search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ratan Naval Tata"

    • ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல்.
    • இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    பிரபல தொழிலதிபரான ரத்தன் டாடா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் காலமானார்.

    தொழிலதிபர் ரத்தன் டாடா மறைவுக்கு ஜனாதிபதி, பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில், ரட்டன் டாடாவின் மறைவு குறித்து பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இரங்கல் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது:-

    ஒரு நல்ல நண்பரை பிரான்ஸ் இழந்துவிட்டது. இந்தியா மற்றும் பிரான்சில், புத்தாக்கம் மற்றும் உற்பத்தித் துறைகளில் ரத்தன் டாடாவின் தொலைநோக்குப் பார்வையால் தொழில்கள் மேம்பட்டன.

    அதையும் தாண்டி, அவரது மனிதநேய பார்வை, மகத்தான தொண்டு மற்றும் அவரது பணிவு ஆகியவற்றால் ரத்தன் டாடா நினைவுகூறப்படுவார்.

    அவருக்கு நெருக்கமானவர்களுக்கும், இந்திய மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்."

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
    • பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    இந்திய தொழிலதிபரும், டாட்டா சன்ஸ்ஸின் முன்னாள் தலைவருமானவர் ரத்தன் நவால் டாட்டா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மும்பை மக்களிடம் உதவி கேட்டு பதிவிட்டுள்ளார்.

    'நீங்கள் உதவினால் நான் மனதார பாராட்டுவேன்' என்னும் தலைப்பில் நாயின் புகைப்படத்துடன் பதிவை தொடங்கும் ரத்தன் டாட்டா, எங்கள் கால்நடை மருத்துவமனையில் உள்ள 7 மாத நாய்க்கு அவசரமாக ரத்தம் தேவைபடுகிறது. அந்த நாய் சந்தேகப்படும்படியான டிக் காய்ச்சல் மற்றும் உயிருக்கு ஆபத்தான ரத்த சோகை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் உடனடியாக மும்பையில் இருந்து நாய் ரத்த தானம் செய்பவர் அவசரமாக தேவை...

    ரத்தம் வழங்கும் நாயானது மருத்துவ ரீதியாக ஆரோக்கியமானதாகவும், 1 முதல் 8 வயது உடையதாகவும், எடை சுமார் 25 கிலோ அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். அந்த நாய்க்கு அனைத்து வகை தடுப்பூசி போட்டிருக்க வேண்டும். கடந்த 6 மாதங்களில் அந்த நாய் எந்த நோய்க்கும் ஆளாகாமல் இருக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

    இவரது இந்த பதிவு 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. பதிவை பார்க்கும் பயனர்களும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    ×