search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relative protest"

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். #HIVBlood #PregnantWoman

    சாத்தூர்:

    எச்.ஐ.வி. ரத்தம் செலுத்தியதால் சாத்தூரை சேர்ந்த கர்ப்பிணி பாதிக்கப்பட்டார். அவரை இந்த நிலைக்கு ஆளாக்கிய சாத்தூர், சிவகாசி அரசு ஆஸ்பத்திரி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்கள் இன்று சாத்தூர் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்டனர்.

    சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களுடன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மாதர் சங்கத்தை சேர்ந்தவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாதர் சங்க மாநில செயலாளர் லட்சுமி மற்றும் நிர்வாகிகள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #HIVBlood #PregnantWoman

    சேத்தியாத்தோப்பு அருகே பிரசவத்தில் தாய், குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சேத்தியாத்தோப்பு:

    கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள அழிச்சிக்குடி பகுதியை சேர்ந்தவர் ராஜா (வயது26) இவர் அதே பகுதியில் கம்ப்யூட்டர் சென்டர் நடத்தி வருகிறார். இவரது மனைவி ரமா (20). இவர்களுக்கு திருமணமாகி 1 வருடம் ஆகிறது.

    தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ரமா பிரசவத்துக்காக சேத்தியாத்தோப்பை அடுத்த பரதூர் பகுதியில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றார். பின்னர் அவர் அங்கிருந்து தினமும் ஒரத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று பரிசோதனை செய்து வந்தார். 

    இந்த நிலையில் கடந்த 29-ந் தேதி இரவு ரமாவுக்கு பிரசவவலி ஏற்பட்டது. உடனே வீட்டில் இருந்தவர்கள் ரமாவை சிகிச்சைக்காக ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அங்கிருந்த டாக்டர்கள் ரமாவுக்கு சிகிச்சை அளித்தனர். ஆனால் ரமாவுக்கு குழந்தை பிறப்பதில் தாமதம் ஏற்பட்டது. அவர் வலியால் துடித்தார்.

    அதன் பின்னர் நேற்று மதியம் ரமாவின் உறவினர்களிடம் டாக்டர்கள் ரமாவுக்கு உடனே ஆபரே‌ஷன் செய்ய வேண்டும் இங்கு அந்த வசதி இல்லாததால் அவரை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி கூறினர்.

    பின்னர் ரமாவை உடனடியாக சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை செய்து டாக்டர்கள் ஆண் குழந்தையை எடுத்தனர். ஆனால் அந்த குழந்தை இறந்தே பிறந்தது.

    இதைத்தொடர்ந்து ரமாவுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று இரவு ரமாவும் பரிதாபமாக இறந்தார். ஆஸ்பத்திரி வளாகத்தில் காத்திருந்த ரமாவின் உறவினர்கள் பிரசவத்தில் தாய், குழந்தை இறந்ததை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றனர். டாக்டர்களை கண்டித்து ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால், இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:-

    ஒரத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு 50-க் கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சை பெற வருகிறார்கள். ஆனால் இங்கு போதிய டாக்டர்கள் இல்லை. 29-ந் தேதி இரவு பிரசவத்திற்காக ரமாவை அனுமதித்தோம்.

    ஆனால் ரமாவுக்கு ஆபரே‌ஷன் செய்யவேண்டும் என்ற தகவலை மறுநாள் மதியம்தான் கூறினார்கள். அதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் நாங்கள் உடனே அவரை வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று காப்பாற்றியிருப்போம்.


    இப்போது தாயும், குழந்தையும் இறந்து விட்டனர். இதற்கு முழு காரணம் ஒரத்தூர் ஆரம்ப சுகாதாரநிலையத்தில் பணியாற்றி வரும் டாக்டர்களும், ஊழியர்களும் தான். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிமேல் இது போன்று சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கூறினார்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    பிரசவத்தில் தாய், குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×