் விழிப்புணர்வு பேரணி மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துதல் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் நித்தையன் தலை மையில், வட்டார ஒருங்கிணைப்பாளர் செல்வசிதம்பரம் முன்னிலையில், மாணவ- மாணவிகளின் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    பேரணியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு துண்டுபிரசுரங்கள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் இடையூர் சங்கேந்தி, மருத்துவம் சாரா மேற்பார்வையாளர் கதிரேசன் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

    இதில் ஆசிரியர்கள் ஆரோக்கிய அந்தோணி ராஜா, அன்பரசு, முருகேசன், முத்து லெட்சுமி, இந்திரா, அமிர்தம், பென்சிராணி, வனிதா மற்றும் சுகாதாரத்துறையினர் கலந்து கொண்டனர்.

    • அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணி நடைபெற்றது
    • ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்

    அரியலூர்:

    பல்வேறு கோரி க்கைகளை வலி யுறுத்தி அரியலூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் பேரணியில் ஈடுபட்டனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடத்தில் 10 ஆண்டுகளாக பணி முடித்த சத்துணவு அமைப்பாளர்களை அமர்த்தி பதவி உயர்வு வழங்கிட வேண்டும். சாலைப் பணி யாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணி காலமாக அறிவித்திட வேண்டும். எம்.ஆர்.பி செவிலியர்களை பணி நிரந்தரம் செய்திட வேண்டும்.

    சிறப்பு கால முறை ஊதியத்தை மாற்றி காலமுறை ஊதியத்தை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் அண்ணா சிலை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர், அங்கிருந்து ஆட்சியர் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று முடித்துக் கொண்டனர். இந்த பேரணிக்கு, அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் பஞ்சாபிகேசன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் பி.காமராஜ், மாவட்டச் செயலர் வேல்முருகன், மாநில செயற்குழு உறுப்பினர் ஷேக்தாவூத் மற்றும் தமிழ்நாடு சத்துணவு உழியர் சங்கம், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கம், சாலைப் பணியாளர் சங்கம், கல்வித்துறை நிர்வாக ஊழியர் சங்கம், செவிலியர் சங்கம், நகராட்சி அலுவலர்கள் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.




    பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர்.

    ஆலங்குடி:

    துருக்கி - சிரியாவின் ஏற்பட்ட பூகம்பத்தால் கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகி 35 ஆயிரத்திற்கும் அதிகமா னோர் பலியானார்கள். பூகம்பத்தில் பலியானர்க ளுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ஆலங்குடி வம்பனில் உள்ள அற்புதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, நாட்டு நல பணி திட்டம் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. முதல்வர் ஜான் மார்ட்டீன், துணை முதல்வர் மெட்டில்டா, திட்ட அலுவலர் முத்து மீனா ஆகியோர் தலைமையில் நடைபெற்ற அமைதி பேரணியில் ஏராளமான மாணவ, மாணவிகள் கைகளில் மெழுகுதிரி ஏந்தி அமைதியுடன் கலந்து கொண்டனர். அமைதி பேரணியானது, பேரூந்து நிலையத்தில் துவங்கி பழைய நீதிமன்ற வளாகம், அரச மரம் பஸ் நிறுத்தம், வட காடு, முக்கம் வழியாக சந்தைப்பேட்டை பஸ் நிறுத்தத்தில் நிறைவடைந்தது. பேரணியில் துணை பேராசிரியர்கள் கமலா வைஜெயந்திமாலா, கலை ச்செல்வம் சத்தியமூர்த்தி, பிரவீன், அருள் அனுசியா புளோரா கிருஸ்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

    • புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.
    • வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்கால்பட்டி புனித ஜோசப் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பாக 7 நாட்கள் இயற்கை பாதுகாப்பு கிராமப்புற மறு கட்டமைப்பில் இளைஞர்களின் பங்கு குறித்த முகாம் நடைபெற்றது.

    முகாமில் வள்ளியம்மாள்புரத்தில் நடைபெற்ற இயற்கை வளம் பாதுகாப்பு பேரணியை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் முத்தமிழ் செல்வி ரஞ்சித், கடையம் பெரும்பத்து தொழிலதிபர் பரமசிவன், நாட்டுநலப்பணித்திட்ட ஆசிரியர் அருண்குமார், மடத்தூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும்.
    • தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

    தஞ்சாவூா்:

    தஞ்சை ரெயிலடியில் இன்று காலை தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த பேரணியை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பேரணியில் தமிழ் பல்கலைக்கழக மாணவிகள், கல்லூரி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு பேரணியாக சென்றனர்.

    அப்போது தமிழில் கையொப்பம் இடுவோம், வணிக நிறுவனங்களில் தமிழ் மொழியில் பெயர் பலகை வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக சென்றனர்.

    தொடர்ந்து தமிழ் மொழி விழிப்புணர்வு வில்லைகளை ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் ஒட்டப்பட்டது.

    இதில் தமிழ் பல்கலைக்கழகம் துணை வேந்தர் திருவள்ளுவன், போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.
    • கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர்.

    புதுச்சேரி:

    உலகத் தாய்மொழி யொட்டி ராதே அறக்க ட்டளை, தமிழ் அமைப்புகள், சமூக அமைப்புகள் சார்பில் மொழியுணர்வுப் பேரணி நடந்தது.

    காமராஜர் சிலை அருகில் இருந்து தொடங்கிய பேரணிக்கு ராதே அறக்கட்டளை நிறுவனர் என்ஜினீயர் தேவதாஸ் தலைமை வகித்தார். மக்கள் உரிமைக் கூட்டமைப்பு செயலாளர் சுகுமாரன், தமிழ் எழுத்தாளர் கழகச் செயலாளர் தமிழ்நெஞ்சன், புதுவை வலைப்பதிவர் சிறகத் தலைவர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    அமைச்சர் சந்திர பிரியங்கா பேரணியை தொடங்கி வைத்தார். தாகூர் கல்லூரி முன்னாள் முதல்வர் பேராசிரியர் இளங்கோ, கல்வெட்டு ஆய்வறிஞர் வில்லியனூர் வேங்கடேசன், கண்ணதாசன் கழக நிறுவுநர் வக்கீல் கோவிந்தராசு, இலக்கியன், துறை.மாலிறையன், வேல்முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.

    பேரணியில் மக்கள் வாழ்வுரிமை இயக்கச் செயலாளர் ஜெகன்நாதன், தமிழர் களம் அழகர், திராவிடர் கழகத் தலைவர், வீரமணி, மண்டலத் தலைவர் அன்பரசன், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள், கலைஞர்கள் சங்கப் பொறுப்பாளர் ராமச்சந்திரன்,மாணவர் கூட்டமைப்புத் தலைவர் சாமிநாதன், புரட்சியாளர் அம்பேத்கர் தொண்டர் படைத் தலைவர் பாவாடைராயன், தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத் தலைவர் பிரகாஷ், செயலாளர் ராஜா, தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தமிழ்மணி, தன்னுரிமை கழகத் தலைவர் சடகோபன், அண்ணா பேரவைத் தலைவர் சிவ.இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பொன்.சண்முகம் தலைமையில் 20 தவில், 20 நாதசுர கலைஞர்கள் மேளதாள இசை முழங்கினர்.

    தமிழ்த்தாய், ஓளவையார், திருவள்ளுவர், பாரதியார், பாவேந்தர் வேடமணிந்து அணிவகுத்து நாடகக் கலைஞர்கள் வந்தனர். கவுண்டன் பாளையம் முத்துரத்தினம் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 50-க்கும் மேற்பட்டோர் விழிப்பு ணர்வு பதாகைகள் ஏந்தி வந்தனர். தமிழ் முழக்கங்கள் கொண்ட துண்டறிக்கை பொதுமக்களுக்கு வழங்க ப்பட்டன. பேரணியில் 300-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணி கடற்கரை சாலை காந்தி சிலையில் நிறைவடைந்தது.

    ×